வலி என்பது உடலுக்குள் ஏற்படும் பிரச்னைகளை உணர்த்தும் மொழி. உடல் உறுப்புகளில் ஏதாவது பிரச்னை ஏற்பட்டால் அது வலியாக வெளிப்படவேண்டும், அல்லது சருமத்தில் ஏதேனும் மாற்றம் உருவாக வேண்டும். அப்போதுதான் பிரச்னை என்னவென்று உணரமுடியும். கடந்த இதழில், தலைவலி, புற்றுநோயால் ஏற்படும் வலிகள், எலும்பு மற்றும் தசைவலிகள், பெண்கள், குழந்தைகள் மற்றும் முதியவர்களுக்கு ஏற்படும் அடிப்படையான வலிகள் குறித்துப் பார்த்தோம். இந்த இதழில், உடலை வருத்தும் மேலும் சில வலிகள் குறித்துப் பார்க்கலாம்.

பத்து மாதங்கள் சுமந்து, வலிகளைத் தன் புன்னகையால் மறைத்து, பல சிரமங்களை அனுபவித்து, ஓர் உயிரை பூமிக்குப் புதிதாய் அறிமுகம் செய்பவள் தாய். பெண்களின் தவக்காலமான கர்ப்ப காலத்தில் ஏற்படும் பொதுவான வலிகள் குறித்து மகப்பேறு மருத்துவர் கீதா விளக்குகிறார்.

`` கர்ப்ப காலத்தில் சில வலிகள் இயல்பாகவே வரும். அவற்றில் முக்கியமானது, `ப்ராக்ஸ்டன் ஹிக்ஸ் கான்ட்ராக் ஷன்’ (Braxton Hicks Contractions). இது, கருவுற்று ஐந்து மாதங்களுக்குப் பிறகு வரக்கூடியது. ஐந்து மாதங்களுக்குப் பிறகு, கர்ப்பப்பை சுருங்கி விரியும்; அந்த நேரத்தில் வயிற்றில் இருக்கும் குழந்தை, கர்ப்பப்பையின் சுவரை உதைக்கும். அதன் காரணமாக முதுகின் கீழ்ப் பகுதியில் ஆரம்பிக்கும் வலி, வயிற்றுப்பகுதிவரை பரவும். ஆரம்பத்தில் ஒரு மணி நேரத்துக்கு ஒருமுறையோ, அரை மணி நேரத்துக்கு ஒருமுறையோ விட்டு விட்டு வலிவரும். நாள்கள் ஆக ஆக, வலி ஏற்படும் கால இடைவெளி குறையும். இந்த நேரத்தில், Prostaglandins என்ற ஹார்மோனால் கர்ப்பப்பையின் சுவர் பந்து போல மாறும்.

பொய்யான சில வலிகளும் கர்ப்ப காலத்தில் வரும்; இதை ‘ஃபால்ஸ் பெயின்’ (False Pain) என்பார்கள். இதில் முக்கியமானது, சிறுநீர்ப்பை நிரம்புவதால் ஏற்படும் வலி. ஆனால், சிலர் இதைப் பிரசவ வலி என்று தவறாக நினைத்துவிடுவார்கள். எட்டு மாதமாகும்போது, குழந்தை தலைகீழாகத் திரும்பும். அப்படித் திரும்பும்போது குழந்தையின் தலை, தாயின் சிறுநீர்ப்பையை அழுத்துவதாலும் வலி வரும். கொஞ்சமாக சிறுநீர் சேர்ந்தாலும் அதிக வலி இருக்கும். இது சில நிமிடங்கள் மட்டுமே வந்து போகும் வலி.

உண்மையான பிரசவ வலி என்பது, பிரசவம் நெருங்கும்போது வரும். விட்டு விட்டு வரும் பிரசவ வலி தாங்கமுடியாத அளவுக்கு இருக்கும். நீண்ட நேரம் நீடிக்கும். மேலும், சில வலிகள் சிறுநீர்த் தொற்று காரணமாகவும் ஏற்படலாம். ஆனாலும், கர்ப்ப காலத்தில் ஏதாவது வலி வந்தால் உடனடியாக மருத்துவரை பார்ப்பது நல்லது’’ என்கிறார் கீதா.

நெஞ்சுவலி

இதயம்... உடல் முழுவதும் உயிர்த் திரவத்தை `பம்ப்’ செய்யும் எந்திரம். இதில் ஏதாவது கோளாறு ஏற்பட்டால், அறிகுறி வலிதான். ‘வலிகளைக் கொண்டு பாதிப்பின் தன்மையை எப்படிக் கண்டு பிடிப்பது’ என்று விளக்குகிறார் இதயநோய் சிறப்பு மருத்துவர் ராஜேஷ்குமார்.

``இதயக் கோளாறு, ரத்தக்குழாய் அடைப்பு காரணமாக ஏற்படும் வலிகளுக்கும், வேறு காரணங்களால் ஏற்படும் வலிகளுக்கும் நிறைய வித்தியாசம் உண்டு. மாரடைப்பு ஏற்பட்டால் அதன் முதல் அறிகுறியாக வெளிப்படும் நெஞ்சுவலி, அதுவரை அனுபவிக்காத அளவு கொடூரமாக இருக்கும். மார்பில் பெரிய கல்லைத் தூக்கி வைத்ததுபோன்ற உணர்வும் ஏற்படும். மாரடைப்பின் அறிகுறியாக வெளிப்படும் வலியானது, தாடை முதல் தொப்புள் பகுதி வரை எங்கு வேண்டுமானாலும் வெளிப்படலாம். மாரடைப்பு ஏற்படும்போது வலியுடன் படபடப்பும் அதிக வியர்வையும் ஏற்படும். வாந்தி, மயக்கமும் ஏற்படலாம்.

மாரடைப்பின்போது வரும் வலிகள்

* மார்பின்மீது கனமான பொருளை வைத்தது போலக் கடுமையான வலி

* நடு மார்பில் வலி

* மார்பின் இடதுபுறத்தில் வலி

* மார்பு முழுவதும் வலி

* ஓரிடத்திலிருந்து மற்றோர் இடத்துக்குப் பரவும் வலி

* தாடை, கழுத்துப் பகுதிகளில் வலி

* இடது தோள்பட்டையில் வலி

மேலே சொல்லப்பட்டவை தவிர வேறுவிதமாகவும் வலி வரலாம். வயிற்றின் மேல் பகுதி, மார்பின் கீழ்ப்பகுதியில் நெஞ்செரிச்சல் ஏற்படலாம். இதைப் பலர் இரைப்பை, உணவு சம்பந்தப்பட்ட பிரச்னை என்று நினைத்து விடுவார்கள். இதனால், மாரடைப்பு ஏற்படுவதைக் கண்டுபிடிக்க முடியாமல் போகலாம். நெஞ்செரிச்சல் ஏற்பட்டால், மருத்துவரிடம் சென்று ஈ.சி.ஜி எடுத்துப் பார்ப்பது நல்லது. சிலர், ‘இடது மார்புப் பகுதியில் `சுருக் சுருக்’ எனக் குத்துவதுபோல இருக்கிறது’ என்பார்கள். இது பெரும்பாலும் மாரடைப்புக்கான வலியாக இருக்காது. மிக மிகக் குறைவானவர்களுக்கே இது மாரடைப்புக்கான அறிகுறியாக இருக்கும்.

சிலருக்கு, மூச்சை இழுத்துவிட்டால் இடது மார்பில் கடுமையான வலி ஏற்படும். விரலை வைத்து அழுத்தினாலும் வலி இருக்கும். ஒரே இடத்தில் மட்டும் வலிக்கும். இதுமாதிரியான வலிகள், பெரும்பாலும் இதயக்கோளாறுகள் காரணமாக ஏற்படுவதில்லை. ஆயினும், இதுமாதிரி வலி வரும்போது அலட்சியம் செய்யக்கூடாது. மருத்துவரிடம் சென்று பரிசோதனை செய்து வலிக்கான காரணத்தை அறிந்துகொள்ள வேண்டும்.

மாரடைப்புக்கான வலி எல்லோருக்கும் ஒரே மாதிரியாக இருக்காது. சிலருக்கு மிக அதிகமாகவும் சிலருக்கு மிதமாகவும் இருக்கலாம். சிலர் லேசாக அடிபட்டாலே பயங்கரமாக வலிப்பதாகச் சொல்வார்கள்; சிலர் பெரிய காயமாக இருந்தாலும் லேசாகத்தான் வலிக்கிறது என்பார்கள். இது வலியைத் தாங்கிக்கொள்ளும் அவரவர் தன்மையைப் பொறுத்தது. மாரடைப்பால் ஏற்படும் வலிக்கும் இது பொருந்தக்கூடியதே. சர்க்கரை நோயாளிகள் நரம்புகள் பாதிக்கப்படுவதால், வலி உணரும் தன்மையை இழந்திருப்பார்கள். அதனால், அவர்களுக்கு மாரடைப்பு ஏற்படும்போது வலி தெரியாது, அல்லது லேசான வலியையே உணருவார்கள். வயதானவர்களுக்கு மாரடைப்பு ஏற்படும்போது வலியை உணரமுடியாமல், சத்தம் போட்டுக் கத்துவார்கள்; விநோதமாக நடந்துகொள்வார்கள் அல்லது மயக்கமடைவார்கள்’’ என்கிறார் ராஜேஷ்குமார்.

வயிற்றுவலி பலரையும் வதைக்கும் பொதுவான வலிகளில் ஒன்று. என்னென்ன காரணங்களால் வயிற்றில் வலி ஏற்படும் என்று விளக்குகிறார் வயிறு மற்றும் குடல், இரைப்பை நோய் மருத்துவர் மணிமாறன்.

``வயிற்றில் ஏதாவது பிரச்னை என்றால், அது உடல் முழுவதும் எதிரொலிக்கும். ஒட்டுமொத்த உடல் இயக்கத்தையும் பாதித்துவிடும். வயிற்று வலி ஏற்பட வயிறு மட்டுமே காரணமாக இருப்பதில்லை அது சார்ந்த பிற உறுப்புகளில் பிரச்னையென்றாலும் வயிற்றுவலி ஏற்படும். பொதுவான சில வயிற்றுவலிகள் குறித்துப் பார்க்கலாம்.

கணையத்தில் ஏற்படும் வலி

காய்ச்சல், வாந்தியுடன் விட்டு விட்டு மேல் வயிற்றில் வலியெடுத்தால், கணையத்தில் ஏதோ பிரச்னையிருக்கிறது என்று புரிந்துகொள்ள வேண்டும். மதுப்பழக்கம், புகைபிடித்தல், பித்தப்பைக் கல், ரத்தத்தில் கால்சியம் அளவு அதிகரிப்பது, சில மருந்துகளின் பக்க விளைவு போன்ற காரணங்களால் கணையத்தில் வலி ஏற்படலாம். கணையப் பிரச்னையைக் கண்டுகொள்ளாமல் விட்டால் வலியுடன் உடல் எடை குறையும்.

பித்தப்பைக் கல் ஏற்படுத்தும் வலி

வலதுபுற விலா எலும்புகளுக்குக் கீழும், வயிற்றின் நடுப்பகுதியிலும் தாங்கிக்கொள்ள முடியாத அளவு வலி இருந்தால், பித்தப்பையில் கல் இருக்க வாய்ப்புண்டு. வாந்தி, வலது முதுகின் மேல்பகுதியில் வலி, வலது தோள்பட்டையில் வலி ஏற்பட்டால் பித்தப்பையைச் சோதிக்க வேண்டும். பித்தப்பையின் பாதையைக் கற்கள் அடைப்பதாலும் வலி ஏற்படும். உடல் பருமன் காரணமாகவும் பித்தப்பையில் வலி ஏற்படலாம். சரியான நேரத்துக்கு உணவு உட்கொள்வது, உடற்பயிற்சி மூலம் கொஞ்சம் கொஞ்சமாக உடல் எடையைக் குறைப்பதன் மூலம் இத்தகைய பிரச்னைகள் வராமல் தடுக்கலாம்.

குடல்வால் வலி (Appendicitis)

கீழ் வயிற்றின் வலதுபுறத்தில் தாங்கிக்கொள்ள முடியாத அளவு திடீரென வலியெடுத்தால், குடல்வால் பிரச்னையின் அறிகுறியாக இருக்கலாம். குடல்வால் வளர்ந்தால், முதலில் தொப்புளைச் சுற்றிக் கொஞ்சம் வலியெடுக்கும். பிறகு, படிப்படியாக அடிவயிற்றின் வலது பக்கத்தில் வலி கடுமையாக அதிகரிக்கும். பசியின்மை, வாந்தியோடு, 99 முதல் 102 டிகிரி ஃபாரன்ஹீட் வரை காய்ச்சல் ஏற்படும். குடல்வால் பிரச்னை முற்றிவிட்டால், சிறுநீர் கழிக்கும்போது பயங்கரமான வலி ஏற்படும். மலச்சிக்கல் அல்லது வயிற்றுப்போக்கு, தசைப்பிடிப்பு போன்ற பிரச்னைகளும் உருவாகும். அறுவை சிகிச்சை செய்து அதிகப்படியாக வளர்ந்திருக்கும் குடல்வால் பகுதியை நீக்குவது ஒன்றே இதற்குத் தீர்வு. குடல்வால் பிரச்னை வராமல் தடுக்க, நார்ச்சத்து அதிகமுள்ள உணவுகள், பழங்கள், காய்கறிகளை அதிகமாகச் சாப்பிடவேண்டும்.

புற்றுநோயால் வயிற்றில் ஏற்படும் வலி

இதைப் படித்ததும் வயிற்றில் வலி வந்தாலே அது புற்றுநோயால் வந்தது என்று அஞ்சக்கூடாது. செரிமானக் கோளாறு காரணமாகக்கூட வயிற்றில் வலி ஏற்படலாம். பிற பிரச்னைகளுக்கும் வலிதான் முதல் அறிகுறி என்பதால் இதைப் பற்றியும் தெரிந்துகொள்வது நல்லது. வயிற்றுப் புற்றுநோயின் அறிகுறியும் வலிதான். வயிற்று வலியுடன் வாந்தி, பசியின்மை போன்ற பிரச்னைகளும் ஏற்படும். உடல் எடை குறையும். ரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவும் குறையும். இதுபோன்ற அறிகுறிகள் இருந்தால் தகுதிவாய்ந்த மருத்துவரிடம் சிகிச்சை எடுத்துக்கொள்வது நல்லது. சுயமாக மருந்து, மாத்திரைகள் வாங்கிச் சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும்.

பொதுவான வயிற்றுவலிகள்

அடிவயிறு மற்றும் தொப்புள் பகுதியைச் சுற்றி வலி ஏற்படுவது அல்சர் அல்லது தொற்று காரணமாக இருக்கலாம். அல்சர், கணையம், இரைப்பை, குடலில் இருக்கும் புழுக்கள், ஒட்டுண்ணிகள், குடல்வால், பித்தப்பைக் கல், சிறுநீரகக் கல், வாய்வுத்தொல்லை போன்ற காரணங்களாலும் வயிற்றில் வலி ஏற்படும்’’ என்கிறார் மணிமாறன்.

பல், தாடை, கழுத்து, தோள்பட்டை ஆகிய பகுதிகளில் ஏற்படும் வலிகள் குறித்து அடுத்த இதழில் பார்க்கலாம்.

- ஜி.லட்சுமணன், மு.இளவரசன்

சிறுநீரகக் கல், பித்தப்பைக் கல், குடல்வால் வலிகள்

வேறுபாடு அறிவது எப்படி?

வாய்வுக் கோளாறு, அல்சர் தவிர சிறுநீரகக் கல், ஹெர்னியா, பித்தப்பைக் கல், குடல்வால் போன்ற காரணங்களாலும் வயிற்றில் வலி ஏற்படலாம். சிறுநீரகக் கல், பித்தப்பைக் கல், குடல்வால் அழற்சி ஆகியவற்றால் ஏற்படும் வலிகள் பெரும்பாலும் ஒரே மாதிரியாக இருக்கும்.

சிறுநீரகக் கல் இருந்தால், விலா எலும்புகளுக்குக் கீழே பின்புறத்தில் கடுமையான வலி ஏற்படும். அடிவயிற்றோடு, இடுப்பும் தொடையும் சேருமிடத்தில் வலியெடுக்கும். சிறுநீர்ப்பையில் கல் இருந்தால் தொடை வரை வலி பரவும். சிறுநீர் கழிக்கும்போது எரிச்சல், வலி ஏற்படும். அந்தத் தருணத்தில் சிவப்பு, இளஞ்சிவப்பு அல்லது பழுப்பு நிறத்தில் சிறுநீரின் நிறம் மாறலாம்.

குடல்வால் அழற்சி இருந்தால், தொப்புளைச் சுற்றியும், வயிற்றின் வலதுபுற அடிப்பாகத்திலும் கடுமையான வலி ஏற்படும். அந்தப் பகுதியை லேசாக அழுத்தும்போதோ, ஆழமாக சுவாசிக்கும்போதோ, அசைக்கும்போதோ வலி அதிகரிக்கும்; இருமல் அல்லது தும்மலின்போதும் வலி திடீரென அதிகமாகி வதைக்கும்.

பித்தப்பைக் கல் இருந்தால் வலப்பக்க வயிற்றின் மேல் பகுதியில் தாங்கமுடியாத அளவுக்கு வலி ஏற்படும். இந்த வலி, நெடுநேரம் நீடிக்கும். வலது தோள்பட்டையிலும் வலி ஏற்படலாம். சிலருக்கு வாந்தியும் வரலாம். பித்தப்பையில் கற்கள் உண்டாகி, கிருமித் தொற்றும் ஏற்பட்டிருந்தால் கடுமையான காய்ச்சல், உடல் நடுக்கம் உண்டாகும். அடர் மஞ்சள் நிறத்தில் சிறுநீர் மற்றும் மலம் வெளியேறும்.