“இந்த மாத்திரை சாப்பிட்டா கண்டிப்பா தூக்கம் வரும்ல டாக்டர்?” மூன்றாவது முறையாக அதே கேள்வி மருத்துவரின் காதில் விழுந்தது. “கண்டிப்பா வரும்” என்றார் மருத்துவர்.

சொன்னது போலவே அன்று இரவு அந்த நபருக்கு நல்ல தூக்கம். அடுத்த நாளே மருத்துவருக்கு போன் செய்து நன்றி கூறினார்.

பல வாரங்களாகத் தூக்கம் வராமல் தவித்த மனிதரை அந்த மாத்திரை எப்படி ஒரே நாளில் தாலாட்டு பாடித் தூங்க வைத்தது? அப்படி என்ன மாத்திரை அது? அதுனுள்ளே சக்தி வாய்ந்த மருந்து ஏதேனும்? ம்ஹும்ம்... ஆங்கிலத்தில் ‘Sugar Pill’ எனச் சொல்லப்படும் சர்க்கரை கலந்த மாத்திரைதான் அது. உண்மையில், அதனுள்ளே தூக்கத்தை வரவழைக்கும் மருந்துகள் எதுவும் கிடையாது. அப்படி நம் மூளையை நம்ப வைத்துத் தூக்கத்தை வரவழைப்பது மட்டும்தான் அந்த மாத்திரை கொடுக்கப்பட்டதன் நோக்கமே. அதன் பெயர் ‘பிளாசிபோ’ (Placebo). தூக்கமின்மை என்றில்லை, பல்வேறு மனப் பிரச்னைகளுக்கும் பிளாசிபோவைப் பரிந்துரைக்கிறார்கள் மருத்துவர்கள். எது பிளாசிபோ, எது உண்மையான மாத்திரை என்பது மருத்துவருக்கு மட்டுமே தெரியும்.

நமக்கு ஏற்படும் அனைத்து உபாதைகளும் உடல் ரீதியாக ஏற்படுபவைதானா? நிச்சயமாக இல்லை. மன அழுத்தம், தலை வலி, உடல் வலி, தூக்கமின்மை, சில வகையான குடல் பிரச்னைகள் மற்றும் மாதவிடாய் பிரச்னைகள் போன்றவற்றுக்குப் பல நேரங்களில் மனதில் நிகழும் குழப்பங்களும் காரணமாகலாம். அதாவது உங்கள் மூளைக்கு நேரடியாக உங்கள் உடலைப் பாதிக்கும் திறன் இருக்கும். அதனால்தான் உடல் ஆரோக்கியத்திற்கு நாம் எவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கிறோமோ, அதேபோல மன ஆரோக்கியத்திற்கும் அமைதிக்கும் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்துகிறார்கள்.

பிளாசிபோ பற்றிய விரிவான தகவல்களைத் தருகிறார் உளவியல் நிபுணர் சித்ரா அரவிந்த்.

“பிளாசிபோ வகை மருத்துவம் நம்பிக்கை சார்ந்தது. கடவுள் நம்பிக்கை போலத்தான் அதுவும். சில பேர் கோயில் சென்று வந்தவுடன் நிம்மதியாக இருக்கிறது என்பார்கள். அதே போலத்தான் பிளாசிபோவும். இந்தப் பிரச்னைக்கு மாத்திரை எடுத்தாயிற்று. இனி அது சரியாகிவிடும் என்ற நம்பிக்கைதான் உண்மையில் இங்கே ஆரோக்கியத்தைத் திருப்பித் தருகிறது. பிளாசிபோதான் உட்கொள்கிறோம் என்ற விழிப்பு உணர்வு அவர்களுக்கு ஆரம்பத்திலேயே தோன்றிவிட்டால், அதனால் எந்தப் பலனும் இல்லை. ஆனால், ஒரு சிலர் சில காலம் பிளாசிபோ மருந்துகளை உண்டு உடலளவில் நல்ல முன்னேற்றம் அடைந்திருப்பார்கள். அவர்களிடம் நீங்கள் சாப்பிட்டது பிளாசிபோதான் என்றாலும் நம்ப மாட்டார்கள்.

பிளாசிபோ குறித்த வாதங்களும் எதிர் வாதங்களும் தற்போதும் இருக்கின்றன. நம்பி வரும் நோயாளிகளை பிளாசிபோ கொண்டு குணப்படுத்தினாலும், அது அவர்களை ஏமாற்றும் ஒரு செயல் என்கிற விமர்சனங்கள் இங்கே எழாமல் இல்லை. ஆனால், பிளாசிபோ மருந்துகள் மற்றும் அவற்றின் மூலம் ஏற்படும் விளைவுகள் பல்வேறு ஆராய்ச்சிகளுக்கு உதவுகின்றன. இதை எளிதாகப் புரிந்து கொள்ள ஓர் உதாரணம். கேன்சர் நோயாளிகளை இரண்டாகப் பிரித்து அதில் ஓர் அணிக்கு நிஜமான நோய் எதிர்ப்பு மாத்திரைகளும், மற்றோர் அணிக்கு பிளாசிபோ மாத்திரைகளையும் கொடுப்பார்கள். ஆனால், இரண்டிற்கும் வேறுபாடின்றி லேபிள் முதல் அனைத்துமே ஒரே தோற்றத்தில் இருக்கும். உண்மையான மாத்திரைகள் எடுத்துக் கொண்டவர்களுக்கு உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்பட்டதுபோல பிளாசிபோ உட்கொண்டவர்களுக்கும் மாற்றங்கள் நிகழுமாயின் அதைத்தான் ‘பிளாசிபோ எஃபெக்ட்’ என்கிறார்கள்.

பிளாசிபோ எல்லோருக்கும் கொடுக்கப் படுவதில்லை. ஒரு சிலருக்கு உடலில் எந்தப் பிரச்னையும் இருக்காது. அதை மருத்துவர்களே சொன்னால்கூட ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். ‘மாத்திரை ஏதாவது கொடுங்கள்’ என்று அடம் பிடிப்பார்கள். இதுபோன்ற பிரச்னைகளை ‘சைக்கோசோமடிக் டிஸ்ஆர்டர்’ (Psychosomatic Disorder) என்கிறோம். இதில் ஒற்றைத் தலைவலி, பெண்களுக்கு அடிக்கடி ஏற்படும் உடல் வலி போன்றவை அடங்கும். அவர்களுக்கு பிளாசிபோ சிறந்த மருத்துவ முறை. ஆனால், பிளாசிபோவை உடல் தொடர்பான பிரச்னைகளுக்கு மட்டுமே கொடுக்க முடியும். உளவியல் ரீதியான பிரச்னை உள்ளவர்களுக்கு இதை யாரும் பரிந்துரைக்க மாட்டார்கள்” என்கிறார்.

பிளாசிபோ முறை குறித்த ஆராய்ச்சிகள், நம் மனதிற்கும் உடலுக்கும் இருக்கும் தொடர்பை நமக்குப் புரியவைக்கின்றன. சில நேரங்களில் உளவியல் நிபுணர் சித்ரா அரவிந்த் கூறியதுபோல கொடுக்கப்படும் வலி மாத்திரைகள்கூட பிளாசிபோக்களாக இருக்கும். அதை உண்டவுடன் ‘இந்த மாத்திரை வலியைப் போக்கிவிடும்’ என்ற எண்ணம் தோன்றும். அதற்கு ஏற்றவாறு, உடலில் வலி நிவாரணிகளாக இயற்கையிலேயே சுரக்கும் எண்டார்பின்களின் (Endorphins) அளவு அதிகரிக்கும். அது வலியைக் குறைக்கும். நாமும் அது மாத்திரையால் நிகழ்ந்தது என்று நிம்மதி கொள்வோம்.

ஆனால், மருத்துவர்கள் எல்லோருக்கும் இந்த பிளாசிபோ முறையைக் கையாள மாட்டார்கள். இதன் வெற்றி விகிதமும் குறைவுதான். வரும் நோயாளிகளின் பிரச்னை உடல் ரீதியானதா அல்லது மனம் சம்பந்தப்பட்டதா என்று கண்டறிந்த பின்னரே பிளாசிபோ தேவையா என முடிவெடுப்பார்கள். தேவையிருந்தால், மனநல மருத்துவரின் உதவியையும் நாடுவார்கள்.

- ர.சீனிவாசன்

பிளாசிபோ மருந்துகளின் உள்ளே என்ன இருக்கும்?

சர்க்கரை, காய்ச்சி வடிகட்டிய நீர், உப்புக்கரைசல் என இம்மூன்றும்தான் பிரதானமாக இருக்கும். இதனால் உங்கள் உடலில் எந்தவித மாற்றங்களும் நிகழ்ந்துவிடாது.

அது என்ன பிளாசிபோ எஃபெக்ட்?

மாத்திரைகள், மருந்துகள், ஊசிகள் என்று பல விதங்களில் வரும் பிளாசிபோக்கள் உடலில் சென்றவுடன் உங்களுக்குள் மாற்றம் நிகழும். அவை சரியானவையாகவும் இருக்கலாம். பக்கவிளைவுகளாகவும் இருக்கலாம். அதனால்தான் பிளாசிபோக்கள் வெற்று மருந்துகள் என்றாலும் அதை மருத்துவர் பரிந்துரைத்தால் மட்டுமே ஒருவருக்குத் தர வேண்டும்.

எல்லோருக்கும் ஏற்றவையல்ல!

பிளாசிபோ மருந்துகள் எல்லோருக்கும் ஏற்றவையல்ல என்கிற சமத்துவத்திற்கான மருத்துவர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் டாக்டர் ஜி.ஆர்.ரவீந்திரநாத், அதற்கான காரணங்களை விளக்குகிறார்.

‘‘பிளாசிபோ பெரும்பாலும் ஆய்வுகளுக்குத்தான் (Clinical Trials) பயன்படுகிறது. வீரியமுள்ள மருந்து ஒரு சாராருக்கும் இந்த பிளாசிபோ ஒரு சாராருக்கும் கொடுக்கப்பட்டு அதன் வெவ்வேறு விளைவுகளைப் பதிவு செய்வார்கள். சில நோயாளிகளுக்கு மருந்து எடுத்துக் கொள்வதற்கான தேவையே இருக்காது. இருந்தும் தனக்கு உடம்பு சரியில்லை என்ற எண்ணமும் மருந்தால்தான் அது சரியாகும் என்ற நம்பிக்கையும் இருக்கும். அப்படிப்பட்டவர்களுக்கு பிளாசிபோவைப் பரிந்துரைப்பார்கள்.

ஒரு நோயாளிக்கு பிளாசிபோ வகை மருத்துவம் தேவையா இல்லையா என்பதை முடிவு செய்வது அவரைப் பரிசோதிக்கும் மனநல மருத்துவர் மட்டுமே. இது நோயாளிகளை ஏமாற்றும் சிகிச்சை என்ற கருத்தும் தவறானது. நோயாளிக்கு என்ன தேவையோ அதைத்தான் மருத்துவர் தருகிறார். பிளாசிபோவால் அந்த வகை நோயாளிகளுக்கு நன்மை ஏற்படும் என்பதைப் புரிந்து கொண்டுதான் அதை ஒரு தீர்வாகவே வைத்திருக்கிறார்கள். ஆனால், அதே நேரம், இது மிகவும் அரிதாகப் பயன்படுத்தப்படும் மருத்துவமுறை. எல்லோருக்கும் இது பொருந்தாது என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.’’