‘மறதி’ - கடவுள் மனிதனுக்குக் கொடுத்த வரம். வாழ்க்கையின் கசப்பான நிகழ்வுகளை மறந்துவிட வேண்டும் என்பதே அனைவரின் ஆசை. ஆனால் நல்லதும் சிலருக்கு மறந்துபோவதுண்டு.

மறதி என்பதே பயத்துக்குக் காரணமாகுமா? படித்ததெல்லாம் மறந்துவிடுமோ என்கிற பயம் தேர்வுக்குத் தயாராகும் மாணவர்களுக்கு வருவது சகஜமே. ஆனால் ‘ஏதாஸகோரபோபியா’வால் (Athazagoraphobia) பாதிக்கப்பட்டவர்களுக்கு எல்லாவற்றையும் மறந்துவிடுவோமோ என்கிற பயம் அதிகமிருக்கும். இது மிகவும் அரிதாகக் காணப்படும் போபியா. மறந்து போவதைப் பற்றி மட்டுமல்ல; மற்றவர்கள் தன்னைப் புறந்தள்ளுகிறார்களோ என்ற எண்ணமும் இவர்களுக்கு அதிகமாக எழும்.

இந்த போபியாவால் பாதிக்கப்பட்டவர்களை மருத்துவர்கள் இரண்டு வகையாகப் பிரிக்கின்றனர். டிமென்ஷியா நோயாளிகள் ஒரு வகை. இவர்கள் நினைவிழப்பால் பாதிக்கப்பட்டவர்கள். தங்கள் சொந்த அடையாளத்தையே மறந்துவிடுவார்கள், ‘கஜினி’ பட சூர்யாபோல. இன்னொரு வகை நோயாளிகள் வித்தியாசமானவர்கள். நீண்ட காலத்துக்குத் தனியாக இருந்தால் அல்லது சமூகம் மற்றும் உறவினர்களால் புறக்கணிக்கப்பட்டிருந்தால் தன்னை இந்த உலகம் மறந்துவிடுமோ என்கிற பயம் இவர்களுக்குத் தோன்றலாம். இவர்களுக்கு இந்த போபியா இருப்பதைக் கண்டுபிடிப்பதும் எளிதானதல்ல.

அறிகுறிகள்: சுயமரியாதை மற்றும் தன்னம்பிக்கை குறைந்தவர்களாக மாறுவார்கள். மிகுந்த மனச்சோர்வுடன் காணப்படுவார்கள். சமூகத்துடன் இவர்களால் இயல்பாகப் பழக முடியாது. ஆனால், அதை நினைத்து வருத்தப்பட்டுக் கொண்டேயிருப்பார்கள். தொண்டை அடைத்தல், ஆழமற்ற விரைவான சுவாசம், இயல்பான வார்த்தைகளை உச்சரிப்பதில் சிரமம், கோபம் போன்றவை.

சிகிச்சை: குடும்பத்தினர் மற்றும் நண்பர்களின் அன்பும் அரவணைப்பும்தான் இவர்களுக்கான முதல் மருந்து. யோகாசனம், தியானம் போன்ற பயிற்சிகளும் பரிந்துரைக்கப்படுவதுண்டு.

- இ.நிவேதா