Published:Updated:

உன் வாழ்க்கை உன் கையில்!

உன் வாழ்க்கை உன் கையில்!
பிரீமியம் ஸ்டோரி
News
உன் வாழ்க்கை உன் கையில்!

ஹெல்த்

உன் வாழ்க்கை உன் கையில்!

து, ஆட்டோ வாசகம் மட்டுமல்ல, நம் ஆரோக்கியத்துக்கான வாசகமும்கூட. தொற்றுநோய்களிலிருந்து நம்மைக் காத்துக்கொள்ள, நம் கைகளை சுத்தமாக வைத்திருக்கவேண்டியது அவசியம். `கைகளைக் கழுவுகிறோம்’ என்று சொல்லிக்கொண்டு வெறுமனே தண்ணீரில் கைகளை நனைத்தால் போதாது. சோப் அல்லது ஆன்டிசெப்டிக் லோஷன் என எதையாவது பயன்படுத்தி நன்றாகக் கழுவ வேண்டும்.

உன் வாழ்க்கை உன் கையில்!

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
உன் வாழ்க்கை உன் கையில்!

‘‘எல்லா நேரத்திலும் எல்லா இடங்களிலும் தண்ணீரையும் சோப்பையும் தேடிக்கொண்டிருக்க முடியாது; ‘ஹேண்ட் சானிட்டைஸர்’ (Hand Sanitizer) பயன்படுத்தி, நாம் இருக்கும் இடத்திலேயே கைகளைச் சுத்தம் செய்துகொள்ளலாம்’’ என்கிறார் அரசு தொற்றுநோய் மருத்துவமனையின் மருத்துவ அதிகாரி பாலகிருஷ்ணன். ``கிருமிகளைக் கொல்வதில் சோப்பைவிட ஹேண்ட் சானிட்டைஸர்ஸ் வீரியமிக்கவை. தேவையான அளவு ஹேண்ட் சானிட்டைஸரை கைகளில் எடுத்துக்கொண்டு கை விரல்கள் மற்றும் விரல் இடுக்குகள் முழுவதும் நன்றாகத் தடவிக்கொண்டு தேய்க்க வேண்டும். இதனால் கைகளில் படிந்திருக்கும் கிருமிகள் அழிந்துவிடும். ஆல்கஹால் நிறைந்திருப்பதால், கைகளில் தடவிய சானிட்டைஸர் ஆவியாகிவிடும்; கைகளும் நன்றாகச் சுத்தமாகிவிடும்.

மக்கள் கூடும் இடங்களில் பணிசெய்கிற மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவமனைப் பணியாளர்கள், துப்புரவுப் பணியாளர்கள், டிரைவர்கள், கண்டக்டர்கள் அனைவருக்கும் இது மிக அவசியம். இதைக்கொண்டு சுத்தம் செய்தால், கண்ணுக்குத் தெரியாத கிருமிகள்கூட முழுமையாக அழிந்துவிடும்’’ என்கிற பாலகிருஷ்ணன், ``ஐசோபுரோபைல் ஆல்கஹால் (Isopropyl Alcohol) நிறைந்துள்ள ஐசோபுரொபனால் ஹேண்ட் சானிட்டைஸரே (Isopropanol Sanitizer) சிறந்தது’’ என்கிறார்.

-இரா.செந்தில் குமார்