Published:Updated:

கன்சல்ட்டிங் ரூம்

கன்சல்ட்டிங் ரூம்
பிரீமியம் ஸ்டோரி
கன்சல்ட்டிங் ரூம்

ஹெல்த்

கன்சல்ட்டிங் ரூம்

ஹெல்த்

Published:Updated:
கன்சல்ட்டிங் ரூம்
பிரீமியம் ஸ்டோரி
கன்சல்ட்டிங் ரூம்

நான் எப்போதுமே பாசிட்டிவ் மனநிலையோடுதான் இருப்பேன். ஆனால், அண்மைக்காலமாக எனக்கு நெகட்டிவ் எண்ணங்கள் அதிகமாகத் தோன்றுகின்றன. பைக்கில் ஏறினால், ‘வண்டி  விபத்துக்குள்ளாகிவிடுமோ?’ என்று தோன்றுகிறது. சில நேரங்களில் தற்கொலை செய்துகொள்ளலாம் என்றுகூடத் தோன்றுகிறது. இதிலிருந்து எப்படி நான் விடுபடுவது?

- குமார், கள்ளக்குறிச்சி

கன்சல்ட்டிங் ரூம்

மனித மனங்களில்  எதிர்மறையான எண்ணங்கள் தோன்றுவது இயற்கையானது. முற்காலத்தில் காட்டில் வாழ்ந்தபோது, எப்போதும் பயத்துடனும் எதிர்மறையான எண்ணங்களுடனுமே வாழ்ந்திருக்கிறோம். அதன் மரபுத் தொடர்ச்சி இப்போதுவரை நீடிக்கிறது. சில எதிர்மறை எண்ணங்கள் எழுவது தவறல்ல. உதாரணமாக, வண்டியில் செல்லும்போது விபத்து ஏற்பட்டுவிடும் என்று தோன்றினால், விபத்து ஏற்படாமல் தடுப்பதற்கான முயற்சிகளை எடுக்க வேண்டும். குறைந்த வேகத்தில் வண்டி ஓட்ட வேண்டும். ஹெல்மெட் அணிந்து செல்ல வேண்டும். எந்த வேலையைத் தொடங்கினாலும் வெற்றிகரமாக முடிக்க முடியுமா என்ற எண்ணம் ஏற்பட்டால், வெற்றிகரமாக முடிப்பதற்கான வழிகளை யோசிக்க வேண்டும். எதிர்மறை எண்ணங்களைத் தவிர்ப்பதைவிட, அவற்றை ஆய்வு (Analyse) செய்ய வேண்டும். முன்னெச்சரிக்கையாக இருக்க வேண்டும். தற்கொலை எண்ணம் ஏற்பட்டால், உடனடியாக மனநல மருத்துவரைச் சந்தித்து சிகிச்சை எடுத்துக்கொள்வது நல்லது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

கன்சல்ட்டிங் ரூம்

- ஸ்வாதிக் சங்கரலிங்கம், மனநல மருத்துவர்

இரண்டு மாதங்களுக்கு முன்னர் நடந்த விபத்து ஒன்றில் இடது கை மூட்டில், `ஹேர்லைன் ஃப்ராக்சர்’ (Hairline Fracture) ஏற்பட்டது. ‘மாவுக்கட்டு அவசியமில்லை’ என்று மருத்துவர்கள் கூறியிருந்தனர். இருந்தாலும், கழுத்தின் மேற்பகுதியிலிருந்து கை விரல்வரை நரம்பு இழுப்பதுபோல இருக்கிறது. இது ஏதாவது பிரச்னைக்கான அறிகுறியா?

- லதா, ராஜபாளையம்

கன்சல்ட்டிங் ரூம்

கீழே விழும்போது கழுத்துப் பகுதியிலுள்ள தண்டுவடம், அந்தப் பகுதியிலுள்ள எலும்பு அல்லது நரம்புகளுடன் உரசியிருந்தால், அந்த நரம்புகள் லேசான அழுத்தத்துக்கு உள்ளாகியிருக்கலாம். அதனால், நரம்பு இழுப்பது போன்ற உணர்வு ஏற்படலாம். பாதிப்பின் தீவிரத்தைப் பொறுத்தே, சிகிச்சைகள் அமையும் என்பதால், எம்.ஆர்.ஐ ஸ்கேன் செய்து பார்க்கவும்.  ஏற்கெனவே, தண்டுவடம் தொடர்பான பிரச்னைகள் அல்லது `செர்விக்கல் ஸ்பாண்டிலோசிஸ்’ (Cervical Spondylosis) பிரச்னை இருப்பவர் என்றால், நரம்பு தொடர்பான பிரச்னைக்கான வாய்ப்புகள் அதிகம். இது போன்ற நிலையில் இருசக்கர வாகனங்கள் ஓட்டுவதைக் குறைத்துக்கொள்ளவும். தூங்கும்போது தலையணையைக் குறைவான உயரத்தில் வைத்துக்கொள்வது நல்லது.

- குணசேகரன், நரம்பியல் மருத்துவர்

கன்சல்ட்டிங் ரூம்

என் அம்மாவுக்கு வயது 54. அவருடைய கை மற்றும் கால் பகுதிகள் திடீரென சில்லிட்டுப் போகின்றன. அண்மைக்காலமாக, தலைசுற்றுவதாகவும் சொல்கிறார். குறிப்பாக, தூங்கச் செல்வதற்கு முன்னர் இந்த உணர்வு ஏற்படுவதாகக் கூறுகிறார். ஒருவேளை சர்க்கரைநோயாக இருக்கும் என்ற சந்தேகத்தில் பரிசோதனை செய்து பார்த்தோம். நெகட்டிவ் என்றே ரிசல்ட் வந்தது. எதனால் இப்படி ஏற்படுகிறது?

- பூமா, களக்காடு

கன்சல்ட்டிங் ரூம்

இது போன்ற நிலையை `கோல்ட் ஃப்ளாஷ்’ (Cold Flash) என்று கூறுவோம். அடிக்கடி உணர்ச்சிவசப்பட்டால், இப்படி ஏற்படும். உங்கள் அம்மா, அதீதக் கோபம் அல்லது அதீத சோகம் என எதற்கெடுத்தாலும் அளவுக்கதிகமாக உணர்ச்சிவசப்படுபவர் என்றால், அவற்றைக் கட்டுப்படுத்தச் சொல்லுங்கள். தினமும் மூச்சுப்பயிற்சி, தியானம் செய்வது நல்ல பலனைத் தரும். அடிக்கடி இப்படி `கோல்ட் ஃப்ளாஷ்’ ஏற்படுகிறதென்றால், நரம்பு சார்ந்த ஏதேனும் கோளாறு இருக்கலாம். எனவே, அது தொடர்பான மருத்துவரை அணுகுங்கள். தலைச்சுற்றல் பிரச்னைக்கும் இதுவே காரணம். தலைச்சுற்றல் சில நிமிடங்களுக்கும் மேலாகத் தொடர்ந்தாலோ, ஏற்கெனவே ஒற்றைத்தலைவலி பிரச்னை இருந்தாலோ, தலைச்சுற்றலின்போது பேச்சு வராமல் இருப்பது அல்லது கண்கள் இருட்டுவது போன்றவை ஏற்பட்டாலோ தாமதிக்காமல் மருத்துவரைச் சந்திக்கவும்.

- செல்வராஜன், பொது மருத்துவர்

ங்கள் கேள்விகளை அனுப்பவேண்டிய முகவரி: கன்சல்ட்டிங் ரூம், டாக்டர் விகடன், 757, அண்ணா சாலை, சென்னை-600 002. 

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism