Published:Updated:

கன்சல்ட்டிங் ரூம்

கன்சல்ட்டிங் ரூம்
பிரீமியம் ஸ்டோரி
News
கன்சல்ட்டிங் ரூம்

ஹெல்த்

கன்சல்ட்டிங் ரூம்

ன் மகளுக்கு பத்து வயது. ஆனால், அவளின் உடல் உறுப்புகள் இயல்பைவிட அதிகமாக வளர்வதாகத் தெரிகிறது. முக்கியமாக, மார்பகங்கள். அதேபோல் உடல் எடையும் அதிகரித்திருக்கிறது. பதினைந்து வயதுக் குழந்தையின் உடல் எடையைப்போல இருக்கிறாள். இது எதனால் ஏற்படுகிறது... இதைச் சரிசெய்ய முடியுமா?

- சீரங்காள், திருச்சி

கன்சல்ட்டிங் ரூம்

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

உறுப்பு வளர்ச்சியுடன் சேர்த்து, அந்தரங்கப் பகுதிகளில் முடி வளர்ச்சி இருக்கிறதா என்பதைக் குழந்தையிடம் கேட்டுத் தெரிந்துகொள்ளுங்கள். ஒருவேளை மாற்றம் இருந்தால், மகளிர் மருத்துவரையோ, நாளமில்லாச் சுரப்பி மருத்துவரையோ உடனடியாக அணுகவும். குழந்தையின் உயரமும், எலும்பு வளர்ச்சியும் வயதுக்கேற்ற அளவு இருக்கின்றனவா என்பதை மருத்துவர்களிடம் கேட்டறியவும். இவை நோய் பாதிப்புக்கான அறிகுறி என நினைத்து பயப்பட வேண்டாம். இவை அனைத்துமே, பெண் குழந்தைகள் பூப்படைவதற்கு முன்னர் ஏற்படும் இயல்பான மாற்றங்கள்தாம்.

இப்படியான உடல் வளர்ச்சிக்குப் பிறகு ஓராண்டுக்குள், குழந்தை பூப்படைய வாய்ப்பிருக்கிறது. ஆனால், பத்து வயது என்பது பூப்படைவதற்கான சரியான வயதல்ல. மனதளவிலும் உடலளவிலும் அவர்கள் குழந்தையாகத்தான் இருப்பார்கள். அதுமட்டுமன்றி, பூப்படைந்துவிட்டால் உயரம் அதிகரிப்பது தடுக்கப்படும். உங்கள் குழந்தையின் உயரம் மற்றும் எலும்பின் வளர்ச்சி சீரான அளவு இல்லை என்றாலோ, வயதுக்கு மீறிய வளர்ச்சி இருப்பது தெரியவந்தாலோ சிகிச்சை அவசியம். ஹார்மோன் மாற்றங்களே இது போன்ற பிரச்னைகளுக்கான அடிப்படை என்பதால், ‘ஹார்மோன் தெரபி’ சிகிச்சைக்குப் பரிந்துரைக்கப்படும். அதைப் பின்பற்றினால், ஹார்மோன் சுரப்பு சீராகி, `பூப்பெய்துதல்’ சற்று தாமதமாகி, சரியான வயதில் நிகழும்.

முன்னதாகவே பூப்பெய்தும் குழந்தைகளுக்கு, வருங்காலத்தில் ஒழுங்கற்ற மாதவிடாய் சுழற்சி அல்லது மாதவிடாயின்போது அதிக ரத்தப்போக்கு, ரத்தச்சோகை ஏற்பட வாய்ப்பிருக்கிறது. இந்தக் குழந்தைகள், தங்கள் வாழ்நாளில் அதிகப்படியான மாதவிடாயை எதிர்கொள்ளவேண்டியிருக்கும். அதிகப்படியான மாதவிடாய் என்பதை அதிகப்படியான ஈஸ்ட்ரோஜென் சுரப்பு என்று புரிந்துகொள்ள வேண்டும். இதுதான் தைராய்டு பிரச்னையில் தொடங்கி, சினைப்பை நீர்க்கட்டிவரையிலான பல்வேறு ஹார்மோன் பிரச்னைகளுக்குக் காரணம். எனவே, முதல்நிலையிலேயே சிகிச்சை எடுக்கவேண்டியது அவசியம்.

- கனிமொழி, மகப்பேறு மருத்துவர்

கன்சல்ட்டிங் ரூம்

சிறுநீரகம் பழுதானவர்கள், ஆங்கில மருந்து சாப்பிடுகிறார்கள். ஆனால், பிரச்னை முழுமையாகச் சரியாகவில்லை என்று சொல்லி நாட்டு வைத்தியம் செய்துகொள்கிறார்கள். இதனால் ஏதேனும் பாதிப்புகள் ஏற்படுமா?

- சந்திரன் இந்திரா, லால்குடி, திருச்சி

கன்சல்ட்டிங் ரூம்

ஆங்கில மருந்து (அலோபதி) சாப்பிட்டவர்கள், திடீரென இடையில் இப்படி மாறுவது தவறு. அதுமட்டுமன்றி, ஆங்கில மருந்துகள் எப்போதுமே ‘டோசேஜ்’ அளவில்தான் பரிந்துரைக்கப்படும். எனவே, இதுவரை அவர்கள் எடுத்துவந்த மருந்து, பிரச்னையின் தீவிரத்தைக் குறிப்பிட்ட அளவு குறைத்திருக்கும். அந்த அளவுக்கு ஏற்றதுபோலவே மேற்கொண்ட சிகிச்சைகள் இருக்க வேண்டும். நாட்டு வைத்தியத்தில், அந்த அளவையும் டோசேஜையும் பார்க்க மாட்டார்கள். ஒருவேளை அவர்கள் தேவையைவிட அதிக டோசேஜ் கொடுத்துவிட்டால், சிக்கல் ஏற்படலாம். குறைத்துக் கொடுத்தாலும் பிரச்னைதான். நாட்டு வைத்தியத்தைப் பின்பற்ற நினைப்பவர்கள், பிரச்னையின் ஆரம்பநிலையிலே அதைத் தொடங்கியிருக்க வேண்டும். ஆங்கில மருத்துவத்தை சில காலம் பின்பற்றிவிட்டு, பிரச்னை ஓரளவு குறைந்த பிறகோ, அறுவை சிகிச்சை பரிந்துரைக்கப்பட்ட பிறகோ அல்லது டயாலிசிஸ் செய்ய அறிவுறுத்தப்பட்ட பிறகோ நாட்டு வைத்தியத்துக்கு மாறுவது தவறு. சிறுநீரகப் பிரச்னை என்றில்லை, எந்தப் பிரச்னைக்குச் சிகிச்சை எடுத்தாலும் அவரவர்க்கு எது சரியான சிகிச்சையாக இருக்கும் என்பதை முன்பே அறிந்துகொண்டு, அதைப் பின்பற்றுவதே சரி. அதேநேரம், நடுவில் மாறினாலும் அந்த சிகிச்சையிலாவது தெளிவான மனநிலையுடன் இருப்பது நல்லது.

- சேகர், சிறுநீரக அறுவை சிகிச்சை மருத்துவர்

உங்கள் கேள்விகளை அனுப்பவேண்டிய முகவரி:
கன்சல்ட்டிங் ரூம், டாக்டர் விகடன், 757, அண்ணா சாலை, சென்னை-600 002.