இன்றைய இளைஞர்களின் நம்பிக்கையை முற்றிலுமாகக் குலைக்கும் விஷயங்கள் குறைவுதான். ஆனால், பல விஷயங்கள் ‘இதற்காகவா’ என ஆச்சர்யப்படுத்தவும் செய்யும். அவற்றில் ஒன்று முடி உதிர்தல். முடி மிகவும் முக்கியமான விஷயம; அழகு சார்ந்த விஷயம். பெரும்பாலான மக்கள் முடி உதிர்வது குறித்துப் பெருங்கவலை கொள்கிறார்கள். ஆயிரக்கணக்கில் பணத்தையும் செலவழிக்கிறார்கள். சேட்டோ போபியா (Chaeto Phobia) என்பது முடி உதிர்தலைப் பற்றிய பயம் கிடையாது. முடி என்றாலே பயந்துபோவது. இது அரியவகை போபியாவாகக் கருதப்படுகிறது. பாதிக்கப்பட்டவர்கள் விலங்குகளின் ரோமம், மனிதர்களின் முடி, அடர்த்தியான மற்றும் சுருள் முடி என எல்லா வகை முடிகளைக் கண்டும் பயப்படுவார்கள். இவர்களில் சிலர் தங்களின் முடியைத் தொட்டுப் பார்க்கவும், மற்றவர்களின் முடியைத் தொடவும் பயப்படுகிறார்கள். கிரேக்க மொழியில் `Khaite’ என்றால் `அலைபாயும் கூந்தல்’ என்று அர்த்தம். அதிலிருந்தே சேட்டோ போபியா என்ற சொல் உருவானது.

காரணங்கள்: முடி இழப்பு பற்றிய கவலைதான் இந்த பயத்துக்குத் தொடக்கம். பாதிக்கப்பட்டோர் தம் உணவு, உடை போன்றவற்றில் உள்ள உதிர்ந்த முடியினைக் கண்டாலும் பயப்படுவார்கள். பெரும்பாலும் இவர்கள் சுத்தத்துக்கு முக்கியத்துவம் கொடுப்பவர்களாக இருப்பார்கள். அதனாலே பயமும் எழக்கூடும். சிறுவயதில் நிகழ்ந்த எதிர்மறையான நிகழ்வுகளும் காரணமாகலாம். உதாரணத்திற்கு, அதிக முடி கொண்டவர் நம்மை அடித்தோ துன்புறுத்தியோ இருந்தால் அதன் நீட்சியாக இந்த பயம் வரலாம்.

அறிகுறிகள்:

* நடுக்கம், வயிற்றுப்போக்கு, வாந்தியெடுத்தல், குமட்டல், தூக்கமின்மை.

* முடியைப் பற்றி அதிகமாக யோசித்தல்.

* அதிக முடி இருப்பவர்களை வெறுத்தல்.

* தம்முடைய முடியை வெட்டிக்கொள்வதை மாதக் கணக்கில் தட்டிக்கழிப்பது.

சிகிச்சை: அரிதான பயம் என்றாலும் இது குணப்படுத்தக் கூடியதே. போபியாவின் தீவிரத்தைப் பொறுத்து, பாதிக்கப்பட்டவர் மனநல மருத்துவரை அணுகலாம். NLP எனப்படுகிற Neuro – Linguistic Programming பயிற்சி முறையும் இதற்குத் தீர்வாக அமையும்.

- இ.நிவேதா