Published:Updated:

கன்சல்ட்டிங் ரூம்

கன்சல்ட்டிங் ரூம்
பிரீமியம் ஸ்டோரி
கன்சல்ட்டிங் ரூம்

ஹெல்த்

கன்சல்ட்டிங் ரூம்

ஹெல்த்

Published:Updated:
கன்சல்ட்டிங் ரூம்
பிரீமியம் ஸ்டோரி
கன்சல்ட்டிங் ரூம்

இரவு உணவுக்குப் பிறகு வாழைப்பழம் சாப்பிடலாமா? வேறு என்னென்ன பழங்கள் சாப்பிடலாம்?

- சிவநேசன், கடலூர்

கன்சல்ட்டிங் ரூம்

இரவு உணவுக்குப் பிறகு, உடனடியாகப் பழங்கள் சாப்பிடுவது ஏற்புடையதல்ல. செரிமானப் பிரச்னைகள் வரக்கூடும். மேலும், பழத்தில் உள்ள ஊட்டச்சத்துகள் முழுமையாகக் கிடைக்காது. குறைந்தபட்சம் 30 முதல் 60 நிமிடங்கள் கழித்தே பழங்களைச் சாப்பிடலாம். சர்க்கரை நோயாளிகள், அசிடிட்டி பிரச்னை உள்ளவர்கள் இரவு உணவு என்றில்லாமல் எப்போதுமே உணவுக்குப்பின், உடனடியாகப் பழங்கள் சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும். இரவு நேரத்தில் பழங்கள் உண்பதால், உடல் எடை குறையும் என்று சிலர் நம்புகிறார்கள். அது தவறான கருத்து. உணவுக்குப்பிறகு குறிப்பிட்ட நேரம் கழித்துப் பழம் சாப்பிடுவதால் ஊட்டச்சத்துகள் கிடைக்குமே தவிர, வளர்சிதை மாற்றங்கள் எதுவும் ஏற்படாது.

- நித்யஸ்ரீ, ஊட்டச்சத்து நிபுணர்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

கன்சல்ட்டிங் ரூம்

எனக்கு வலது கையின் பின்புறத்தில் அடிக்கடி வலி ஏற்படுகிறது. இது ஏதேனும் இதயம் சார்ந்த பிரச்னையாக இருக்குமோ என்று பயமாக உள்ளது. இதற்கு என்ன காரணம்?

- தணிகாசலம், தாம்பரம்

கன்சல்ட்டிங் ரூம்

இது இதயம் சார்ந்த பிரச்னையாக இருக்க வாய்ப்பில்லை. நரம்பு சார்ந்த பிரச்னையாக இருக்கலாம். பெரிபெரல் நரம்புகள் (Peripheral Nerves) பாதிக்கப்பட்டிருந்தால், இதுபோன்று வலி ஏற்படும். பொதுவாக,  சர்க்கரை நோயாளிகளுக்கு இந்தப் பிரச்னை கால்களில் ஏற்படும். இதுதவிர,  பரம்பரை ரீதியான நரம்புக் குறைபாடுகள் மற்றும் வைட்டமின் - பி 12 குறைபாடு போன்றவற்றாலும் வலி ஏற்படலாம். நரம்பியல் நிபுணரை அணுகி, பிரச்னைக்கான காரணத்தை அறிந்து அதற்கேற்ப சிகிச்சை எடுக்க வேண்டும்.

- ராஜேஷ்குமார், இதய நோய் சிறப்பு மருத்துவர்.

என் தம்பி மகன் சிலேட்டுக் குச்சிகளை நிறைய சாப்பிடுகிறான். இதனால்  உடல்நலக் குறைவு ஏற்பட வாய்ப்பு உள்ளதா?

- சி.சங்கீதா, தாராபுரம்

கன்சல்ட்டிங் ரூம்

பெரும்பாலும் இரும்புச் சத்துக் குறைபாடு, தாதுக் குறைபாடு மற்றும் வைட்டமின் குறைபாடு உள்ள குழந்தைகள், ரத்தச்சோகை உள்ள குழந்தைகள்தான் சிலேட்டுக் குச்சிகள், மண், பென்சில் போன்றவற்றைச் சாப்பிடுவார்கள். சிலேட்டுக் குச்சிகள் சாப்பிடுவதால் அதன் துண்டுகள் வயிற்றில் தங்கி, வயிறு தொடர்பான பிரச்னைகளை ஏற்படுத்தும். முடிந்தவரை குழந்தைகளிடமிருந்து அவற்றை விலக்கி வைப்பது நல்லது. இத்தகைய குழந்தைகளுக்கு ரத்தப் பரிசோதனை செய்து, ரத்தச்சோகை ஏற்பட்டிருக்கிறதா என்பதைக் கண்டறிய வேண்டும். ரத்தச்சோகை இருந்தால் உணவுப் பழக்கங்களில் மாற்றம் ஏற்படுத்த வேண்டியது அவசியம். மேலும் அவர்களுக்குத்  தொடர்ந்து இரும்புச்சத்து மாத்திரைகள் தரவேண்டும்.  ரத்த உற்பத்தியை அதிகரிக்கும் உணவுகளான கீரைகள், உலர் திராட்சை, பேரீச்சை, மாதுளை போன்றவற்றைக் கொடுக்க வேண்டும்.

- செல்வன் ரத்தினசாமி, குழந்தைகள் நல மருத்துவர்.

கன்சல்ட்டிங் ரூம்

ங்கள் கேள்விகளை அனுப்பவேண்டிய முகவரி: கன்சல்ட்டிங் ரூம், டாக்டர் விகடன், 757, அண்ணா சாலை, சென்னை-600 002.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism