Published:Updated:

காலை எழுந்தவுடன் தண்ணீர்!

அ.லெனின்ஷாபடங்கள் : பொன்.காசிராஜன்

##~##

ந்தத்தினால் செய்த சிற்பம்போல இருக்கிறார் பாயல்கோஷ். கொல்கத்தா ரசகுல்லா. 'தேரோடும் வீதியிலே’ படத்தின் மூலம் தமிழில் வலம் வர இருக்கிறார்.

 ''என் உயரம் 5.5 அடி. எடை 52 கிலோ. ரெண்டும் அவ்வளவு கச்சிதம். பார்க்கிறவங்க எல்லாம் 'எப்ப டிப்பா... இப்படி?’னு கேட்பாங்க. நான் விசேஷமா எதுவும் செய்றது இல்லை. எவ்வளவு சாப்பிடணுமோ, அவ்வளவு சாப்பிடுறேன். எப்ப உடற்பயிற்சி செய்யணுமோ, அப்ப செய்றேன். எவ்வளவு நேரம் தூங்கணுமோ, அவ்வளவு நேரம் தூங்குறேன். அவ்வளவுதான்.'' - ஃபிட்னஸ் ரகசியம் பகிர்கிறார் பாயல் கோஷ்.  

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

'' காலையில் எழுந்த உடனே, ஒரு லிட்டர் தண்ணீரை வெறும் வயிற்றில் குடிப்பேன். அதேபோல, சாப்பாட்டுக்கு இடைப்பட்ட நேரங்களில் கண்டிப்பா நாலு லிட்டர் தண்ணீரைக்   குடிச்சிடுவேன். தண்ணீர் அதிகம்  குடிக்கிறது தோலை மென்மையாவும் மினுமினுப்பாவும் வைக்கும்.

காலை எழுந்தவுடன் தண்ணீர்!

அதே போல, உடம்பில் இருந்து எந்த அளவுக்கு வியர்வை வெளியேறுதோ... அந்த அளவுக்கு நம்ம ஸ்கின் நல்லா இருக்கும். உடம்புல கொழுப்பும் குறையும். அதனால், மொட்டை மாடியில், வெட்டவெளியில்...  வியர்வைக் குளியலே நடத்துற மாதிரி  'ஹாட் யோகா’ பண்ணுவேன். 15 கிராம் 'ஃப்ளக்ஸ் சீட்’ (ஊட்டச்சத்து பானம்) கலந்த தண்ணீர், ஒரு ஆப்பிள் சாப்பிட்டுவிட்டு அரை மணி நேரம் கழித்து நடந்தே ஜிம்முக்கு போவேன். நடைப் பயிற்சி செய்த மாதிரியும் இருக்கும் இல்லையா?  

ஜிம்முக்குப் போனா, என்னையே நான் மறந்திடுவேன். இடுப்பில் சதை போடாமல் இருக்க சைக்கிளிங்தான் பெஸ்ட். சரியான எடையைப் பராமரிக்க  டிரெட் மில். ஜிம்முக்குப் போயிட்டு வந்ததும், 'வே  புரொட்டீன்’ (புரதச் சத்து) இரண்டு கப் சாப்பிடுவேன். ஜிம்தான் என்னை ஜம்முன்னு வெச்சிருக்கு'' என்று குஷியாக சொல்லும் பாயல், எப்போதாவது அப்செட் ஆனால், தன்னை ரீ-சார்ஜ் செய்துகொள்ள தஞ்சம் அடைவதும் ஜிம்தான்.

''பொதுவா என் பிரேக் ஃபாஸ்ட் ஆப்பிள்தான். மதிய உணவா இரண்டே இரண்டு சப்பாத்தி, கொஞ்சம் சிக்கன், தயிர் சாதம், வெஜிடபிள் சாலட்,  கீரை மசியல் சாப்பிடுவேன். மத்திய உணவுக்கும் இரவு உணவுக்கும் நீண்ட இடைவேளை இருக்கக் கூடாது. சாயங்கால நேரத்தில் ஜூஸ். தேவைப்பட்டால் ஒரு சாண்ட்விச்.  ராத்திரி சப்பாத்தி, சப்ஜியும்  'புரொட்டீன் மில்க்’ ஒரு கப்பும் எடுத்துக்குவேன். இதுதான் என் ரெகுலர் டயட். எண்ணெயில் பொரிக்கப்பட்ட உணவு வகையறாவுக்குப் பெரும்பாலும் தடா'' - அட்டகாசமாகச் சிரிக்கிறார் பாயல்.

காலை எழுந்தவுடன் தண்ணீர்!

''இரவு சாப்பிட்டதும் உடனே படுக்கப் போக மாட்டேன். சாப்பிட்ட பிறகு குறைந்தது இரண்டு மணி நேரமாவது ஏதாவது படிப்பேன். அப்படி இல்லாட்டி  ஃபேமிலியோட ஜாலியா அரட்டைக் கச்சேரி. படுக்கிறதுக்கு முன்னால் மெடிடேஷன் பண்ணாம நான் தூங்கினதே இல்லை. அப்புறம் படுக்கையில விழுந்தா பாயல் கும்பகர்ணிதான்'' என்றவர் தன் வழக்கமான சில பழக்கங்களைப் பட்டியலிட்டார்.

'டான்ஸ் பிராக்டீஸ் ரெகுலராப் பண்ணுவேன். டான்ஸ், உடம்பையும் மனசையும் உற்சாகமா வெச்சுக்கும்.

எனக்கு பிடிச்ச கேம் ஸ்குவாஷ். ஒவ்வொருத்தரும் ஏதாவது ஒரு விளையாட்டைக் கற்றுவெச்சிருக்கிறது நல்லது.

மாசம் ரெண்டு தடவை 'ஸ்பா’ போயிட்டு வருவேன். உடம்பையும் மனசையும்  இது புத்துணர்ச்சியா வைக்கும்.

நகத்தை சரியாப் பராமரிக்காட்டி, வியாதிகளுக்கு அதுவே அழைப்பிதழ் வெச்சுடும். அதனால், தினமும் நகத்தை சுத்தம் பண்ணி, மேனிக்யூர் பண்ணிப்பேன். வெளியூர் போறப்ப  கண்டதையும் சாப் பிட மாட்டேன். பெரும்பாலும் பழங்கள் தான். அவ்வளவுதான்பா பாயலோட ஆரோக்கிய ரகசியம்!''