Published:Updated:

தொற்று நோய்களின் உலகம்!

தொற்று நோய்களின் உலகம்!
பிரீமியம் ஸ்டோரி
தொற்று நோய்களின் உலகம்!

ஹெல்த் - 13வி.ராமசுப்பிரமணியன், தொற்றுநோய் சிறப்பு மருத்துவர்

தொற்று நோய்களின் உலகம்!

ஹெல்த் - 13வி.ராமசுப்பிரமணியன், தொற்றுநோய் சிறப்பு மருத்துவர்

Published:Updated:
தொற்று நோய்களின் உலகம்!
பிரீமியம் ஸ்டோரி
தொற்று நோய்களின் உலகம்!

காசநோயை ‘சமூகநோய்’ என்றே சொல்லலாம். மருத்துவத் துறைக்கு பெரும் சவாலாக இருப்பது இந்த நோய் தான். காரணம், ஒரு காசநோயாளி தன்னையறியாமல் பத்து முதல் பதினைந்து பேருக்கு அந்த நோயைப் பரப்புகிறார். நம்நாட்டில் நிலவுகிற சுற்றுச்சூழல் அக்கறையின்மை, சுகாதார விழிப்பு உணர்வின்மை காரணமாகக் காசநோய் இந்தியாவைப் பெரிதும் ஆட்டுவித்துக் கொண்டிருக்கிறது. தினமும் பாதிப்பின் வீரியம் அதிகமாகிக் கொண்டேயிருக்கிறது.

தொற்று நோய்களின் உலகம்!

காசநோயைக் கண்டறியும் மேன்டாக்ஸ், டிபி கோல்டு சோதனைகள் பற்றிப் பார்த்தோம். பொதுவான எந்த ஒரு சோதனை மூலமும் ஒருவருக்குக் காசநோய் வந்திருக்கிறது என்பதை உறுதிப்படுத்தவோ, வரவில்லை என்று மறுக்கவோ முடியாது என்றும் சொன்னேன். இந்த இரண்டு சோதனைகளுமே, காசநோய்க் கிருமிகளை உடல் சந்தித்திருக்கிறதா என்பதைக் கண்டறிவதற்கானவை. அவ்வளவுதான். ஆனால், இவற்றில் இன்னொரு முக்கிய விஷயம் இருக்கிறது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தொற்று நோய்களின் உலகம்!


ஐந்து வயதுக்கும் குறைவான குழந்தைகள், ஹெச்.ஐ.வியால் பாதிக்கப்பட்டவர்கள், ‘சிலிக்கோசிஸ்’ (Silicosis) நோய்த்தாக்கம் இருப்பவர்கள், சிறுநீரகப் பாதிப்பு இருப்பவர்களுக்கெல்லாம் காசநோய் வர வாய்ப்பு அதிகம். ‘சிலிக்கோசிஸ்’ என்பது, சிமென்ட் தொழிற்சாலை, கண்ணாடித் தொழிற்சாலைகளில் வேலை செய்பவர்களுக்கு நுரையீரலில் ஏற்படும் நோய். இவர்களுக்கெல்லாம் மேன்டாக்ஸ், டிபி கோல்டு சோதனைகளில் ‘பாசிட்டிவ்’ என்று வந்தால் ‘அலர்ட்’ ஆகவேண்டும். காசநோய் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம். வராமல் தடுக்க, குறைந்தபட்சம் ஆறு மாதங்களுக்கு ‘கீமோபிராபிலாக்சிஸ்’ (Chemoprophylaxis) சிகிச்சையை எடுத்துக்கொள்ள வேண்டும். காசநோய்க்குத் தரப்படும் கூட்டு மருந்துகளில் ஒன்றான ‘ஐசோனையஸிடு’ (Isoniazid) மாத்திரையை மட்டும் இவர்கள் ஆறுமாதங்கள் சாப்பிட வேண்டும். இது, தடுப்புச் சிகிச்சை.

தொற்று நோய்களின் உலகம்!

சரி, ஒரு சாதாரண நபருக்குக் காசநோய் இருப்பதை 100 சதவிகிதம் எப்படி உறுதி செய்வது?

ஒருவருக்கு உடல் எடை கணிசமாகக் குறைந்து, காய்ச்சல், இருமலுடன் சளியில் ரத்தம் கலந்து வருவதாக வைத்துக் கொள்வோம். அவருக்கு நுரையீரலில் காசநோய் இருக்க வாய்ப்புள்ளது. அவரது சளியில் இருந்து கிருமியை எடுத்து, மைக்ரோஸ்கோப் (Microscope) என்ற நுண்ணோக்கியின் மூலம் அது காசநோயை உருவாக்கும் ‘மைகோபாக்டீரியம் டியூபர்குளோசிஸ்’ (Mycobacterium Tuberculosis) கிருமிதானா என்று சோதிக்க வேண்டும். இந்தச் சோதனைக்கு ஆசிட் ஃபாஸ்ட் பேசில்லஸ் டெஸ்ட் (Acid-Fast Bacillus (AFB) Testing) என்று பெயர். இது ராபர்ட் காக் கண்டுபிடித்த சோதனைமுறை. ஆனால், இந்தச் சோதனையின் மூலம் கூட 70 சதவிகிதம் தான் நோயை உறுதிப்படுத்த முடியும்.  ‘ஸ்பூட்டம் கல்ச்சர்’ (Sputum Culture) என இன்னொரு சோதனை முறை இருக்கிறது.  பாதிக்கப்பட்டவரின் சளியில் இருந்து ஒரு கிருமியை எடுத்து வளர்த்து அது காசநோய்க் கிருமிதான் என்று உறுதி செய்வது. இதுவும் ராபர்ட் காக் செய்ததுதான். இந்த முறைப்படி, நோயைக் கண்டறிய 4 முதல் 6 வாரங்கள் ஆகலாம். கிருமி, நன்கு வளர்ந்தபிறகுதான் உறுதி செய்யமுடியும். முன்பு, சாலிட் மீடியா (Solid Media) என்ற முறையில் இந்தச் சோதனை செய்யப்பட்டு வந்தது. கடினமான ஒரு பொருளில் கிருமியை விட்டு வளர்ப்பார்கள். இப்போது லிக்விட் மீடியா (Liquid Media) முறை வந்துவிட்டது. இந்த முறைப்படி 2 முதல் 4 வாரங்களுக்குள்ளாகவே நோயை உறுதி செய்துவிடமுடியும்.

தொற்று நோய்களின் உலகம்!

இந்த ‘கல்ச்சர்’ முறை தான் 100 சதவிகிதம் நோயை உறுதிப்படுத்தும் சோதனை. ஆனால், இந்த முறையிலும்கூட, நோயை உறுதி செய்ய அதிகபட்சம் ஒருமாதம் காத்திருக்க வேண்டியிருக்கிறது. அதற்குள் பாதிக்கப்பட்டவர், பத்து பேருக்கு நோயைப் பரப்பி விட்டுவிடுவார். உடனே கண்டுபிடிக்க வழியே இல்லையா என்றால், இருக்கிறது.

நான்கு வருடங்களுக்கு முன்பு ஒரு சோதனை முறை வந்திருக்கிறது. அதை, என்.ஏ.ஏ.டி (NAAT) டெஸ்ட் என்று சொல்வோம். அதாவது, ‘நியூக்ளிக் ஆசிட் ஆம்ப்ளிஃபிகேஷன் டெஸ்ட்’ ( Nucleic Acid Amplification Test). இந்த டெஸ்ட் பற்றி அடுத்த இதழில் பார்ப்போம்.

- களைவோம்...

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism