Published:Updated:

உங்களுக்காக நேரம் ஒதுக்குங்கள்!

உங்களுக்காக நேரம் ஒதுக்குங்கள்!
பிரீமியம் ஸ்டோரி
உங்களுக்காக நேரம் ஒதுக்குங்கள்!

குடும்பத்தின் இதயமே...

உங்களுக்காக நேரம் ஒதுக்குங்கள்!

குடும்பத்தின் இதயமே...

Published:Updated:
உங்களுக்காக நேரம் ஒதுக்குங்கள்!
பிரீமியம் ஸ்டோரி
உங்களுக்காக நேரம் ஒதுக்குங்கள்!

பெண்களுக்கான இதயப் பிரச்னைகள் அதிகரிக்கக் காரணம் என்ன? எல்லோரின் அக்கறையிலும் கவனம் செலுத்தும் பெண்கள், தனது நலனில் மட்டும் கவனம் செலுத்தத் தவறி விடுகின்றனர். இந்த அலட்சியம்தான் இதயப் பிரச்னை வரை கொண்டுசெல்கிறது.

“60 ஆண்டுகளுக்கு முன்புவரை, ஒருவரின் சராசரி ஆயுள்காலம் 37 முதல்  40 வயது வரைதான் இருந்தது. இப்போது அது 72 ஆக உயர்ந்துள்ளது. ஆயுள்காலம் அதிகமாகும்போது, பிரச்னைகளும் அதிகரிக்கின்றன. உலக சுகாதார அமைப்பின் கூற்றுப்படி, பெண்களைக் கொல்லும் உடல் உபாதைகளில், முதன்மையானது இதயப் பிரச்னைதான்.

மாடர்ன் யுகத்தில் குடும்பம், அலுவலகம் என இரண்டு பொறுப்புகளையும் பெண்கள் சுமக்க வேண்டியுள்ளது. இதற்கிடையில், தங்களுடைய தேவைகளுக்கென பெரும் பாலானோர் நேரம் ஒதுக்குவதே இல்லை. ஆரோக்கியமான உணவுகளை  சாப்பிடுவதும் இல்லை. ஆண்களைவிட பெண்கள் எளிதாக மனஅழுத்தத்தில் தள்ளப்படுகிறார்கள் என்கிறது ஓர் ஆய்வு. ஆக, உளவியல், உடலியல் எனப் பல்வேறு அழுத்தத்துக்குப் பெண்கள் உள்ளாகின்றனர். இதனால் இதயப் பிரச்னைகள் மட்டுமன்றி பல்வேறு உபாதைகள் அவர்களுக்கு ஏற்படுகின்றன.

உங்களுக்காக நேரம் ஒதுக்குங்கள்!

என்ன செய்யலாம்?

திருமணத்துக்கு முன்பு, பின்பு, குழந்தைப் பிறப்புக்குப் பின்பு என எல்லா காலகட்டத்திலும், பெண்கள் தினமும் 45 நிமிடங்கள் உடற்பயிற்சி  செய்ய வேண்டும். எடையைக் கட்டுக்குள் வைத்துக்கொள்வதும் அவசியம். அரிசி உணவுகளால் பருமன், நீரிழிவு போன்ற பிரச்னைகள் அதிகரிக்கும் என்பதால் அவற்றை முடிந்தவரை குறைத்துக் கொள்ளலாம். அசைவத்தில் சிக்கன், மீன், முட்டையின் வெள்ளைக்கரு எடுத்துக்கொள்ளலாம். மட்டன், முட்டையின் மஞ்சள் கரு, இறால் போன்றவற்றைக் குறைவாகவே உட்கொள்ள வேண்டும். அதோடு, அன்றாடம் உடற்பயிற்சி செய்வது முக்கியம்.

குடும்பத்தில் யாருக்காவது ஏற்கெனவே  உயர் ரத்த அழுத்தம் அல்லது நீரிழிவு இருந்தால், வருடம் ஒருமுறை இதயப் பரிசோதனை செய்ய வேண்டும். நெஞ்சுவலி ஏற்படும்போது அதை சாதாரண நெஞ்செரிச்சல் அல்லது வலி உணர்வு என நினைத்து உதாசீனப்படுத்தக் கூடாது. சுயமருத்துவம் செய்யாமல் மருத்துவரின்   ஆலோசனை பெறுவது அவசியம். மெனோபாஸுக்குப் பிறகுதான் பெண்களுக்கான இதயப் பாதிப்புகள் அதிகரிக்கும். குறிப்பாக, 45-50 வயதுக்கு மேல் உள்ள பெண்களுக்கு இதயப்  பிரச்னைகள் வருவதற்கான   அபாயம் அதிகம் என்பதால் கூடுதல் கவனம் தேவை'' என்கிறார் இதயநோய் சிறப்பு மருத்துவர் குகன்நாத்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உங்களுக்காக நேரம் ஒதுக்குங்கள்!

மருந்து உதவுமா?

இதயப்பிரச்னைகளைத் தடுக்க உதவும் ஸ்டாட்டின் (Statins) வகை மருந்துகள் பற்றி இதயநோய் சிறப்பு மருத்துவர் எம்.எம்.யூசுப்பிடம் கேட்டோம்.

“இதயப்பிரச்னைகள் ஏற்படுவதற்கு, மிக முக்கியமான காரணங்கள் குடும்பப் பின்னணி, புகைப்பழக்கம், நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம், மிகக்குறைவான உடலுழைப்பு, உடலில் கொழுப்பு அதிகமாக இருப்பது போன்றவை. இவற்றில் ஏதேனும் ஒரு காரணம் இருந்தால்கூட, அவர்களுக்கு மாரடைப்பு ஏற்படலாம். இரண்டு மூன்று காரணிகள் ஒன்றாக இருந்தால், ஆபத்து அதிகம்.

உங்களுக்காக நேரம் ஒதுக்குங்கள்!


இதயப் பிரச்னைகள் ஏற்படும் அபாயம் அதிகமாக இருந்தால், அதைத் தடுப்பதற்காக ஸ்டாட்டின் வகை மருந்துகள் பரிந்துரைக்கப்படும். ஸ்டாட்டினின் பக்க விளைவுகள், உடல் அமைப்பைப் பொறுத்து மாறுபடும். சிலருக்கு எவ்வித பக்கவிளைவும் ஏற்படாது, சிலருக்குத் தசைப்பிடிப்பு ஏற்படும், சிலருக்கு ரத்த அழுத்தம் அதிகரிக்கலாம்.  எனினும், மாரடைப்பு ஏற்படுவதை முன்னெச்சரிக்கையுடன்  தடுப்பதில் ஸ்டாட்டின் வகை மருந்துகள் முக்கியப் பங்காற்றுகின்றன. பொதுவாக ஸ்டாட்டின் பரிந்துரைக்கும் இதய நிபுணர், சம்பந்தப்பட்ட நோயாளியின் உடல்நிலையைத் தொடர்ந்து கண்காணித்து வருவார். குறிப்பாக, உடலிலுள்ள கொழுப்புச்சத்தின் அளவு மற்றும் ரத்த அழுத்தத்தின் அளவைக்  கவனிப்பார். அதில் மாற்றம் ஏற்படும்போது, நோயாளிக்கு ஸ்டாட்டின் அளிக்கப்படும் அளவைக் குறைத்து மீண்டும் கண்காணிக்கத் தொடங்குவர். ஒருவேளை பிரச்னை ஏற்பட்டால், மருந்தை மேற்கொண்டு எடுக்க வேண்டாம் என அறிவுறுத்தப்படும். அதற்கு மாற்றாக மருத்துவர்கள் பரிந்துரைக்கும் வாழ்வியல் மாற்ற வழிமுறைகளைப் பின்பற்ற வேண்டும்.

மாரடைப்பு ஏற்படுவதற்கான சதவிகிதம் குறையத் தொடங்கியவுடன் ஸ்டாட்டின் டோசேஜின் அளவையும் குறைத்துக்கொள்ள அறிவுறுத்தப்படும். கூடவே, மீண்டும் பாதிப்பு ஏற்படாமல் இருக்க வாழ்வியல் மாற்ற வழிமுறைகள் பரிந்துரைக்கப்படும். இதயப்பிரச்னைகள் ஏற்படும் அபாயம் முழுமையாகக் குறையும்வரை, ஸ்டாட்டின் பரிந்துரைக்கப் படும்” என்கிறார் யூசுப்.

இதயம் காக்க இன்றே வாழ்க்கைமுறையில் நல்ல மாற்றம் செய்வோம்.

- ஜெ.நிவேதா, இ.நிவேதா

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism