Published:Updated:

மூல வியாதி மற்றும் இதர நோய்களைக் கண்டறிந்து கொள்ளலாம்!

மூல வியாதி மற்றும் இதர நோய்களைக் கண்டறிந்து கொள்ளலாம்!
மூல வியாதி மற்றும் இதர நோய்களைக் கண்டறிந்து கொள்ளலாம்!

மூல வியாதி மற்றும் இதர நோய்களைக் கண்டறிந்து கொள்ளலாம்!

வேலூரில் மருத்துவ முகாம்...

மூலத்துக்கு மூலக் காரணம் மலச்சிக்கல். காலைக் கடனை வெளியேற்றாமல் அலட்சியம் செய்வோருக்கு நாளடைவில் மூல நோய் ஏற்பட வாய்ப்புள்ளது. ஒரு நாளின் குறிப்பிட்ட நேரத்தில், அதிகபட்சம் அதிகாலை எழுந்தவுடன், மலம் கழிக்க நம் உடலைப் பழக்குவது முக்கியம். டீ, காபி போன்ற ஊக்கிகளை அருந்தாமல் மலம் கழிப்பதே ஆரோக்கியமான உடலின் அடையாளம். காலையில் மலம் கழிய வெறும் வயிற்றில் நீர் அருந்துவது நல்லது, தொடர்ந்து இதைச் செய்துவந்தால் விரைவிலேயே நேரத்துக்கு மலம் கழிக்க வேண்டும் என்கிற தூண்டல் ஏற்பட்டுவிடும். மலச்சிக்கலை ஏற்படுத்தும் காரணங்களில் முக்கியமானது முறையற்ற உணவுப் பழக்கம். முறையாக வேலா வேலைக்கு உணவு உட்கொள்ளாதபொழுது, ஜீரண மண்டலத்தில் கோளாறு ஏற்படுகின்றது. இது மலம் கழித்தலிலும் பிரச்னையாக எதிரொலிக்கிறது. மேலும், எளிதில் செரிமானம் செய்யமுடியாத, காரசாரமான உணவு வகைகளை அடிக்கடி உண்பது சிக்கலை அதிகமாக்குகிறது. அதிக நேரம் ஓரிடத்திலேயே உட்கார்ந்து வேலை பார்க்கும்பொழுது, உடலின் அடிப்பகுதியில் அழுத்தமும் உஷ்ணமும் ஏற்படுகிறது. இதுவும் பைல்ஸ் ஏற்படக் காரணம்.

மூல வியாதி மற்றும் இதர நோய்களைக் கண்டறிந்து கொள்ளலாம்!

மூல நோயின் வகைகள்:

மூல நோய் நான்கு வகையாக பிரிக்கபப்படுகிறது. முதல் பிரிவு ஆசன வாயின் துவாரத்தில் சதை வளர்தல். மலம் கழிக்கும்போது இந்த சதையில் இருந்து அழுத்தம் காரணாமாக இரத்தப் போக்கு ஏற்பட்டு அவஸ்தையை ஏற்படுத்துகிறது. இரண்டாவது வகை - வெடிப்பு, ஆசன வாய் வறண்டு போவதால், அங்கு வெடிப்பு ஏற்பட்டு, எரிச்சல் ஏற்படுகிறது. வெடிப்பில் இரத்தமும் வரக்கூடும், மிகுந்த வலியைத் தரக்கூடிய வகை இது. மூன்றாவது வகை பௌத்திரம் எனப்படும் Fistula. இதில் ஆசனவாயிலோ அதன் அருகாமையிலோ வலிதரக்கூடிய கட்டி ஏற்பட்டு அதில் இருந்து சீழ் வரக்கூடும். நான்காவது வகை கேன்சர். ஆசனவாயில் அரிப்பு, இரத்தப்போக்கு, ஆசனவாயில் வலி மற்றும் அடைத்துக்கொண்டு இருப்பது போன்ற உணர்வு இவை ரெக்டல் கேன்சரின் சில அறிகுறிகள். தகுந்த மருத்துவ ஆலோசகரிடம் செல்லும்போது, இதன் பாகுபாட்டை அறிந்து அதற்கேற்ப சிகிச்சையை எடுத்துக்கொள்ளலாம்.

எவ்வாறு தவிர்க்கலாம்?

உணவும் வாழ்க்கை முறையும்தான் ஆரோக்கியத்தின் அடிப்படை. இவற்றை முறைப்படுத்தினாலே மூலம் உள்ளிட்ட பல நோய்களை தவிர்த்துவிடலாம். உடலின் நீர்ச்சத்து குறைவதனால் பல பாதிப்புகள் ஏற்படுகிறது, மலச்சிக்கல், உடல் உஷ்ணமடைதல் மற்றும் எரிச்சல் மூன்றுமே மூலத்துக்கு முக்கிய காரணங்கள் என்பதால் நீர் அருந்துவது சிறந்த உபாயமாக அமைகிறது. குறைந்தபட்சம் நாளொன்றுக்கு இரண்டு முதல் மூன்று லிட்டர் தண்ணீர் அருந்துவது சிறந்தது. உஷ்ணப் பிரதேசங்களில் வாழுவோருக்கு பைல்ஸ் வரும் வாய்ப்புகள் அதிகம், இவர்களுக்கு நீர் அருந்துதல் போல சிறந்த அறிவுரை இருக்கமுடியாது. அடுத்த பரிந்துரை உணவுகளில் கவனம். நார்ச்சத்து மிகுந்த காய்கறி, பழ வகைகளை அதிகமாக உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். குறிப்பாக கீரை, வெண்டைக்காய், கேரட், பீட்ரூட் போன்ற காய்கறிகளையும் பழங்களில் முக்கியமாக ஆப்பிள், வாழை, பப்பாளி மற்றும் சாத்துக்குடி ஆகியவற்றையும் உட்கொள்ளல் சிறந்த பயனைத் தரக்கூடும்.

மூல வியாதி மற்றும் இதர நோய்களைக் கண்டறிந்து கொள்ளலாம்!

நடைப்பயிற்சி, ஜாக்கிங் ஆகிய மிதமான உடற்பயிற்சிகள் செய்யலாம். இது இரத்த ஓட்டத்தை அதிகரிக்கிறது. ஆனால் பளு தூக்கிச்செய்யும் தேகப் பயிற்சிகளை தவிர்த்தல் நலம், இது அடித் தசைகளுக்கு அழுத்தத்தைக் கொடுத்து மூலத்தை அதிகரிக்கக்கூடும். வாழ்வியல் முறையை மாற்றியமைப்பதனால் மூலம் வரமால் பாதுகாத்துக்கொள்ளலாம், மூல நோய் வந்தாலும் தற்போது லேசர் சிகிச்சை மூலம் எளிமையாக குணப்படுத்திவிடலாம் என்பது மகிழ்ச்சியான சேதிதான்!

மூல நோய்க்கு லேசர் சிகிச்சை

மூல நோய்க்கு அறுவை சிகிச்சை செய்வது பழைய மருத்துவ முறையாகும். கத்தியின்றி இரத்தமின்றி வலியின்றி செய்யக்கூடிய லேசர் சிகிச்சை வந்துவிட்டதால், மூல நோயை எண்ணி வருந்தும் நிலை மாறியுள்ளது. வெறும் 5 முதல் 7 நிமிடங்களுக்கு உள்ளாகவே மூல நோயை லேசர் முறை மூலம் கட்சிதமாக சரி செய்துவிடமுடியும்,  ஒரே நாளில் வீடும் திரும்பலாம்! லேசர் சிகிச்சை செய்பவர்களுக்கு 99% மூலம் திரும்பவருவதில்லை. சிகிச்சைக்குப் பின் டாக்டர் பரிந்துரைக்கும்படி வாழ்வியல் பழக்கங்களை கடைப்பிடிப்பதால், பிறகு மூலம் வருமோ என்கிற சந்தேகமே துளியும் தேவையில்லை...

'இந்திரா நர்சிங் ஹோம் நடத்தும் மருத்துவ முகாம்'

வேலூர் இந்திரா நர்ஸிங் ஹாம், தேசிய அளவில் பைல்ஸ் சிகிச்சைக்கு புகழ்பெற்ற மருத்துவமனையாகும். இதுவரை 25,000 நபர்களுக்கும் மேல் வெற்றிகரமாக பைல்ஸ் சிகிச்சையை அளித்து வெற்றிகண்டுள்ளது இந்திரா நர்சிங் ஹோம். வரும் நவம்பர் 18, 2018, ஞாயிறு அன்று பைல்ஸ் மற்றும் பிற சிகிச்சைகளுக்கான மருத்துவ முகாமை நடத்தவுள்ளது. இந்திரா மருத்துவமனையின் டைரக்டர் டாக்டர் ஷங்கர் கூறியதாவது: "காலை 8 மணிமுதல் நடக்கவிருக்கும் இந்த முகாமின் மூலம், பொது அறுவை சிகிச்சைகள், எலும்பு மற்றும் தண்டுவட பிரச்னைகள், ஹெர்னியா, ஹைட்ரோசீல், மார்பகப் பிரச்னைகள், வெரிக்கோஸ் வெயின், பெண்ணோயியல், சிறுநீரகவியல்,  இதயப் பகுதி நோய்கள் மற்றும் கேன்சர் ஆகியவற்றைக் கண்டறிந்து அதற்குண்டான மருத்துவ ஆலோசனைகளைப் பெறலாம். அனைத்து பரிசோதனையையும் சாதரணக் கட்டணத்தை விட 50% சதவீதக் கட்டணத்திலேயே வழங்குகிறோம், காலை வருபவர்களுக்கு 4 மணி நேரத்துக்குள் பரிசோதனை முடிவுகள் வழங்கப்படும். மேலும், நோய் குறித்த ஆலோசனைகளை வழங்க  அனுபவம் வாய்ந்த 7 சிறப்பு மருத்துவ நிபுணர்கள் இருப்பது குறிப்பிடத்தக்கது."

மூல வியாதி மற்றும் இதர நோய்களைக் கண்டறிந்து கொள்ளலாம்!

"பரிசோதனையில் நோயின் அறிகுறி இருப்பவர்களுக்குத் தகுந்த ஆலோசனை வழங்குவதோடு அறுவை சிகிச்சையையும் இந்திரா நர்சிங் ஹோம் நடத்தித் தருகிறது. அரசு காப்பீட்டுத் திட்டம் மூலம் அறுவை சிகிச்சை செய்துகொள்வோருக்கு இலவசமாகவும், இந்தக் காப்பீடு இல்லாதவர்களுக்கு 50 - 70% வரையும் சலுகையை வழங்குகிறோம்."

மேலும் விவரங்களுக்கு: 98423 24425, 98423 42525.

அடுத்த கட்டுரைக்கு