‘யு-டர்ன்’, ‘சீமராஜா’ படங்களுக்குப் பிறகு, விஜய் சேதுபதியின் ‘சூப்பர் டீலக்ஸ்’ படத்துக்குத் தயாராகி வருகிறார் நடிகை சமந்தா. அவருடைய ஃபிட்னெஸ் ரகசியங்களை எல்லோருமே கடைப்பிடிக்கலாம், அவ்வளவு எளிமையாக இருக்கின்றன.

“என் வெயிட் 50 கிலோவுக்கு மேல் கூடிவிடக் கூடாதுங்கிறதைக் குறிக்கோளாகவே வெச்சிருக்கேன். தினமும் காலையில அரை மணி நேரம் ஜாகிங் போறதுல இருந்து என்னுடைய நாள் ஆரம்பிக்கும். கிடைக்கும் நேரமெல்லாம் ஜிம்மே கதினு இருப்பேன். என்னுடைய ட்ரெயினர் சொல்லித்தரும் சிட்-அப்ஸ் மற்றும் புல்-அப்ஸ் பண்ணுவேன். சிட்-அப்ஸ் பண்றது மூலமா தொடை மற்றும் இடுப்புப் பகுதிகளில் சதை குறையும். புல்-அப்ஸ் பண்றது மூலமா கை மற்றும் மார்புப் பகுதிகள் வலுவாகும். இவை இரண்டையும் ஒரு நாளைக்கு 25 முறை பண்ணினாலே உடம்பிலுள்ள கொழுப்பின் அளவு குறைந்து ஸ்லிம் ஆகிடுவோம்.

காலையில இரண்டு இட்லி, ஆலிவ் ஆயில்விட்டுச் செய்த தோசை, இடியாப்பம் இதில் ஏதாவது ஒன்றைச் சாப்பிடுவேன். 11 மணிக்கு ஐஸ் மற்றும் சர்க்கரை இல்லாத ஏதாவது ஒரு பழச்சாறு. மதியம் கொஞ்சம் காய்கறிப் பொரியல், சாதம் சாப்பிடுவேன். இரவு இரண்டு சப்பாத்தி மற்றும் காய்கறி குருமா... தவிர, ஒரு நாளைக்கு இரண்டு தடவை டீ குடிப்பேன்.

இடுப்புப் பகுதியை இளைக்கவைக்கத் தனியா சில பயிற்சிகள் இருக்கு. அதாவது, கையை மேலே தூக்கி முன்பக்கம் கீழே குனிந்தபடி ஐந்து நிமிடங்கள் இருக்கணும். அதே மாதிரி பின்புறம் வளைந்து ஐந்து நிமிடங்கள் இருக்கணும். இதைப் பண்ணும்போது காலை மடக்காமல் இருப்பது அவசியம். உடற்பயிற்சிகளோடு, டயட்டும் முக்கியம். நம்ம ஊர் சாப்பாடு எல்லாமே, இங்கே இருக்கிற தட்பவெப்பநிலைக்கு ஏற்ற மாதிரி இருக்கும். அதை விட்டுட்டு, ஓட்ஸ், கார்ன் ஃப்ளேக்ஸ் இதெல்லாம் சாப்பிடறது மூலமா உடல் சூடுதான் அதிகமாகும். ஸோ, நான் எப்பவுமே அரிசி உணவுகளைத்தான் சாப்பிடுவேன்.

காலையில் வெள்ளரிக்காய் டோனர் (Toner) பயன்படுத்தி, அதுக்கு மேலதான் மேக்அப் போடுவேன். மேக்அப் கலைத்த பிறகு, ஆலிவ் ஆயில் தடவி இரண்டு நிமிடம் மசாஜ் செய்து, முகத்தைக் கழுவுவேன். மாலையில் முகத்துக்குக் கற்றாழைச் சாறு மற்றும் மஞ்சள் தடவி அரை மணி நேரம் ஊறவைத்து, குளிர்ந்த நீரில் கழுவுவேன். தலைமுடிக்கு மாதத்துக்கு இரண்டு முறை ஸ்பா பண்ணுவேன். சீயக்காய், நெல்லிக்காய், கறிவேப்பிலை, செம்பருத்தி, தேங்காய் எண்ணெய் கலந்த பேஸ்ட்டைத் தலைக்குத் தடவி, ஒரு மணி நேரம் கழித்துக் குளிப்பேன். இப்படிப் பண்ணும்போது முடிக்கு ஷாம்பூ போடாம இருக்கிறது அவசியம்.

ஜிம்முக்குப் போக முடியாத நாள்களில் ஒரு மணி நேரம் யோகா பயிற்சிகள் போதும். உடம்பு ஆரோக்கியமாகும். விடுமுறை தினங்களில் குடும்பத்தாரோடு நேரம் செலவழியுங்க, மனசு ஆரோக்கியமாகும்.’’

- சுஜிதா சென்