பருவமடையும் பெண் குழந்தைகளுக்கு, ‘மூன்று நாள்கள் என்பவை இப்படித்தான்’ என்று ஆலோசனை சொல்ல நிறைய பேர் இருக்கிறார்கள். ஆனால், பருவமடையும் ஆண்பிள்ளைகளுக்கான ஆலோசனைகளை, வழிகாட்டுதல்களை யாருமே கொடுப்பதில்லை. அதனாலேயோ என்னவோ, ஆண்பிள்ளைகள் புரியாத புதிராகவே இந்தக் காலகட்டத்தைக் கடக்கிறார்கள். இந்நிலை மாற வேண்டும்.

ஆண்பிள்ளைகளின் பருவமடைதல் பற்றி வெளிப்படையாகப் பேசப்பட வேண்டும், விழிப்பு உணர்வு ஏற்படுத்த வேண்டும். அதற்கான ஒரு முயற்சியாக, பருவமடையும் ஆண்பிள்ளைகளுக்கான ஏ டு இசட் ஆலோசனைகளை, வழிகாட்டுதல்களை வழங்குகிறார்கள் நிபுணர்கள்.

பருவமடையும் வயது

பருவமடையும் ஆண்பிள்ளைகள் உடல் ரீதியாக அடையும் மாற்றங்கள் என்னென்ன? எதிலெல்லாம் பெற்றோர் கவனமாக இருக்க வேண்டும்? குழந்தைகளுக்கான சிறுநீரக மருத்துவரும் அறுவை சிகிச்சை நிபுணருமான லக்ஷ்மி சுந்தர்ராஜன் விளக்கங்களும் ஆலோசனைகளும் தருகிறார்.

பொதுவாகப் பெண்பிள்ளைகளின் பருவ வளர்ச்சி எட்டு வயதுக்குப் பிறகு ஆரம்பிக்கிறது. எட்டு வயதிலிருந்து உடலளவில் மாற்றங்களைச் சந்திக்கும் பெண்பிள்ளைகளுக்கு 13 வயதில் பருவமடைதலின் முக்கிய நிகழ்வான மாதவிடாய் வந்துவிடுகிறது. ஆனால், பருவமடைதல் விஷயத்தில் ஆண்பிள்ளைகள் கொஞ்சம் லேட்தான். அதாவது ஆண்பிள்ளைகள் 10 வயதுக்குப் பிறகுதான் பருவ வளர்ச்சி அடைய ஆரம்பிக்கிறார்கள். இதில் ஆச்சர்யமான விஷயம் என்னவென்றால் பருவமடைதல் காரணமாக 12, 13 வயதில் வெளியில் தெரியும்படி ஆண்பிள்ளைகளின் உடல் வளர்ச்சியில் பல மாற்றங்கள் நடக்கும் என்றால், 18 முதல் 20 வயது வரையிலும்கூட அவர்களுக்குள் இந்தப் பருவ வளர்ச்சி (Puberty Growth) வெளியே தெரியாமல் தொடர்ந்து கொண்டிருக்கும்.

பருவமடைதலின்போது உடலில் நடக்கும் மாற்றங்கள்

10 வயதுவரை பெண்பிள்ளைகளோடு விளையாடிக் கொண்டிருக்கும் ஆண்பிள்ளைகள் அதன் பிறகு அவர்களிடமிருந்து விலக ஆரம்பிப்பார்கள். ஆண்பிள்ளைகளோடு விளையாடுவதையே விரும்புவார்கள். ‘பெண்பிள்ளைகளோடு நான் விளையாட மாட்டேன்’ என்கிற இந்த மன மாற்றம்தான் ஆண்பிள்ளைகள் பருவமடைதலுக்கான முதல் அறிகுறி. பிறகு, ஆண்பிள்ளையின் முறையான பருவமடைதல் தொடங்குகிறது.

* முதலாவதாக அவர்களின் விரைகள் பெரிதாக ஆரம்பிக்கும்.

* அவர்களின் பசி உணர்வு அதிகமாகும். அடிக்கடி சாப்பிட்டுக்கொண்டே இருப்பார்கள். சாப்பிட்டு ஒரு மணி நேரம் கூட ஆகியிருக்காது... பசி என்று சொல்வார்கள். வயிற்றில் பூச்சி இருக்கிறதோ என்று பெற்றோர் கவலைப்படுவார்கள். ஆனால், இது பருவமடைதலின் அறிகுறிகளில் ஒன்று.

* கால்களின் நீளம் அதிகரிப்பதன் காரணமாக சட்டென்று அவர்களின் ஷூக்களின் சைஸ் அதிகமாகும். திடீரென்று உயரமாகி விடுவார்கள். சின்னப் பிள்ளையாகப் பார்த்த உங்கள் செல்ல மகன், ‘நான் வளர்கிறேனே மம்மி’ என்று உங்களைப் பார்த்துச் சிரிப்பான்.

* அக்குள் மற்றும் பிறப்புறுப்பைச் சுற்றி ரோம வளர்ச்சி உண்டாகும்.

* குரல் உடைய ஆரம்பித்து அதில் மாற்றம் ஏற்படும்.

* மேற்சொன்ன இந்த மாற்றங்கள் அனைத்தும் ஏற்பட்ட பிறகு ஆணுறுப்பு வளர்ச்சியடைய ஆரம்பிக்கும்.

மாற்றங்களால் சந்திக்கும் பிரச்னைகள்

அதுவரை குழந்தையாக இருந்த தங்கள் உடலில் மாற்றங்களைக் கண்டவுடன் பிள்ளைகள் குழம்பிப் போவார்கள்; கூச்சமாக உணர்வார்கள். குறிப்பாக, இந்த நேரத்தில்தான் அவர்கள் தங்களது ஆணுறுப்பில் விரைப்புத்தன்மையை உணர ஆரம்பிப்பார்கள். அதுமட்டுமல்ல, அவர்கள் தூங்கும் நேரத்தில் அவர்களது ஆணுறுப்பில் விரைப்புத்தன்மை ஏற்பட்டு அதிலிருந்து ‘செமன்’ எனப்படும் திரவம் அவர்கள் அறியாமலேயே வெளிவர ஆரம்பிக்கலாம் (Ejaculation). இதுவும் தாங்கள் ஆண்மகனாக மாறுவதற்கான ஓர் அம்சம் என்பது தெரியாததால், அவர்கள் இதைக் கையாளத் தெரியாமல் தவிப்பார்கள்.

டெஸ்டோஸ்டீரோன் செய்யும் விந்தை

ஆண்களுக்கான ஹார்மோனின் பெயர் டெஸ்டோஸ்டீரோன். பருவமடைதல் நிலையில் இருக்கிற ஆண்பிள்ளைகளின் உடலில் இந்த ஹார்மோனின் அளவு மிக அதிகமாக இருக்கும். சொல்லப்போனால், ஓர் ஆண் மகனுக்கு இருக்கும் டெஸ்டோஸ்டீரோனின் அளவைவிடவும் பருவமடைதல் நிலையில் இருக்கின்ற ஆண்பிள்ளைகளுக்குத்தான் டெஸ்டோஸ்டீரோனின் அளவு அதிகமாக இருக்கும். இதன் காரணமாகவே அவர்கள் 14 முதல் 18 வயதில் அதிகக் கோபம், மூர்க்கத்துடன் இருப்பார்கள். எதற்கெடுத்தாலும் பிடிவாதம் பிடிப்பார்கள். நாம் ஏதாவது சொன்னால் அதற்கு எதிர்மறையாகச் செய்வார்கள். இவை எல்லாமே டெஸ்டோஸ்டீரோனின் வேலைதான் என்று நாம் அவர்களைப் புரிந்துகொள்ள வேண்டும்.

அதற்காக, இந்த டெஸ்டோஸ்டீரோனை வில்லனாகப் பார்க்கக் கூடாது. ஓர் ஆண்பிள்ளையை ஆண்மகனாக மாற்றுவது இந்த டெஸ்டோஸ்டீரோன்தான். குறிப்பாக, திடகாத்திரமான தசைகளின் வளர்ச்சியை உண்டாக்கும் சக்தி டெஸ்டோஸ்டீரோனுக்கு உண்டு. மேலும் வலிமையான எலும்புகள், நல்ல உயரம், பரந்து விரிந்த தோள்கள், குரல் மாற்றம், மீசை, தாடி வளர்வது என்று எல்லாவற்றுக்கும் இந்த டெஸ்டோஸ்டீரோன் ஹார்மோன்தான் உதவி செய்கிறது.

தூக்கம் அவசியம்

ஆண்பிள்ளைகள் பருவமடையும் காலகட்டத்தில் நன்றாகத் தூங்க வேண்டும். தூங்கும்போதுதான் உடல் உறுப்புகள் நன்கு வளர்ச்சியடையும். அதனால் குறைந்தது ஏழு மணி நேரத் தூக்கம் அவசியம். ஆனால், இந்தக் காலகட்டத்தில் பிள்ளைகள் இரவு நேரத்தில் தாமதமாகத் தூங்குவார்கள். இதன் காரணமாக அவர்களால் காலையில் சீக்கிரமாக எழுந்திருக்க முடியாது. இந்தத் தூக்கத்தின்போது உடல் வளர்ச்சியடையும் என்பதால் அவர்கள் காலையில் தாமதமாக எழுந்திருப்பதைப் பெரிதுபடுத்த வேண்டாம்; கொஞ்சம் விட்டுப்பிடிக்கலாம். அதே நேரத்தில் இரவு நேரத்தில்தான் ஹார்மோனின் செயல்பாடு உச்சத்தில் இருக்கும் என்பதால் மெள்ள மெள்ள அவர்களைச் சரியான நேரத்தில் தூங்கப் பழக்கப்படுத்த வேண்டும்.

உடல் வளர்ச்சிக்கு இவையெல்லாம் தேவை!

தேவையான அளவு தூக்கம், சமச்சீரான உணவுகள், குறிப்பாகப் புரதம் அதிகம் உள்ள உணவுகள் மற்றும் அதிக சக்தி தரும், உடல் வளர்ச்சிக்கு உதவும் கார்போஹைட்ரேட் நிறைந்த உணவுகள் போன்றவற்றை இந்தக் காலகட்டத்தில் ஆண்பிள்ளைகள் எடுத்துக்கொள்ள வேண்டும். புரதம் நிறைந்த உணவுகள் வலிமையான தசைகளை உருவாக்க உதவும். சாப்பாட்டில் கவனம் செலுத்துவதுபோல உடற்பயிற்சியையும் இந்தப் பருவத்தில் தொடர்ந்து செய்துவர வேண்டும் அல்லது விளையாட்டுகளில் ஆர்வமுடன் ஈடுபட வேண்டும்.

கட்டுமஸ்தைக் குலைக்கும் ஜங்க் ஃபுட்ஸ்

நிறைய ஆண் பிள்ளைகள் பசிக்கும்போது ஜங்க் ஃபுட்ஸ் சாப்பிடுவார்கள். மேலும், எந்தவித உடற்பயிற்சியும் செய்யாமல் சதா சோம்பேறித்தனத்தோடு இருப்பார்கள். இதனால் உடல் பருமன் ஏற்படும். உடலில் தங்குகிற அதிகப்படியான கொழுப்பு ஆண்பிள்ளைகளின் ஃபிட்னெஸ் கனவைக் கலைப்பதோடு மட்டுமல்லாமல் அவர்களின் உடலில் வேறொரு சிக்கலையும் ஏற்படுத்திவிடும் ஆபத்து இருக்கிறது.ஆண்பிள்ளைகளின் உடலில் இருக்கிற டெஸ்டோஸ்டீரோன் ஆண் ஹார்மோனை, பெண்களுக்கான ஹார்மோனாக மாற்றிவிடும். டெஸ்டோஸ்டீரோன் மூலம் கிடைக்கவேண்டிய உடல் வளர்ச்சி தடைப்படும்.

என்னென்ன வளர்ச்சிகள் தடைப்படும்?

ஆண்பிள்ளைகளின் ஆணுறுப்பு, விரைகளின் வளர்ச்சி சரியாக இருக்காது. சில ஆண்பிள்ளைகளுக்கு மார்பகங்கள் சற்றுப் பெரிதாக மாறும். இதுபோன்ற பிரச்னைகள் உடலில் தங்கும் அதிகப்படியான கொழுப்பின் காரணமாக உண்டாகக் கூடியவை. பெண்களுக்கான ஹார்மோன்களின் வேலையே, பெண்களின் உடலில் கொஞ்சம் கொழுப்பை வைத்து அவர்களை வடிவமாக்குவதுதான். பெண்களுக்கான இந்த ஹார்மோன், ஆண்பிள்ளைகளின் உடலில் வேலை செய்ய ஆரம்பிக்கும்போது மேற்சொன்ன பருத்த மார்பகங்கள் போன்ற மாற்றங்கள் ஆண்பிள்ளைகளுக்கு நிகழ்ந்துவிடக்கூடும்.

அடுத்ததாக, அதிகப்படியான கொழுப்பு ஆணுறுப்பைச் சுற்றியுள்ள பகுதிகளில் சேரும்போது ஆணுறுப்பு எடுப்பாகத் தெரியாது. உள்ளுக்குள் புதைந்ததுபோல இருக்கும். இதன் காரணமாக ‘பிள்ளைக்கு ஆணுறுப்பு சரியாக வளரவில்லையோ’ என்கிற கவலை பெற்றோருக்கு வந்துவிடும்.

எனவே, சமச்சீரான உணவு மற்றும் தேவையான உடற்பயிற்சியின் மூலம் அதிகக் கொழுப்பு உடலில் சேராமல் பார்த்துக்கொள்ள வேண்டும். பருவமடையும் காலத்தில் ஆண்பிள்ளைகள் ஒல்லியாக இருப்பதே நல்லது. அப்போதுதான் டெஸ்டோஸ்டீரோன் ஹார்மோனின் முழுப்பலனும் அவர்களது உடலுக்குக் கிடைக்கும்.

உடல் ரீதியிலான பிரச்னைகள்

* முன்பே சொன்னதுபோல மார்பகங்கள் வளர்வது, ஆணுறுப்பு சிறியதாக இருப்பது போன்றவை ஆண்பிள்ளைகளுக்கு ஏற்படும் பொதுவான பிரச்னைகள். ஒரு பக்க விரை மற்றொரு பக்க விரையைவிட அளவில் சிறியதாக இருக்கலாம். இரண்டு விரைகளும் ஒரே நேரத்தில் வளர்ச்சியடைந்துவிடும் என்று சொல்ல முடியாது. ஒரு விரை வளர்ந்து ஆறுமாதம் கழித்து மற்றொரு விரை வளரலாம். எனவே, இதில் பயம்கொள்ளத் தேவையில்லை. அதேநேரம், மற்றொரு விஷயத்தில் கவனம் தேவை.

* டீன் ஏஜில் இருக்கும் ஆண்பிள்ளைகளுக்கு விரைப்பையில் புற்றுநோய் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம். எனவே, ஒரு பக்க விரை மற்றொரு பக்க விரையைவிடக் கடினமாகத் தெரிந்தாலோ, வழக்கத்துக்கு மாறாக வித்தியாசமாக இருப்பதுபோல உணர்ந்தாலோ கட்டாயம் மருத்துவரைச் சந்திக்க வேண்டும்.

* பொதுவாக டீன் ஏஜில் ஆண்பிள்ளைகள் மிகவும் கூச்சமாக உணர்வார்கள். எதையும் வாய் திறந்து சொல்ல மாட்டார்கள். ஆனால், விரையில் வலி இருக்கிறது என்று பிள்ளை சொன்னால், அது நடு ராத்திரியாக இருந்தாலும், உடனடியாக அப்போதே மருத்துவரிடம் அழைத்துச் செல்ல வேண்டும். ‘காலையில் பார்த்துக்கொள்ளலாம்’ என்ற அலட்சியம் கூடாது. ஒருவேளை விரையில் இன்ஃபெக்ஷன் இருந்தால் மருந்து கொடுத்து அதை மருத்துவர் சரிசெய்வார். அதில் பயம் எதுவும் தேவையில்லை.

* விதைப்பையில் இருக்கும் விரை உள்ளுக்குள்ளே திடீரென்று சுற்றிக்கொள்ளும் வாய்ப்பு இருக்கிறது. இது பார்க்க வெளியே தெரியாது. அப்படிச் சுற்றிக்கொண்டால் ஆறுமணி நேரத்துக்குள் அந்த விரையைச் சரிசெய்ய வேண்டும். இல்லாவிட்டால், விரை செயலிழந்துவிடும் அபாயம் இருக்கிறது. அதனால்தான் விரையில் வலி என்று சொன்னால் உடனே மருத்துவரிடம் அழைத்துச் செல்ல அறிவுறுத்தப்படுகிறது.

* குளிக்கும்போது ஆணுறுப்பின் மேல்தோலை நீக்கி, சுத்தம் செய்து, குளிக்கப் பழக்க வேண்டும். ஒருவேளை ஆணுறுப்பின் மேல்தோலை முன்னும் பின்னும் நகர்த்த முடியவில்லை என்றால் மருத்துவரைச் சந்திப்பது அவசியம்.

உளவியல் மாற்றங்களுக்கான ஆலோசனைகள்

``பெண்பிள்ளைகளைப் போலவே ஆண்பிள்ளைகளும் பருவமடையும்போது நிறைய பிரச்னைகளைச் சந்திக்கிறார்கள்’’ என்று சொல்லும் மனநல ஆலோசகர் பிருந்தா ஜெயராமன், அவற்றை எதிர்கொள்வதற்கான ஆலோசனைகளை வழங்குகிறார்.

* ஆண்பிள்ளைகள் பருவமடையும்போது அவர்களுடைய ஆணுறுப்பைச் சுற்றி முடி முளைக்கும். அவர்களது குரல் உடையும். மீசை முளைக்க ஆரம்பிக்கும். அதன்பிறகு அவர்கள் அறியாமலேயே திடீரென்று அவர்களது இனப்பெருக்க உறுப்பிலிருந்து விந்தணுக்களை உள்ளடக்கிய செமன் எனப்படும் திரவம் வெளியேறும்.

* இந்த விந்து வெளிப்பாடு ஆண் குழந்தைகளுக்கு ஒருவிதக் கிளர்ச்சியைத் தரும். கொஞ்சம் வெளிப்படையாகப் பேசும் இயல்புள்ள பிள்ளைகள் தங்கள் நண்பர்களுடன் இதுகுறித்துப் பேசுவார்கள். இனம்புரியாத பயம் மற்றும் அதிர்ச்சியை அப்போது அவர்கள் பகிர்ந்துகொள்வார்கள்.

* கூச்ச இயல்புள்ள குழந்தைகள் தயக்கம் மற்றும் பயம் காரணமாக தங்களுடைய உடலில் ஏற்படும் மாற்றங்களை வெளியே சொல்லாமல் மனதுக்குள்ளேயே வைத்துக் குழப்பிக் கொள்வார்கள்.

* சில ஆண்பிள்ளைகள் விந்து வெளிப்பாடு தரும் கிளர்ச்சி காரணமாக ஆண் உறுப்பில் கைகளை வைத்துச் சுயஇன்பம் தேடிக்கொள்வார்கள். ‘இப்படிச் செய்கிறோமே, இதனால் நம்முடைய எனர்ஜி எல்லாம் போய்விடுமோ’ என்கிற பயமும் அவர்களுக்கு இருக்கும்.

* மருத்துவ உலகம் மற்றும் உளவியல் பார்வையின்படி இதுபோன்ற சுய இன்பப் பழக்கத்தின் காரணமாக எனர்ஜி வீணாகிவிடாது. ஆனால், பாலுணர்வு பற்றிய சரியான தகவல்கள் எதுவும் கிடைக்காமல் அது ஒரு மூடுமந்திரமாகவே இருப்பதால் ஆண்பிள்ளைகள் குழம்பிப் போவார்கள். தங்களுடைய சந்தேகத்தை இன்டர்நெட் உதவியோடு தீர்த்துக்கொள்ள முயல்வார்கள்.

* பருவமடையும்போது ஏற்படும் ஹார்மோன் மாற்றங்களால் பெண்களின் மேல் ஆண்பிள்ளைகளுக்கு ஒருவித ஈர்ப்பு வரும். அதிலும் குறிப்பிட்ட ஒரு பெண்ணின்மீது ஈடுபாடு ஏற்பட்டால் அதனால் உடலில் கிளர்ச்சி ஏற்பட்டு ஆணுறுப்பு விரைத்துக் கொள்ளலாம். இதன் காரணமாக ஆணுறுப்பிலிருந்து செமன் வெளியேறலாம். இந்த இன்பத்துக்காக, ஆண்பிள்ளைகள் தமக்குப் பிடித்த ஒரு பெண்ணைத் திரும்பத் திரும்ப நினைத்துக் கிளர்ச்சி கொள்ளலாம்.

* பருவமடைந்த ஆண்பிள்ளைகள், தங்களின் உணர்வுகளைக் கிளர்ச்சியடைய விடாமல் மிதமாக வைத்துக்கொள்ள வேண்டும். இல்லையென்றால் குறிக்கோள் திசைமாறிவிடும்.

* இந்த வயதில் பின்விளைவுகளைப் பற்றி யோசிக்காமல் கோபம், தாபம் என்று உணர்வுகளை அப்போதைக்கு அப்போது வெளிப்படுத்த ஆண்பிள்ளைகளின் மனம் துடிக்கும். திடீரென்று கோபம் வரும். பிடிவாதம் நிறைய இருக்கும். நாம் ஒன்று சொன்னால் ஏட்டிக்குப் போட்டியாக அவர்கள் வேறொன்று செய்வார்கள். எனவே, இத்தனை பிரச்னைகளைத் தரும் உணர்வுகளை எப்படிக் கையாள வேண்டும் என்பதைப் பிள்ளைகளுக்குப் பெற்றோர் கட்டாயம் சொல்லித்தர வேண்டும். தியானம், யோகா என மனதை ஒருங்கிணைக்கும் பயிற்சிகள் தரலாம்.

* பருவ வயதில் உடம்பில் என்னென்ன மாற்றங்கள் ஏற்படும், அவை மனதை எந்தெந்த விதத்தில் ஆட்டுவிக்கும், அவற்றை எப்படிக் கையாள வேண்டும் என்பதைப் பெற்றோர், குறிப்பாக அப்பா அந்தப் பிள்ளைக்குச் சொல்லித்தர வேண்டும். அதற்கு முதலில் அப்பாக்கள் தங்கள் பிள்ளைகளிடம் நட்புணர்வோடு பழக வேண்டும். தங்களுக்கு எந்தவிதச் சந்தேகம் ஏற்பட்டாலும் தங்கள் அப்பாவிடம் அதுபற்றி விவாதிக்கும் அளவுக்கு அவர்கள் இலகுவாக இருக்க வேண்டும்.

* ‘உன் வயதில் எனக்கும் இப்படித்தான் இருந்தது. ஆனால், நான் என் குறிக்கோளைச் சரியான பாதையில் அமைத்துக்கொண்டேன். அதனால் அந்த வயதில் ஏற்பட்ட இனக்கவர்ச்சி உணர்வை என்னால் சுலபமாகக் கடந்துபோக முடிந்தது. உன்னாலும் அது முடியும்’ என்கிற ரீதியில் அப்பாக்கள் ஆண்பிள்ளைகளிடம் பேச வேண்டியது அவசியம். அப்போதுதான் உணர்வுகள் கொந்தளிக்கும்போது மனதால் முடிவெடுக்காமல் அறிவால் முடிவெடுப்பார்கள்.

* வெகுசில பிள்ளைகள் உணர்வுகளைக் கையாளத் தெரியாமல் தடம் மாறுவார்கள். அப்படிப்பட்டவர்களைக் கட்டாயம் உளவியல் ஆலோசகரிடம் அழைத்துச் செல்ல வேண்டும்.

* ‘எல்லாம் சரி, என் பிள்ளை சரியான பாதையில்தான் செல்கிறான் என்பதை எப்படி நான் அறிந்துகொள்வது’ என்று கேட்கிறீர்களா? உங்கள் பிள்ளை எப்போதும்போல இயல்பாக இருக்கிறான் என்றால் ஓ.கே. ஆனால் திடீரென்று நடை, உடை, பாவனையில் மாற்றம், அளவுக்கு மீறிய குதூகலம் போன்றவை காணப்பட்டால் எதிர்பாலினக் கவர்ச்சியில் இருக்கிறானா என்று கவனிக்க ஆரம்பிக்க வேண்டும். அப்படி ஏதேனும் இருந்தால், ‘இந்த வயதில் இதுபோன்ற உணர்வுகள் ஏற்படுவது இயல்புதான். இதிலிருந்து நிச்சயம் வெளியே வந்துவிடலாம்’ என்கிற ரீதியில் நட்புடன் பேசுங்கள்.

* அதுவரை உற்சாகமாக இருந்த பிள்ளை திடீரென்று மனவருத்தத்துடன் `மூட்அவுட்’ ஆகி யாருடனும் பேசாமல் தனியாகவே இருந்தால் அதை அலட்சியம் செய்யக்கூடாது. பிள்ளையின் பிரச்னை என்னவென்று கண்டறிந்து அதிலிருந்து அவனை மீட்டெடுக்கும் வேலையில் இறங்க வேண்டும். ஏனென்றால் இந்தப் பருவத்தில் அதீத வருத்தத்துடன் இருக்கும் பிள்ளைகள், உணர்வுகளைக் கையாளத் தெரியாமல் தற்கொலைவரை போவதற்கும்கூட வாய்ப்பிருக்கிறது.

* பருவமடைந்த ஆண்பிள்ளைகளை நீங்கள் சரியாகக் கையாள வேண்டுமானால் முதலில் நீங்கள் உங்கள் பிள்ளைகளுடன் நட்பான உறவில் இருக்க வேண்டும். அவர்கள் உங்களை நம்ப வேண்டும். ‘நம் பெற்றோரிடம் நம் பிரச்னைகள் எவை குறித்தும் பேசலாம்’ என்கிற நம்பிக்கையை அவர்கள் மனதில் விதைக்க வேண்டும். அப்போதுதான் மேலே சொன்ன ஆலோசனைகள் எல்லாமே சாத்தியப்படும்.

சருமத்தில் ஏற்படும் மாற்றங்கள்

பருவமடையும் ஆண்பிள்ளைகளுக்கு சருமத்தில் ஏற்படும் மாற்றங்களுக்கான ஆலோசனைகளைத் தருகிறார், சரும மருத்துவர் நிருபமா.

* ஆண்பிள்ளைகள் பருவ வயதை அடையும்போது ஹார்மோன்களின் மாற்றம் காரணமாக முகத்தில் பருக்கள் வர ஆரம்பிக்கும். அதிலும் எண்ணெய்ப்பசை சருமம் உள்ளவர்களுக்குப் பருக்கள் அதிகமாக இருக்கும். சிலருக்குப் பரம்பரை காரணமாகவும் பருக்கள் அதிகமாக வரலாம்.

* இந்த வயதில் ஆண்பிள்ளைகள் பருக்களை பெரும் பாரமாக உணர்வார்கள். அதை உடனடியாக நீக்க ஆசைப்பட்டுக் கையால் கிள்ளி எடுப்பார்கள். பருக்களைக் கையால் கிள்ளிக்கொண்டே இருந்தால் அந்த இடத்தில் கிருமித்தொற்று (இன்ஃபெக்ஷன்) ஏற்பட்டு, பரு இருந்த இடம் நிரந்தரத் தழும்பாக மாறிவிடும். அதனால் இதுபோன்ற பருக்கள் அல்லது தழும்புகள் ஏற்பட்டால் உடனே சரும மருத்துவரின் ஆலோசனையைப் பெறவேண்டியது அவசியம்.

* சிலர் இணையம் போன்றவற்றில் பருக்களைப் போக்கும் வழிமுறைகளைப் படித்துவிட்டு அவர்களாகவே சுயமருத்துவத்தில் ஈடுபடுவார்கள். இதனால் முகம் மேலும் பாதிக்கப்படலாம். எனவே, இவற்றையெல்லாம் விட்டுவிட்டு பருக்களைக் கட்டுப்படுத்த உணவு முறையில் ஓர் ஒழுங்கைக் கொண்டுவர வேண்டும்.

* ஜங்க் ஃபுட்ஸ் தவிர்த்து, பச்சைக் காய்கறிகளையும் பழங்களையும் உணவில் அதிக அளவு சேர்த்துக்கொள்ள வேண்டும். உடலுக்குத் தேவையான அளவு தண்ணீர் குடிக்க வேண்டும். ஒரு நாளைக்கு இரண்டு அல்லது மூன்று முறை மிதமான சோப்பால் முகத்தைக் கழுவவேண்டும்.

* ஆண்பிள்ளைகள் அதிக நேரம் விளையாடிக்கொண்டே இருப்பதால் அவர்களது உடலில் வியர்வை அதிக அளவில் இருக்கும். இதன் காரணமாக வியர்க்குருவும் வரலாம். அதனால் முகத்தில் பொரிப்பொரியாக வந்தால் அது முகப்பருவா அல்லது வியர்க்குருவா என்பதனை ஆரம்ப நிலையிலேயே சருமநோய் நிபுணரைச் சந்தித்துக் கண்டறிய வேண்டும்.

* பருவமடைந்த ஆண்பிள்ளைகளின் உடலில் ஏற்படுகிற ஹார்மோன் மாற்றத்தின் காரணமாகவும் அவர்களுக்கு அதிக அளவில் வியர்வை ஏற்படும். இதனால் துர்நாற்றம் ஏற்படுவதோடு, தேமல் போன்ற சரும நோய்கள் ஏற்படுவதற்கும் வாய்ப்புகள் இருக்கின்றன.

* அதுவரை பெற்றோரின் உதவியோடு குளித்துக்கொண்டிருந்த ஆண்பிள்ளைகள் பதின்பருவத்தைத் தொட்டவுடன் தாங்களாகவே குளிக்க ஆரம்பிப்பார்கள். ஆனால், அவர்கள் சரியாகக் குளிக்க மாட்டார்கள். இதனால் படை போன்ற நோய்த் தொற்றுகள் ஏற்படுவதற்கும் வாய்ப்புகள் இருக்கின்றன. அதனால் சுத்தமாக இருக்க வேண்டியதன் அவசியத்தையும், சரியாகக் குளிக்கிற முறையையும் ஆண்பிள்ளைகளுக்கு அவர்களின் பெற்றோர் சொல்லித்தர வேண்டியது அவசியம்.

* இறுக்கமாக உடை அணிவது, சிந்தெடிக் ஆடைகளை அணிவது போன்ற பழக்கங்களைத் தவிர்ப்பது நல்லது. காட்டன் உள்ளாடைகள், காட்டன் ஆடைகளைப் பயன்படுத்துவது சருமத்துக்குப் பாதுகாப்பானது.

* ஆண்பிள்ளைகளின் ஃபேவரைட் உடை, ஜீன்ஸ். ஆனால், ஒரே ஜீன்ஸைத் துவைக்காமல் ஒருவாரம் வரை அணியும் பழக்கத்துக்குக் கண்டிப்பாக `குட் பை’ சொல்ல வேண்டும். ஜீன்ஸ் போடுவதால் உண்டாகும் அதீத வியர்வை உடலிலேயே தங்கிவிடும். அதுமட்டுமல்ல, ஜீன்ஸில் இருக்கும் அழுக்கும் சேர்ந்து சருமத்தை பாதித்துவிடும். அதனால் ஜீன்ஸை ஒவ்வொரு முறை உடுத்திய பின்னரும், நன்றாகத் துவைத்து, வெயிலில் காயவைத்துப் பயன்படுத்துவது நல்லது.

* டீன் ஏஜில் பெர்ஃப்யூம்களின் மேல் விருப்பம் அதிகமாக இருக்கும். ஆனால், பெர்ஃப்யூம்கள் மற்றும் பாடி ஸ்பிரே போன்றவற்றை உடலில் நேரடியாகப் பயன்படுத்தக்கூடாது. உடைகளின் மேல் போட்டுக்கொண்டால் ஒவ்வாமை ஏற்படாமல் தடுக்கலாம்.

* நண்பர்கள் சொல்கிறார்கள் என்று அடிக்கடி சோப்பை மாற்றிக்கொண்டே இருக்கக்கூடாது. எந்த சோப் உடலுக்கு ஏற்றுக்கொள்கிறதோ அந்த சோப்பை மட்டும் தொடர்ந்து பயன்படுத்துவது நல்லது.

பருவமடையும் ஆண்பிள்ளைகளுக்கான உணவுகள்

ஆலோசனைகளை வழங்குகிறார் ஊட்டச்சத்து நிபுணர் அம்பிகா சேகர்.

ஆண்பிள்ளைகளுக்கு இந்தப் பருவத்தில்தான் உடல்வளர்ச்சிக்காக அதிக அளவில் புரதச்சத்து தேவைப்படும். அதனால் புரதம் நிரம்பிய உணவுகளான மீன், முட்டை, சிக்கன், கொண்டைக்கடலை, பனீர், முளைகட்டிய பயறு வகைகள் போன்ற உணவுகளை அவர்களுக்குக் கொடுக்க வேண்டும்.

மீன், முட்டை, சிக்கன் போன்ற உணவுகளை அவர்களுக்கு தினசரி கொடுக்கலாம். தவறு எதுவும் இல்லை. ஆனால் அதிக மசாலாக்கள் மற்றும் அதிக எண்ணெய் சேர்த்துச் சமைத்துக் கொடுக்கக் கூடாது. புரதம் நிறைந்த உணவுகளைப் போலவே நிறைய உலர் பழங்கள், நட்ஸ் போன்றவற்றையும் கொடுக்கலாம்.

அதேபோல எல்லாவிதமான காய்கறிகள், பழங்கள், கீரை வகைகளை அவர்களுக்குக் கொடுக்க வேண்டும். பழங்கள், காய்கறிகள் போன்றவற்றின் மீது ஆண்பிள்ளைகள் அதிக ஈடுபாடு காட்டமாட்டார்கள். பழங்களை அப்படியே சாப்பிட உங்கள் பிள்ளை மறுத்தால், ஜூஸாகக் கொடுக்கலாம். காய்கறிகளையும் சாலட் வடிவில் செய்து கொடுக்கலாம்.

தோசை, அடை செய்யும்போது அத்துடன் காய்கறித் துருவலைச் சேர்க்கலாம். பாலக் கீரை போன்றவற்றை சப்பாத்தி மாவுடன் கலந்து, கீரை சப்பாத்தி செய்து கொடுக்கலாம். குடமிளகாய், கோஸ் போன்ற காய்கறிகளைச் சமையலில் சேர்த்தால் அதன் சுவையால் அவர்கள் ஈர்க்கப்படுவார்கள்.

அதிகக் கொழுப்பு நிறைந்த உணவுகளைப் பிள்ளைகள் சாப்பிடக் கூடாது. குறிப்பாக வெளியில் விற்கப்படும் உணவுகள், பீட்சா, பர்கர் போன்ற ஜங்க் உணவுகளை அவர்களுக்கு வாங்கிக்கொடுக்கக் கூடாது.

பருவ வயதில்தான் குழந்தைகளுக்கு உடல் வளர்ச்சிக்கான ஹார்மோன் மாற்றங்கள் ஏற்படும்.அப்படியிருக்கும்போது எண்ணெய் அதிகமாக இருக்கும் உணவுகள், நன்கு பொரிக்கப்பட்ட உணவுகளை எடுத்துக்கொண்டால் ஹார்மோன்களின் செயல்பாட்டில் இடையூறு உண்டாகி உடல் பருமன் உண்டாகலாம்.

உடல் பருமன் வந்தால் ஆண்பிள்ளைகளுக்குத் தேவையான ஹார்மோன்களின் உற்பத்தி பாதிக்கப்படும். இதனால் பருவமடைதல் தள்ளிப்போகும், அல்லது சீக்கிரமே நடந்துவிடும். அதேபோல அதிக அளவில் உப்பு சேர்க்கப்பட்ட, மோனோ சோடியம் குளூட்டமேட் சேர்க்கப்பட்ட உணவுகளைச் சாப்பிடுவதை இந்த வயதில் இருக்கும் ஆண்பிள்ளைகள் கட்டாயம் தவிர்க்க வேண்டும். பிராய்லர் சிக்கனை பருவ வயது ஆண்பிள்ளைகளுக்குக் கொடுப்பதை முடிந்த வரையில் தவிர்க்க வேண்டும். ஏனென்றால் அதிக அளவில் உப்பு சேர்க்கப்பட்டு எண்ணெயில் பொரிக்கப்பட்ட சிக்கன் உணவுகளைத்தான் பிள்ளைகள் மிகவும் விரும்புவார்கள். ஆனால் இதுபோன்ற உணவுகள் ஆண்பிள்ளைகளின் ஹார்மோன் செயல்பாடுகளில் மாற்றத்தை ஏற்படுத்தி, அவர்களின் ஆரோக்கியத்தையும் கெடுத்து விடும்.

அதேபோல அளவுக்கு அதிகமான இனிப்புகள், சாக்லேட், ஐஸ்க்ரீம் போன்றவற்றைச் சாப்பிடக்கூடாது. இதன் காரணமாக பற்கள் பாதிக்கப்படலாம். சாக்லேட் போன்ற அதிகக் கொழுப்புள்ள உணவுகளை அளவுக்கு அதிகமாகச் சாப்பிடும்போது அவர்களுக்கு முகப்பருக்கள் உண்டாகலாம். இந்த முகப்பருக்கள் அவர்களது தன்னம்பிக்கையையே குலைக்கும் சூழல்கூட ஏற்படலாம்.

பருவ வயதில் ஆண்பிள்ளைகள் மிகவும் பரபரப்பாகச் செயல்படுவார்கள். எனவே அவர்களின் பதற்றத்தைத் தணிக்க அவர்களை யோகா மற்றும் உடற்பயிற்சிகளைச் செய்ய வைக்கலாம். தினமும் உடற்பயிற்சி செய் என்றால் அவர்கள் கேட்கமாட்டார்கள். அதற்குப் பதிலாக ஜூம்பா மாதிரியான நடன வகுப்புகளில் சேர்த்துவிட்டால் உடற்பயிற்சி நடன வடிவில் அவர்களுக்குக் கிடைத்துவிடும்.

முட்டை, பாதாம் பருப்பு, மற்ற பருப்புகள், பால், தயிர், விதைகள், நட்ஸ் வகைகள், அசைவம் உள்ளிட்ட புரதம் நிறைந்த உணவுகளையும், மற்றும் கார்போஹைட்ரேட் நிறைந்த உணவுகளையும் பிள்ளைகளுக்குக் கொடுக்க வேண்டும்.

இந்தக் காலகட்டத்தில் அவர்கள் அதிகப் பசியை உணர்வார்கள். அவர்களுக்கு அதிக சக்தி தேவைப்பட்டுக்கொண்டே இருக்கும். பள்ளிக்குக் கொண்டுசெல்லும் சாப்பாடு அவர்களுக்குப் போதாது. பள்ளி முடிந்து வீட்டுக்கு வருவதற்குள் அவர்களுக்கு மறுபடியும் பசியெடுக்க ஆரம்பித்துவிடும். அதுவரை நான்கு இட்லிகள் சாப்பிட்டுக்கொண்டிருந்த தன் பிள்ளை ஆறு, ஏழு என்று சாப்பிட ஆரம்பித்தால் பெற்றோர், பிள்ளையின் சூழ்நிலையைப் புரிந்துகொண்டு அதற்கேற்ப சத்தான உணவுகளை அதிக இடைவேளைகளில் கொடுக்க வேண்டும்.

பழங்கள், காய்கறிகள், குறைந்தபட்சம் ஒருநாளைக்கு இரண்டு லிட்டர் தண்ணீர், அதிகப் புரத உணவுகள், சக்தி தரும் கார்போஹைட்ரேட் உணவுகள், மிதமான அளவு கொழுப்பு உணவுகள் என்று பிள்ளைகளுக்கு உணவுத்திட்டம் அமைய வேண்டும்.

பிஸ்கட், கேக், பஃப்ஸ் போன்ற பேக்கரி உணவுகளில் மைதா, வெண்ணெய் நிறைய சேர்க்கப்படும். அதனால் பேக்கரி உணவுகளை அதிக அளவில் எடுத்துக்கொள்ளக் கூடாது. அதே நேரத்தில் தினசரி உணவில் நெய், பால், முட்டை, மீன் போன்றவற்றைச் சேர்த்துக்கொள்ள வேண்டும்.

`சத்து’ என்கிற பெயரில் ஒரே மாதிரியாகப் பருப்பு, கீரை என்று கொடுத்தால் பிள்ளைகள் சாப்பிடவே மாட்டார்கள். ஒரு நாளைக்கு சப்பாத்தி, பாசிப்பருப்பு கூட்டு, மறுநாள் பருப்பு சாதம், மற்றொரு நாள் பருப்பு வடை, கதம்ப சாதம், அதற்கு அடுத்தநாள் பனீர் உணவு, வாரத்துக்கு இருநாள் அசைவ உணவு என்று சுழற்சி முறையில் பிள்ளைகளுக்கு எல்லா உணவுகளையும் கொடுக்க வேண்டும்.

ஆண் பிள்ளைகளை ஆரோக்கியத்துடனும், சந்தோஷத்துடனும், சுகாதாரத்துடனும் வளர்த்தெடுப்போம்!

தொகுப்பு: சு.கவிதா

அட்டைப் படம்: மதன்சுந்தர்

உடலையும் உள்ளத்தையும் நல்வழிப்படுத்தும் வழிகள், உணவுப் பழக்கங்கள், உடற்பயிற்சிகள் முதலிய வாழ்வியல் முறைகளை அறியவும், மருத்துவ உலகின் ஆச்சர்யங்களை விரல்நுனியில் தெரிந்துகொள்ளவும் ‘டாக்டர் விகடன்’ சோஷியல் நெட்வொர்க்கிங் பக்கங்களில் இணைந்திடுங்கள்.