என்னுடைய இரண்டரை வயது குழந்தை, மலச்சிக்கலால் அவதிப்படுகிறாள். மருத்துவர்கள்,

‘லேக்ஸேட்டிவ்’ வகை மருந்தைப் பரிந்துரை செய்கிறார்கள். ஆனால், கடந்த சில தினங்களாக மாத்திரை பயன்படுத்தியபிறகும் அவளால் சரியாக மலம் கழிக்க முடியவில்லை. என்ன காரணமாக இருக்கும்? மாத்திரை கொடுப்பதைத் தொடரலாமா, வேண்டாமா?

- வெண்ணிலா, விரகனூர், மதுரை

மலச்சிக்கல் குழந்தைகளுக்கு ஏற்படும் பொதுவான பிரச்னைதான். பதற்றப்படத் தேவையில்லை. தாய்ப்பாலில் இருந்து சாதாரண உணவுக்குக் குழந்தை மாறும்போது, முதலில் சிலநாள்கள் அவர்களின் உடல் அதை ஏற்காமல், மலச்சிக்கலை உண்டாக்கி எதிர்ப்பைக் காட்டும். திடமான உணவு சாப்பிடத் தொடங்கும்போது, மலத்தின் அளவு அதிகரிக்கும்; அதேவேளையில் குடலின் இயக்கம் குறையும். சிலநேரம், குடற்புழுக்களாலும்கூட மலச்சிக்கல் ஏற்படலாம். தாய்ப்பால் மட்டுமே குடிக்கும் குழந்தைக்கு மலம் கழியாமல் இருந்தால், பால் சரியாகக் கிடைக்கவில்லை என்று அர்த்தம். இதுபோன்ற சூழலில், பிரச்னைக்கான காரணம் தெரியாமல் பெரியவர்களுக்குப் பரிந்துரைக்கப்படும் சில மருந்துகளை குழந்தைக்குக் கொடுப்பது தவறு. என்ன காரணத்தால் மலச்சிக்கல் ஏற்பட்டது என்பதை அறிய குடல்பகுதியில் அல்ட்ரா சவுண்டு ஸ்கேன் (Ultra Sound Scan) செய்துதான் பார்க்க வேண்டும்.

- ஆனந்த் பழனி, பொது மருத்துவர்

எனக்கு சைனஸ் பிரச்னையால் கண்கள் வீங்கி, சிவப்பாகி, கண்ணீர் வந்துகொண்டே இருக்கிறது. இதைச் சரிசெய்ய வழிகள் உண்டா?

- பிரியா, புதுக்கோட்டை

சைனஸ் என்பது ஒவ்வாமையால் ஏற்படுவதே. சைனஸ் அறைகளின் வடிகால்களில் சளித்தொல்லை ஏற்படுவது அல்லது சதை அதிகமாக வளர்வது போன்ற பிரச்னைகள் ஏற்பட்டால், கண்களில் அலர்ஜி ஏற்படக்கூடும். கண்கள் சிவப்பாகி, கண்ணீர் வருவதற்கு இது முக்கியக் காரணம். தலைப்பகுதியில் ஸ்கேன் செய்து பார்ப்பது நல்லது. அலர்ஜிக்கான காரணம் சளியாக இருக்கும்பட்சத்தில் மருந்து மாத்திரைகளைக் கொண்டே சரி செய்யலாம். ஈரப்பதம் நிறைந்த சூழலைத் தவிர்ப்பது, ஒவ்வாமை ஏற்படுத்தும் உணவுகளைத் தவிர்ப்பது போன்ற பழக்க வழக்கங்கள் சைனஸ் பிரச்னையிலிருந்து உங்களைக் காத்துக் கொள்ள உதவும்.

- அருள் சுந்தரேஷ் குமார், காது மூக்கு தொண்டை நிபுணர்

எனக்கு சமீபகாலமாக அதிகமாக முடி கொட்டுகிறது. அதோடு, முடி வறண்டு ஜீவனே இல்லாத மாதிரியும் இருக்கிறது. தைராய்டு பிரச்னை கிடையாது. ஆனால், சிசேரியன் மூலம் குழந்தை பிறந்து 9 மாதம் ஆகிறது. எனது பிரச்னைக்குத் தீர்வு சொல்லுங்களேன்?

- சங்கரி, ஆலக்குடி

பொதுவாகக் காய்ச்சல் வந்தாலோ, சிசேரியனுக்குப் பிறகோ முடிகொட்டுவது இயல்புதான். தற்காலிகமாக முடி வளர்ச்சியில் பாதிப்பு ஏற்படும். மேலும், முடி மிகவும் மென்மையானதாக மாறிவிடும். இதுபோன்ற நேரங்களில் ஷாம்பு பயன்படுத்துவதோ, மசாஜ் செய்வதோ, பிளாஸ்டிக் சீப்பு பயன்படுத்துவதோ கூடாது. காலப்போக்கில் இந்தப் பிரச்னை சரியாகிவிடும். ஷாம்பு பயன்படுத்தியே ஆகவேண்டும் என்றால், அதைத் தண்ணீரில் கலந்து பயன்படுத்த வேண்டும். பிளாஸ்டிக் சீப்பு பயன்படுத்தும்போது ஏற்படும் ஸ்டாட்டிக் எலெக்ட்ரிசிட்டி (Static Electricity), முடிக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால், மரம் அல்லது அலுமினியத்தாலான சீப்புகளைப் பயன்படுத்தலாம். புரதச்சத்து அதிகமுள்ள உணவுகளைச் சாப்பிட வேண்டும். முடி வறட்சியடையாமல் இருக்க எண்ணெய் தேய்த்துக் குளிக்க வேண்டும். இவை முடி கொட்டுவதைத் தவிர்க்க உதவும்.

- பிரபாவதி, சரும மருத்துவர்.

உங்கள் கேள்விகளை அனுப்பவேண்டிய முகவரி: கன்சல்ட்டிங் ரூம், டாக்டர் விகடன், 757, அண்ணா சாலை, சென்னை- 600 002.