தொடர்ச்சியாக, மருத்துவ உலகின் மறுமலர்ச்சிக்கு வித்திட்ட மேதைகளைப் பற்றிப் பார்த்து வருகிறோம். இது கொஞ்சம் போரடிக்கலாம். நாம் பேசவந்த விஷயங்களை விட்டுச் சற்றே விலகிப்போவது போலத் தோன்றலாம். ஆனால், தொற்று நோய்களின் உலகத்தைத் தரிசிக்க வேண்டுமென்றால், அது தொடர்பான நம்பிக்கைகள், படிப்படியாக நிகழ்ந்துள்ள மாற்றங்களைத் தெரிந்துகொள்ள வேண்டும். இன்று தொற்று நோய் மருத்துவம் மிகப்பெரும் வளர்ச்சியை எட்டியிருக்கிறது. பல கொள்ளை நோய்களை இந்த உலகத்தை விட்டே விரட்டியிருக்கிறோம். ஆனால், ஒரு நோயை ஒழித்தால் இன்னொரு புதுநோய் உருவாகிறது. அது பல உயிர்களைக் காவு வாங்குகிறது. இதைத் தவிர்க்க முடியாதுதான். நாம் வாழ்வது பாக்டீரியாக்களின், வைரஸ்களின், கிருமிகளின் உலகத்தில். ஆனால், இந்த மேதைகள் போட்டுத் தந்திருக்கும் பாதைகளில் அதற்கான தீர்வுகளைத் தேடலாம். அதற்காகவேனும் அந்த மேதைகளையும் அவர்கள் செய்த ஆராய்ச்சிகளையும் தெரிந்துகொள்ள வேண்டும்.

தொற்று நோய்களைப் பற்றித் தெரிந்துகொள்ள விரும்புபவர்கள், அவசியம் அறிந்து கொள்ள வேண்டிய பெயர் ஒன்று உண்டு. லூயி பாஸ்ச்சர் (Louis Pasteur - 1822 -1895). இவரது பெயரில் குன்னூரில் ஒரு மருத்துவ ஆராய்ச்சி மையம் செயல்படுகிறது. இவரை, ‘மைக்ரோபயாலஜி துறையின் தந்தை’ என்று சொல்வார்கள். இவர் பிறந்தது பிரான்ஸ் நாட்டில்.

பால், பிரெட் எல்லாம் வெளியில் வைத்தால் கெட்டுப்போகிறதல்லவா? காரணம் என்ன? கிருமிகள் அவற்றில் ஊடுருவி வாயுக்களை உற்பத்தி செய்துவிடுகின்றன. அதனால் அவை வேறொரு வடிவத்துக்கு மாறிவிடுகின்றன. இதற்கு ஃபெர்மென்டேஷன் (Fermentation) என்று பெயர். இந்த விளைவைக் கண்டுபிடித்தவர் பாஸ்ச்சர் தான். பாலைக் கெட்டுப்போகாமல் பாதுகாப்பதற்கு ‘பாஸ்ச்சரைசேஷன்’ (Pasteurization) என்ற தொழில்நுட்பத்தைக் கண்டறிந்ததும் இவர் தான். இன்று அந்தத் தொழில்நுட்பம் பெரிய அளவில் பயன்படுகிறது.

பாஸ்ச்சர் நிறைய நோய்கள் குறித்து ஆராய்ச்சிகள் செய்திருக்கிறார். குறிப்பாக, ரேபிஸ் பற்றியும் ஆந்த்ராக்ஸ் பற்றியும் நிறைய புதிய விஷயங்கள் கண்டுபிடித்திருக்கிறார். தொற்று நோய் மருத்துவத்தில் இவரின் தியரிகள் பல்வேறு புதிய கண்டுபிடிப்புகளுக்கு வழி வகுத்திருக்கின்றன.

இவரைப் போலவே இன்னொரு மேதையையும் நாம் அறிந்துகொள்ள வேண்டும். அவர் பெயர் ராபர்ட் காஹ் (Robert Koch). இவரை, ‘பாக்டீரியாவியலின் தந்தை’ என்று சொல்வோம். இவரும் லூயி பாஸ்ச்சரின் காலத்தில் பிறந்தவர்தான். இவரது பிறப்பிடம் ஜெர்மனி. இவர்தான், ‘பாக்டீரியா என்பது வளரத்தக்க ஓர் உயிர்’ என்பதை உலகுக்குக் காட்டினார். அவர் காலத்துக்கு முன், பாக்டீரியா வளரும் என்பதை இந்த உலகம் நம்பவில்லை. அவருடைய ஆராய்ச்சிக்குப் பிறகுதான் பாக்டீரியா குறித்த ஆராய்ச்சிப் புதியதொரு கட்டத்தை எட்டியது. ‘காக்ஸ் பாஸ்டுலேட்ஸ்’ (Koch’s Postulates) என்று இவர் உருவாக்கிய விதி, தொற்று நோய் மருத்துவத்தின் வளர்ச்சிக்குப் பெரிதும் உதவியது.

‘ஒருவருக்கு ஏற்பட்டுள்ள நோய்க்கு குறிப்பிட்ட ஒரு கிருமிதான் காரணம்’ என்று கண்டறியும் வழிமுறையைச் சொல்கிறது இந்த விதி. ‘நோய்வாய்ப்பட்ட ஒருவரின் உடலில் இருந்து எடுக்கப்படுகிற ஒரு கிருமியை, இன்னொருவருக்குச் செலுத்தி அவருக்கும் அதேபோல நோய் வந்தால், அந்தக் கிருமிதான் இந்த நோய்க்குக் காரணம் என்று உறுதி செய்யலாம். அல்லது நோய்வாய்ப்பட்டவரின் உடலில் இருந்து எடுக்கப்படும் கிருமியை வளரச்செய்து, அந்தக் கிருமிதான் பிற நோயாளிகளின் உடலிலும் இருக்கிறது என்று கண்டுபிடித்தால் அந்தக் கிருமிதான் நோய்க்குக் காரணம் என்று உறுதி செய்யலாம் என்பதே ‘காக்ஸ் பாஸ்டுலேட்ஸ்’ விதி.

இந்த விதிதான் தொற்று நோய் மருத்துவத்தில் இன்று ஏற்பட்டுள்ள அத்தனை மறுமலர்ச்சிகளுக்கும் அடிப்படை.

(களைவோம்)