என் மகன் பிறந்து ஆறு மாதங்கள் ஆகின்றன. அதிகமாக விரல் சப்புகிறான். அதனை மறக்கவைக்க எவ்வளவோ முயற்சிசெய்து பார்த்துவிட்டேன். ஆனால், முடியவில்லை. விரல் சப்புவதால் பால் குடிப்பதற்கும் மறுக்கிறான். என் கணவர், குழந்தையின் விரலில் வேப்பெண்ணெய் தடவலாம் என்கிறார். அது சரியா? இல்லை எளிதான வேறு வழிகள் இருக்கின்றனவா?

- பி.செல்வி, கோயம்புத்தூர்

ஆறு மாதக் குழந்தை விரல் சப்புவது இயல்பான ஒன்றுதான். இதிலிருந்து விடுபட விரல்களில் வேப்பெண்ணெய் தடவும்போது, சில குழந்தைகளுக்கு அது ஒவ்வாமையை ஏற்படுத்தலாம் என்பதால் அதைத் தவிர்க்கலாம். ஒரு வயதுக்கு மேல், குழந்தைகளோடு பெற்றோர்கள் நேரம் செலவிடாமல், அவர்களின் கவனத்தைத் திசைதிருப்பாமல் இருந்தால் குழந்தைகள் விரல் சப்புவார்கள். இதனால் எத்துப்பல் வருவதற்கு வாய்ப்புள்ளது. எனவே, ஒரு வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு, குழந்தைநல மருத்துவரிடம் ஆலோசித்து, விரல் சப்புவதைத் தடுக்கும் கசப்புத்தன்மை மிகுந்த பிரத்யேக மருந்தைப் பயன்படுத்தலாம். இதனை நகத்தில் தடவி வர, குழந்தைகள் கை சப்பும் ஆர்வத்திலிருந்தும் பழக்கத்திலிருந்தும் விலகுவார்கள்.

- கண்ணன், குழந்தைகள் நல மருத்துவர்

என் வயது 20. என்னுடைய மார்பகங்களில் ஒன்று பெரிதாகவும், ஒன்று சிறிதாகவும் இருக்கிறது. என் அக்காவிடம் இதைச் சொல்லிக் கேட்டபோது, ‘எல்லாப் பெண்களுக்கும் இப்படித்தான் லேசா வித்தியாசம் இருக்கும்’ என்கிறார். அது உண்மைதானா? பயப்படத் தேவையில் லையா?

- ஸ்ரீதேவி, பெங்களூரு

உங்கள் அக்கா சொன்னது நூற்றுக்கு நூறு உண்மை. என்னிடம் நிறைய இளம்பெண்கள் இதே கேள்வியைக் கேட்டிருக்கிறார்கள். இதனால் ஒரு பிரச்னையும் கிடையாது என்பது மட்டுமல்ல... இது ஒரு நார்மலான விஷயமும்கூட. ‘எந்தக் கையை அதிகம் பயன்படுத்துகிறார்களோ அந்தக் கை பக்கத்து மார்பகம்தான் பெரிதாக இருக்கும்’ என்ற ஒரு கூற்றைப் பல பெண்கள் என்னிடம் கேட்டிருக்கிறார்கள் என்பதால், அதையும் இங்கு தெளிவுபடுத்தி விடலாம் என்று நினைக்கிறேன். கையின் தசையின் தன்மையும், மார்பகத்தின் தசையின் தன்மையும் வேறு வேறு. இரண்டுக்கும் சம்பந்தம் இல்லை. இதுவும் ஒரு கட்டுக்கதையே. மார்பக அளவில் இருக்கிற வித்தியாசங்கள், கருத்தரித்து பால் கொடுக்கிற காலக்கட்டதில் சரியாகி விடும்.

வசந்தா, மகப்பேறு மருத்துவர்

தற்போது நான் ஆறு மாத கர்ப்பிணி. கர்ப்பகாலத்தில் இப்படியெல்லாம் இருக்க வேண்டும் என பலரிடமிருந்து நிறைய அறிவுரை களைக் கேட்கிறேன். அவற்றில் ஒன்று, கர்ப்பகாலத்தில், மதிய நேரத்தில் கண்டிப்பாகத் தூங்க வேண்டும் என்பது. இது சரிதானா? இந்தத் தூக்கம் குழந்தையின் உடல்நிலைக்கு உதவுமா?

எஸ்.ப்ரீத்தி, நெல்லை

கர்ப்பிணிகள் மதிய நேரத்தில் கண்டிப்பாக ஓய்வு எடுத்துக் கொள்ள வேண்டும். மதியம் இரண்டு மணி நேரமும், இரவு எட்டு மணி நேரமும் தூக்கம் அவசியம். மதிய நேரத்தில் தூக்கம் வராவிட்டாலும், படுக்கையில் படுத்திருக்க வேண்டும். இடது பக்கமாகச் சாய்ந்து படுத்திருப்பது, கூடுதல் நலம். இது உடலின் ரத்த ஓட்டத்தை மேம்படுத்தி, கர்ப்பப்பைக்கு நன்மையளிக்கும். வயிற்றிலிருக்கும் சிசுவுக்கு இதனால் சீரான ரத்த ஓட்டம் கிடைக்கும். ரத்த அழுத்தமோ, உடல் சார்ந்த வேறு பிரச்னைகளோ குழந்தையைப் பாதிக்காமல் இருக்க இந்த ஓய்வு உதவும்.

- சுபஸ்ரீ, மகப்பேறு மருத்துவர்

உங்கள் கேள்விகளை அனுப்பவேண்டிய முகவரி: கன்சல்ட்டிங் ரூம், டாக்டர் விகடன், 757, அண்ணா சாலை, சென்னை-600 002.