Published:Updated:

டெங்கு காய்ச்சலை அடையாளம் காட்டும் அறிகுறிகள்! #Dengue

டெங்கு காய்ச்சலை அடையாளம் காட்டும் அறிகுறிகள்! #Dengue

டெங்கு காய்ச்சலை அடையாளம் காட்டும் அறிகுறிகள்! #Dengue

டெங்கு காய்ச்சலை அடையாளம் காட்டும் அறிகுறிகள்! #Dengue

டெங்கு காய்ச்சலை அடையாளம் காட்டும் அறிகுறிகள்! #Dengue

Published:Updated:
டெங்கு காய்ச்சலை அடையாளம் காட்டும் அறிகுறிகள்! #Dengue

மிழகத்தை வாட்டி வதைத்து வருகின்றன காய்ச்சல்கள். உடல் வலியோடு லேசாக உடம்பு காய்ந்தாலே மக்கள் பதைபதைக்கிறார்கள். டெங்குவா, பன்றிக்காய்ச்சலா, மலேரியாவா, எலிக்காய்ச்சலா, 'மர்மக் காய்ச்சலா' என்று தெரியாமல் பீதிக்கு உள்ளாகிறார்கள். பெரும்பாலும் தமிழகம் முழுவதும் டெங்கு காய்ச்சலின் தாக்கம் அதிகமாக உள்ளது.  

``டெங்கு காய்ச்சலை மற்ற காய்ச்சல்களிலிருந்து வேறுபடுத்தி அறிவது எப்படி? அதன் தாக்கம் எப்படி இருக்கும்?"  

குடும்பநலம் மற்றும் குழந்தைகள் மருத்துவர் சோமசேகரிடம் கேட்டோம். 

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

``முதல் நாள் பொதுவான அறிகுறிகளான சளி, காய்ச்சல், தலைவலி, உடல் வலி இருக்கும். டெங்கு காய்ச்சலாக இருந்தால் அடுத்த இரண்டு நாள்களில் காய்ச்சல் கடுமையாகும். கண்களுக்குப் பின்னே தாங்கமுடியாத வலி, எழமுடியாத அளவுக்கு உடம்பு வலியும் இருக்கும். எலும்பு முறிவு ஏற்பட்டதுபோல் மொத்தமாக முடக்கிப் போட்டுவிடும். அதோடு முகமே கண்ணாடி போல டெங்கு பாதிப்பைக் காட்டிக் கொடுத்துவிடும். முகம் வீங்கியிருக்கும்.  உடலில் சிவப்பு புள்ளிகள் தோன்றுவது டெங்குவின் முக்கிய அறிகுறி. ஆனால், தொடக்கத்தில் இந்த அறிகுறிகள் இருக்காது. கால், கைகள் சிவந்து காணப்படும். 

சாதாரணக் காய்ச்சலாக இருந்தால் நான்காவது நாளில் குணமாகிவிடும். டெங்குவாக இருந்தால் காய்ச்சல் குறைந்தது போல இருக்கும். ஆனால் எழுந்து நடமாட முடியாது. படுத்துக்கொண்டே இருக்க வேண்டும் என்று தோன்றும்; இயல்பு நிலைக்குத் திரும்ப முடியாது. அதோடு வாந்தியும் வயிற்று வலியும் ஏற்படும். போதிய அளவுக்குத் தண்ணீர் குடிக்காமல் இருந்தால், டிஹைட்ரேசன் ஏற்பட்டுப் பாதிப்பு அதிகமாகும்.  

உடலில் உள்ள தட்டணுக்கள் குறையத் தொடங்கும். அதன் அறிகுறி, வயிற்றுவலியாக வெளிப்படும். உடலில் சிவப்புப் புள்ளிகள் அதிகமாகும்.  இந்த அறிகுறிகளை வைத்தே டெங்குவை வேறுபடுத்திக் காணலாம். இந்த காலகட்டத்தில் இருமல் வரும்போது, சளியில்

 ரத்தம் இருக்கும்.

குழந்தைகளுக்கு டெங்கு காய்ச்சலா இருக்குமோ என்று சந்தேகம் இருந்தால், கை, கால்களை தொட்டுப் பார்க்க வேண்டும். கை, கால்கள் குளிர்ந்து ஜில்லிட்டு போயிருக்கும். படபடப்பு இருக்கும். இதயத் துடிப்பு அதிகரித்து, சுவாசம் வேகமாக இருக்கும்.  இந்த அறிகுறிகள் இருந்தால் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல வேண்டும். பெரும்பாலானோருக்கு நோய் பாதிப்பு ஏற்பட்டு ஏழு நாள்களில் சரியாகிவிடும். அரிதாகச் சிலருக்கு மட்டும் டெங்கு வைரஸ் மிக மோசமான பாதிப்பை ஏற்படுத்தலாம். 

காய்ச்சல் மூன்று நாள்களுக்கு மேல் நீடித்தால், உடனே மருத்துவமனைக்குச் சென்று, என்.எஸ்.ஐ ஆண்டிஜன் (NS1 Ag) டெங்கு ஐ.ஜி.எம். (Dengue IgM ) அல்லது டெங்கு ஐ.ஜி.ஜி (Dengue  IGG) உள்ளிட்ட ரத்தப் பரிசோதனைகளை செய்துகொள்ள வேண்டும். 

டெங்கு காய்ச்சலுக்கு எனத் தனி சிகிச்சை எதுவும் இல்லை. காய்ச்சலைக் கட்டுப்படுத்த பாரசிட்டமால் (Paracetomol) மாத்திரையும், உடன் உடல் வலியைப் போக்க உதவும் மருந்துகளும் தரப்படும். சிலருக்கு மட்டுமே அதிர்ச்சிநிலை (Dengue Shock Syndrome) ஏற்படும். அதற்கு குளுக்கோஸ் மற்றும் சலைன் (Dextrose Saline) தேவையான அளவுக்கு ஏற்றப்பட வேண்டும். 

டெங்கு வைரஸ் ரத்தத்தில் உள்ள தட்டணுக்களை (Platelets) அழித்துவிடும். இவை ரத்தம் உறைவதுக்கு உதவக்கூடியது. ரத்தத் தட்டணுக்கள் எண்ணிக்கை குறையும்போது, அது நுரையீரல், வயிறு போன்ற உறுப்புகளிலும் பல் ஈறு, சிறுநீர்ப் பாதையிலும் ரத்தக் கசிவை ஏற்படுத்தக்கூடும். உரிய மருத்துவ சிகிச்சை கிடைக்கவில்லை எனில் உயிரிழப்பும் ஏற்படலாம். பொதுவாக ஒருவருக்கு தட்டணுக்களின் எண்ணிக்கை சுமார் மூன்று லட்சம் வரை இருக்கும். டெங்கு காய்ச்சல் வந்தவருக்கு தட்டணுக்களின் எண்ணிக்கை 20,000-க்கும் கீழே குறைந்துவிடும். எனவே, அதே நாளில் தட்டணுக்களின் எண்ணிக்கை, ரத்தத்தின் நீர்ப்பளவு (Heamatocrit) உள்ளிட்ட பரிசோதனைகளை மருத்துவரின் ஆலோசனையின் பேரில் இரண்டு அல்லது மூன்று நாள்கள் தொடர்ந்து செய்ய வேண்டும். தட்டணுக்கள் குறைந்தவர்களுக்கு அதை ஈடுகட்ட நரம்பு மூலமாக  தட்டணுக்கள் மிகுந்த ரத்தம் செலுத்தப்பட வேண்டும்.

காய்ச்சல் பாதித்த காலத்தில் நன்றாக ஓய்வெடுக்க வேண்டும். உடலில் நீரிழப்பு ஏற்படும் என்பதால், அதிக அளவில் நீர்ச்சத்து உணவுகளை உட்கொள்ள வேண்டும். போதுமான அளவு தண்ணீர் குடிக்க வேண்டும். பழச்சாறுகள், இளநீர், கஞ்சி போன்ற உணவுகளை அதிகம் சாப்பிட வேண்டும். டிஹைட்ரேஷன் ஏற்படுத்தும் கார்பனேட் பானங்களைக் அருந்தக் கூடாது. இவற்றைக் கடைப்பிடித்தாலே டெங்குவால் ஏற்படும் உயிரிழப்புகளைத் தவிர்க்க முடியும்"  என்கிறார் சோமசேகர்.