Published:Updated:

'தனியார் செவிலியர்களுக்கு இனி அரசு வேலை கிடையாது'

'தனியார் செவிலியர்களுக்கு இனி அரசு வேலை கிடையாது'
'தனியார் செவிலியர்களுக்கு இனி அரசு வேலை கிடையாது'
'தனியார் செவிலியர்களுக்கு இனி அரசு வேலை கிடையாது'

சென்னை: அரசு நர்சிங் கல்லூரியில் படித்தால்தான் அரசு மருத்துவமனையில் நர்சு பணியில் சேர முடியும் என்று தீர்ப்பளித்துள்ள சென்னை உயர் நீதிமன்றம், தமிழக அரசின் அரசாணையை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.

சென்னை உயர் நீதிமன்றத்தில் வைத்திலிங்கம், அமுதா, கருப்பசாமி ஆகியோர் தாக்கல் செய்த மனுவில், தமிழக அரசின் சுகாதாரம் மற்றும் குடும்பநலத்துறை கடந்த 18.1.12 அன்று அரசாணை ஒன்றை பிறப்பித்தது.

அதில், நர்சிங் கல்வியை தனியார் நிறுவனத்தில் படிப்பவர்களுக்கும், அரசு கல்வி நிறுவனங்களில் படிப்பவர்களுக்கும், இணையாக தேர்வு நடத்தப்படும். அரசு மருத்துவமனையில் நர்சு பணி நியமனத்துக்காக, மருத்துவ சேவை பணிகள் தேர்வு வாரியம் நடத்தும் தேர்வில் இந்த இருதரப்பினரும் கலந்துகொள்ளலாம் என்று கூறப்பட்டுள்ளது.

கடந்த 50 ஆண்டுகளாக, அரசு மருத்துவமனைகளில் நர்சு பணிகளுக்கு அரசு நர்சிங் கல்லூரிகளில் படித்தவர்கள் மட்டும்தான் நியமிக்கப்பட்டு வந்தனர். ஆனால் திடீரென்று, தனியார் நர்சிங் கல்லூரியில் படிக்கும் மாணவர்களும் அரசு மருத்துவமனைகளில் பணி நியமனம் பெறுவதற்கு ஏதுவாக, நிலைமையை மாற்றியமைத்த அரசாணையை ஏற்கக்கூடாது. அதை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது.

இந்த வழக்கு விசாரணையின்போது, தமிழ்நாடு அங்கீகாரம் பெற்ற தனியார் நர்சிங் பள்ளி மற்றும் கல்லூரிகள் சங்கத்தினரும் தங்களை வழக்கில் இணைத்துக்கொண்டனர்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி வி.ராமசுப்பிரமணியன் பிறப்பித்த உத்தரவில், "இதுபோன்ற பிரச்னையில் இரண்டுக்கும் மேற்பட்ட நீதிபதிகளை கொண்ட முழு டிவிஷன் பெஞ்ச் உத்தரவு பிறப்பித்துள்ளது. அந்த உத்தரவுக்கு முரணாக அரசாணை இருப்பதை காண முடிகிறது.

##~~##
அரசு கல்வி நிறுவனங்களில் படிப்பவர்களையும், தனியார் கல்வி நிறுவனங்களில் படிப்பவர்களையும் சமமாகக் கருத முடியுமா? என்ற கேள்வி எழுகிறது. இதற்கு சரியான பதிலை டிவிஷன் பெஞ்ச் அளித்துள்ளது.
அரசு நர்சிங் கல்வி நிறுவனங்களில் படிக்கும் மாணவர்களுக்காக, பொதுப்பணத்தை அரசு செலவழித்து அவர்களை உருவாக்குகிறது. பின்னர் அவர்களின் சேவையை சமுதாயத்துக்கு பயன்படும் வகையில் அரசு பயன்படுத்திக் கொள்கிறது.
அதாவது, மனித வளத்தில் அரசு செய்யும் முதலீடு அது. அவர்களை சமுதாயத்துக்கு பயன்படுத்தலாம் என்ற நம்பிக்கையில் அவர்கள் மீது அரசு இந்த முதலீட்டை செய்கிறது. எந்த மாணவர்கள் மீது அரசு முதலீடு செய்ததோ, அது சமுதாயத்துக்கு மீண்டும் பயன்பட வேண்டும் என்பதை உறுதி செய்வது அரசின் கடமையாகும்.
ஆனால் தனியார் கல்வி நிறுவனங்களில் படிப்பவர்கள், தாங்களாகவே செலவழித்து படிக்கும் நிலமைதான் உள்ளது. தனியார் கல்வி நிறுவனங்கள், தங்களின் செலவை இந்த மாணவர்களிடம் இருந்து பெறுகின்றனர். எனவே அரசு நர்சிங் கல்வி நிறுவனத்தில் படிக்கும் மாணவர்களுக்கு இணையாக தனியார் கல்வி நிறுவன மாணவர்களை கருத முடியாது. எனவே அரசாணை ரத்து செய்யப்படுகிறது.
நர்சுகளை ஒப்பந்தப் பணியில் நியமிப்பதை எதிர்த்தும் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. அனுமதிக்கப்பட்ட பணியிடங்கள் காலியாக இருந்தால் டி.என்.பி.எஸ்.சி. அல்லது வேலை வாய்ப்பு அலுவலகம் மூலம் பொதுவான முறையில் நர்சுகளை பணி நியமனம் செய்யலாம். அனுமதிக்கப்பட்ட பணியிடங்கள் இல்லை என்றால், சூழ்நிலைக்கு ஏற்றபடி பணி நியமனத்தை அரசு வழங்கலாம்" என்று நீதிபதி தீர்ப்பளித்துள்ளார்.