மருத்துவ ஆராய்ச்சிகள் இன்று கற்பனைக்கு அப்பாற்பட்ட எல்லைகளைக் கடந்திருக்கின்றன. உலகெங்கும் மருத்துவ ஆராய்ச்சிகளுக்கென்று ஏராளமான நிதி கொட்டப்படுகிறது. ஆராய்ச்சியை எளிமைப்படுத்த அதிநவீன எந்திரங்கள் எல்லாம் வந்துவிட்டன. ஆனால், இந்த வளர்ச்சிக்கெல்லாம் தொடக்கமாக, வேராக, உரமாக இருந்த மேதைகள், வாழ்ந்த காலத்தில் அங்கீகரிக்கப்படாமலே முடிந்து போனார்கள். இக்னாஸ் செம்மல்வேய்ஸ் அப்படியான ஒரு மேதை.

இக்னாஸைப் போல தொற்றுநோய் மருத்துவ ஆராய்ச்சியை அடுத்த கட்டத்துக்கு நகர்த்திய மற்றுமொரு மேதையைப் பற்றி இப்போது பார்க்கலாம்.

எட்வர்ட் ஜென்னர் (Edward Jenner 1749- 1823), இங்கிலாந்தில் பிறந்தவர். இவரை பிற்கால உலகம், ‘நோயெதிர்ப்பு மருத்துவத்தின் தந்தை’ என்று கொண்டாடியது. ‘ஏதோ ஒரு வேற்றுப்பொருள் உடலுக்குள் புகுந்து நோயை உருவாக்குகிறது’ என்ற அளவில் அறியப்பட்ட காலம் அது. அப்போது, மக்களைப் பெரும் அவதிக்குள்ளாக்கிய நோய் பெரியம்மை. அந்தக்காலத்தில், உலகின் மொத்த மக்கள்தொகையில் சுமார் 20 சதவிகிதம் பேர் இந்த நோயால் பாதிக்கப்பட்டார்கள். பெரியம்மை நோய் பரவிக்கொண்டிருந்த காலத்தில் ‘கௌபாக்ஸ்’ (Cowpox) என்றொரு நோயும் பரவியது. இது மாடுகளுக்கு, குறிப்பாக பசு மாடுகளுக்கு வரக்கூடிய நோய். மாடுகள் மூலம் பால் கறப்பவர்களுக்கும் இந்த நோய் பரவியது. கிட்டத்தட்ட பெரியம்மை மாதிரியே உடம்பில் கொப்புளங்கள் தோன்றும். பெரிய அளவில் தாக்கம் இருக்காது. வந்த வேகத்திலேயே போய்விடும்.

ஜென்னர், பெரியம்மை பற்றித் தீவிர ஆராய்ச்சியில் இறங்கினார். ‘யாருக்கெல்லாம் இந்த நோய் வருகிறது’, ‘நோயின் வீரியம் ஒவ்வொருவருக்கும் எப்படி இருக்கிறது’ என்பது குறித்தெல்லாம் தீவிரமாக அவதானிக்கத் தொடங்கினார். ‘யாருக்கெல்லாம் கௌபாக்ஸ் நோய் வந்ததோ அவர்களுக்குப் பெரியம்மை நோய் வரவில்லை. அப்படியே வந்தாலும் சீக்கிரமே குணமாகிவிடுகிறது. உயிரிழப்பு ஏற்படுவதில்லை. பெரியம்மை நோயில் இருந்து மக்களைப் பாதுகாக்கும் சக்தி கௌபாக்ஸ் நோய்க்கு இருக்கிறது’ என்று அவர் கண்டுபிடித்தார். உடனடியாக கௌபாக்ஸ் நோயால் பாதிக்கப்பட்ட பால் கறக்கும் தொழிலாளிகளை அழைத்தார். அவர்களுக்கு ஏற்பட்டிருந்த கொப்புளங்களின் உள்ளே இருந்த நீரையும், சதைத்துணுக்குகளையும் எடுத்து, பொடியாக்கி, தன் தோட்டக்காரரின் 8 வயதுப் பையனுக்கு ஊசி மூலம் செலுத்தினார். அந்தப் பையனுக்கு, பெரியம்மை வந்தது. ஆனால், பெரிய பாதிப்புகளை ஏற்படுத்தாமல் சீக்கிரமே குணமாகிவிட்டது. படிப்படியாக பலருக்கும் இந்தச் சிகிச்சையை செய்யத் தொடங்கினார்.

இது மருத்துவ உலகையே குழப்பத்திலும் வியப்பிலும் ஆழ்த்தியது. ஜென்னர் செய்ததைப் பலரும் ஆங்காங்கே சோதனை செய்து பார்க்க ஆரம்பித்தார்கள். இந்தியாவிலும் இந்தச் சிகிச்சை பரவியது. ஜென்னர் கண்டுபிடித்த இந்த மருந்துதான் உலகின் முதல் தடுப்பூசி மருந்து. ‘ஏதோ ஒன்றை உடலுக்குள் செலுத்துவதன் மூலம் ஒரு தொற்றுநோயைத் தடுத்து நிறுத்த முடியும்’ என்று மனிதகுலம் நம்பத்தொடங்கியது அப்போதுதான். அதன் பிறகு, இதுதொடர்பான ஆராய்ச்சிகள் 100 மடங்கு வேகத்தோடு வீரியம் பெற்றன. ஒரு கட்டத்தில் பெரியம்மை என்ற தொற்றுநோய் இந்த உலகை விட்டே விரட்டப்பட்டது.

(களைவோம்)