40 வயது நிறைந்த அவருக்கு சர்க்கரைநோய். ‘ஏதாவது ஒரு விளையாட்டில் தொடர்ச்சியாக ஈடுபட்டால் ஆரோக்கியத்துக்கு நல்லது’ என்று சிலர் ஆலோசனை சொல்ல, சமீபகாலமாக பாட்மின்ட்டன் விளையாட ஆரம்பித்திருக்கிறார். ஒருநாள் விளையாடிக் கொண்டிருக்கும்போது திடீரென்று கண்கள் இருட்டிக்கொண்டு வர, மயங்கிக் கீழே விழுந்துவிட்டார். உடனிருந்தவர்கள் பதறிப்போய் அவரை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றிருக்கிறார்கள். ஆனால், அவர் மாரடைப்பால் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். சர்க்கரைநோய், ரத்த அழுத்தம் போன்ற பிரச்னை இருப்பவர்கள் பாட்மின்ட்டன், டென்னிஸ் போன்ற விளையாட்டுகளில் ஈடுபடக் கூடாதா... அப்படி ஈடுபட்டால் உயிரிழப்பு ஏற்பட வாய்ப்புள்ளதா?

இதயநோய் மருத்துவர் லட்சுமணதாஸிடம் கேள்விகளை முன்வைத்தோம். விரிவாகப் பேசினார் அவர்.

``நீங்கள் குறிப்பிட்ட நபருக்கு சர்க்கரைநோய் இருந்ததாகச் சொல்லியிருக்கிறீர்கள். கூடவே ரத்த அழுத்தம், கொலஸ்ட்ரால் போன்றவை இருந்திருக்கலாம். அதற்கான மருந்துகளை அவர் சரியாக எடுத்துக்கொண்டிருந்தாரா என்பது தெரியவில்லை. அத்துடன், முழுமையான உடல் பரிசோதனையை அவர் செய்துகொண்டாரா என்பதையும் கவனிக்க வேண்டும்.

இதயம் சார்ந்த நோய்களுக்கான உடல் பரிசோதனை என்றதும் ஈ.சி.ஜி மட்டுமே போதும் என்ற எண்ணம் நம்மிடையே இருக்கிறது. ஆனால் ஈ.சி.ஜி என்பது நம்முடைய உடல் ஓய்வாக இருக்கும்போது எடுக்கப்படும் ஒரு பரிசோதனை. ட்ரெட்மில் (Treadmill) பரிசோதனை செய்தால்தான் ஒருவர் உடற்பயிற்சி செய்யும்போது மாறுதல் ஏதும் தென்படுகிறதா, அவருக்கு இதயத்தில் பிரச்னை இருக்கிறதா என்பதை அறிய முடியும்.

குறிப்பாக, குடும்பத்தில் ரத்த உறவுகளில் யாருக்கேனும் இதயநோய் இருந்தால், கொஞ்சம் உஷாராகி நம்முடைய இதய ஆரோக்கியத்தைக் கண்டறிய வேண்டும். பரிசோதனைகள் செய்து `இதயம் ஆரோக்கியமாக இருக்கிறது’ என்று மருத்துவர் சான்றளித்த பிறகே பாட்மின்ட்டன் போன்ற தீவிரமான பங்கெடுப்புள்ள (Intensive Activity) விளையாட்டுகளை விளையாடலாம்.

ஃபிட்னெஸ் சார்ந்த எந்தவொரு விளையாட்டு மற்றும் உடற்பயிற்சிகளைச் செய்வதற்கு முன்னரும் சின்னச் சின்ன எளிமையான விளையாட்டு, உடற்பயிற்சியைச் செய்ய வேண்டும். அவற்றை உடல் ஏற்றுக்கொள்கிறதா என்பதைப் பார்க்க வேண்டும். இப்படி கொஞ்சம் கொஞ்சமாக நம் உடலை விளையாட்டுக்காகத் தயார் செய்ய வேண்டுமே தவிர திடீரென்று ஒரே நாளில் குறிப்பிட்ட ஒரு விளையாட்டைத் தீவிரமாக விளையாட ஆரம்பிக்கக் கூடாது.

சர்க்கரைநோய், ரத்த அழுத்தம் என்று எந்தவொரு நோய்க்கும் மருந்துகளைச் சரியான நேரத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும். ஒவ்வொரு வருடமும் மறக்காமல் சர்க்கரைநோய், ரத்த அழுத்தம் போன்ற வற்றுக்கான பரிசோதனைகளைச் செய்ய வேண்டும். வருடம் முழுவதும் ஏதேனும் சுபநிகழ்வுகளுக்குச் செல்லும் வாய்ப்பு உண்டாகும். அங்கே ஸ்வீட் சாப்பிட்டிருப்போம்; இல்லையென்றால் ஊறுகாயைச் சுவைத்துச் சாப்பிட்டிருப்போம். இது போன்ற சின்னச் சின்ன நிகழ்வுகள்கூட நம்முடைய சர்க்கரை மற்றும் ரத்த அழுத்தத்தின் அளவை சட்டென ஏற்றம் காணச் செய்திருக்கும். ஆகவே, சீரான இடைவெளிகளில் மருத்துவப் பரிசோதனை செய்யவேண்டியது அவசியம்.

உடலில் சர்க்கரை அளவு மிக அதிகமாகும்போது இதயத் துடிப்பு சார்ந்த பிரச்னைகள் உண்டாகலாம். திடீர் மரணம் ஏற்படவும் வாய்ப்புள்ளது. பாட்மின்ட்டன் விளையாடும்போது மரணம் அடைந்ததாக நீங்கள் குறிப்பிட்ட அந்த நபருக்கு அந்த நேரத்தில் உடலில் சர்க்கரை அளவு மிக அதிகமாக இருந்திருக்கலாம். அவருடைய இதய ஆரோக்கியம் எந்த அளவுக்கு இருக்கிறது என்பதை அவர் பரிசோதனை செய்து பார்க்காமல் இருந்திருக்கலாம்.

இது போன்ற சூழலில் அவர் பாட்மின்ட்டன் விளையாட்டை மிகவும் தீவிரமாக விளையாடி இருக்கலாம். இதனால் இதயத்துக்கு அதிகமாக வேலைசெய்யும் சூழல் வந்திருக்கலாம். ரத்தக் குழாய்களில் அடைப்பு இருந்து, அதனால் இதயத் தசைகளுக்குச் செல்லும் ரத்தத்தின் அளவு குறைந்து போய் இதயத்துடிப்பு சார்ந்த பிரச்னைகள் உண்டாகி அவருக்கு திடீர் மரணம் ஏற்பட்டிருக்கலாம்.

சர்க்கரை நோயாளிகள், ரத்த அழுத்தம் உள்ளவர்கள் பயப்படாமல் விளையாடலாம். ஆனால் உடலின் சர்க்கரை மற்றும் ரத்த அழுத்தத்தின் அளவு, இதய ஆரோக்கியம் ஆகியவற்றை முறையாகப் பரிசோதனை செய்ய வேண்டும். ரத்த அழுத்தம், சர்க்கரைநோய்க்குச் சரியாக மருந்து எடுத்துக்கொள்வதுடன் நோயைக் கட்டுக்குள் வைத்துக் கொண்டு விளையாட வேண்டியது மிகவும் அவசியம்.

எந்த விளையாட்டையும் முறையாக விளையாடினால் தசைகளின் வலிமை அதிகரிக்கும். எலும்புகள் வலுப்பெறும். இதனால் 40 வயதுக்கு மேல் வரும் ‘ஆஸ்டியோபோரோசிஸ்’ போன்ற நோய்களைத் தடுக்கலாம். அதுமட்டுமல்ல, இது போன்ற உடற்பயிற்சிகள், விளையாட்டுகள் ஒருவரது ரத்த அழுத்தத்தின் அளவை 8 முதல் 12 மில்லிமீட்டர் வரை குறைக்கின்றன.

பாட்மின்ட்டன், டென்னிஸ் விளையாட்டுகள் மட்டுமல், எந்த உடற்பயிற்சியும் உடலுக்கு நல்லதே. ஓட முடியவில்லை என்றால் வேகமாக ஜாகிங் செல்லுங்கள்; வேகமாக ஜாகிங் செல்ல முடியவில்லையா, பிரிஸ்க் வாக்கிங் செல்லலாம். அது முடியவில்லையா, நடக்கலாம். ஒரே நேரத்தில் நடக்க முடியவில்லையா, இடைவெளிவிட்டு நடங்கள். உங்களால் எதைச் செய்ய முடியுமோ அதைச் செய்யுங்கள். சும்மா இருப்பதைத் தவிர மற்ற அனைத்துமே நல்லதுதான்.

எடுத்தவுடன் தீவிரமாக விளையாட ஆரம்பிக்கும்போது இதயத்துக்கு திடீரென்று பளு அதிகமாகும். அதனால் `வார்ம்-அப்’ போன்ற பயிற்சிகளைச் செய்துவிட்டு அதன் பிறகு விளையாட ஆரம்பிக்க வேண்டும். அதேபோல விளையாட ஆரம்பித்த முதல் நாளிலேயே வியர்க்க விறுவிறுக்க மிகத் தீவிரமாக விளையாடக் கூடாது. இந்த திடீர் நிகழ்வை இதயம் தாங்காது. அதனால் கொஞ்சம் கொஞ்சமாக விளையாடும் நேரத்தை பத்து நிமிடங்கள், பதினைந்து நிமிடங்கள் என்று அதிகரிக்கலாம். இதனால் இதயம் பாதுகாக்கப்படும். கைகால் மூட்டுகளில் பாதிப்பு ஏற்படாமல் தடுக்கப்படும். உடல்திறனை அதிகம் பயன்படுத்தும் டென்னிஸ், ஸ்குவாஷ் போன்ற விளையாட்டுகளை விளையாடும்போது இடையிடையே தண்ணீர் குடிக்கவேண்டியது அவசியம். அதேபோல ஒரு நாளைக்கு இரண்டு முதல் மூன்று கிலோமீட்டர் தூரம் ஜாகிங் செல்பவர்களும் இடையிடையே கட்டாயம் தண்ணீர் குடிக்க வேண்டும். இது உடலில் நீரிழப்பு ஏற்படாமல் தடுக்கும்.

பெற்றோருக்கு இதயநோய் பாதிப்புகள் இருந்தால், மரபியல்ரீதியாகக் குழந்தைகளுக்கும் இதயநோய் வருவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன. எனவே, பெற்றோருக்கு இதயநோய் பாதிப்பு இருப்பவர்கள் தங்களது 20-வது வயதில் பரிசோதித்துத் தெரிந்துகொள்வது நல்லது. பரிசோதனையில் நார்மல் என்று முடிவு வந்தால், அவர்களுக்கு 40 வயதாகும்வரை ஐந்து வருடங்களுக்கு ஒருமுறை ரத்த அழுத்தம், சர்க்கரை அளவு, கொலஸ்ட்ரால் மற்றும் இதயப் பரிசோதனைகளைச் செய்துகொள்ளவேண்டியது அவசியம். 40 வயதுக்குப் பிறகு ஆண்டுக்கு ஒருமுறை பரிசோதனை செய்ய வேண்டும். அத்துடன், முறையான உணவுப்பழக்கம், உடற்பயிற்சிகளை மேற்கொண்டால் இதயநோய் வராமல் தடுக்க முடியாவிட்டாலும் நோய் வருவதைத் தள்ளிப்போட முடியும்.

விளையாடும்போது திடீரென்று நெஞ்சுவலி வந்தால்?

உடனடியாக விளையாடுவதை நிறுத்திவிட வேண்டும். Intensive Games எனப்படும் பாட்மின்ட்டன், டென்னிஸ் போன்ற தீவிரமான விளையாட்டுகளில் முனைப்புடன் ஈடுபடும்போது இதயத்தின் ரத்தக்குழாய்களில் உள்ள கொழுப்பு உடைந்து வெளியே வரும். அந்தக் கொழுப்பு ரத்தத்தை உறையவைக்கும் தன்மை படைத்தது. இதனால்தான் மாரடைப்பு ஏற்படுகிறது. இதயம் துடிப்பதில் பிரச்னைகள் ஏற்பட்டால் உடனடி மரணம் உண்டாக வாய்ப்புகள் இருக்கின்றன. எனவே, இது போன்ற விளையாட்டுகளை விளையாடும்போது அளவுக்கு அதிகமான வியர்வை, கிறுகிறுப்பு, மயக்கம், படபடப்பு, வலி அல்லது அசௌகர்ய உணர்வு போன்ற அறிகுறிகள் வெளிப்பட்டால் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். அப்போது உடனடியாக விளையாடுவதை நிறுத்திவிட்டு அருகே உள்ள மருத்துவமனைக்குச் செல்ல வேண்டும். ஈ.சி.ஜி எடுத்துப்பார்த்து மாரடைப்பு மற்றும் இதயத்துடிப்பு பற்றி அறிந்துகொள்ளவேண்டியது அவசியம்.

உயிர் காக்கும் உன்னதமான முதலுதவி!

விளையாடிக்கொண்டிருக்கும்போது ஒருவர் கீழே விழுந்து மயக்கமடைந்தால் அவருடன் விளையாடுபவர்கள் `கார்டியாக் மசாஜ்’ எனப்படும் முதலுதவி செய்து பாதிக்கப்பட்டவரைப் பாதுகாக்க முடியும். எனவே `கார்டியாக் மசாஜ்’ எப்படிச் செய்ய வேண்டும் என்பதை விளையாட்டில் ஈடுபடும் எல்லோரும் கட்டாயம் தெரிந்துகொள்ள வேண்டும். சாலையில் நடந்துபோய்க் கொண்டிருக்கும் ஒருவர் திடீரென்று மயங்கி விழுந்தால்கூட இந்த `கார்டியாக் மசாஜ்’ மூலம் அவரைக் காப்பாற்ற முடியும்.’’

`கார்டியாக் மசாஜ்’ செய்வதெப்படி?

திடீரென்று சாலையில் ஒருவர் மயக்கமடைந்து கீழே விழுகிறார் அல்லது உங்களது உறவினர் அல்லது நண்பருக்கு இவ்வாறு நிகழ்கிறது என்று வைத்துக்கொள்வோம். உடனே ஓடிச் சென்று அவருக்கு உதவி செய்ய நீங்கள் நினைக்கிறீர்களா... மயக்கமடைந்த நபர் மூச்சின்றி அல்லது அவ்வப்போது பெருமூச்சுவிட்டபடி இருக்கிறாரா... உடனடியாக மருத்துவ உதவிவேண்டி அருகில் உள்ளவர்களிடம் ஆம்புலன்ஸை அழைக்கச் சொல்லுங்கள். ஆம்புலன்ஸ் வருவதற்குள் நீங்கள் ‘கார்டியாக் மசாஜ்’ எனப்படும் மருத்துவ முதலுதவியைச் செய்ய ஆரம்பியுங்கள்.

முதலில் பாதிக்கப்பட்டவரை நேராகப் படுக்கவையுங்கள்.

அவருக்குப் பக்கவாட்டில் முட்டியிட்டு அமர்ந்துகொள்ளுங்கள்.

உங்களது இரண்டு முழங்கைகளையும் மடக்காமல் நேராக வைத்துக்கொண்டு மார்பின் நடுப்பகுதியில் இரண்டு கைகளையும் ஒன்றின் மீது ஒன்று வையுங்கள். (கவனம்.....முழங்கைகள் மடங்கக் கூடாது)

கைகளை நடுமார்பில் வைத்துவிட்டீர்களா? இனி இந்த இரண்டு கைகளைக்கொண்டு மார்பை அழுத்த (Compression) ஆரம்பியுங்கள். நீங்கள் கொடுக்கும் இந்த அழுத்தம் எப்படி இருக்க வேண்டும் தெரியுமா? ஒவ்வொரு முறையும் நீங்கள் மார்பை இரண்டு இன்ச் அளவுக்கு உள்ளே அழுத்த வேண்டும். இப்படி விரைவாக முப்பது தடவை மார்பை அழுத்த வேண்டும். ஒவ்வொரு முறை நீங்கள் மார்பை இரண்டு இன்ச் அளவுக்கு உள்ளே அழுத்தி முடிக்கும்போதும் மார்பானது முழுவதுமாக மேலெழும்பி வரும். இதற்குப் பெயர்தான் கார்டியாக் மசாஜ்.

Rescue Breathing செய்வதெப்படி?

மேலே குறிப்பிட்டதுபோல விரைவாக மார்புக்கு முப்பது அழுத்தங்களைக் கொடுத்த பிறகு பாதிக்கப்பட்டவரின் தலையை உயர்த்தி, தாடையை விலக்கி வாயைத் திறக்க வேண்டும். பாதிக்கப்பட்டவரின் மூக்கைப் பிடிக்க வேண்டும்.(மூச்சுப்பயிற்சி சமயத்தில் நம் மூக்கைப் பிடிப்போமே அதுபோல. அப்போதுதான் நாம் ஊதுகிற காற்று மூக்குத் துவாரங்கள் வழியாக வெளியே சென்றுவிடாமல் இருக்கும்.)

பிறகு, அவரின் வாயோடு உங்கள் வாயைவைத்து உங்கள் வாயிலிருந்து காற்றை அவரின் வாய்க்குள் ஒரு விநாடி ஊத வேண்டும். இப்படி ஒரு விநாடி என்ற அளவில் இரண்டு முறை காற்றை உங்கள் வாயிலிருந்து பாதிக்கப்பட்டவரின் வாய்க்குள் செலுத்த வேண்டும். இதற்குப் பெயர்தான் ‘Rescue Breathing’. Rescue Breathing மூலம் பாதிக்கப்பட்டவரின் வாயில் உங்கள் வாயைவைத்து இரண்டு முறை காற்றைச் செலுத்திவிட்டீர்களா? அடுத்து மறுபடியும் முப்பது முறை கார்டியாக் மசாஜ் மூலம் மார்புக்கு அழுத்தம் கொடுங்கள். அடுத்து இரண்டு முறை Rescue Breathing, மறுபடியும் முப்பது முறை கார்டியாக் மசாஜ்... இப்படித் தொடர்ந்து சுழற்சிமுறையில் செய்துவர வேண்டும். பாதிக்கப்பட்டவர் சுயநினைவை அடைந்து எழும்வரை அல்லது பாதிக்கப்பட்டவருக்கு முறையான மருத்துவ உதவி கிடைக்கும்வரை இப்படித் தொடர்ந்து செய்யவேண்டியது அவசியம்.

ஒவ்வொரு நிமிடமும் பொன் போன்றது!

இந்த Rescue Breathing என்கிற வாயில் வாய் வைத்துச் செய்யப்படும் முதலுதவியை முன்பின் தெரியாத மனிதர்களுக்குச் செய்வதற்கு பலருக்கும் தயக்கம் இருக்கலாம். அப்படிப்பட்ட சூழ்நிலையில் கார்டியாக் மசாஜ் என்று சொல்லப்படும் மார்புக்கு அழுத்தம் கொடுக்கும் முதலுதவியை மட்டுமாவது செய்யலாம். அதுவும் எப்படி? ஒரு நிமிடத்துக்கு குறைந்தது நூறு முறையாவது மார்புக்கு அழுத்தம் கொடுக்கவேண்டும். பொதுவாக ஒருநபர் மயக்கமடைந்து கீழே விழுந்தால் அவர் கீழேவிழுந்த நான்குநிமிடங்களுக்குள் கார்டியாக் மசாஜ் என்கிற இந்த முதலுதவியைச் செய்தால், மூளை சேதமாகாமல் தடுக்கலாம். காலதாமதம், மூளைச்சாவுவரை கொண்டுபோய்விட்டுவிடும்.

குழந்தைகளுக்கான முதலுதவி இது!

இதில் கவனிக்கவேண்டிய விஷயம் என்னவென்றால் ஒன்பது வயதுக்குக் கீழிருக்கும் குழந்தைகள் திடீரென மூச்சுப் பேச்சின்றி மயக்கமடைந்தால் கார்டியாக் மசாஜ், Rescue Breathing ஆகிய இரண்டு முதலுதவிகளுமே கட்டாயம் கொடுக்கப்பட வேண்டும். குழந்தைகளுக்கு கார்டியாக் மசாஜ் செய்யும்போது கைகளால் மார்பை அழுத்துவோம் இல்லையா... அப்படி மார்பை அழுத்தும்போது அவர்களது மார்பின் அளவில் மூன்றில் ஒருபகுதி உள்ளேசெல்லும் அளவுக்கு அழுத்த வேண்டும்.

- சு.கவிதா - படங்கள்: மதன்சுந்தர்