Published:Updated:

கன்சல்ட்டிங் ரூம்

கன்சல்ட்டிங் ரூம்
பிரீமியம் ஸ்டோரி
கன்சல்ட்டிங் ரூம்

ஹெல்த்

கன்சல்ட்டிங் ரூம்

ஹெல்த்

Published:Updated:
கன்சல்ட்டிங் ரூம்
பிரீமியம் ஸ்டோரி
கன்சல்ட்டிங் ரூம்

என் முதல் குழந்தைக்கு மூன்றாவது வயதில் மஞ்சள்காமாலை வந்தது. பெரும் போராட்டத்துக்குப் பிறகு மீண்டு வந்தாள். இப்போது அவளுக்கு ஐந்து வயது. நான் கர்ப்பமாக இருக்கிறேன். அடுத்த குழந்தையையும் இந்த நோய் பாதிக்குமா?

- ஸ்வேதா, திண்டுக்கல்

கன்சல்ட்டிங் ரூம்

எடை மற்றும் வளர்ச்சிக் குறைபாடு, கல்லீரல் சார்ந்த பிரச்னைகளுடன் பிறக்கும் குழந்தைகளை மஞ்சள்காமாலை நோய் பாதிக்க வாய்ப்புகள் அதிகம். தாய்க்கு, எதிர்ப்பு சக்தி குறைந்தால், நோய்த்தொற்று ஏற்பட்டு  இது போன்ற பாதிப்புகள் ஏற்படலாம். இதைத் தடுக்க, கர்ப்ப காலத்தில், மஞ்சள்காமாலை நோயைக் கண்டறியும் ‘ஹெபடைட்டிஸ் ஹெச்.பி.எஸ்.ஏ.ஜி (Hepatitis HBsAg) என்ற ரத்தப் பரிசோதனையைக் கர்ப்பிணிகள் செய்துகொள்ள வேண்டியது அவசியம். இதன் முடிவுகள் `பாசிட்டிவ்’ ஆக இருந்தால், குழந்தைக்கு `ஹெபடைட்டிஸ்-பி’ பாதிப்பு ஏற்படுவதற்கான வாய்ப்பிருக்கிறது. அப்படிப்பட்டச் சூழலில் கர்ப்பிணிகள் உடனடியாக அதற்கான தடுப்பு மருந்துகளை மருத்துவர் பரிந்துரையுடன் உட்கொள்ள வேண்டும். அவர்களுக்குப் பிறக்கும் குழந்தைக்கு மருத்துவமனையிலேயே ‘ஹெபடைட்டிஸ் பி’ தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும். இந்த வகைத் தடுப்பூசி, குழந்தை பிறந்தவுடன் ஒரு முறை, ஒரு மாதத்துக்குப் பிறகு ஒரு முறை, ஆறு மாதங்களுக்குப் பிறகு ஒரு முறை, ஒரு வருடம் கழித்து ஒரு முறை என தொடர்ச்சியாகப் போடப்பட வேண்டும். குழந்தை பிறந்த அரை மணி நேரத்திலேயே குழந்தையின் உடலில் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க `இம்யுனோகுளோபுலின்’
(Immunoglobulin) என்ற மருந்து தரப்பட்டு, குழந்தை கண்காணிக்கப்படும் 

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

கன்சல்ட்டிங் ரூம்

குழந்தை வளர்ந்து சில ஆண்டுகள் கழித்து ஏற்படும் மஞ்சள்காமாலை, தாயால் ஏற்படுவதல்ல.  உணவு மற்றும் வாழ்வியல் மாற்றங்களின் காரணமாக ஏற்படுவது. மருத்துவரின் பரிந்துரைப்படி தடுப்பூசிகளைப் போட்டுவந்தால் அனைத்து வகை மஞ்சள்காமாலைகளையும் தடுத்துவிடலாம். எனவே, குழந்தைகளுக்கான தடுப்பூசிகளை கவனமாகப் பின்பற்றவேண்டியது அவசியம்.

- செல்வன் ரத்தினசாமி, குழந்தைகள்நல மருத்துவர்.

என் தங்கைக்கு அவ்வப்போது அளவுக்கதிகமாக வியர்க்கிறது. அந்த நேரங்களில் மூச்சுத்திணறல், காய்ச்சல், இதயத் துடிப்பு அதிகரிப்பது போன்ற பிரச்னைகளும் ஏற்படுகின்றன. இவை, ‘டெட்டனஸ்’ பாதிப்பின் அறிகுறிகளாக இருக்கலாம் என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள். இது எதனால் ஏற்படுகிறது, இதற்கான சிகிச்சைகள்  குறித்து சொல்லுங்களேன்.

கன்சல்ட்டிங் ரூம்- ராகுல், விழுப்புரம்.


உடலில் காயம்பட்டதும் `டி.டி’ எனப்படும் `டெட்டனஸ் டாக்ஸாய்டு’ (Tetanus  Toxoid) தடுப்பூசி போட வேண்டியது அவசியம். கீழே விழுந்து அடிபடும் காயத்துக்கு மட்டுமல்லாமல் பூச்சிகள், நாய், பூனை போன்ற விலங்குகள் கடிக்கும்போதும், அறுவை சிகிச்சையின்போது உடலில் காயங்கள் ஏற்படும்போதும் `டி.டி’ தடுப்பூசி போடுவார்கள். இந்தத் தடுப்பூசி போடவில்லையென்றால், காலப்போக்கில் பாக்டீரியாக்கள் வளர்ந்து `டெட்டனஸ்’ பாதிப்பை ஏற்படுத்திவிடும். 

கன்சல்ட்டிங் ரூம்

`டெட்டனஸ்’ பாதிப்பு உறுதிசெய்யப்பட்டால், பாதிப்பின் தன்மையை முதலில் கண்டறிய வேண்டும். கடுமையான பாதிப்பென்றால்,  டிரிப்ஸ், ட்ரக்கியாஸ்டமி  சிகிச்சை தருவதோடு அவர்களைத் தீவிரக் கண்காணிப்பில்வைத்து தொடர்ந்து கவனிக்க வேண்டும். தவறினால், உயிருக்கு ஆபத்து ஏற்படலாம். இந்த நிலையிலுள்ள நோயாளிகள் எச்சில்கூட விழுங்க முடியாமல் திணறுவார்கள். மூச்சுத்திணறல் ஏற்படுகிறதென்றால், பாதிப்பு தீவிரமடைந்திருக்கிறது என்று பொருள். எனவே, உடனடியாக உங்கள் தங்கையை மருத்துவரிடம் அழைத்துச் சென்று சிகிச்சையைத் தொடங்கவும்.

- சிவராமக்கண்ணன், பொது மருத்துவர்.

என் மனைவி கர்ப்பமாக இருக்கிறார். அவருக்குக்  கால்கள் வீங்கிவிடுகின்றன. `இது இயல்பான ஒன்றுதான்’ என்று மருத்துவர் கூறுகிறார். என் மனைவியால் அன்றாடப் பணிகளைக்கூடச் செய்ய முடியவில்லை. வீக்கத்தைக் குறைக்கும் எளிய வழிமுறைகள் ஏதாவது இருந்தால் சொல்லுங்கள்.

- அர்ஜூன், மேலூர்

கன்சல்ட்டிங் ரூம்

கர்ப்பிணிகள் கால்களை நீண்ட நேரம் தொங்கவிட்டிருந்தால் வீக்கம் ஏற்படும். முடிந்தவரை அதைத் தவிர்க்கவும். அவ்வப்போது, கால்களை உயர்த்தி உடற்பயிற்சி செய்வது நல்லது. கர்ப்பிணிகளுக்கு நிறைய ஓய்வு தேவை. இரவில் எட்டு மணி நேரமும் பகலில் இரண்டு மணி நேரமும் தூக்கம் அவசியம். அதன் பிறகும் கால்கள் வீங்கினால், ரத்த அழுத்தப் பரிசோதனை செய்து பார்க்கவும். உயர் ரத்த அழுத்தம் இருந்தால், தாய்-சேய் இருவருக்கும் ஆபத்து. எனவே, கர்ப்பிணிகள் விழிப்புஉணர்வோடு இருக்க வேண்டும்.

ரத்தச்சோகை பிரச்னை இருந்தாலும் கால் வீக்கம் ஏற்படலாம். எனவே, ரத்தத்தை அதிகரிக்கும் உணவுகளை உட்கொள்ளச் சொல்லுங்கள். மருத்துவரின் பரிந்துரையின் பேரில், ஊட்டச்சத்து மாத்திரைகள் சாப்பிடலாம். தாய்க்கு சிறுநீரகப் பிரச்னை ஏதாவது இருக்கிறதா என்று பரிசோதனை செய்து பார்க்கவும். இருந்தால், அதற்கான சிகிச்சைகள் எடுத்துக்கொள்ளவும். சிறுநீரகப் பிரச்னை உள்ளவர்கள், உப்பு நிறைந்த உணவுகளைத் தவிர்ப்பது நல்லது.

- மீனா, மகப்பேறு மருத்துவர்.

ங்கள் கேள்விகளை அனுப்பவேண்டிய முகவரி: கன்சல்ட்டிங் ரூம், டாக்டர் விகடன், 757, அண்ணா சாலை, சென்னை-600 002.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism