Published:Updated:

தொற்று நோய்களின் உலகம்!

தொற்று நோய்களின் உலகம்!
பிரீமியம் ஸ்டோரி
தொற்று நோய்களின் உலகம்!

ஹெல்த் - 21வி.ராமசுப்பிரமணியன், தொற்றுநோய் சிறப்பு மருத்துவர்

தொற்று நோய்களின் உலகம்!

ஹெல்த் - 21வி.ராமசுப்பிரமணியன், தொற்றுநோய் சிறப்பு மருத்துவர்

Published:Updated:
தொற்று நோய்களின் உலகம்!
பிரீமியம் ஸ்டோரி
தொற்று நோய்களின் உலகம்!

ஹெச்.ஐ.வி கிருமி உடலில் ஊடுருவி என்ன மாதிரியான பாதிப்புகளை உருவாக்கும் என்பது பற்றி, கடந்த இதழில் விரிவாகப் பார்த்தோம். இன்னும் சில விஷயங்களை உள்வாங்கிக்கொண்டால் ஹெச்.ஐ.வி-யின் பாதிப்பை முழுமையாக விளங்கிக்கொள்ள முடியும். நமது ரத்தத்திலுள்ள வெள்ளை உயிரணுக்களை இலக்குவைத்துத்தான் ஹெச்.ஐ.வி கிருமி தாக்குதலைத் தொடங்குகிறது. வெள்ளை உயிரணுக்களில் ஐந்து வகைகள் உள்ளன. அவை நியூட்ரோபில்ஸ் (Neutrophils), லிம்போசைட்ஸ் (Lymphocytes), ஈசினோபில்ஸ் (Eosinophils), பேஸோபில்ஸ் (Basophils), மோனோசைட்ஸ் (Monocytes).

தொற்று நோய்களின் உலகம்!

லிம்போசைட்ஸ் அணுக்களில் இரண்டு வகைகள் உள்ளன. `சிடி4’, `சிடி8’ என்பார்கள். இந்த சிடி4தான்  ஹெச்.ஐ.வி வைரஸின் இலக்கு. பொதுவாக, ஆரோக்கியமான மனிதர்களுக்கு 800 முதல் 1,500வரை இந்த சிடி4 அணுக்களின் எண்ணிக்கை இருக்கும். இந்த எண்ணிக்கை 500-ஆகக் குறையும்வரை உடலில் பெரியளவில் பாதிப்புகள்  ஏற்படாது.  ஹெச்.ஐ.வி கிருமி பாதிக்கப்பட்டவருக்கு சிடி4  எண்ணிக்கை 500-க்கு வர ஐந்து முதல் ஆறு வருடங்கள்வரை ஆகலாம். அதுவரை பாதிக்கப்பட்ட மனிதர், ஆரோக்கியமாகத்தான் இருப்பார். 500-க்கும் கீழே குறையும்போது சிறு சிறு பாதிப்புகள் ஏற்படத் தொடங்கும். பேதி, வாயில் புண், அக்கியெல்லாம் ஏற்படலாம். இவையெல்லாம் உடம்பில் நோய் எதிர்ப்பு சக்தி குறைவதற்கான அறிகுறிகள்.

இன்னொரு விஷயத்தையும் புரிந்துகொள்ள வேண்டும். இந்த பாதிப்புகளெல்லாம் ஹெச்.ஐ.வி  பாதிக்காதவருக்கும்கூட ஏற்படலாம். ஆனால், ஹெச்.ஐ.வி பாதித்தவர்களுக்கு அடிக்கடி ஏற்படும். பாதிப்பின் தன்மை சற்று கூடுதலாக இருக்கும். இந்த சிடி4-ன் எண்ணிக்கை 200-க்கும் கீழே போகும்போதுதான் தீவிரமான நிலை உருவாகும். உடலின் எதிர்ப்பு சக்தி குறைபாடு வெளிப்படையாகத் தெரிய ஆரம்பிக்கும். பாதிப்புகளின் தன்மையும் மோசமாக இருக்கும். தீவிரமான பேதி, எடை குறைதல், கடுமையான காய்ச்சல், பிற தொற்றுநோய்கள் ஏற்படத் தொடங்கும்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தொற்று நோய்களின் உலகம்!



சிடி-4 எண்ணிக்கை 100-க்கும் குறைவாகும்போது நிலைமை கவலைக்கிடமாகிவிடும். இதுதான் ஹெச்.ஐ.வி கிருமியின் பிராசஸ். ஆக, ஒரு விஷயத்தைத் தெளிவாகப் புரிந்துகொள்ள வேண்டும். நேரடியாக, ஹெச்.ஐ.வி கிருமியால் யாரும் உயிரிழப்பதில்லை. அந்தக் கிருமி உடலின் எதிர்ப்பு சக்தியை குறிவைத்துக் குறைக்கிறது. நோய்கள் வரிசைகட்டி உடம்பில் ஏறுகின்றன. பாதிப்பு தீவிரமாகிறது. அதுதான் உயிரிழப்புக்குக் காரணமாகிறது. அதனால்தான் ஹெச்.ஐ.வி பாதித்த நோயாளிகளை அவ்வளவு எளிதாக அடையாளம்காண முடிவதில்லை.

தொற்று நோய்களின் உலகம்!

தீவிரமான காய்ச்சல் இருந்தால், மருத்துவர்கள் காய்ச்சலுக்குத்தான் சிகிச்சையளிப்பார்கள். பேதியானால் அதற்கான வைத்தியம்தான் செய்யப்படும். ஒருவருக்குத் தீவிரமாக பேதியாகிறது என்பதற்காக அவருக்கு ஹெச்.ஐ.வி பாதிப்பு இருக்கலாம் என்று எப்படி கணிக்க முடியும்? ஹெச்.ஐ.வி பாதித்தவருக்கு ஏற்படும் எல்லா நோய்களும் பாதிக்காதவர்களுக்கும் ஏற்படலாம். இந்த பாதிப்புகளை மட்டும்வைத்து ஹெச்.ஐ.வி பாதிப்பு இருக்கக்கூடும் என்று சொல்ல முடியாது. இதுதான் மருத்துவத்தில் இருக்கிற பெரிய சிக்கல்.

தொற்று நோய்களின் உலகம்!

காசநோய் இதில் எந்தக் கட்டத்திலும் தாக்கலாம். சிடி4 எண்ணிக்கை 500-ஆக இருந்தாலும் ஏற்படலாம். 300-ஆக இருந்தாலும் ஏற்படலாம். உதாரணமாக,  ஒருவருக்கு மான்ட்டோ டெஸ்ட் (Mantoux Test) செய்கிறோம் என்று வைத்துக்கொள்ளுங்கள். இந்த டெஸ்ட்டில் ‘பாசிட்டிவ்’ என்று ரிசல்ட் வந்தால், ‘உடல் காசநோய் கிருமிகளை எப்போதோ சந்தித்திருக்கிறது’ என்று பொருள். `100 பேருக்கு பாசிட்டிவ் என்று ரிசல்ட் வந்தால், எட்டு பேருக்கு அவர்களின் ஆயுளுக்குள் கண்டிப்பாக காசநோய் வர வாய்ப்பிருக்கிறது’ என்கிறது ஓர் ஆய்வு. ஆனால், ஹெச்.ஐ.வி பாதித்த 100 பேருக்கு இந்த டெஸ்ட்டில் ‘பாசிட்டிவ்’ என்று வந்தால், ஆண்டுக்கு எட்டு பேருக்கு கண்டிப்பாகக் காசநோய் ஏற்பட வாய்ப்பிருக்கிறது.

என்ன குழப்புகிறேனா..? இப்படிப் புரிந்துகொள்ளுங்கள்... மான்ட்டோ சோதனையில், ‘பாசிட்டிவ்’ என்று ஹெச்.ஐ.வி பாதித்த ஒருவருக்கு ரிசல்ட் வந்துவிட்டால், 12 வருடத்துக்குள் அவருக்குக் காசநோய் வந்துவிடும். அப்படித்தான் இதுவரையிலான ஆய்வுகள் சொல்கின்றன. ஆக, காசநோயும் ஹெச்.ஐ.வியும் நெருங்கிய நண்பர்கள் அல்லது காதலர்கள். 

சரி... ஹெச்.ஐ.வி விஷயத்தில் இன்னொரு பெரிய குழப்பம் நிலவுகிறது. மருத்துவ இதழ்களைக்கூட அந்தக் குழப்பம் சூழ்ந்திருக்கிறது. ஹெச்.ஐ.வி என்று எழுதுவது சரியா... எய்ட்ஸ் என்று எழுதுவது சரியா? இந்தக் கேள்விக்கு அடுத்த இதழில் விடை தேடுவோம்!

 - களைவோம்... 

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism