பயணம் என்பது அன்றாட வாழ்க்கையின் ஓர் அங்கமாகிவிட்ட இந்தக் காலத்தில், சிலர் நெடுஞ்சாலையில் வாகனம் ஓட்ட பயப்படுவார்கள்; சிலர் பயணம் செய்யவே பயப்படுவார்கள். வாகனங்களின் மீதான பயத்துக்கு `மோட்டார் போபியா’ என்று பெயர். இந்த வகை பயத்துக்கு உள்ளானவர்களின் வாழ்க்கை அதிக சிக்கலுக்குள்ளாகும்.

காரணங்கள்: கடந்தகாலத்தில் ஏற்பட்ட எதிர்மறையான அனுபவம் அல்லது மோசமான விபத்துகளில் சிக்கியிருந்தால் இந்த பயம் ஏற்படலாம். பெற்றோர் அல்லது நண்பர்களால் வாகனங்களைப் பற்றி சிறு வயதில் ஏற்படுத்தப்பட்ட தாக்கம், போக்குவரத்து நெரிசல் மீதான நடுக்கம், அட்ரீனல் குறைபாடுகள், நரம்புக் கோளாறுகள், வன்முறை அல்லது மோசமான விபத்துகள் பற்றியச் செய்திகளை வாசித்தது, திரைப்படங்களைப் பார்த்து வாகனம் ஓட்டுவதைப் பற்றிய எதிர்மறையான எண்ணங்களைக் கொண்டிருப்பது போன்றவை இந்த பயத்தைத் தூண்டும் காரணங்கள்.

அறிகுறிகள்: பொதுவான அறிகுறிகள் அதிகமில்லை. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொருவிதமான அறிகுறிகள் தென்படலாம். பெரும்பாலும் இந்த பயத்தை வெளிக்காட்ட மாட்டார்கள். அதனால், இதுதான் காரணம் என்பதைக் கண்டறிவதே சிரமமான விஷயம். வாகனங்கள் ஓட்ட வற்புறுத்தும்போது இவர்களுக்கு அதிர்ச்சி, நடுக்கம், வாய் உலர்ந்துபோதல், இதயத்துடிப்பு அதிகமாதல், சீரற்ற சுவாசம், மார்புவலி போன்றவை ஏற்படும். நெடுஞ்சாலையில் செல்ல பயப்படுபவர்கள் அந்த வழியைத் தவிர்த்துவிட்டு, மாற்றுவழியைத் தேர்வு செய்வார்கள்.

சிகிச்சை: ஹிப்னோ தெரபி மற்றும் புலனுணர்வு சார்ந்த நடவடிக்கை சிகிச்சை இந்தப் பிரச்னைக்குத் தீர்வாகப் பரிந்துரைக்கப்படுகிறது. இந்த பயத்தால் பாதிக்கப்பட்டவர்கள் தங்கள் பயத்தை எதிர்கொள்வதே சிறந்த வழி. எதிர்மறையான எண்ணங்களைத் தவிர்த்துவிட்டு நேர்மறை எண்ணங்களை வளர்த்துக்கொள்ள வேண்டும். இந்த பயம் ஒரு மனத்தடை மட்டுமே என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும்.

- இ.நிவேதா - படம்: மதன்சுந்தர்