Published:Updated:

மருத்துவ மூடநம்பிக்கைகள் நம்பினால் கைவிடப்படுவீர்கள்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
மருத்துவ மூடநம்பிக்கைகள் நம்பினால் கைவிடப்படுவீர்கள்!
மருத்துவ மூடநம்பிக்கைகள் நம்பினால் கைவிடப்படுவீர்கள்!

மருத்துவ மூடநம்பிக்கைகள் நம்பினால் கைவிடப்படுவீர்கள்!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

பிரீமியம் ஸ்டோரி
மருத்துவ மூடநம்பிக்கைகள் நம்பினால் கைவிடப்படுவீர்கள்!

ம்பிக்கையின் பெயரில் சில பழக்க வழக்கங்களைத் தொன்றுதொட்டு நாம் பின்பற்றி வருகிறோம். அவற்றில் சில சரியாக இருக்கலாம்; சில தவறாகவும் இருக்கின்றன.

மருத்துவ மூடநம்பிக்கைகள் நம்பினால் கைவிடப்படுவீர்கள்!

ஆரோக்கியம் குறித்த தவறான நம்பிக்கைகளால் உடல்நலம் மேலும் பாதிப்படையலாம் என்பதால் அவற்றிலிருந்து விடுபட வேண்டியது அவசியம். தவறான அந்தப் பழக்கவழக்கங்கள் பற்றிப் பார்ப்போம்.

மருத்துவ மூடநம்பிக்கைகள் நம்பினால் கைவிடப்படுவீர்கள்!
மருத்துவ மூடநம்பிக்கைகள் நம்பினால் கைவிடப்படுவீர்கள்!

மஞ்சள் காமாலைக்குச் சூடு

மஞ்சள் காமாலைக்குச் சூடு போடுவது, சூடு போட்ட இடத்தில் பச்சிலையை வைத்துக் கட்டுப்போடுவது என்பன போன்ற பழக்கங்கள் நடைமுறையில் உள்ளன. அவை தவறானவை. சூடுபோட்ட இடத்திலிருந்து மஞ்சள் நிறத்தில் நீர் வடிவதால், தேவையில்லாத பித்தநீர் வெளியேற்றப்படுவதாக தவறாக நினைக்கிறார்கள். மஞ்சள் காமாலை மட்டுமல்ல, வைரஸ் தொற்று, கல்லீரல் பாதிப்பு, பித்தநீர் அடைப்பு, புற்றுநோய் எனப் பல காரணங்களாலும் நீர் வடியும் என்பதை நோயாளிகள் புரிந்து கொள்ள வேண்டும்.

மருத்துவ மூடநம்பிக்கைகள் நம்பினால் கைவிடப்படுவீர்கள்!

கருவைக் கலைக்குமா பப்பாளி?

பப்பாளிப் பழம் சாப்பிட்டால் கரு கலைந்துவிடும் என்ற தவறான எண்ணம் மக்களிடம் இருக்கிறது. பப்பாளிப் பழத்தில், வைட்டமின் ஏ, சி, கால்சியம் மற்றும் இரும்புச்சத்து என எண்ணற்ற சத்துகள் அடங்கியுள்ளன. எனவே, பப்பாளிப் பழத்தால் நன்மைகள்தான் அதிகம். அதில் எந்தத் தீமையும் இருப்பதாக விஞ்ஞானப்பூர்வமாக நிரூபிக்கப்படவில்லை. பப்பாளிப்பழம் சாப்பிடுவதால் கரு கலையாது.

மருத்துவ மூடநம்பிக்கைகள் நம்பினால் கைவிடப்படுவீர்கள்!

அடிக்கடி எடை பார்க்கலாமா?

குழந்தைகளை அடிக்கடி எடைபோட்டுப் பார்த்தால் அவர்கள் நோஞ்சானாகி விடுவார்கள் என்ற தவறான கருத்து மக்களிடம் நிலவுகிறது. ஆனால், குழந்தை பிறந்த உடனேயே  எடை போட்டுப் பார்ப்பதுடன், தொடர்ந்து குழந்தையின் வளர்ச்சி, ஆரோக்கியத்தை அறிந்துகொள்வது அவசியம். மேலும் அவர்களுக்குத் தரும் மருந்தை அளவிட்டுக் கொடுப்பதற்கும் எடை போட்டுப் பார்க்க வேண்டியது அவசியமாகிறது.

மருத்துவ மூடநம்பிக்கைகள் நம்பினால் கைவிடப்படுவீர்கள்!

காக்கா வலிப்புக்குச் சாவிக்கொத்து?

‘காக்கா வலிப்பு’ வந்தால் அவர்களது கையில் சாவி கொடுப்பது வழக்கமாக இருக்கிறது. இது தவறான நம்பிக்கை. இரும்புக்கும் வலிப்பு நோய்க்கும் எப்படி முடிச்சுப் போட்டார்கள் என்று தெரியவில்லை. மூளையிலுள்ள நரம்பிழைகளில் மின்னோட்டம் சீராக இல்லாமல், அதிகமாகக் கடத்தப்படுவதாலேயே வலிப்பு ஏற்படுகிறது. அப்படி வலிப்பு ஏற்படும்போது நோயாளிக்கு முதலுதவி செய்ய வேண்டியது அவசியமாகும். அவர் கையில் சாவியைக் கொடுப்பதால் எந்தப் பயனுமில்லை. மின்னோட்டத்தைக் கட்டுப்படுத்த வலிப்பு நோய்க்கான மருந்துகளால் மட்டுமே முடியும் என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும்.

மருத்துவ மூடநம்பிக்கைகள் நம்பினால் கைவிடப்படுவீர்கள்!

பொன்னுக்கு வீங்கியும் நெக்லஸும்

‘பொன்னுக்கு வீங்கி’ எனப்படும் புட்டாளம்மை வந்தால் `நெக்லஸ்’ மாட்டிக்கொள்வது வழக்கமாக உள்ளது. உமிழ்நீர்ச் சுரப்பிகளில் ஒன்றான பெரோடிட் என்ற சுரப்பியில் (Parotid Glands) பாதிப்பு ஏற்படுவதால் காதின் முன்புறம் ஏற்படும் பாதிப்பே ‘பொன்னுக்கு வீங்கி’. வீக்கத்துடன் காணப்படும் இந்தப் பாதிப்புக்கு, ‘பொன்னுக்கு வீங்கி’ என்று பெயர் வைத்ததால், பொன்னாலான நகையை அணிவதன்மூலம் நோய் விலகிவிடும் என்று கருதி தங்க நெக்லஸை வாங்கி அணிய ஆரம்பித்து விட்டார்கள். இந்த நோய், ஆண்களுக்கு விந்தணுக்களை உற்பத்தி செய்யும் விதைப்பகுதியைப் பாதித்து அதனால் ஆண்மைக் குறையை ஏற்படுத்தக்கூடும். எனவே, மருத்துவரிடம் காண்பித்துச் சிகிச்சை பெறுவதே சரியானது.

மருத்துவ மூடநம்பிக்கைகள் நம்பினால் கைவிடப்படுவீர்கள்!

பாம்புக்கடிக்குக் கல்

பாம்பு கடித்தால் அந்த இடத்தில் சிலவகைக் கற்களை வைத்துக் கட்டும் பழக்கம் சில கிராமங்களில் இன்றும் உள்ளது. அந்தக் கல் விஷத்தை உறிஞ்சி எடுத்துவிடும் என்று மக்கள் நம்புவதே காரணம். பாம்புகளில் சுமார் 3 ஆயிரம் வகைகள் இருக்கின்றன. இருந்தாலும், நாகப்பாம்பு (நல்ல பாம்பு), கட்டுவிரியன், கண்ணாடி விரியன், கடல் பாம்பு போன்றவைதான் விஷம் உள்ளவை. மற்ற பாம்புகள் கடிப்பதால் விஷம் இல்லை. விஷப்பாம்புகள் கடித்து, நோயாளி பாதிக்கப்பட்டால், உடனடியாக அவரை மருத்துவமனையில் சேர்த்து, விஷ முறிவுக்கான மருந்து (ASV - Anti Snake Venom) கொடுக்கப்பட வேண்டும். கடல் பாம்பு கடித்தால், அதற்கென விசேஷ விஷமுறிவு மருந்து இருக்கிறது. சிலர் பாம்பு கடித்தால், அந்தப் பாம்பைப் பிடித்தோ, அடித்தோ மருத்துவமனைக்குக் கொண்டு வருவார்கள். இது, அந்தப் பாம்பு விஷமுள்ளதா? இல்லையா? என்பதைக் கண்டறிய உதவும்.

மருத்துவ மூடநம்பிக்கைகள் நம்பினால் கைவிடப்படுவீர்கள்!

ஆண் கருத்தடை அவஸ்தையா?

மக்கள் தொகையைக் கட்டுப்படுத்த குடும்பக் கட்டுப்பாட்டுத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இரண்டு குழந்தைகள் பெற்றவர்களுக்குப் பெரும்பாலும் இந்தத் திட்டம் வலியுறுத்தப்படுகிறது. பெண்களுக்கு மட்டுமின்றி, ஆண்களுக்கும் கருத்தடை அறுவை சிகிச்சை செய்யப்படுகிறது. ஆண்களுக்கான கருத்தடை அறுவை சிகிச்சை எளிதானது. விந்தணுவைக் கடத்தக்கூடிய ‘வாஸ் டெஃபெரென்ஸ்’ (Vas Deferens) என்ற குழாய் துண்டிக்கப்பட்டு, விந்தணு வெளியேறாமல் அறுவை சிகிச்சை செய்யப்படும். வாசெக்டமி (Vasectomy) என்ற அந்த அறுவை சிகிச்சை செய்யப்படுவதால், அந்த நபரால் உடலுறவில் ஈடுபடமுடியாது என்ற தவறான கருத்து மக்களிடம் நிலவுகிறது. இந்த அறுவை சிகிச்சையால், குழந்தை பிறப்பது மட்டுமே தடுக்கப்படும். தாம்பத்ய வாழ்க்கையில் எந்தவிதப் பிரச்னையும் ஏற்படாது.

மருத்துவ மூடநம்பிக்கைகள் நம்பினால் கைவிடப்படுவீர்கள்!

மருக்களை மாயமாக்குமா மிளகு?

சருமத்தில் மரு வந்தால் சாமிக்கு உப்பும் மிளகும் போட்டால் அது மறைந்துவிடும் என்று சிலர் நம்புகிறார்கள். சருமத்தில், வைரஸ் கிருமிகள் பாதிப்பால், ‘வார்ட்’ எனப்படும் மருக்கள் தோன்றலாம். வைட்டமின் ‘ஏ’ குறைபாட்டால் கண்ணில் பாதிப்பு ஏற்பட்டு மாலைக்கண் நோய் வருவதுபோல, சருமத்தையும் பாதித்து, அது உலர்ந்து, கைகளின் பின்புறம் மருக்கள் போன்ற முட்கள் ஏற்படலாம். இதுபோன்ற முட்களையும், மருக்களையும் நீக்க மருத்துவத்தில் சிறந்த சிகிச்சை முறைகள் உள்ளன.

மருத்துவ மூடநம்பிக்கைகள் நம்பினால் கைவிடப்படுவீர்கள்!

ரத்த அழுத்தம் குறைக்குமா காந்தம்?

கைகளில், காந்தத்தன்மை கொண்ட பிரேஸ்லெட் அணிவதால் ரத்தஅழுத்தம் குறையும் என்ற தவறான கருத்து நிலவுகிறது. சிலர் ரத்த அழுத்தத்துக்கான மருந்துகளைக்கூட நிறுத்தி விடுவார்கள். பரிசோதனை செய்து பார்த்தால், ரத்த அழுத்தம் குறைந்திருக்காது; அதிகரித்தே காணப்படும். எனவே, காந்த பிரேஸ்லெட், கை கொடுக்காது என்கிற விழிப்பு உணர்வு வேண்டும்.

மருத்துவ மூடநம்பிக்கைகள் நம்பினால் கைவிடப்படுவீர்கள்!

பழம் சாப்பிட்டால் சளிப்பிடிக்குமா?

காய்ச்சல், சளித்தொல்லை இருந்தால், பழங்களைச் சாப்பிடக்கூடாது என்பார்கள். பழம் கொடுத்தால் சளி அதிகமாகிவிடும் என்பதே இவர்களுடைய எண்ணம். உண்மையில், காய்ச்சலும் சளிப்பிடிப்பதும் நுண்கிருமிகளின் பெருக்கத்தால்தான். எனவே, அதற்கான சிகிச்சை மேற்கொள்ளும்போது, பழம் சாப்பிடுவதால் விரைவில் பலன் கிடைக்கும். பழங்களில், உடலுக்கு எதிர்ப்பாற்றலைத் தரக்கூடிய வைட்டமின் சி அதிகமாக உள்ளது. வைட்டமின்கள் மற்றும் தாது உப்புகளும் ஆக்ஸிகரணத்தைத் தடுக்கும் பொருள்களும் அதிகமென்பதால், இந்தக் காலகட்டத்தில் பழம் கொடுப்பது நோயிலிருந்து விரைவில் விடுபட உதவும்.

மருத்துவ மூடநம்பிக்கைகள் நம்பினால் கைவிடப்படுவீர்கள்!

யானையின் சாணம் தீர்வாகுமா?

சிலருக்கு ஒரு கால் மட்டும் யானையின் கால் மாதிரி பெரிதாக இருக்கும். இதனை, ‘யானைக்கால் நோய்’ என்பார்கள். இது ‘Wuchereria Bancrofti’ என்ற நுண்ணிய புழு வடிவ ஒட்டுண்ணியால் ஏற்படக்கூடியது. இதை க்யூலெக்ஸ் (Culex) என்ற கொசுக்கள் மனிதர்களிடம் பரப்புகின்றன. இதனால், நிணநீர்ச் சுரப்பிகள், நிணநீர்க் குழாய்கள், நிணநீர் ஓட்டம் ஆகியவை பாதிக்கப்படுவதால் தொடையில் நெறிக்கட்டி யானைக்கால் போன்று வீங்கிவிடும். இந்த நோய் வந்தவர்கள், யானையின் சாணத்தை மிதித்தால் சரியாகிவிடுமென்று மக்களிடம் தவறான எண்ணமிருக்கிறது. இந்தவகை நோய் பாதித்தவர்களின் கால் வேண்டுமானால், ‘யானை’யின் கால்போல இருக்கலாம். ஆனால், எந்தச் சாணமும் இதற்குப் பயன் தராது. இதற்கெனச் சிறந்த மருத்துவம் மற்றும் அறுவை சிகிச்சைகள் உள்ளன.

மருத்துவ மூடநம்பிக்கைகள் நம்பினால் கைவிடப்படுவீர்கள்!

மழையில் நனைந்தால் சளிப்பிடிக்குமா?

யாராவது தும்மல் போட்டால், மழையில் நனைந்துவிட்டீர்களா? என்று கேட்பார்கள். ஏனென்றால், ஜலதோஷம் போன்ற பாதிப்புகள் மழையால்தான் ஏற்படுகின்றன என்று மக்கள் கருதுகிறார்கள். மழைக்காலத்தில் ஜலதோஷம் வந்தாலும், அதற்கு ரினோ வைரஸ் (Rhino Virus) போன்ற வைரஸ்களின் தொற்றுதான் காரணமாக இருக்கும். மேலும், தும்மல், தூசு, புகைநெடி ஆகியவற்றாலும்கூட ஜலதோஷம் ஏற்படலாம். மழையில் நனைபவர்களுக்குத்தான் ஜலதோஷம் வரும் என்று சொல்லமுடியாது.

மருத்துவ மூடநம்பிக்கைகள் நம்பினால் கைவிடப்படுவீர்கள்!

அம்மைநோய்க்கு யார் காரணம்?

அம்மை நோய் வந்தால், அதற்கு அம்மன்தான் காரணம் என்று பழியை அம்மன்மீது போடுகிறார்கள். அதனால், சின்னம்மை, தட்டம்மை போன்ற நோய்கள் வந்தால், மருத்துவரிடம் சென்று சிகிச்சை பெறாமல் மருந்து மற்றும் ஊசிகளைப் பயன்படுத்தவும் மறுக்கிறார்கள். ஏற்கெனவே, பெரியம்மை நோய் முற்றிலுமாக ஒழிக்கப்பட்டுவிட்டது. சின்னம்மை, தட்டமைக்கும்கூடத் தடுப்பூசிகள் உள்ளன. மேலும், அம்மை வந்தாலும் அதற்கு முறையாக சிகிச்சைகள் செய்ய வழிகள் உள்ளன.

மருத்துவ மூடநம்பிக்கைகள் நம்பினால் கைவிடப்படுவீர்கள்!

வாதநோய்க்கு எண்ணெய்?

மூட்டுகளில் வலி, வீக்கம் என எது ஏற்பட்டாலும் அதை வாதநோய் என்று கூறி அதற்கு எண்ணெய் தடவி நீவிவிடுவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார்கள். ‘பீட்டா ஹீமோலைட்டிக் ஸ்ட்ரெப்டோ காக்கஸ்’ எனும் பாக்டீரியாவால் வரக்கூடிய மூட்டுவாதக் காய்ச்சலாகவும் இருக்கலாம். இந்தப் பாதிப்புக்கு முறையாக சிகிச்சை எடுக்கவில்லை என்றால், இதய வால்வுகளைப் பாதித்து இளம்வயதினருக்கு இதயநோயை ஏற்படுத்திவிடும். இது இறப்பையும் ஏற்படுத்தும் அபாயம் இருப்பதால் எச்சரிக்கையாக இருக்க வேண்டியது அவசியம்.

மருத்துவ மூடநம்பிக்கைகள் நம்பினால் கைவிடப்படுவீர்கள்!

காயமும் ஊசியும்

கைகால்களில் அடிபட்டால் தடுப்பூசி போட்டு, ‘டெட்டனஸ்’ எனும் நோய் வராமல் தடுக்கவேண்டும். ஆனால், இன்றைக்கும் கிராமங்களில் பலர் கைகால்களில் அடிபட்டால் அதைக் கண்டுகொள்ளாமல் அலட்சியமாக இருந்துவிடுவார்கள். அத்துடன் நின்றால் பரவாயில்லை. காயம் பட்ட இடத்தில் சாணத்தைத் தடவும் பழக்கமும் சில பகுதிகளில் இருக்கிறது. இதனால், அவர்களுக்கு மிக எளிதாக ‘டெட்டனஸ்’ பாதிப்பு ஏற்பட்டுவிடும். பிறந்த குழந்தையின் தொப்புள்கொடியில் சிலர் சாணம் வைப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். இது நஞ்சாகி டெட்டனஸ் நோயால் குழந்தை பாதிக்கப்பட்டு இறந்துவிட நேர்கிறது. எனவே, ‘செப்டிக்’ ஊசி என்று மக்களால் அழைக்கப்படும் ஊசியை, எந்தக் காயமாக இருந்தாலும் போட்டுக்கொள்ள வேண்டும். இது உயிர் காக்கும் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.

மருத்துவ மூடநம்பிக்கைகள் நம்பினால் கைவிடப்படுவீர்கள்!

மந்திர தந்திரங்களும் மனநலப் பிரச்னைகளும்

ஹிஸ்டீரியா (Hysteria) எனப்படும் மன அழுத்தம் பெரும்பாலும் பெண்களுக்கு பாதிப்பை ஏற்படுத்துகிறது. இதன் காரணமாக, இவர்களுக்குத் தலைச்சுற்றல், வாந்தி, மயக்கம், வயிற்றுவலி, படபடப்பு, மூச்சுவிட இயலாமை போன்ற பல்வேறு பாதிப்புகள் ஏற்படும். இத்தகைய பாதிப்புகளைப் பரிசோதனைகளால் கண்டுபிடிக்க முடியாது. ஆகவே, இவர்களுக்குப் பேய் பிடித்து விட்டதாகக் கருதி மந்திரம், தந்திரம் என மக்கள் வேறுவழியில் செல்வார்கள். சிலர், சாமியார்களிடம் கொண்டுபோய் அவர்களை அடித்துத் துன்புறுத்தி, பேய் ஓட்டுவதாகச் சொல்வார்கள். இவையெல்லாம் தவறான செயல்கள். அவர்களை மனநல மருத்துவரிடம் அழைத்துச் சென்று சிகிச்சை அளிப்பதே சரியானது.

மருத்துவ மூடநம்பிக்கைகள் நம்பினால் கைவிடப்படுவீர்கள்!

பேய் அடிக்குமா?

திடீரென யாராவது இறந்துவிட்டால் அவர்களைப் பேய் அடித்து விட்டதாகக் கூறிக் கதை கட்டுவார்கள். இதுபோன்ற திடீர் மரணங்களுக்கு மாரடைப்பு காரணமாக இருக்கலாம். சர்க்கரைநோய், ரத்த அழுத்தம் போன்றவற்றைக் கட்டுப்பாட்டில் வைக்காதவர்களுக்கும் இதயத்தில் பாதிப்பு ஏற்பட்டு அது மாரடைப்பை ஏற்படுத்திவிடும். சிலருக்கு அதிக ரத்த அழுத்தத்தால், மூளையில் ஏற்படும் ரத்தக்கசிவும் மரணத்துக்குக் காரணமாக இருக்கலாம்.

மருத்துவ மூடநம்பிக்கைகள் நம்பினால் கைவிடப்படுவீர்கள்!

எச்சில் துப்பினால் தொண்டைவலி வருமா?

தொண்டைவலி ஏற்பட்டால், `நரகலில் துப்பினாயா?’ என்று கிராமங்களில் கேட்பதை நீங்கள் பார்த்திருக்கலாம். கழிவறைக்குச் சென்று வருபவர்களுக்குக்கூட இதுபோல தொண்டைவலி ஏற்படும் என்று பலரும் நம்புகிறார்கள். ஆனால், தொண்டைவலி `ஸ்ட்ரெப்டோ காக்கஸ்’ வகைக் கிருமிகளால் பெரும்பாலும் ஏற்படுகிறது. அவை பென்சிலின் வகை மருந்துகளுக்கு நன்கு கட்டுப்படும் என்பதே உண்மை.

மருத்துவ மூடநம்பிக்கைகள் நம்பினால் கைவிடப்படுவீர்கள்!

பல்வலி போக்குமா பாக்கு?

பாக்கு போடும் பழக்கம் உள்ளவர்களிடம் கேட்டால், பல்வலிக்காகப் பாக்கு போடுவதாகச் சொல்வார்கள். பல் இடுக்குகள் மற்றும் பற்குழிகளால் பல்வலி வரும். பாக்கு போடுவதால் பல் இடுக்குகளில் சென்று அவை சேர்வதால் வலி குறைந்ததுபோன்ற உணர்வு ஏற்படும். ஆனால் வாய் கொப்பளிக்கும்போது, மீண்டும் வலி உண்டாகும் என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும்.

மருத்துவ மூடநம்பிக்கைகள் நம்பினால் கைவிடப்படுவீர்கள்!

பால்... மீன்... வெண் தேமல்

மீன் சாப்பிடும்போது பால் சாப்பிடக் கூடாது என்பார்கள். இவை இரண்டையும் சேர்த்துச் சாப்பிட்டால் சருமத்தில் வெண்தேமல் வரும் என்ற தவறான கருத்து மக்களிடம் உள்ளது. இந்த நோய்க்கு மரபு ரீதியான விஷயங்களும், உடல் எதிர்ப்பாற்றல் குறைபாடுமே காரணங்களாக இருக்கின்றன.

மருத்துவ மூடநம்பிக்கைகள் நம்பினால் கைவிடப்படுவீர்கள்!

சருமத்துக்கு நிறம் தரக்கூடிய மெலனின் (Melanin) என்ற நிறமி சில இடங்களில் குறைந்து விடுவதாலேயே, அந்த இடங்களில் வெண்தேமல் ஏற்படும். இதுபோன்ற பாதிப்புக்கு ஆளானவர்கள்  சரும மருத்துவரிடம் ஆலோசனை பெற வேண்டியது அவசியம்.

மருத்துவ மூடநம்பிக்கைகள் நம்பினால் கைவிடப்படுவீர்கள்!

மாறுகண் அதிர்ஷ்டமா?

மாறுகண் குறைபாடு உள்ளவர்களை அதிர்ஷ்டக்காரர்களாகக் கருதும் பழக்கம் இருக்கிறது. ஆனால், இந்தக் குறைபாடு உள்ளவர்களுக்குச் சில கோணங்களில் பார்க்கும்போது, பிம்பங்கள் இரட்டையாகத் தெரிவதுண்டு. மாறுகண் உடையவர்கள் வாகனம் ஓட்டுதல், கப்பற்படை, விமானப்படை சார்ந்த பணிகளுக்குச் செல்ல இயலாத சூழல் இருப்பதால் உடனடியாக சிகிச்சை செய்து கொள்வது நல்லது. இந்தக் கோளாறு பிறவிக் குறைபாட்டாலோ, கண்ணைச் சுற்றியுள்ள சிறு தசைக்கு வரக்கூடிய நரம்பு பாதிப்பினாலோ ஏற்படலாம்.

மருத்துவ மூடநம்பிக்கைகள் நம்பினால் கைவிடப்படுவீர்கள்!

கருணை காட்டுமா அரச மரம்?

குழந்தையில்லை என்றால் அரச மரத்தைச் சுற்றி வர வேண்டும் என்பார்கள். அதுவும் பெண்தான் சுற்றவேண்டும் என்பார்கள். கணவனிடம் குறைபாடு இருந்தால், பெண் அரச மரத்தைச் சுற்றி வருவதால் என்ன பயன்? இருவரையுமே பரிசோதனை செய்து, யாருக்குக் குறைபாடு இருக்கிறதோ, அதை நவீன மருத்துவத் தொழில்நுட்ப உதவியால் போக்கி குழந்தைகள் பெற்று நிம்மதியாக வாழலாம்.

மருத்துவ மூடநம்பிக்கைகள் நம்பினால் கைவிடப்படுவீர்கள்!

குழந்தை அழுதால் குடலிறக்கமா?

குழந்தைகள் நீண்ட நேரம் அழுதாலோ, வயிற்றுவலியால் துடித்தாலோ வாந்தி எடுத்தாலோ குழந்தைக்குக் குடல் இறங்கிவிட்டதாகக் கூறி, அவர்களே சரி செய்ய முயற்சி செய்வார்கள். கிராமப்புறங்களில் இது இன்றைக்கும் பின்பற்றப்பட்டு வருகிறது. இதற்காக வயிற்றைப் பலமாகத் தட்டுவது, திருகிவிடுவது, குழந்தையைத் தலைகீழாகத் தொங்கவிட்டுச் சுற்றுவது போன்ற செயல்களில் ஈடுபடுவார்கள். இதுபோன்ற செயல்களால் குழந்தை இறக்க வாய்ப்புள்ளது. உணவு செரிமானம் இல்லாமை, குடல் தொற்று போன்ற சாதாரண காரணங்களால்கூட இந்தப் பிரச்னைகள் ஏற்படலாம் என்பதை மக்கள் மறந்துவிடக் கூடாது.

மருத்துவ மூடநம்பிக்கைகள் நம்பினால் கைவிடப்படுவீர்கள்!

சிறுநீரகத்தில் சிக்கிக்கொள்ளுமா சோற்றுக் கல்?

சோறு சமைக்கும்போது, ஆண்களுக்குக் கல்லில்லாத சாப்பாடு கொடுக்க வேண்டும் என்பார்கள். அப்படியென்றால், பெண்ணுக்குக் கல் உள்ள சாப்பாடு கொடுத்தால் பரவாயில்லையா? என்று கேட்டால் பெண்களின் வயிற்றில் கல் சென்றால், அது சிறுநீர் வழியாக எளிதாக வந்துவிடும்; ஆண்களுக்குத்தான் மாட்டிக்கொள்ளும் என்பார்கள். இது, தவறான எண்ணம். சிறுநீரகக் கல் என்பது சிறுநீரகம் மற்றும் சிறுநீர் வெளியே செல்லும் குழாய்களில் பல்வேறு சிறுநீரக, வளர்சிதை மாற்றங்களால் ஏற்படக்கூடியது. மாறாக உணவில் கல் இருந்தால் அது மலம் கழிக்கும்போது வெளியேறிவிடும். ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும், உணவில் கல் இருந்தால் சிறுநீரகத்துக்குப் போவதில்லை என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும்.

மருத்துவ மூடநம்பிக்கைகள் நம்பினால் கைவிடப்படுவீர்கள்!

மனிதப் பற்களுக்கு விஷமுண்டா?

மனிதப் பற்களுக்கு விஷம் உண்டு என்று சிலர் கருதுகிறார்கள். நம் ஆட்கள் பல்லையும் ஆயுதமாக மாற்றியதால் ஏற்பட்ட விளைவு இது. பாம்பு போல நம் பற்களுக்கு விஷமில்லை. ஆனால் வாயில் ஏராளமான நுண்கிருமிகள் இருக்கும். பற்கள் பட்டுத் தொற்று ஏற்படலாம். எனவே, மனிதர்கள் டெட்டனஸ் வராமல் தடுக்கத் தடுப்பூசி போட்டுக்கொள்வது அவசியம்.

மருத்துவ மூடநம்பிக்கைகள் நம்பினால் கைவிடப்படுவீர்கள்!

காய்ச்சலுக்கு ஊசி போதுமா?

உடல்வலி, காய்ச்சல் என எது வந்தாலும், ஊசி போட்டுக்கொண்டால் சரியாகி விடும் என்ற நம்பிக்கை கிராமங்களில் இன்றைக்கும் இருக்கிறது. காய்ச்சல் வந்தால் அது எந்தவகைக் காய்ச்சல்? எதனால் ஏற்பட்டது? என்றெல்லாம் பார்த்தே சிகிச்சை அளிக்க வேண்டும். டெங்கு, மலேரியா, எலிக்காய்ச்சல் என விதம்விதமாகக் காய்ச்சல் இருக்கும்போது, அந்தந்த நோய்த்தொற்றுக்கு ஏற்ற மருந்துகள் கொடுத்தால்தான் சரியாகும்.

மருத்துவ மூடநம்பிக்கைகள் நம்பினால் கைவிடப்படுவீர்கள்!

தொட்டால் தொற்றுமா?

தொழுநோய், முறையற்ற உடலுறவின் காரணமாக வருவதாகச் சிலர் நம்புகிறார்கள். அதுவும் எம்.ஆர்.ராதா நடித்த `ரத்தக் கண்ணீர்’ படத்தில், அவருக்குத் தொழுநோய் வந்ததுபோல ‘மேக்கப்’ போட்டிருப்பார்கள். முறையற்ற உடலுறவால் எய்ட்ஸ் நோய் மட்டுமல்லாமல் வேறு சில தொற்றுநோய்கள் ஏற்படலாம். தொழுநோய் ஏற்படாது.

மருத்துவ மூடநம்பிக்கைகள் நம்பினால் கைவிடப்படுவீர்கள்!

கண்களில் எண்ணெய் விடலாமா?

`காதில் புழு எடுக்கிறேன், தலையில் பேன் எடுக்கிறேன்’ என்று பலர் சுற்றிக்கொண்டிருப்பார்கள். இவர்களில் சிலர், காதில் மட்டுமல்லாமல் கண்ணிலும் எண்ணெய் ஊற்றிச் சுத்தம் செய்கிறேன் என்று சொல்லிக்கொண்டு சுத்தமில்லாத எண்ணெயைப் பயன்படுத்துவார்கள். கண், காது பிரச்னைகளுக்கு உரிய மருத்துவரிடம் காண்பித்துச் சரிசெய்ய வேண்டியது அவசியம். கசடுகள் நிறைந்த எண்ணெயால், கண்கள், காதுகள் நிரந்தரமாகவே பாதிப்புக்குள்ளாகும் அபாயம்  உள்ளது!

மருத்துவ மூடநம்பிக்கைகள் நம்பினால் கைவிடப்படுவீர்கள்!

சாம்பிராணி போடுவது சரிதானா?

சாம்பிராணிப் புகை போடுவதை அனைத்து மதத்தினருமே பின்பற்றி வருகிறார்கள். அது எதிர்மறைச் சக்திகளை அகற்றும் என்றும், விஷ ஜந்துக்களை விரட்டும் என்றும் நம்புகிறார்கள். இந்தப் புகை, கிருமித்தொற்றைப் போக்கிவிடும் என்பதை மருத்துவரீதியாக ஏற்க முடிவதில்லை. போஸ்வெல்லியா மரத்திலிருந்துப் பெறப்பட்ட ஒரு பிசின்தான் சாம்பிராணி. இதனால், கண் எரிச்சல், கண் சிவத்தல், மூக்கில் தண்ணீர் வடிதல், மூக்கடைப்பு போன்ற பிரச்னைகள் ஏற்படும். ஆஸ்துமா நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சாம்பிராணிப் புகையின் ரசாயனங்களால் மூச்சுத்திணறல் பாதிப்புகள் ஏற்படும்.

மருத்துவ மூடநம்பிக்கைகள் நம்பினால் கைவிடப்படுவீர்கள்!

சுளுக்கு எடுக்கலாமா?

நம் மக்கள் கீழே தவறி விழுந்து வலி ஏற்பட்டால், உடனே `சுளுக்கு வழிக்கப் போகிறேன்’ எனக் கிளம்பிவிடுவார்கள். விழுந்ததால், எலும்பு முறிந்துள்ளதா? மூட்டு விலகியுள்ளதா? தசை/தசை நாணில் பிசகு ஏற்பட்டுள்ளதா என்பன குறித்தெல்லாம் எலும்பு சிகிச்சை நிபுணரிடம் ஆலோசனை பெற்ற பிறகே முறையாக சிகிச்சை செய்ய வேண்டும். செய்ய முடியும்.இல்லையென்றால் பின்னாளில் பல பாதிப்புகளும் ஏற்படும்.

மருத்துவ மூடநம்பிக்கைகள் நம்பினால் கைவிடப்படுவீர்கள்!

மொட்டை அடித்தால் முடி வளருமா?

அடிக்கடி ஷேவ் செய்தால் முடி முளைக்கும்; மொட்டை போட்டால் தலை முடி வளரும் என்ற தவறான எண்ணங்கள் மக்களிடம் இருக்கின்றன. இதற்கு அறிவியல்பூர்வமான காரணங்களோ விளக்கங்களோ இல்லை.

மருத்துவ மூடநம்பிக்கைகள் நம்பினால் கைவிடப்படுவீர்கள்!

தேள்கடிக்கு மருந்தாகுமா கொடுக்கு?

தேள் கொட்டினால் அதன் கொடுக்கை கொட்டிய இடத்தில் வைத்து சிகிச்சை செய்யும் தவறான பழக்கமும் நம்மிடம் இருக்கிறது.இதனால் எந்தப் பயனும் இல்லை. தேள் விஷத்தால் இதயம் சீரில்லாமல் துடிக்கலாம்.நுரையீரல் பாதிப்பினால் சுவாசப்பிரச்னையும் ஏற்படும். எனவே நோயாளியை உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சொல்ல வேண்டும்.

மருத்துவ மூடநம்பிக்கைகள் நம்பினால் கைவிடப்படுவீர்கள்!

டலையும் உள்ளத்தையும் நல்வழிப்படுத்தும் வழிகள், உணவுப் பழக்கங்கள், உடற்பயிற்சிகள் முதலிய வாழ்வியல் முறைகளை அறியவும், மருத்துவ உலகின் ஆச்சர்யங்களை விரல்நுனியில் தெரிந்துகொள்ளவும் ‘டாக்டர் விகடன்’ சோஷியல் நெட்வொர்க்கிங் பக்கங்களில் இணைந்திடுங்கள்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு