Published:Updated:

டைபாய்டு காய்ச்சலுக்கு சாதாரண சிகிச்சை அளித்த டாக்டருக்கு அபராதம்

டைபாய்டு காய்ச்சலுக்கு சாதாரண சிகிச்சை அளித்த டாக்டருக்கு அபராதம்
டைபாய்டு காய்ச்சலுக்கு சாதாரண சிகிச்சை அளித்த டாக்டருக்கு அபராதம்

மதுரை: டைபாய்டு காய்ச்சலுக்கு உரிய சிகிச்சை அளிக்காமல், சாதாரண காய்ச்சலுக்கான சிகிச்சையை அளித்து நோயாளிக்கு மன உலைச்சலை ஏற்படுத்திய டாக்டருக்கு ரூ.20 ஆயிரம் அபராதம் விதித்து மதுரை நுகர்வோர் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.

##~~##
மதுரை ஜெய்ஹிந்த்புரத்தைச் சேர்ந்தவர் முத்துப்பாண்டி. கடந்த ஆண்டு இவருக்கு கடும் காய்ச்சல் ஏற்பட்டது. உடனே அதே பகுதியில் கிளினிக் வைத்திருக்கும் லிட்டன் கிட்டோ என்ற டாக்டரிடம் சிகிச்சைக்காக சென்றார். இது சாதாரண காய்ச்சல் தான் என்று சொன்ன டாக்டர், சில பாராசிட்டமால், ஆன்டி-பயாடிக் மாத்திரைகளைக் கொடுத்து அனுப்பிவிட்டார். ஆனாலும் காய்ச்சல் நின்றபாடில்லை. காய்ச்சல் என்று இவர் செல்வதும், அதற்கு வழக்கம் போல டாக்டர் சிகிச்சை அளிப்பதும் தொடர்ந்திருக்கிறது.
ஒரு கட்டத்தில், சந்தேகமடைந்து ரத்தப் பரிசோதனை செய்து பார்த்தார் முத்துப்பாண்டி. அப்போது அவருக்கு டைபாய்டு காய்ச்சல் இருப்பது தெரியவந்தது. ஆரம்பத்திலேயே டாக்டர் ரத்த பரிசோதனை செய்திருந்தால், தனக்கு வீண் பணவிரயமும், மன உலைச்சலும் ஏற்பட்டிருக்காது என்று கருதிய முத்துப்பாண்டி டாக்டர் மீது மதுரை மாவட்ட நுகர்வோர் கோர்ட்டில் வழக்குத் தொடர்ந்தார்.

வழக்கை விசாரித்த நீதிபதி தெய்வராஜ் மனுதாரருக்கு ஏற்பட்ட மனஉலைச்சலுக்கு 15 ஆயிரம் ரூபாயும், வழக்குச் செலவிற்கு 5 ஆயிரம் ரூபாயும் ஒரு மாதத்திற்குள் வழங்குமாறு டாக்டருக்கு உத்தரவிட்டார்.

-கே.கே.மகேஷ்