Published:Updated:

ஜீரோ ஹவர்! - 12

ஜீரோ ஹவர்! - 12
பிரீமியம் ஸ்டோரி
News
ஜீரோ ஹவர்! - 12

ஹெல்த்

டைகளைச் சுத்தமாக உடுத்தும் சிலரிடம் உடல் சுத்தம் பற்றிக் கேட்டால், `நான் தினமும் குளிக்கிறேன், வேற என்ன வேணும்?’ என்று கேட்பார்கள்.  அவர்களுக்காகத்தான் இந்தக் கட்டுரை.

உடற்பயிற்சியைக் கைவிடும் பலரும்,  உடற்பயிற்சி செய்வதால் வியர்வை வழிந்து முடி கொட்டுகிறது, முகம் கறுத்துப் போகிறது, உடல் சூடு மற்றும் வியர்வை அழுக்கால் முகத்தில் கொப்புளங்கள் வருகின்றன, வியர்வை நாற்றம் வீசுகிறது என்பனபோன்ற பிரச்னைகளைச் சொல்வார்கள்.

இவற்றுக்கெல்லாம் காரணம் உடற்பயிற்சி அல்ல, நம்முடைய மோசமான பழக்கவழக்கங்களே. இதைப் புரிந்துகொண்டால் உடற்பயிற்சி செய்வதைக் கைவிட மாட்டோம். உடற்பயிற்சிகள் எவ்வளவு முக்கியமோ அதேபோல் அவற்றைத் தொடங்கும்போதும் முடிக்கும்போதும் நம் உடலைச் சுத்தப்படுத்துவது மிகவும் முக்கியமானது. அது வெறும் குளியலில் முடிந்துவிடாது.

ஜீரோ ஹவர்! - 12

உடலில் வியர்வை வழிந்தால் அதை அழுக்குக் கைகளால் துடைப்பது மிகவும் தவறானது. அழுக்குக் கைகளால் துடைத்தால் சருமம் பாதிப்புக்குள்ளாக்கும். வியர்வையைச் சுத்தப்படுத்த `வெட் வைப்ஸ்’ அல்லது நல்ல சுத்தமான துணியைப் பயன்படுத்தலாம். உடற்பயிற்சிக்குப் பிறகு உடனடியாகச் சாதாரண நீரில்  முகத்தை நன்றாகக் கழுவவேண்டும். முடிந்தால் மைல்டான ஃபேஸ் வாஷ் பயன்படுத்தலாம். கடுமையான சோப்புகளைத் தவிர்க்கவும்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
ஜீரோ ஹவர்! - 12


உடற்பயிற்சிக்குப் பிறகு வெந்நீரில் குளிக்கக் கூடாது. அது உடலில் சுரக்கும் இயற்கையான எண்ணெய்களை நீக்கிவிடும். இதனால் சருமம் உலர்ந்து அரிப்பு உண்டாகும். உடற்பயிற்சி முடிந்துவிட்டால் உடனடியாகக் குளித்துவிடுங்கள். எந்த அளவுக்கு அதே உடையில் சுற்றுகிறோமோ அதே அளவு ஆபத்து இருக்கிறது. எல்லா வகையான சரும நோய்களுக்கும் நீண்ட நேரம் அழுக்கு உடைகளை அணிந்திருப்பதே காரணம். அதிலும் ஞாயிற்றுக்கிழமைகளில் சிலர் மதியம் வரை அழுக்கு உடைகளுடன் அலைவார்கள். உடையிலிருக்கும் அழுக்கு கொஞ்சம் கொஞ்சமாக வியர்வை நாளங்களின் வழியாக உடலுக்குள் இறங்குகிறது என்பதை மறந்துவிடாதீர்கள்!

உடற்பயிற்சிக்குமுன் முகத்தில் `மேக்-அப்’ போட்டிருந்தால் அதைச் சுத்தமாக நீக்கிவிடுங்கள். உடற்பயிற்சியின்போது வியர்வை வெளியேறுவதை இந்த `மேக்-அப்’ விஷயங்கள் தடுத்துவிடும். `மேக்-அப்’ போடவில்லை என்றாலும் முகத்தைச் சுத்தமாகக் கழுவிவிட்டுச் செல்வது நலம்!
அக்குள் பகுதியில் சிலருக்கு அளவுக்கதிகமாகவே வியர்க்கும். அப்படிப்பட்டவர்கள் அந்த இடத்தில் முடி இல்லாமல் பார்த்துக்கொள்வது நல்லது. சருமத்தைவிட முடியில் பாக்டீரியாக்கள் அதிகம் வளரும் என்பதால் உடற்பயிற்சியில் ஈடுபடுபவர்கள் பிறப்புறுப்பு மற்றும் அக்குளில் முடி இல்லாமல் இருப்பதை எப்போதும் உறுதி செய்ய வேண்டும். இது அந்த இடங்களில் பாதிப்பையும் துர்நாற்றம் ஏற்படுவதையும் தடுக்க உதவும்.

ஜீரோ ஹவர்! - 12

உடற்பயிற்சி செய்பவர்களுக்குத் தலைமுடி உதிர முக்கியக் காரணம், தினமும் தலைக்குக் குளிப்பதே! இது உங்களுக்கு ஆச்சர்யத்தை ஏற்படுத்தலாம். ஆனால், அதுதான் உண்மை. தினமும் தலைக்கு ஷாம்பு போடுவது மிகமிக ஆபத்தானது. அது தலையில் இயல்பாகச் சுரக்கும் எண்ணெய்ப்பசையை அழித்துத் தலையை வறண்டு போகச்செய்துவிடும். இதனால் சீக்கிரமே முடி உதிரத் தொடங்கும். எவ்வளவு வியர்த்தாலும் வாரத்துக்கு இரண்டு அல்லது மூன்றுமுறைக்கு மேல் வெட் ஷாம்பு போட்டு குளிக்கத்தேவையில்லை என்கிறார்கள் நிபுணர்கள். மற்ற நாள்களில் டிரை ஷாம்பு போட்டுக்கொள்ள வலியுறுத்துகிறார்கள். ஷாம்பு போடும்போது மட்டும் நல்ல கண்டிஷனர்களைப் பயன்படுத்தலாம்.

இவைபோக வெயில் அதிகமாக இருக்கும்போது முகம் அழகாக இருக்க வேண்டும் என்ற ஆசை இருப்பவர்கள் நிச்சயம் சன்ஸ்க்ரீன் பயன்படுத்துவது நல்லது. அதிகநேரம் வெளியே இருக்க வேண்டியிருந்தால் அதிக `SPF’ கொண்ட சன்ஸ்க்ரீன் வாங்கிப் பயன்படுத்தலாம்.

தூய்மைக் காரணங்களால் உடற்பயிற்சியைக் கைவிட நினைப்பவர்களுக்கு ஒரேயொரு கருத்துதான். ‘எந்த அளவுக்கு அதிகமாக உடற்பயிற்சியில் ஈடுபடுகிறோமோ அதே அளவு தூய்மையிலும் கவனம் செலுத்தவேண்டும்’ என்பதை மட்டும் மறந்துவிடாதீர்கள்!

நேரம் ஒதுக்குவோம்...

- வினோ