மனித வாழ்க்கையில் சோர்வு தவிர்க்க முடியாதது.

சிலருக்கு அது எப்போதும் நிழல்போலத் தொடர்வதுண்டு.

காரணமின்றித் தொடரும் சோர்வை அலட்சியப்படுத்தக்கூடாது. அதன் பின்னணி அறிந்து தீர்வுகளைத் தேட வேண்டும்.

சோர்வு என்பது என்ன, அது என்ன செய்யும், சோர்வின் அளவை டெஸ்ட் செய்யும் முறை என எல்லாவற்றையும் பார்ப்போம்.

சோர்வு என்றால் என்ன?

சில உடல்நலக் கோளாறுகளுக்குச் சோர்வும் ஓர் அறிகுறியே! எந்த வேலையையும் செய்யத் தோன்றாத மந்தநிலை, உடலில் சக்தியே இல்லாதது போன்ற உணர்வு, எதைச் செய்தாலும் எளிதாகச் சோர்வடைவது போன்றவை சோர்வைக் குறிக்கும்.

சோர்வை அளக்கும் அளவை!

சோர்வின் தீவிரத்தை அளக்கும் அளவையின் பெயர் `ஃபேட்டிக் சிவியாரிட்டி ஸ்கேல்’ (FSS - Fatigue Severity Scale). இது, கேள்விகளை அடிப்படையாகக் கொண்டது. இதில் மொத்தம் ஒன்பது கேள்விகள் இருக்கின்றன. ஒவ்வொரு கேள்விக்கும் 1 முதல் 7 வரை மதிப்புகள் கொடுக்கப்படும். சோர்வைக் கணக்கிட நினைப்பவர், அவரின் சோர்வு குறித்த கேள்விகளுக்கு ஏற்ப 1 முதல் 7 வரை இருக்கும் மதிப்புகளில் ஓர் எண்ணைக் குறித்துக்கொள்ளலாம். ஒன்பது கேள்விகளுக்கான மொத்த மதிப்பெண் களையும் கூட்டினால், விடையாக 9 முதல் 63 வரை கிடைக்கும். அந்த மொத்த எண்ணை ஒன்பதால் வகுத்தால் கிடைக்கும் எண்தான், அவரின் சோர்வின் தீவிரத்தைக் குறிக்கும் மதிப்பு. மதிப்பு 1-ஆக இருந்தால் சோர்வு இல்லை; 7 ஆக இருந்தால் அதிகச் சோர்வு என ஒவ்வொரு மதிப்புக்கும் ஏற்ப சோர்வின் தீவிரத்தை அளந்துகொள்ளலாம்.

சோர்வைக் குறைக்கும் வழிகள்

எவ்வளவு நேரம், எப்படிப்பட்ட தூக்கம்?

* தினமும் குறிப்பிட்ட நேரத்தில் தூங்கி, குறிப்பிட்ட நேரத்தில் விழித்துவிட வேண்டும்.

* தூங்குவதற்கு மட்டும் படுக்கையைப் பயன்படுத்த வேண்டும்.

* தூக்கம் வரவில்லையென்றால் பேசாமலிருக்க வேண்டும்; எளிதான வேலைகளைச் செய்ய வேண்டும்.

* தூங்கும் அறை இருட்டாகவும் அமைதியாகவும் இருக்க வேண்டும்.

சரியான ஊட்டச்சத்துள்ள உணவுகள்

* உடலுக்குத் தேவையான வைட்டமின், மற்றும் தாதுக்கள் பற்றாக்குறை வராமல் பார்த்துக் கொள்ள வேண்டும் .

* உங்கள் மருத்துவர், உணவியல் நிபுணரின் ஆலோசனைப் படி உணவுகளை உட்கொள்வது நல்லது.

உடற்பயிற்சி அவசியம்

* உங்களை மகிழ்ச்சியாக உணரவைக்கும், உற்சாகத்தைக் கொடுக்கும் உடற்பயிற்சிகளைத் தேர்ந்தெடுத்துச் செய்யலாம்.

* உங்களால் எவ்வளவு முடிகிறதோ அவ்வளவுக்கு மட்டும் உடற்பயிற்சி செய்யுங்கள். கொஞ்சம் கொஞ்சமாக அதன் அளவை உயர்த்திக்கொள்ளலாம்.

* உடல் நெகிழ்வுக்கும், சுவாசத்துக்கும், மன அமைதிக்கும் யோகா, தாய் சி (Tai Chi) போன்ற பயிற்சிகளைச் செய்யலாம்.

ஓய்வு முக்கியம்

* மன அழுத்தம் ஏற்படுத்தும் சூழல்களைத் தவிர்க்கவும்.

* புத்தகம் படிப்பது, பாட்டு கேட்பது, யோகா செய்வது, வேடிக்கை பார்ப்பது போன்றவற்றில் எது உங்களுக்கு ஓய்வைத் தருகிறதோ, அதைச் செய்யலாம்.

வேலையையும் தனி வாழ்க்கையையும் பேலன்ஸ் செய்ய வேண்டும்

* விடுமுறை நாள்களில் குடும்பத்துடன் நேரத்தைச் செலவிடுங்கள். நண்பர்களுடன் வெளியே செல்லுங்கள், உங்களுக்குப் பிடித்த பொழுதுபோக்கில் ஈடுபடுங்கள்.

* அலுவலக வேலையை வீட்டில் செய்வதைத் தவிர்க்கவும்.

போதைப் பழக்கம் வேண்டாமே!

* உங்கள் மூளையைத் தூண்டக் கூடிய காபி, நிகோடின், கோகெய்ன் போன்றவற்றைத் தவிர்ப்பது நல்லது.

* போதைக்கு அடிமையாக்கும் பொருள்கள், பானங்கள் பக்கம் போகாமலிருப்பதே நல்லது.

- மு.இளவரசன்

கேள்விகள் (உங்கள் சோர்வை 1-லிருந்து 7 வரையிலான எண்ணால் மதிப்பிடவும்)

* சோர்வாக இருக்கும்போது என் ஊக்கம் குறைகிறது.

* உடற்பயிற்சி செய்தால் சோர்வு வந்துவிடுகிறது.

* எப்போதும் மிக எளிதாக நான் சோர்வடைந்து விடுகிறேன்.

* சோர்வு, என் உடல் செயல்பாட்டில் குறுக்கிடுகிறது.

* சோர்வு என் தொடர் பிரச்னைகளுக்குக் காரணமாகிறது.

* சோர்வு என் நீண்ட நேர உடல் செயல்பாடுகளுக்குத் தடையாக இருக்கிறது.

* என் கடமைகள், பொறுப்புகளைச் செய்வதற்கு சோர்வு தடையாக இருக்கிறது.

* என்னை முடக்கிப் போடுவதில் மற்ற எல்லாவற்றையும்விட சோர்வுக்குத்தான் அதிகப் பங்கு.

* சோர்வு என் வேலை, குடும்பம், சமூக வாழ்விலும் குறுக்கிடுகிறது.