Published:Updated:

நிலம் முதல் ஆகாயம் வரை... முத்திரை சிகிச்சை

நிலம் முதல் ஆகாயம் வரை... முத்திரை சிகிச்சை
பிரீமியம் ஸ்டோரி
நிலம் முதல் ஆகாயம் வரை... முத்திரை சிகிச்சை

யோ.தீபா, இயற்கை மருத்துவ துணைப் பேராசிரியர்ஹெல்த்

நிலம் முதல் ஆகாயம் வரை... முத்திரை சிகிச்சை

யோ.தீபா, இயற்கை மருத்துவ துணைப் பேராசிரியர்ஹெல்த்

Published:Updated:
நிலம் முதல் ஆகாயம் வரை... முத்திரை சிகிச்சை
பிரீமியம் ஸ்டோரி
நிலம் முதல் ஆகாயம் வரை... முத்திரை சிகிச்சை

நோய்களை குணப்படுத்தவும், வராமல் முன்கூட்டியே தடுக்கவும் பயன்படுவது முத்திரை சிகிச்சை. இது, விரல்களைக்கொண்டு செய்யப்படுவது. யோகா, பிராணாயாமம், தியானம் மற்றும் பரதநாட்டியம் போன்றவற்றின்போது கைவிரல்களை அழுத்திப்பிடிக்கும் ஒரு நிலைதான் முத்திரை; உடலிலுள்ள உறுப்புகளுக்கு ஆற்றலைக் கொண்டு செல்லும் ஒரு வழிமுறை. மனித உடல் நிலம், நீர், காற்று, ஆகாயம், நெருப்பு என பஞ்ச மகா பூதங்களை உள்ளடக்கியது. இவற்றில் எது ஒன்று சீராகச் செயல்படவில்லையென்றாலும் பிரச்னை ஏற்படும். அப்போது முத்திரை செய்வதால், நரம்பு மண்டலம் வழியாக ஆற்றல் தூண்டப்படும். மனம், உடல்ரீதியாக ஆற்றல் குறையும்போது முத்திரை செய்வதால் செல்கள் புதுப்பிக்கப்படும்.  

நிலம் முதல் ஆகாயம் வரை... முத்திரை சிகிச்சை

ஒவ்வொரு விரலும் பஞ்ச மகா பூதங்களின் வரிசையில் பிரிக்கப்பட்டிருக்கிறது. அதன் அடிப்படையில் கட்டைவிரல், `நெருப்பு’ எனவும், ஆள்காட்டி விரல், `காற்று’ எனவும், நடுவிரல், `ஆகாயம்’ எனவும், மோதிர விரல், `நிலம்’ எனவும், சுண்டு விரல் `நீர்’ எனவும் பிரிக்கப்பட்டிருக்கிறது. அதற்குரிய முறைகளோடு விரல்களின் நுனிகளைக் கோத்து முத்திரை செய்வதால், உடலில் உள்ள பஞ்ச பூதங்கள் சமச்சீரடையும். மன ஆற்றல் மற்றும் படைப்பாற்றல் அதிகரிப்பதுடன் மனரீதியான பிரச்னைகளைப் போக்க உதவும். சில முத்திரை வகைகளைப் பார்ப்போம்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

நிலம் முதல் ஆகாயம் வரை... முத்திரை சிகிச்சை

ஞான முத்திரை

ஆள்காட்டி விரலை, கட்டை விரலின் நுனியில்வைத்து லேசாக அழுத்தம் கொடுத்து, உள்ளங்கை கீழ் நோக்கி இருக்கும்படி வைத்தால், அது ஞான முத்திரை. இதைச் செய்வதால் அறிவாற்றல் அதிகரிக்கும்; மனரீதியான பாதிப்புகள் சரியாகும்; கெட்ட சிந்தனைகள், மோசமான பழக்கவழக்கங்கள் நீங்கும்; மகிழ்ச்சியான மனநிலை ஏற்படும். இதே நிலையில் உள்ளங்கையை மேல் நோக்கி வைத்தால் அது சின் முத்திரை. இதைச் செய்வதால் தூக்கமின்மை, மனஅழுத்தம், ஞாபகமறதி, கவனமின்மை, உயர் ரத்த அழுத்தம் போன்ற பாதிப்புகளுக்குத் தீர்வு கிடைக்கும்.

நிலம் முதல் ஆகாயம் வரை... முத்திரை சிகிச்சை

சூன்ய முத்திரை

நடு விரலை கட்டை விரலின் அடிப்பகுதியில் வைத்து அழுத்திப் பிடித்தால், அது சூன்ய முத்திரை.  இதைச் செய்வதால் தலைச்சுற்றல் (Vertigo), கிறுகிறுப்பு சரியாகும். தைராய்டு கோளாறுகள், காதில் ஏற்படும் சிறு சிறு பிரச்னைகள் நீங்கும்.  கட்டை விரல் நுனியில் நடு விரல் மற்றும் மோதிர விரலை வைத்தபடி ஆள்காட்டி விரலைக் கட்டை விரலின் அடிப்பகுதியில் வைக்கும் நிலை, `அபான முத்திரை’ எனப்படும். இதைச் செய்வதால், வயிறு மற்றும் குடல் பகுதியிலுள்ள கழிவுகள் வெளியேற்றப்படும். இதனால் நாள்பட்ட மலச்சிக்கல் நீங்கும். சிறுநீர்ப் பிரச்னைகளைச் சரிசெய்வதுடன், வாய்வுக் கோளாறைப் போக்கவும் இந்த முத்திரை பயன்படும்.

நிலம் முதல் ஆகாயம் வரை... முத்திரை சிகிச்சை

பிராண முத்திரை

`பிராண முத்திரை’ என்பது கட்டை விரல் நுனியை மோதிர விரல், சுண்டு விரல் நுனியால் தொடும் நிலை. மீதமுள்ள விரல்கள் மேல் நோக்கி இருக்க வேண்டும். இதைச் செய்வதால் உடல், மனம் வலிமைப்படும். ரத்தத்திலுள்ள ஃப்ரீ ரேடிக்கல்ஸ் அகலும். கண், நரம்புக்  கோளாறுகள் நீங்கும். கட்டை விரலை மடித்து உள்ளங்கையில் வைத்து மற்ற நான்கு விரல்களையும் அதன் மேல் வைத்து இன்னொரு கையால் அதை மூடினால், அது `பிரம்ம முத்திரை.’ இதைச் செய்வதால் நுரையீரலுக்கு ஆக்சிஜன் செல்லும் செயல்பாடு சீராக நடக்கும். கட்டை விரலை மடித்து உள்ளேவைத்து மற்ற நான்கு விரல்களைக்கொண்டு மட்டும் மூடினால் அது `அதி முத்திரை.’ இதைச் செய்வதால் நுரையீரலுக்கு ஆக்சிஜனைக் கொண்டு செல்லும் நரம்பு மண்டலம் சிறப்பாகச் செயல்படும். 

நிலம் முதல் ஆகாயம் வரை... முத்திரை சிகிச்சை

அடுத்த இதழில் `பந்தாஸ்’  பற்றிப் பார்ப்போம்.

- எம்.மரிய பெல்சின் 

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism