ஹெல்த்
Published:Updated:

வயிறு கவனம் பாஸ்!

வயிறு கவனம் பாஸ்!
பிரீமியம் ஸ்டோரி
News
வயிறு கவனம் பாஸ்!

வயிறு கவனம் பாஸ்!

வயிறு கவனம் பாஸ்!

`எண் சாண் உடம்புக்கு வயிறே பிரதானம்!’ என்று மாற்றிச் சொல்லலாம். அதுதான்  அழுத்தம் திருத்தமான, மறுக்க முடியாத உண்மை. வயிற்றைச் சரியாக, முறையாகப் பராமரிக்காமல்விடுவதுதான் பல நோய்கள் நம் மீது படையெடுப்பதற்கு மூல காரணம். நாம் எல்லோருமே கேட்டுக்கொள்ளவேண்டிய ஒரு முக்கியமான கேள்வி `வயிற்றை ஆரோக்கியமாக வைத்திருக்கிறோமா?’ நிச்சயமாக இல்லை. நம்மில் பெரும்பாலானோர் அதை குப்பைக்கூடையாகத்தான் பயன்படுத்துகிறோம். 

வயிறு கவனம் பாஸ்!

வயிற்றைப் பாதுகாப்பாகப் பராமரிப்பது, உடல் ஆரோக்கியத்துக்கு உத்தரவாதம் தரும் செயல். மனிதர்களுக்கு வயிறும் மனதும் மிக முக்கியமானவை. இரண்டில் ஒன்று சரியில்லை என்றாலும் வாழ்க்கை, தடம் மாறிவிடும். பொதுவாக வயிற்றில் ஏற்படும் பிரச்னைகள், அவற்றுக்கான அறிகுறிகள், வயிற்றுக்கு ஆகாத உணவுகள், அதை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ளும் வழிகள் எல்லாவற்றையும் விரிவாக விளக்குகிறார் பொது அறுவை சிகிச்சை மருத்துவ நிபுணர் தங்கமணி.

வயிறு கவனம் பாஸ்!
வயிறு கவனம் பாஸ்!

வயிறு

யிற்றின் முக்கியமான பகுதிகளில் ஒன்றான செரிமான மண்டலம், உணவுக்குழாய், இரைப்பை, சிறுகுடல், பெருங்குடல், ஆசனவாய் போன்றவற்றை உள்ளடக்கியது. கல்லீரல், பித்தப்பை, கணையம் ஆகிய உறுப்புகளும் செரிமான மண்டலத்தின் அங்கங்கள்தான்.

வயிறு கவனம் பாஸ்!

அறிகுறிகள்

ரிச்சல், வலி, வாந்தி, செரிமானமின்மை, பசியின்மை போன்றவை வயிற்றில் ஏற்படும் சில பிரச்னைகளுக்கான அறிகுறிகள். வாந்தியுடன் ரத்தம் வருவது, மலம் கழிக்கும்போது ரத்தம் வருவது, மலக்கட்டு போன்றவை சில நோய்களுக்கான அறிகுறிகள். மலம் அதிகமாக வெளியேறுவது, வலியுடன் மலம் வெளியேறுவது போன்றவையும் சில நோய்களுக்கான அறிகுறிகளே.

வயிறு கவனம் பாஸ்!

செரிமானம்

யிறு, கணையம் மற்றும் பித்தப்பையில் சுரக்கும் சுரப்பிகள் அனைத்தும் இணைந்து நாம் உண்ணும் உணவைச் செரிமானமாகச் செய்கின்றன. கணையச்சுரப்பிகள் அல்லது பித்தநீர் சுரப்பதில் குறைபாடு ஏற்பட்டால், செரிமானத் தன்மை பாதிக்கப்பட்டு அஜீரணக் கோளாறுகள் ஏற்படலாம். 

குடலில் நரம்பு மண்டலம் சீராக இயங்கினால்தான் நாம் உண்ணும் உணவு செரிமானமடைந்து, மலமாக வெளியேறும். இல்லையென்றால், உணவு வெளியேறாமல் வயிற்றிலேயே தங்கி, அஜீரணக் கோளாறு ஏற்படலாம். 

வயிறு கவனம் பாஸ்!

வயிற்றுப்போக்கு

வை
ரஸ், அமீபா உள்ளிட்ட பல்வேறு வகையான நுண்ணுயிர்க் கிருமிகளால் வயிற்றுப்போக்கு உண்டாகலாம்; அசுத்தமான நீர் மற்றும் உணவுகளாலும் வயிற்றுப்போக்கு ஏற்படலாம்; நோய் எதிர்ப்பு சக்தி குறைந்தாலும் ஏற்படும். இதை ‘இம்யூனோகாம்ப்ரமைஸ்டு’ (Immunocompromised) என்று சொல்வோம். அதேபோல அதீதமான கிருமிகள், சில குறிப்பிட்ட புற்றுநோய்க் கட்டிகளாலும்கூட வயிற்றுப்போக்கு ஏற்பட வாய்ப்புண்டு. ஆனால், எல்லா வயிற்றுப்போக்குகளும் கிருமிகளால்தான் ஏற்படுகின்றன என்றும் எடுத்துக்கொள்ளக் கூடாது.

வயிறு கவனம் பாஸ்!

மலச்சிக்கல்

பொ
துவாக மூன்று நாள்களுக்கு மேல் மலம் வெளியேறுவதில் தடையேற்பட்டால் அதுதான் மலச்சிக்கல். குடல் அசைவுத்தன்மை குறைபாடு மலச்சிக்கலுக்கான காரணங்களுள் ஒன்று. சர்க்கரைநோயால் பாதிக்கப்பட்டோருக்கு குடல் நரம்பு மண்டலம் சரியாக வேலை செய்யாது. இதனால் குடல் அசைவுத் தன்மையில் பாதிப்பு ஏற்பட்டு மலச்சிக்கல் உண்டாகும் வாய்ப்புகள் அதிகம்.

குறிப்பிட்ட சில நோய்களாலும் மலச்சிக்கல் ஏற்படலாம். உதாரணமாக, பெருங்குடலில் உருவாகும் புற்றுநோய்க் கட்டி. இது சில நேரங்களில் வளர்ந்து, வயிற்றை அடைத்துக்கொள்ளும். இது மிகவும் ஆபத்தானது. இந்த வகை மலச்சிக்கலின்போது, ரத்தத்துடன் லேசாக மலம் வெளியேறும். சிலருக்கு பேதி அல்லது மலச்சிக்கலுடன்கூடிய பேதி என மாறி மாறி வந்தால், அது புற்றுநோய்க்கான அறிகுறியாக இருக்கலாம் என்பதால் எச்சரிக்கை தேவை.  40 வயதுக்கு மேல் உள்ளவர்களுக்கு மலச்சிக்கல் ஏற்பட்டால், அதை அலட்சியப்படுத்தாமல் உடனடியாக மருத்துவரை அணுகி சிகிச்சை பெற வேண்டும்.

வயிறு கவனம் பாஸ்!

வயிற்றுவலி

மிலக் கோளாறால் வயிற்றுப்புண் ஏற்பட்டு வயிற்றுவலி வரலாம். குடல் அடைப்பு, குடல் முறுக்கம், குடல் ஏற்றத்தாலும் புண் ஏற்படலாம். பித்தப்பையில் கல் இருந்தாலும் வயிற்றுவலி உண்டாகலாம். அஜீரணக் கோளாறு மற்றும் கணையத்தில் உண்டாகும் கோளாறுகளாலும் வலி ஏற்பட வாய்ப்பிருக்கிறது. அதிகமாக மது அருந்துபவர்களுக்குக் கணையம் பாதிக்கப்பட்டு வலி ஏற்படலாம். அதனால் உண்டாகும் வலி தாங்க முடியாததாக இருக்கும்.

வயிறு கவனம் பாஸ்!

குடல்புண்

கு
டல்புண் என்பதை ஆங்கிலத்தில் ‘பெப்டிக் அல்சர்’ (Peptic Ulcer) என்பார்கள். சரியான நேரத்துக்குச் சாப்பிடாமல் இருப்பது, காரம் அதிகமான உணவுகளை உட்கொள்வது, வெறும் வயிற்றில் அதிகமாக காபி, டீ குடிப்பது, தூக்கமின்மை, மன அழுத்தம், மன இறுக்கம் போன்றவற்றால் அதிகமாக அமிலம் சுரப்பதாலும் குடல்புண் ஏற்படும். சில நேரங்களில் வயதானவர்களுக்கு, புற்றுநோய்கூட குடல்புண்ணாகத் தோன்றும். எண்டோஸ்கோபி முறையில் வயிற்றிலிருந்து சிறு சதையை எடுத்துச் சோதித்துப் பார்த்தால் மட்டுமே அது புற்றுநோய் என்பதை அறிந்துகொள்ள முடியும். எனவே, முதியோருக்கு ஏற்படும் குடல்புண்ணுக்கு உரிய சிகிச்சை எடுத்துக்கொள்ளவேண்டியது அவசியம்.

வயிறு கவனம் பாஸ்!

ஏப்பம்

யல்பான செரிமான நிலையிலிருந்து மாறுபட்ட பிரச்னைகளை உண்டாக்கக்கூடிய நிலை `டிஸ்பெப்சியா’ (Dyspepsia). ஏப்பம் என்பது இந்த டிஸ்பெப்சியா வெளிப்பாடுகளில் ஒன்று. இரைப்பைச் சுரப்பிகள், கணையச் சுரப்பிகள், பித்தப்பைச் சுரப்பிகள் சரியான அளவில் சுரந்து, உணவைச் செரித்தால் ஏப்பம் வர வாய்ப்பில்லை. இதில் ஏதேனும் குறைபாடு ஏற்பட்டால் உணவு செரிமானமாகாமல் போகும். இதனால் அஜீரணக் கோளாறு ஏற்பட்டு, ஏப்பம் அதிகரிக்கும். மதுப் பழக்கம், புகைப் பழக்கம் மற்றும் புகையிலைப் பழக்கம் உள்ளவர்களுக்கு செரிமானக் கோளாறு ஏற்பட்டு ஏப்பம் அதிகமாக வரும்.

வயிறு கவனம் பாஸ்!

வாய் நாற்றம்

வா
ய், தொண்டை மற்றும் உணவுக்குழாய் தொற்றுகளால் வாய் நாற்றம் உண்டாகலாம். பல் மற்றும் ஈறுகளில் உண்டாகும் தொற்றுகளும் வாய் நாற்றத்தை உண்டு பண்ணும். மிக அரிதாக வாய் மற்றும் தொண்டையில் உண்டாகும் புற்றுநோய் காரணமாகவும் வாய் நாற்றம் ஏற்பட வாய்ப்பிருக்கிறது.

வயிறு கவனம் பாஸ்!

வயிற்றுப்பூச்சி

யிற்றில், கொக்கிப்புழு, உருண்டைப்புழு, நூல்புழு, ஊசிப்புழு போன்ற சிலவகைப் புழுக்கள்  இருக்கின்றன. அவை, குடலில் இருக்கும்போது, உணவுகளில் இருந்து நமக்குக் கிடைக்கும் சத்துகளை எளிதாக உறிஞ்சிக்கொள்ளும். இதனால், நமக்குச் சத்துக் குறைபாடு ஏற்படும். குடல்புழுக்களின் எண்ணிக்கை அதிகமானால், சில நேரங்களில் அவை பந்துபோல உருவாகி, குடலை அடைத்துக்கொண்டு தொந்தரவு செய்யும். குடல்புழுக்களால் பெரும்பாலும் சிறு வயதுக் குழந்தைகளே அதிகம் பாதிக்கப்படுவார்கள். கல்லீரல், பித்தப்பையில் புழுக்கள் ஒட்டிக்கொண்டு பாதிப்பை ஏற்படுத்தவும் வாய்ப்பிருக்கிறது.

வயிறு கவனம் பாஸ்!

நெஞ்செரிச்சல்

யிற்றில் அமிலம் அதிகமாகச் சுரப்பது அமிலம் மேலேறி உணவுக்குழாயில் வந்து எதுக்களித்தலை ஏற்படுத்தும். இதனால் உணவுக்குழாய் ரணமாகி, நாளடைவில் மார்புப்பகுதியில் எரிச்சல் ஏற்படுவதே நெஞ்செரிச்சல்.

வயிறு கவனம் பாஸ்!

பசியின்மை

சியின்மை என்பது வயிற்றுக்கோளாறுகளில் முக்கியமானது. மஞ்சள்காமாலை நோய்க்கான அறிகுறியாகவும் இது ஏற்படலாம்; வயிற்றில் புற்றுநோய் ஏற்படலாம். எனவே, பசியின்மையை எளிதாக எடுத்துக்கொள்ளக் கூடாது. பசி ஏற்படாமல், எடையும் குறைந்துகொண்டே போனால், வயிற்றில் புற்றுநோய்க் கட்டி இருக்கிறதா என்பதைச் சோதிக்க வேண்டும்.

வயிறு கவனம் பாஸ்!

வாந்தி

ருவர் வாந்தி எடுக்கும்போது ரத்தமும் சேர்ந்து வந்தால் கவனமாக இருக்க வேண்டும். அதேபோல, சில நேரங்களில் ரத்தத்துடன் மலம் வெளியேறினால், அது மூலநோய் (Piles) அல்லது புற்றுநோயாக இருக்க வாய்ப்பிருக்கிறது. இது போன்ற அறிகுறிகள் தென்பட்டால், உடனடியாக மருத்துவரிடம் ஆலோசிப்பது நல்லது.

வயிறு கவனம் பாஸ்!

மனசு பத்திரம்!

யிற்றுக்கும் மனதுக்கும் தொடர்பு உண்டு. மனம் சரியாக இல்லையென்றால், அது வயிற்றை பாதிக்கும். தூக்கமின்மை, நீண்ட நேர வேலை, மன அழுத்தம், மன இறுக்கம், பதற்றம் போன்ற காரணங்களால் செரிமானக் கோளாறு ஏற்படலாம். மனதை அமைதியாக வைத்துக்கொண்டால் வயிறு தொடர்பான பிரச்னைகள் சிலவற்றைத் தவிர்க்கலாம்.

வயிறு கவனம் பாஸ்!

இரைப்பை அறிவோம்

நா
ம் உண்ணும் உணவு, உணவுப்பாதை வழியாக உள்ளே வந்ததும் இரைப்பை அதைச் சேகரித்துக்கொள்கிறது. அங்கு, ஹைட்ரோகுளோரிக் அமிலமும்,  புரதப்பொருள்களையும் மாவுப்பொருள்களையும் செரிக்க வைக்கும் பெப்சின் (Pepsin), அமிலேஸ் (Amylase) போன்ற செரிமானப் பொருள்களும் சுரக்கும். அவற்றின் மூலம் செரிமானத்துக்கான முதற்கட்டப் பணிகள் தொடங்கும். பிறகு, அந்த உணவு குடலுக்குப் போகும். சிறுகுடல் மற்றும் கணையத்தில் சுரக்கும் என்ஸைம்கள் செரிமானத்தை முழுமையாக்கும்.

வயிறு கவனம் பாஸ்!

செரிமான நீர் சுரப்பு

`செ
ரிமான நீர்’ என்பது ஒரு கலவை நீர். செரிமானப் பணிகளை வீரியமாக்கும் ஹைட்ரோகுளோரிக் அமிலம், மாவுச்சத்தை கரைக்கும் ‘பெப்சின்’, ‘அமிலேஸ்’  அமிலங்களின் கலவைதான் செரிமான நீர். இந்த மூன்று அமிலங்களும் சரிவரச் சுரக்காவிட்டால் செரிமானப் பணிகள் ஸ்தம்பித்துவிடும்.

வயிறு கவனம் பாஸ்!

சாப்பிடும் நேரம்!

ணவருந்தும் நேரம் மாறினால் வயிற்றில் பிரச்னைகள் ஏற்படும். நாம் உண்ணும் உணவு சராசரியாக, ஐந்து மணி நேரத்தில் இரைப்பையில் இருந்து வெளியேறிவிடும். நெடுநேரம் வயிறு காலியாக இருந்தால், இரைப்பையில் சுரக்கும் அமிலங்களால் பாதிப்பு ஏற்படும். ஐந்து மணி நேர இடைவெளியில் சிறிது சிறிதாக எதையாவது சாப்பிடுவது நல்லது.

வயிறு கவனம் பாஸ்!

வயிற்றுக்குத் தீங்கு செய்யாத உணவுகள்

* அதிக நார்ச்சத்துள்ள உணவுகள்

* காரம், மசாலா அதிகம் சேர்க்காத உணவுகள்

* பச்சைக் காய்கறிகள்

* பழங்கள்

* இயற்கையான உணவுகள் அனைத்தும்

வயிறு கவனம் பாஸ்!

தவறான உணவுப் பழக்கங்கள்

தீ
யில் அதிகம் கருகிய (தீய்ந்த) உணவுகளைத் தவிர்க்க வேண்டும். இது போன்ற உணவுகளில் உருவாகும் ‘நைட்ரோசமைன்ஸ்’ (Nitrosamines) என்ற மூலக்கூறு வயிற்றில் பல நோய்களை உருவாக்கிவிடும். 

வயிறு கவனம் பாஸ்!

தவிர்க்கவேண்டிய உணவுகள்

* ஜங்க் ஃபுட்ஸ்

* அளவுக்கு அதிகமான காபி, டீ

* கார்பனேட்டட் குளிர்பானங்கள்

* செயற்கை வேதிப்பொருள்களால் தயாரிக்கப்படும் பானங்கள்

* மது

* புகையிலை சார்ந்த பொருள்கள்

* பதப்படுத்திய, பாக்கெட்டில் அடைக்கப்பட்ட உணவுகள்

வயிறு கவனம் பாஸ்!

வயிறு தொடர்பான வேறு சில நோய்கள்

* ரத்தக்குழாய் வீக்கம், ரத்தக்கட்டி போன்றவை சில நேரங்களில் வயிற்றுவலியாக உணரப்படுவதுண்டு.

* சிறுநீரகக்கல், சிறுநீர் அடைப்பு (Urinary Obstruction), சிறுநீரகத் தொற்று உள்ளிட்ட அனைத்தும் வயிற்றுவலி போன்ற உணர்வைத்தான் ஏற்படுத்தும்.

* சில நரம்பு மண்டலக் கோளாறுகள்கூட வயிற்றுவலியாகத் தோன்றும்.

* ‘ஹெபடைட்டிஸ் பி’ (Hepatitis B) என்னும் கிருமி, வயிற்றில் பாதிப்பை ஏற்படுத்தும்; கல்லீரலையும் பாதிக்கும். ஹெபடைட்டிஸ் பி வைரஸ் பாதிப்பைத் தடுக்க தடுப்பூசி உண்டு.

வயிறு கவனம் பாஸ்!

மரபணுக்கள் மூலம் ஏற்படும் வயிறு தொடர்பான நோய்கள்

`பெ
ருங்குடலில் ஏற்படும் புற்றுநோய்க்கு பெரும்பாலும் மரபணுக்கள்தான் காரணம்’ என்று கண்டறியப்பட்டிருக்கிறது. இதை முன்கூட்டியே அறிந்துகொண்டு, சிகிச்சையளிக்க வெளிநாடுகளில் சோதனைமுறைகள் உள்ளன. இந்தியாவில் இப்போதுதான் படிப்படியாக இந்தச் சோதனைமுறைகள் அறிமுகமாகிவருகின்றன.

வயிறு கவனம் பாஸ்!

விரதம் நல்லதா?

யிறு, ஒரு நாளில் குறிப்பிட்ட நேரம் மட்டுமே இயங்க வேண்டும். ‘விரதம் இருப்பது வயிற்றுக்கு நன்மை பயக்குமா?’ என்றால், நவீன மருத்துவத்தில் அதற்கு பதில் இல்லை. எப்போதாவது விரதம் இருப்பது மனோதத்துவரீதியாக வேண்டுமானால் சில நன்மைகளைத் தரலாம். ஆனால், அடிக்கடி விரதம் இருப்பது, வயிற்றுக்கு பாதிப்பையே ஏற்படுத்தும்.

வயிறு கவனம் பாஸ்!

சிகிச்சைகள்

* வயிற்றுப்புண், செரிமானக் கோளாறு போன்றவற்றுக்கு முறையான உணவுப் பழக்கங்களைக் கடைப்பிடித்து, உரிய மருந்துகள் சாப்பிட்டால் நோய் குணமாகும்.

* இரைப்பை மற்றும் பித்தப்பையிலிருக்கும் சிறு கட்டிகளை நுண்ணோக்கி மூலம் கண்டறிந்து குணப்படுத்த முடியும். பெருங்குடலில் இருக்கும் கட்டிகளுக்கு ஆசனவாய் வழியாக நுண்ணோக்கியைச் செலுத்தி, சிகிச்சை அளிக்க முடியும். மருந்துகளால் குணப்படுத்த முடியாத கட்டிகளை அறுவை சிகிச்சை மூலம் குணப்படுத்தலாம்.

*
புற்றுநோய் கண்டறியப்பட்டு அறுவை சிகிச்சை செய்யப்பட்டால், அதைத் தொடர்ந்து ‘கீமோதெரபி’ (Chemotherapy) சிகிச்சை தரப்படும். இது, உடலில் வேறு எங்கேனும் புற்றுநோய் துகள்கள் இருந்தாலும் சரிசெய்யும். அதேபோல, ‘ரேடியோதெரபி’ (Radiotherapy) எனும் கதிர்வீச்சு சிகிச்சையும் தரப்படும்.

வயிறு கவனம் பாஸ்!

வயிற்றைப் பாதுகாக்க சில எளிய உடற்பயிற்சிகள்

யிற்றின் இயக்கத்தையும் செரிமானத் தன்மையையும் நிர்ணயிப்பது நமது மூளையில் சுரக்கும் சில சுரப்பிகள்தாம். இவற்றைச் சரியாக வைத்துக்கொள்ள நடைப்பயிற்சி, சுவாசப்பயிற்சி, யோகாசனம் செய்யலாம். இத்தகைய பயிற்சிகளால் செரிமானம் மற்றும் குடல் செயல்பாடுகளைச் சீராக வைத்துக்கொள்ள முடியும்.

வயிறு கவனம் பாஸ்!

மருந்தாகும் உணவு!

`` ‘உ
ணவே மருந்து; மருந்தே உணவு’ என்ற தத்துவம்தான் வயிற்றைப் பாதுகாக்கும் மந்திரம். குறிப்பாக, அளவுடன் சாப்பிட வேண்டும். தேவையில்லாத உணவுகளை உட்கொண்டால், அது வயிற்றின் செயல்பாட்டைப் பாதிக்கும்’’  என்கிறார் உணவியல் நிபுணர் அஞ்சலி. அதோடு, வயிற்றுக்கு நன்மை செய்யும் உணவுகள் குறித்தும் இங்கே விளக்குகிறார். 

வயிறு கவனம் பாஸ்!

பசி தீர எவ்வளவு உணவு தேவையோ, அந்த அளவுக்கு மட்டுமே சாப்பிட வேண்டும். அதற்கு அதிகமாகச் சாப்பிட்டாலோ, குறைவாகச் சாப்பிட்டாலோ வயிற்றில் பாதிப்புகள் ஏற்படலாம்.

வயிறு கவனம் பாஸ்!

ண்ணெயில் பொரிக்கப்படும் உணவுகளில் கொழுப்பும் சோடியம் போன்ற உப்புகளும் அதிகமிருக்கின்றன. இது போன்ற உணவுகள் வயிற்றில் எரிச்சலை ஏற்படுத்தும். தொற்றுகளை வளரச்செய்து, அல்சர் போன்ற பாதிப்புகளையும் உருவாக்கும். கார உணவுகளால் வயிற்றில் எரிச்சல் ஏற்படுவதோடு அல்சர் ஏற்படவும் வாய்ப்புண்டு.

கோதுமை, பால் போன்றவற்றால் தயாரிக்கப்படும் உணவுகள் சிலருக்கு ஒவ்வாமையை ஏற்படுத்தலாம். தவிர, வயிற்றுவலி, வாந்தி, பேதி, இரைப்பை வலி, வாய்வுத் தொல்லைகள் ஏற்படவும் வாய்ப்பிருக்கிறது. எனவே, ஒவ்வாமைப் பிரச்னை உள்ளவர்கள் அவற்றைத் தவிர்க்க வேண்டும்.

வயிறு கவனம் பாஸ்!

நன்மை தரும் உணவுகள்

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் உணவுகள் சில... எலுமிச்சை, ஆரஞ்சு, நெல்லிக்காய், குடமிளகாய், பூண்டு, இஞ்சி, மிளகு, கீரை வகைகள், கிரீன் டீ, மஞ்சள் தூள், தேன்.

வாழைப்பழம்: பெக்டின் மற்றும் நார்ச்சத்து அதிகமுள்ள உணவு. உடலின் கழிவுகளை வெளியேற்றவும் மலச்சிக்கலைத் தவிர்க்கவும் உதவும். இரைப்பையில் உள்ள புண்களை குணப்படுத்தி வலியைக் குறைக்கும்.

வயிறு கவனம் பாஸ்!

ஞ்சி: வயிற்றுவலி, வயிற்றுப்புண் போன்றவற்றுக்கு மிகச் சிறந்த மருந்து. வெளியிலிருந்து உடலுக்குள் வரும் வைரஸ், பாக்டீரியா போன்ற நுண்ணுயிர்கள், நம் உடம்பில் பாதிப்பை ஏற்படுத்தும். இவற்றைத் தடுக்கும் நோய் எதிர்ப்பு சக்தியை (Immunity) இஞ்சி நமக்குத் தரும்.

இஞ்சி, நமது உடல் நலத்தைப் பாதுகாக்கும். இதை, உணவில் எந்த அளவுக்குச் சேர்த்துக்கொள்கிறோம், எந்த நேரத்தில் சாப்பிடுகிறோம் என்பதைப் பொறுத்துதான் இது தரும் நன்மை அடங்கியிருக்கிறது. இஞ்சியிலிருக்கும் நோய் எதிர்ப்பு சக்தி, வயிற்றுப்புண்ணால் ஏற்படும் வீக்கத்தைக் குறைக்கப் பயன்படும். `ஜெர்டு’ (GERD - Gastroesophageal Reflux Disease) போன்ற இரைப்பை நோய் உருவாகாமல் தடுக்கும்.

வயிறு கவனம் பாஸ்!

ஞ்சியை அப்படியே மிக்ஸியில் போட்டு அடித்தோ அல்லது துருவி, இடித்துக் கொஞ்சம் தண்ணீர்விட்டு உண்ணுவதோ ஆரோக்கியமானது அல்ல. அது வயிற்றுப்புண் உருவாகவோ, புண்கள் அதிகமாகவோ காரணமாகிவிடும். அதனால், இஞ்சியை ஓர் அங்குலம் எடுத்துக்கொண்டு, அதை இடித்து அல்லது துருவிக்கொள்ள வேண்டும். அதில் அதிகளவு தண்ணீர் ஊற்றி, அதாவது ஒரு துண்டு இஞ்சிக்கு 250 மி.லி தண்ணீர் கலந்து குடிப்பது நல்லது. இஞ்சியை வெறும் வயிற்றில் சாப்பிடாமல், காலை உணவை முடித்த பிறகு உட்கொள்வதே சிறந்தது!

வயிறு கவனம் பாஸ்!

பப்பாளி: நார்ச்சத்து அதிகம் உள்ளது. செரிமானத்துக்கு உதவும். உடல் எடையைக் குறைக்கும். இதில் இரண்டு அல்லது மூன்று துண்டுகளை தினமும் உட்கொண்டால் வயிற்றுக்கு மிகவும் நல்லது.

பப்பாளியை பழமாகத்தான் சாப்பிட வேண்டும். ஏனெனில், காயாக இருக்கும் பப்பாளியில் லேட்டெக்ஸ் (Latex) மற்றும் பப்பைன் (Papain)  போன்ற இயற்கையான வேதிப் பொருள்கள் உள்ளன. எனவே இதை, கர்ப்பிணிகள் உட்கொள்ளக் கூடாது. ஏனெனில். கர்ப்பப்பை சுருங்குதல் போன்ற பிரச்னை ஏற்படும். மேலும், பப்பாளியை, பிரசவவலியை ஏற்படுத்தும் புரோஸ்டாகிளாண்டின் (Prostaglandins) ஹார்மோன் என்று தவறாக உடல் நினைத்து, கர்ப்பிணிகளுக்கு முன்னதாகவே வலி ஏற்படுத்த வாய்ப்பிருக்கிறது. பழுத்த பப்பாளியில் வைட்டமின் சி, ஃபோலேட் மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்டுகள் இருப்பதால் கர்ப்பிணிகளுக்கு நல்லது!

வயிறு கவனம் பாஸ்!

தயிர்: புரதச்சத்து மற்றும் கால்சியம் நிறைந்தது. வயிற்றுக்குத் தீங்கு செய்யாது.

புதினா: இது ஒரு வகையான மூலிகை. இதில் ஆன்டிஆக்ஸிடன்ட்டுகள் நிறைந்துள்ளன. இது செரிமானத்தை அதிகரிக்கும். மேலும், இதில் நோய் எதிர்ப்பு சக்தி மிகுந்திருப்பதால், உடலுக்குள் நுழையும் தேவையற்ற நுண்ணுயிர்களை அழித்துவிடும். 

குறிப்பு: சிலருக்கு சில உணவுகள் எரிச்சல், ஒவ்வாமையை ஏற்படுத்தும். அவர்கள் அத்தகைய உணவுகளைத் தவிர்க்க வேண்டும். ஒவ்வாமை இருப்பவர்கள், தங்கள் உடலுக்குப் பிரச்னை ஏற்படுத்தும் உணவுகள் குறித்து முழுதாகத் தெரிந்துவைத்திருக்க வேண்டும். எந்தச் சூழலிலும் அவற்றைச் சாப்பிடாமல் தவிர்ப்பதே நல்லது!

- கிராபியென் ப்ளாக்

வயிறு கவனம் பாஸ்!

டலையும் உள்ளத்தையும் நல்வழிப்படுத்தும் வழிகள், உணவுப் பழக்கங்கள், உடற்பயிற்சிகள் முதலிய வாழ்வியல் முறைகளை அறியவும், மருத்துவ உலகின் ஆச்சர்யங்களை விரல்நுனியில் தெரிந்துகொள்ளவும் ‘டாக்டர் விகடன்’ சோஷியல் நெட்வொர்க்கிங் பக்கங்களில் இணைந்திடுங்கள்.