Published:Updated:

ஆரணியில் 25 பேரை கடித்துக்குதறிய வெறி நாய்!

ஆரணியில் 25 பேரை கடித்துக்குதறிய வெறி நாய்!
ஆரணியில் 25 பேரை கடித்துக்குதறிய வெறி நாய்!
ஆரணியில் 25 பேரை கடித்துக்குதறிய வெறி நாய்!

திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டம், ஆரணியில் 25 பேரை வெறி நாய் கடித்து குதறிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆரணி நாகராட்சி பகுதியில் உள்ளது  கொசப்பாளையம். இங்கு சுப்ரமணியசுவாமிக் கோவில் இருப்பதால், இந்தப்பகுதி முழுக்க குரங்கின் தொல்லை அதிகமாக உள்ளது.

தற்பொழுது தெருநாய்களும் அதிகரித்து வருவதால், இரவு நேரங்களில் சாலையில் செல்லும், வண்டிகளை துரத்தும் நிகழ்ச்சியும் அடிக்கடி நடக்க ஆரம்பித்துள்ளது.

இந்தநிலையில் கடந்த ஒரு வாரமாக வெறிப்பிடித்த நாய் ஒன்று, அந்தப் பகுதி முழுக்கவே சுற்றி வந்தது. இந்த நாய்க்கு வெறி அதிகமாகவே கடந்த 19, 20 ஆகிய நாட்களில் கொசப்பளையம் பகுதி உள்ள சுப்ரமணியசுவாமிக் கோவில்தெரு, இளங்கோ தெரு, குங்கிலியர் தெரு, தச்சூர்ரோடு ஆகிய பகுதியை சேர்ந்த 25 பேரை கடித்துக் குதறியது. இதனால் ஆத்திரம் அடைந்த தெருவாசிகள், நேற்றிரவு வெறிப்பிடித்த நாயை அடித்துக் கொன்றனர்.

15 பேருக்கு ஆரணியில் உள்ள அரசு மருத்துவமனையிலும், மற்றவர்களுக்கு தனியார் மருத்துவமனையில் ‘ரேபீஸ்’ நோய் தடுப்புக்கு ஊசிப் போட்டப்பட்டது.

##~~##
இது குறித்து கொசப்பாளையம் பகுதியை சேர்ந்த சண்முகம் கூறுகையில், "இந்த ஏரியாவுல, சுப்ரமணிய கோயில் இருக்குறதால வெள்ளிக்கிழமை, ஞாயிற்றுக் கிழமையில  சாமிக்கும்பிட அதிகமா வருவாங்க. அப்ப குரங்குகள் எந்தப் பொருளை எடுத்துட்டுப் போகவிடாம பிடுங்கிட்டு போய்டுது. இது மட்டுமில்லாம கடந்த ஆறு மாசமா, தெருநாய் தொல்லையும் தாங்க முடியலை. நைட் 9 மணிக்குமேல, வண்டியில போகமுடியல. உடனடியா நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்து, குரங்குகளையும், தெருநாய்களையும் பிடிச்சு கட்டுப்படுத்தணும்”  என்றார்.
காசி.வேம்பையன்