சாக்லேட் கசக்கும், அதுதான் நல்லது!

சாக்லேட் நிறைய சாப்பிடுபவர்களைப் பார்த்து ‘இது கெட்ட பழக்கமாச்சே...’ , `சாக்லேட் சாப்பிட்டா பல்லு கெட்டுப்போறது மட்டுமில்ல, உடம்பும் குண்டாகிடும்!’ என்று சொல்பவர்களே அதிகம். ஆனால், சாக்லேட்டில் நிறைய நன்மைகள் இருப்பதாகப் பல்வேறு ஆய்வுகள் நடத்தப்பட்டுள்ளன. குறிப்பாக, அதிலுள்ள ஃபிளேவனாய்டுகள் மூளை மற்றும் இதயத்துக்கு நல்லது என்கிறார்கள். ஆனால், உண்மையிலேயே சாக்லேட் சாப்பிட்டால் மனிதர்களுக்கு நன்மை கிடைக்குமா என்பதுபற்றிச் சமீபத்தில் ஆராய்ச்சிகள் நடத்தப்பட்டன.

லோமா லிண்டா பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற இந்த ஆய்வுகளின்படி 70 சதவிகிதம் கோக்கோ, 30 சதவிகிதம் இயற்கையான முறையில் தயாரிக்கப்பட்ட சர்க்கரை கொண்ட சாக்லேட் மனிதர்களின் அழுத்தத்தைக் கட்டுப்படுத்துகிறது, மனநிலையை மேம்படுத்துகிறது. நினைவாற்றல் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது என்பதும் தெரியவந்துள்ளது. உடனே கடைக்கு ஓடிச்சென்று சாக்லெட்டுகளை வாங்கிக் குவிக்க வேண்டாம். இன்றைக்கு விற்கப்படும் பெரும்பாலான சாக்லேட்டுகளில் கோக்கோ சதவிகிதம் குறைவுதான், சர்க்கரையைத்தான் ஏராளமாகக் கொட்டிவைத்திருக்கிறார்கள். இந்த ஆய்வின்படி கோக்கோவின் சதவிகிதம் அதிகமாக இருந்தால்தான் அந்த சாக்லேட் நமக்கு நல்லது. ஆகவே, ‘டார்க் சாக்லெட்’ என்று கேட்டு வாங்குங்கள். கொஞ்சம் கசக்கும், சாப்பிடச் சாப்பிட அந்தச் சுவையும் பிடித்துவிடும்!

வேலைக்கும் தூக்கத்துக்கும் தொடர்பு!

`தான் உண்டு தன் வேலை உண்டு’ என்று சுறுசுறுப்பாக வேலை பார்ப்பவர்கள் ஒரு ரகம். அக்கம்பக்கத்தில் இருப்பவர்களுடன் சண்டை போட்டுக்கொண்டு, `கிசுகிசு’ பேசியபடி, வம்பு வளர்த்துக்கொண்டு, அவ்வப்போது கொஞ்சம் வேலையும் பார்க்கிறவர்கள் இன்னொரு ரகம். அலுவலகங்களில் பொதுவாக இதுபோன்ற இரண்டுவகையான ஊழியர்களைப் பார்க்கலாம்.

இதில் முதல் வகையைச் சேர்ந்தவர்கள் இரவில் நன்றாகத் தூங்குவார்கள், இரண்டாவது வகையினர் தூக்கம் வராமல் சிரமப்படுவார்கள் என்கிறது அயோவா பல்கலைக்கழகத்தின் சமீபத்திய ஆய்வு. அதாவது, அலுவலகத்தில் ஒருவர் எப்படி நடந்துகொள்கிறார் என்பதைப் பொறுத்து, அது அவருடைய தூக்கத்தை நேரடியாகப் பாதிக்கிறதாம். முறைதவறி நடத்தல், கோபப்படுதல், சண்டைக்கு வருதல், கிசுகிசு பேசுதல், பிறர்மீது பழிபோடுதல் போன்றவற்றில் ஈடுபடக்கூடியவர்கள், வீடு திரும்பியதும் அதையே நினைத்துக் கொண்டிருப்பார்களாம்; அதனால் அவர்களுக்கு மனஅழுத்தம் அதிகரிப்பதுடன், சரியாக தூக்கம் வருவதில்லை. ஆக, ஒழுங்காக வேலைபார்த்தால் முதலாளி பாராட்டுகிறாரோ இல்லையோ, தூக்கம் நன்றாக வரும், உடல் ஆரோக்கியமாக இருக்கும்!

காலை உணவில் கவனம்!

காலையில் சாப்பிடாவிட்டால் என்ன ஆகும்? `பெருசா ஒண்ணும் ஆகாது, மதியம் கொஞ்சம் சீக்கிரமா சாப்பிட்டாப் போச்சு’ என்று சொல்கிறவரா நீங்கள்? ஜாக்கிரதை. அடிக்கடி காலையில் சாப்பிடாமல் இருப்பவர்கள் பிற்காலத்தில் குண்டாகிவிடுகிறார்கள் என்று சமீபத்திய ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. 300-க்கும் மேற்பட்டவர்களிடம் பன்னிரண்டு ஆண்டுகள் தொடர்ந்து அந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அப்போது, யாரெல்லாம் ஒழுங்காகக் காலை உணவைச் சாப்பிடவில்லையோ, அவர்களெல்லாம் அதிக எடை, அதிக இடுப்பளவோடு இருந்தார்களாம். குறிப்பாக, ‘காலை உணவு சாப்பிடும் பழக்கமே இல்லை’ என்று சொல்பவர்களுக்கு உடல் பருமன் பிரச்னை மிகத் தீவிரமாக இருந்ததாம்.

‘காலையில் சாப்பிடும்போது நம்முடைய உடலின் வளர்சிதைமாற்றம் தூண்டப்படுகிறது. அதனால் நாள்முழுவதும் நாம் அதிகக் கலோரிகளை எரிக்கிறோம்’ என்கிறார்கள் ஆய்வு மேற்கொண்ட நிபுணர்கள். ‘சரிவிகித அளவில் சத்துகளைக் கொண்ட காலை உணவைச் சாப்பிடுவதன்மூலம் பின்னாள்களில் பல பிரச்னைகளைத் தடுக்கலாம்!’

மதிய வெயிலில் வைட்டமின் டி அதிகம்!

மாணவர்கள் பள்ளிக்குச் சென்றதும் மைதானத்தில் ஒன்றுகூடி பிரார்த்தனைப்பாடல் பாடுவது, உறுதிமொழி சொல்வது அன்றாட நிகழ்வுகளில் ஒன்று. மேலும் அப்போது தலைமையாசிரியரோ, பிற ஆசிரியர்களோ நற்செய்திகள் குறித்துப் பேசுவார்கள். அதன்பிறகு மாணவர்கள் வகுப்பறைகளுக்குச் செல்வது வழக்கம். இதுபோன்று காலையில் நடக்கும் நிகழ்ச்சியை, டெல்லியில் உள்ள ஒரு பள்ளியில் மதியம் 12 மணிக்கு மாற்றியிருக்கிறார்கள். சுட்டெரிக்கும் வெயிலில் மாணவர்களை நிறுத்திவைத்து அவர்களுக்கு உடற்பயிற்சி மற்றும் யோகாசனம் சொல்லிக்கொடுக்கிறார்கள். இதைப் பார்த்ததும் ஏன் இப்படி? மாணவர்கள் ஏதாவது தவறு செய்துவிட்டார்களா? என்று கேட்கத் தோன்றலாம். அந்தப் பள்ளி தினசரிக் கூட்டத்தை மதிய வேளைக்கு மாற்றியது தண்டனையாக இல்லை; மாணவர்களுக்கு வைட்டமின் டி பற்றிய விழிப்பு உணர்வு வரவேண்டும் என்பதற்காக என்பது கேட்கவே புதிதாக இருக்கிறதல்லவா?

இந்தியாவில் நல்ல வெயில் அடித்தாலும், பகல் 11 மணியிலிருந்து 1 மணிவரைதான் வைட்டமின் டி உடலில் நன்றாகச் சேர்கிறது. அந்த நேரத்தில் 20 நிமிடங்கள் வெயிலில் நின்றால், காலை நேரத்தைவிட ஐந்துமடங்கு அதிக வைட்டமின் டி-ஐப் பெறலாம். அதை மாணவர்கள் மட்டுமல்ல அனைவரும் உணர்ந்துகொள்வதற்காகத்தான் இப்படியொரு புதுமையைச் செய்திருக்கிறார்கள். நாமும் வாய்ப்புக் கிடைக்கும்போது பகல் நேரத்தில் வெளியே வந்து வெயிலில் நின்று, இலவசமாகக் கிடைக்கும் வைட்டமின் டி-ஐப் பெற்றுக்கொள்வோம். சும்மா கிடைப்பதை ஏன் விடவேண்டும்?

இசைகேட்டால் மருந்தும் மேம்படும்!

உடலில் ஏதோ பிரச்னை, மருத்துவர் ஒரு குறிப்பிட்ட மாத்திரையைச் சாப்பிடச்சொல்கிறார். அதை எப்படிச் சாப்பிடவேண்டும்? வாயில் போட்டுத் தண்ணீர் ஊற்றிக்கொள்ளவேண்டியதுதான். வேறென்ன?

அத்துடன் இன்னொரு சிறிய மாற்றத்தையும் செய்தால், அந்த மாத்திரையின் பலன் மிக நன்றாக இருக்குமாம்: நல்ல இசையைக் கேட்பது. பிரேசிலைச் சேர்ந்த ஆராய்ச்சிக்குழுவொன்று சமீபத்தில் உயர் ரத்த அழுத்தத்துக்கான மருந்துகளை எடுத்துக்கொள்ளும் சிலர் மத்தியில் ஓர் ஆய்வை நிகழ்த்தியிருக்கிறது: அவர்கள் மருந்துகளைச் சாப்பிட்ட கையோடு ஒரு மணிநேரம் செவ்வியல் இசையைக் கேட்கவைத்திருக்கிறார்கள்; இந்தக் காலகட்டத்தில் அவர்களுடைய ரத்த அழுத்தத்தைத் தொடர்ந்து அளந்துபார்த்திருக்கிறார்கள். மறுநாளும் அதே நபர்கள், அதே மருந்துகள், அதேபோல் அளவிடுதல், ஆனால், இசைமட்டும் கிடையாது. இந்த இரு அளவீடுகளையும் ஒப்பிட்டுப் பார்த்தபோது, செவ்வியல் இசையைக் கேட்பதன்மூலம் மருந்துகளின் செயல்திறன் நன்கு மேம்பட்டிருப்பதும், உடல் அந்த மருந்துகளைச் சிறப்பாக ஏற்றுக்கொண்டு குணமாகியிருப்பதும் தெரியவந்துள்ளது. இதன்மூலம், உயர் ரத்த அழுத்தத்துக்கான மருந்துகளின் செயல்திறனை இசைகேட்டல் மேம்படுத்துகிறது என்று ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளார்கள்.

- என். ராஜேஷ்வர்

ஊட்டச்சத்து விவரம்: உணவு நிறுவனங்கள் அதிரடி!

கடைகளில் பொருள்களை வாங்கும்போது, அவற்றில் எழுதியிருக்கும் ஊட்டச்சத்துகளின் விவரங்களை நாம் பார்ப்பதில்லை. பெரும்பாலும் அந்த விவரப்பட்டியலில் அவர்கள் என்ன சொல்லவருகிறார்கள் என்பது சராசரி மக்களுக்குப் புரியாது. எடுத்துக்காட்டாக, 5.5 கிராம் கார்போஹைட்ரேட் என்று அதில் குறிப்பிடப்பட்டிருந்தால், அது நல்லதா, கெட்டதா? என்று யாருக்கும் தெரியாது.

இந்தக் குழப்பத்தைத் தீர்ப்பதற்காக, பல்வேறு உணவுத்தயாரிப்பு நிறுவனங்கள் சேர்ந்து ENL என்ற Evolved Nutritional Label-ஐ அறிமுகப்படுத்த இருக்கிறார்கள். இதன் மூலம் ஊட்டச்சத்து விவரங்களை யார் வேண்டுமானாலும் பார்த்தவுடன் புரிந்துகொள்ள முடியும். இதற்காக, ENL வண்ணங்களைப் பயன்படுத்துகிறது. ஊட்டச்சத்துகள் மிகுதியாக இருந்தால், அல்லது, உடலுக்குத் தீங்குசெய்பவை குறைவாக இருந்தால் பச்சை வண்ணம் இடம்பெற்றிருக்கும். நமக்குத் தேவையில்லாதவை அளவுக்கதிகமாக இருந்தால் சிவப்பு வண்ணம் நம்மை எச்சரிக்கும். இரண்டுக்கும் இடைப்பட்ட தன்மை மஞ்சள் வண்ணத்தில் குறியிடப்பட்டுக் காட்டப்பட்டிருக்கும். இந்த எளிய மாற்றங்களால், கடையில் பொருள் வாங்குபவர்கள் சட்டென்று புரிந்துகொள்ளலாம்: பச்சை அதிகமா, சிவப்பு அதிகமா என்று கவனித்தாலே போதும். அருமையான திட்டம். இந்தியாவுக்கு எப்போது வருமோ!