நம் இலக்குகளுக்கு ஏற்ப, நமக்கான உடற்பயிற்சியை எப்படித் தேர்ந்தெடுப்பது? அதற்குத்தான் இந்த 8 ஸ்டெப்ஸ் வழிமுறை.

ஸ்டெப் 1 - லட்சியம்

முதலில் நம் லட்சியம் எது என்பதைத் தீர்மானிக்க வேண்டும். `எடைக் குறைப்புதான் என் இலக்கு’ என்று நினைத்தால் மட்டும் போதாது. எடைக்குறைப்பு என்றால் எவ்வளவு என்பதில் தீர்மானமான அளவுகோல் முக்கியம். எடையைக் குறைப்பதாக இருந்தால், எத்தனை கிலோ குறைக்கப் போகிறோம் என்பதில் ஒரு கணக்கு வேண்டும். அந்த எடை நம் பி.எம்.ஐ-க்குச் (BMI) சரியாக இருக்கிறதா என்பதையும் பார்த்து முடிவு செய்ய வேண்டும். `சரி முடிவெடுத்தாச்சு...’ என மனதுக்குள்ளேயே வைத்திருக்க வேண்டாம். அதை ஒரு பேப்பரில் கைப்பட எழுதுங்கள். அந்த லட்சியத்தை எதற்காக அடைய வேண்டும் என்பதை எழுதுங்கள். அந்த லட்சியத்தை அடைந்தால் உங்களுக்கு என்னவெல்லாம் கிடைக்கும் என்பதை எழுதுங்கள். கடைசியாக, அந்த லட்சியத்தை அடைய உங்களால் எவ்வளவு நேரம் செலவழிக்க முடியும், எவ்வளவு நேரம் உழைக்க முடியும், எவ்வளவு வலியைத் தாங்கிக்கொள்ள முடியும் என்பதையும் எழுதுங்கள். உதாரணமாக...

* என் எடையை 10 கிலோ குறைக்க வேண்டும்.

* எடையைக் குறைத்துவிட்டால், நான் இன்னும் இளமையாகத் தெரிவேன். அது எனக்கு நம்பிக்கையைக் கொடுக்கும்.

* தினமும் இதற்காக ஒரு மணி நேரம் என்னால் ஒதுக்க முடியும்.

இப்படி எழுதியதை அடிக்கடி கண்ணில்படும் இடத்தில் ஒட்டிவைத்துவிடுங்கள்.

ஸ்டெப் 2 - உணவில் கவனம்!

எடைக்குறைப்புக்கும் உடற்பயிற்சிக்குமான தொடர்பு வெறும் 10 சதவிகிதம்தான். எடைக் குறைப்புதான் உங்கள் லட்சியம் என்றால், உடற்பயிற்சி மட்டுமே போதாது என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். அதற்குப் பதிலாக உணவுப்பழக்கத்தில் கவனம் செலுத்தினாலே போதுமானது. ஆரோக்கியம் சார்ந்த எல்லாப் பிணிகளுக்கும் காரணமான உண்மையான குற்றவாளி உணவுதான். அதிலும் உடற்பயிற்சி செய்ய ஆரம்பித்துவிட்டால், அதிகம் பசிக்கும்; எனவே, இன்னும் அதிகமாகச் சாப்பிட ஆரம்பித்துவிடுவோம். `அதுதான் டெய்லி ஜிம்முல மாங்கு மாங்குனு எடை தூக்குறேனே...’ என்கிற மெத்தனத்தில் இன்னும் ஒரு சிக்கன் 65 உள்ளே போகும். உணவுப் பழக்கத்தில் கவனம் செலுத்தாமல் எடைக்குறைப்போ, தசையைப் பெருக்குதலோ, ஆரோக்கியமோ, மன அமைதியோ எதுவுமே சாத்தியமில்லை. எவ்வளவு கலோரிகள் உட்கொள்கிறோம், என்ன மாதிரியான சத்துகளை உட்கொள்கிறோம், நாம் உட்கொள்கிற புரதம் மற்றும் கொழுப்பின் அளவு என்ன என்பதையெல்லாம் கணக்கிட வேண்டும். அதற்கேற்ப நமக்கு நாமே கவனமாக ஒரு திட்டத்தை உருவாக்கலாம் அல்லது நல்ல டயட்டீஷியன் உதவியோடு செய்யலாம். உடற்பயிற்சியை ஆரம்பிப்பதற்கு முன்பிருந்தே உணவில் கவனத்தைச் செலுத்தி, சரியான உணவுகளை உட்கொள்ளத் தொடங்கினாலே அது, நம் இலக்கில் பாதி வெற்றியைப் பெற்றுத் தந்துவிடும்!

ஸ்டெப் 3 - மகிழ்ந்திரு!

எது நம்மை மகிழ்விக்கிறதோ அதுதான் சிறந்த உடற்பயிற்சி. அதைத்தான் நம்மால் நீண்ட காலத்துக்குச் செய்ய முடியும். நீண்ட காலத்துக்கு ஒருவரோடு நட்பாக இருக்க வேண்டும் என்றால் எது முக்கியம்? அந்த நபரை நமக்குப் பிடித்திருக்க வேண்டும்; அதேதான் உடற்பயிற்சி விஷயத்திலும். உடற்பயிற்சியைச் செய்யும்போது உற்சாகமாகச் செய்ய வேண்டும். சின்ன வயதில் கிரிக்கெட் ஆடும்போது எத்தனை முறை கீழே விழுந்திருப்போம்? ரத்தம் கொட்டியிருக்கும்; துடைத்துப் போட்டுவிட்டு எப்படி ஆடியிருப்போம்... மகிழ்ச்சியுடன் இணைந்த ஈடுபாடு. அதுதான் நாம் தேர்ந்தெடுக்கும் உடற்பயிற்சியில் முக்கியமானது. ரன்னிங், சைக்கிளிங், பாட்மின்டன், பவர் லிஃப்டிங், யோகா, ஜிம்னாஸ்டிக்ஸ், வெயிட் ட்ரெயினிங், கார்டியோ பயிற்சிகள், நடனம், நடை, மலையேற்றம், பூட் கேம்ப்பிங், க்ராஸ்ஃபிட், அக்ரோ யோகா, நீச்சல், தற்காப்புக்கலை... என நமக்கு நிறைய சாய்ஸ் உள்ளன. அவற்றில் எதை வேண்டுமானாலும் முயற்சி செய்து பார்க்கலாம். எது நமக்கு நிஜமாகவே மகிழ்ச்சி தருகிறதோ, எதை தினமும் சலிப்பின்றிச் செய்ய முடியும் என்று நம்புகிறோமோ அதைத்தான் தேர்ந்தெடுக்க வேண்டும்.

நேரம் ஒதுக்குவோம்...

- வினோ