`நாளைக்குக் காலைல வந்திடுங்க... சூப்பரா ஓட்டத்தைத் தொடங்கிடலாம்’ என்று அந்தத் தோழிக்குச் சொல்லி அனுப்பியிருந்தேன். அடுத்தநாள் காலை சீக்கிரமே எழுந்து எனக்கு முன்பாகவே மைதானத்துக்கு வந்திருந்தார்.

`இன்னும் மூணு மாசத்துல மேரேஜ்... எப்படியாவது என்னோட தொப்பையைக் குறைக்கணும்; வெரிவெரி அர்ஜென்ட்’ என்றார். பொதுவாக, சலூன்களுக்கு வரும் ஆட்கள்தான் `நாளைக்கு எனக்குக் கல்யாணம்; கொஞ்சம் அழகாக்கி விடுங்க’ என்பது மாதிரி வசனங்களைச் சொல்வார்கள். இன்று ஜிம், விளையாட்டு மைதானங்கள், ஜூம்பா நடன வகுப்புகளிலும்கூட இதுபோன்ற வசனங்களைக் கேட்கலாம். `எப்படியாச்சும் டக்குனு 25 கிலோ எடையைக் குறைச்சுக்குடுங்க. எவ்ளோ செலவானாலும் பரவாயில்ல’ என்பது போன்ற அந்த வசனங்கள் ஒரு புதிய வாழ்க்கைக்குத் தன்னை எப்படி எல்லாம் தயார் செய்கிறார்கள் என்பதையே வெளிப்படுத்துகிறது.

`சார் நான் ரெடி!’ என்றபடி உற்சாகமாக வந்தார், அந்தத்தோழி. கால்களில் ஹீல்ஸ் வைத்த செருப்பு, ஜீன்ஸ் பேன்ட், குர்தா போல ஏதோ உடையில் வந்திருந்தார். போதாக் குறைக்குத் துப்பட்டா வேறு. அவரைப் பார்த்ததும் அதிர்ச்சியாக இருந்தது.

‘என்னங்க இது... இதையெல்லாம் போட்டுட்டு எப்படி ஓடுவீங்க’ என்றேன் அவரிடம். எனது கேள்வி எதுவும் அவருக்கு விளங்கவில்லை. `மைதானத்தில் ஓடவும் உடற்பயிற்சி செய்யவும் நடைப்பயிற்சி செய்யவும் ஜிம்மில் பயிற்சி செய்வதற்கும் நல்ல காற்றோட்டமான தளர்வான உடைகள் அணிந்திருக்க வேண்டியது அவசியம். குறிப்பாக அதிக வியர்வையை உறிஞ்சக்கூடிய உடைகள் என்றால் சிறப்பு’ என்று அறிவுறுத்தி அனுப்பி வைத்தேன். அடுத்தநாள் மீண்டும் வந்தார். இந்தமுறை ஏதோ சோப்புக்கம்பெனி பெயர் போட்ட டி-ஷர்ட்டில் வந்திருந்தார். தொளதொளவென்ற பேன்ட், பள்ளிக்காலத்தில் வாங்கி நைந்துபோன கேன்வாஸ் ஷூ... நல்ல முன்னேற்றம்தான்! ‘இது, அப்பாவோட டி-ஷர்ட். அவருக்கு சைஸ் பத்தலைனு சும்மா வச்சிருந்தாரு... பேன்ட்டும் அவரோடதுதான்’ என்று இழுத்தார். ஒரு கல்லூரியில் சேரும்போது எப்படிக் கிளம்பிப்போவோம்? ஒரு புதிய வேலைக்குச் செல்லும்போது எவ்வளவு துடிப்பாக இருப்போம்? புதிதாகச் செருப்பு வாங்குவதில் தொடங்கி ஹேர்க்ளிப், நெயில் பாலிஷ் என ஒவ்வொன்றையும் தேர்ந்தெடுத்து கிளம்புவோமில்லையா... ஆனால் உடற்பயிற்சி என்றால் ஏன் இத்தனை இளக்காரம்? ஜிம், ஜூம்பா கூட ஓ.கே ஓரளவு நல்ல உடைகளுடன் மக்கள் வருகிறார்கள். ஆனால், இந்த நடைப்பயிற்சிக்கு வருகிறவர்கள்தான் மகாமோசம்.

நைந்து போன பழைய டி-ஷர்ட், பிய்ந்துபோன காலணிகளுடன் சேலையை வரிந்து கட்டிக்கொண்டு வருவார்கள்; சிலர் ஜீன்ஸ் பேன்ட் போட்டுக்கொண்டு வருவார்கள். ஆபீஸுக்குப் போடக்கூடிய ஷூவை அணிவதும், சுடிதார் போட்டு அதன்மேல் ஷாலுடனும் வருவார்கள். பயிற்சி எதுவாக இருந்தாலும் முதலில் பயிற்சியாளரிடம் கேட்டு, அவர் சொல்வதுபோல் உடைகளை அணிய வேண்டும். என்ன மாதிரியான காலணிகள் அவசியம்? அது எந்த மெட்டீரியலில் வாங்க வேண்டும்? என்பதையெல்லாம் அவர்களிடம் கேட்டுத் தெரிந்துகொள்ள வேண்டியது அவசியம். புதிய உடைகளைத்தான் அணிய வேண்டும் என்பதோ, நிறைய செலவு செய்ய வேண்டும் என்பதோ அவசியமில்லை.

சரியான உடைகளை அணிய வேண்டும். நாம் செய்யக்கூடிய பயிற்சிக்கு எது பலன் தருமோ, எது வசதியாக இருக்குமோ அதன்படி அணியவேண்டும். அதிகமாக செலவழிக்கக்கூடாது என்று முந்தைய கட்டுரைகளில் குறிப்பிட்டிருப்பேன். அதையேதான் இங்கேயும் சொல்கிறேன். தேவையில்லாதவற்றை வாங்கிக்குவிப்பது எப்படித் தவறானதோ அதே அளவுக்குத் தேவையானதை வாங்காமல் இருப்பதும் தவறானதே!

புடவை கட்டிக்கொண்டு ஓட முடியாது, நீரை உறிஞ்சக்கூடிய ஆடைகளை அணிந்துகொண்டு நீச்சல் அடிக்க முடியாது, இறுக்கமான ஆடைகளை அணிந்துகொண்டு யோகா செய்ய முடியாது என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். காரணம், மோசமான ஆடைகளுடன் பயிற்சி செய்யும்போது நாம் திட்டமிட்டபடிச் செய்யக்கூடிய செய்முறைகள் தவறாகப்போய் தசைப்பிடிப்புகள் நேரலாம். அது பயிற்சியைக் கைவிடச்செய்யும்.
நேரம் ஒதுக்குவோம்...

- வினோ

படம்: ப.பிரியங்கா, மாடல்: லட்சுமி