எனக்கு அடிக்கடி தண்ணீர் தாகம் எடுக்கிறது. அதிலும் பைக் ஓட்டும்போது நாக்கு வறண்டு போகிறது. வறட்சியால் உதடுகளில் தோல் உரிகிறது. இது ஏதாவது நோய்க்கான அறிகுறியா?

- தினேஷ், சேலம்.

சர்க்கரைநோய்க்கான மிக முக்கியமான மூன்று அறிகுறிகளில் அதீத தாகமும் ஒன்று. மற்றவை, அடிக்கடி சிறுநீர் கழிப்பது மற்றும் அளவுக்கு மீறிய பசி உணர்வு. எனவே, சர்க்கரைநோய்க்கான பரிசோதனையைச் செய்துவிடுங்கள். சர்க்கரைநோய் இல்லையெனில், ‘டயாபடீஸ் இன்சிபிடஸ்’ (Diabetes Insipidus) என்ற நோய்க்கான பரிசோதனையைச் செய்து பாருங்கள். இது, உடலின் உப்பு மற்றும் நீர் அளவில் குறைபாடு ஏற்படுவதால் வரும் பிரச்னை. உடல் எப்போது திரவங்களை உட்கிரகிக்க முடியாமல் திணறுகிறதோ, அப்போதுதான் இந்தப் பிரச்னை ஏற்படும். டயாபடீஸ் இன்சிபிடஸ், ஒரு வகை ஹார்மோன் குறைபாடுதானே தவிர, சர்க்கரைநோய் அல்ல. அதீத தாகம் என்று நீங்கள் எதைக் குறிப்பிடுகிறீர்கள் என்று புரியவில்லை. சாப்பிட்டு முடித்தவுடன் போதிய அளவு தண்ணீர் குடிக்காவிட்டாலோ, தூங்கச் செல்லும் முன்பு போதிய அளவு நீர் அருந்தாவிட்டாலோ நாக்கு வறண்டு போகக்கூடும். அதை, இதனோடு குழப்பிக்கொள்ள வேண்டாம். தேவைக்கதிகமாக தண்ணீர் குடித்தும், தாகம் எடுத்துக்கொண்டே இருக்கிறது, தொண்டை வறண்டு போகிறது என்றால் மட்டும் மேற்கூறிய இரண்டு பரிசோதனைகளைச் செய்ய வேண்டும்.

- அர்ஷத் அகில், பொது மருத்துவர்.

இரவு நேரத்தில் அடிக்கடி நெஞ்செரிச்சல் வந்து தொந்தரவு தருகிறது. மாத்திரை வாங்கிச் சாப்பிட்டால் சரியாகிவிடுகிறது. எனக்கு அதிகமாக ஸ்நாக்ஸ் சாப்பிடும் பழக்கம் உண்டு. அதனால் நெஞ்செரிச்சல் வருகிறதா அல்லது ஏதேனும் நோயின் அறிகுறியா?

- ரமேஷ், திருநெல்வேலி.

நீங்கள் சாப்பிடும் ஸ்நாக்ஸ்தான் உங்கள் பிரச்னைக்குக் காரணம். நொறுக்குத்தீனிகளின் இயல்பே அதுதான். இது மட்டுமன்றி, இரவில் தாமதமாக உண்பது, காரமான, மசாலா நிறைந்த உணவுகளை அதிகம் உட்கொள்வது, பசி ஏற்படும்போது சாப்பிடாமல் நேரம் கழித்துச் சாப்பிடுவது, எண்ணெய் அதிகம் சேர்க்கப்பட்ட உணவுகளைச் சாப்பிடுவது போன்றவை அனைத்தும் நெஞ்செரிச்சலை (Heart Burn) உண்டாக்கும். இந்தப் பழக்கங்கள் உங்களிடம் இருந்தால், தவிர்த்துவிடுங்கள். சில நேரங்களில், உடல் பருமனாக இருந்தால்கூட இந்தப் பிரச்னை ஏற்படலாம். அப்படியிருந்தால், உடல் எடையைக் குறைக்க முயலுங்கள். முடிந்தவரை, சரியான நேரத்துக்கு உணவு உட்கொள்ளுங்கள். கடைகளில் வாங்கிச் சாப்பிடும் பழக்கத்தைக் கைவிடுங்கள். நெஞ்செரிச்சலை அலட்சியப்படுத்தி, தொடர்ந்து இதே மாதிரியான உணவை மட்டும் உண்டு வந்தால் நாளடைவில் குடல் தொடர்பான நோய்கள் ஏற்பட வாய்ப்பிருக்கிறது.

- நித்யஸ்ரீ, ஊட்டச்சத்து நிபுணர்.

என் தந்தைக்கு வயது 55. இரு முறை ‘ஹார்ட் அட்டாக்’ வந்திருக்கிறது. அதற்கான சிகிச்சைகள் எடுத்துக்கொண்டு எந்த பாதிப்பும் இல்லாமல் இருந்தார். ஆனால், கடந்த சில நாள்களாக அவருக்கு கால்கள் அடிக்கடி வீங்குகின்றன. மூச்சுத்திணறலும் அடிக்கடி ஏற்படுகிறது. என்ன காரணமாக இருக்கும்?

- சரவணன், நாமக்கல்.

உங்கள் தந்தைக்கு ஏற்கெனவே இரண்டு முறை மாரடைப்பு வந்திருக்கும் நிலையில் இப்போது திடீரென கால் வீங்குவது இதயச் செயலிழப்புக்கான (Cardiac Failure) அறிகுறியாக இருக்கலாம். எனவே, தாமதிக்காமல் மருத்துவரை அணுகவும். கால் வீக்கமும் மூச்சுத்திணறலும் இதயத் துடிப்பின் அளவு குறையும்போதுதான் ஏற்படும். இதயத்தின் துடிக்கும் திறனை (Heart Pumping Capacity) கட்டாயம் சோதனை செய்துகொள்ளுங்கள். ஈசிஜி, எக்கோ போன்ற பரிசோதனைகள் மூலம் இவற்றைக் கண்டறியலாம். சோதனையின் முடிவில் இதயச் செயலிழப்பு பிரச்னை ஏற்பட்டிருக்கிறது என்றால், இப்போது சாப்பிட்டுவரும் மாத்திரைகளை மாற்றவேண்டியிருக்கும்.

- குகன்நாத், இதய அறுவை சிகிச்சை நிபுணர்

உங்கள் கேள்விகளை அனுப்பவேண்டிய முகவரி: கன்சல்ட்டிங் ரூம், டாக்டர் விகடன், 757, அண்ணா சாலை, சென்னை-600 002.