Published:Updated:

தொற்று நோய்களின் உலகம்!

தொற்று நோய்களின் உலகம்!
பிரீமியம் ஸ்டோரி
தொற்று நோய்களின் உலகம்!

ஹெல்த் - 23வி.ராமசுப்பிரமணியன், தொற்றுநோய் சிறப்பு மருத்துவர்

தொற்று நோய்களின் உலகம்!

ஹெல்த் - 23வி.ராமசுப்பிரமணியன், தொற்றுநோய் சிறப்பு மருத்துவர்

Published:Updated:
தொற்று நோய்களின் உலகம்!
பிரீமியம் ஸ்டோரி
தொற்று நோய்களின் உலகம்!

ஹெச்.ஐ.வி பாதித்த ஒருவர் எய்ட்ஸ் நிலையை அடைவது பற்றி விரிவாகப் பார்த்தோம். எய்ட்ஸ் கட்டத்தை ஒருவர் எட்டிவிட்டார் என்றால், ஹெச்.ஐ.வி-யின் உச்சநிலையை அடைந்துவிட்டார் என்று பொருள். இந்தக் கட்டத்தில் சிகிச்சை எடுத்துக்கொள்ளாவிட்டால், அதிகபட்சம் இரண்டு ஆண்டுகளில் நிலை மோசமாகிவிடும்.

தொற்று நோய்களின் உலகம்!

சிலருக்கு ஹெச்.ஐ.வி தாக்கம் இருக்கும். ஆனால், அவர்களது சிடி4 எண்ணிக்கை 500-க்கு அதிகமாக இருக்கும். அதனால் அவர்களது உடல்நிலையில் எந்த பாதிப்பும் இருக்காது. சிகிச்சையே எடுத்துக்கொள்ள மாட்டார்கள். இயல்பாகவே அவர்களது உடலில் எதிர்ப்பு சக்தி அதிகமாக இருக்கும்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தொற்று நோய்களின் உலகம்!



இன்னொரு பிரிவினர் இருக்கிறார்கள். ‘எலைட் கன்ட்ரோலர்ஸ்’ (Elite Controllers) என்று ஆங்கிலத்தில் சொல்வோம். இவர்களது உடலில் ஹெச்.ஐ.வி கிருமி இருக்கும். ஆனால், பாதிப்பு ஏற்படாது. அவர்களது உடலில் இருக்கும் ஒருவித ஜீன், ஹெச்.ஐ.வி கிருமிகளை ஓர் அளவுக்கு மேல் வளரவிடாமல் அழித்துக்கொண்டேயிருக்கும். இவர்களும் எந்தத் தொந்தரவும் இன்றி நெடுங்காலம் வாழ்வார்கள்.

ஹெச்.ஐ.வி-2 என்று ஒரு வைரஸ் இருக்கிறது. கானா போன்ற மேற்கு ஆப்பிரிக்க நாடுகளில் இந்த வைரஸின் தாக்கம் அதிகம். ஹெச்.ஐ.வி வைரஸுக்கும் இதற்கும் பெரிய வித்தியாசம் இல்லை. பொதுவாக, ஹெச்.ஐ.வி வைரஸ் தாக்கிய ஒருவர் படிப்படியாக, நிலைகளைக் கடந்து அதிகபட்சம் பத்து வருடங்களில் எய்ட்ஸ் நிலையை அடைவாரென்றால், ஹெச்.ஐ.வி-2 வைரஸ் தாக்கப்பட்டவர்கள் எய்ட்ஸ் நிலையை அடைய 20 வருடங்களுக்கு மேலாகும். இந்த வைரஸ் மிக மெதுவாக பாதிப்புகளை உருவாக்கும்.

சாதாரண ஹெச்.ஐ.வி பாதிப்புக்குத் தரும் மருந்துகள் ஹெச்.ஐ.வி-2 பாதித்தவர்களுக்கு வேலை செய்யாது. அதற்கென தனி சிகிச்சை தேவை. சில நேரங்களில் ஹெச்.ஐ.வி., ஹெச்.ஐ.வி-2 இரண்டு வைரஸ்களுமே ஒருவரை பாதிக்கலாம். இதையும் சோதனைகள் மூலம் கண்டுபிடிக்கலாம். இது மிகவும் மோசமான பாதிப்புகளை உருவாக்கும். தமிழகத்தில் நானறிந்து ஹெச்.ஐ.வி-2 பாதித்தவர்கள் சிலர் இருக்கிறார்கள். ஹெச்.ஐ.வி., ஹெச்.ஐ.வி-2 இரண்டு வைரஸ்களாலும் பாதிக்கப்பட்டவர்கள் சிலரையும் நான் பார்த்திருக்கிறேன். 

தொற்று நோய்களின் உலகம்!

ஹெச்.ஐ.வி-யை உறுதி செய்ய நிறைய சோதனைகள் உண்டு. குறிப்பாக ஆன்டிபாடி டெஸ்ட். 20 ஆண்டுகளுக்கு முன்புவரை குறைந்தது மூன்று மாதங்கள் கழித்துத்தான் நோயை உறுதிப்படுத்த முடியும். அதற்கு ‘விண்டோ பீரியட்’ என்று பெயர். இப்போது மூன்று வாரங்களிலேயே பாதிப்பை உறுதி செய்துவிட முடியும். ஹெச்.ஐ.வி வைரஸ் உடலுக்குள் புகுந்த 30 சதவிகிதம் பேருக்கு மூன்று முதல் ஆறு வாரங்களுக்குள் காய்ச்சல் ஏற்படலாம். ஹெச்.ஐ.வி வைரஸ் உள்ளே போகும்போது, உடலுக்குள் இருக்கிற எதிர்ப்பு சக்தி அவற்றை அழிக்கக் கடுமையாகப் போராடும். அதனால் காய்ச்சல் ஏற்படும். அதை ‘சீரோ- கன்வெர்ஷன் இல்னெஸ்’ (Sero-conversion illness) என்று சொல்வோம். ஒருவாரத்தில் இந்தக் காய்ச்சல் சரியாகிவிடும். ஆனால், வெவ்வேறு பாதிப்புகள் ஏற்படத் தொடங்கும். 

தொற்று நோய்களின் உலகம்!

ஆன்டிபாடி டெஸ்ட் செய்து ஹெச்.ஐ.வி-யை உறுதி செய்துவிட்டால், சிடி-4 எண்ணிக்கையைக் கண்டறிய சில சோதனைகளைச் செய்ய வேண்டும். ‘வைரஸ் லோடு’ எவ்வளவு இருக்கிறது என்றும் பார்க்க வேண்டும். ஹெச்.ஐ.வி வைரஸ் என்பது ரத்தம் மூலம் பரவும். பாலுறவின்போது ஆணுக்கும் பெண்ணுக்கும் வெளிப்படும் நீர்மத்தின் மூலமும் பரவும். பெண்ணிடமிருந்து ஆணுக்கு ஹெச்.ஐ.வி வைரஸ் பரவும் விகிதம் குறைவு. பெரும்பாலும் ஆணிடமிருந்தே பெண்ணுக்குப் பரவும்.

ஹெச்.ஐ.வி வைரஸை அழிக்கும் மருந்து இதுவரை கண்டறியப்படவில்லை. காரணம், ஹெச்.ஐ.வி வைரஸ், தன் தன்மையை மாற்றிக்கொண்டேயிருக்கிறது. இதுதான் அதன் இயல்பு என்று உறுதியாக வரையறுக்க முடியவில்லை. ஆராய்ச்சிகள் பெரிய அளவில் உலகெங்கும் நடந்துவருகின்றன. விரைவில் இந்தக் கொள்ளை நோய்க்கு நேரடியான மருந்துகள் கண்டறியப்படும் என்று நம்புவோம்!

- களைவோம்...

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism