Published:Updated:

டாக்டர் நியூஸ்!

டாக்டர் நியூஸ்!
பிரீமியம் ஸ்டோரி
News
டாக்டர் நியூஸ்!

தகவல்

டாக்டர் நியூஸ்!

தாய்ப்பாலானது குழந்தைக்குத் தேவையான ஊட்டச்சத்துகளையும் நோய் எதிர்ப்பு சக்தியையும் வழங்குகிறது. அதே நேரத்தில், தாய்ப்பால் தருகிற பெண்களுக்கு சர்க்கரைநோய் மற்றும் இதயநோய்கள் உள்ளிட்ட பல பிரச்னைகள் வரும் வாய்ப்பையும் குறைக்கிறது.

டாக்டர் நியூஸ்!

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

இவற்றோடு இப்போது இன்னொரு நன்மையும் சேர்ந்திருக்கிறது. தொடர்ந்து குழந்தைக்குத் தாய்ப்பால் தரும் பெண்களுக்குப் பின்னாள்களில் `Non-Alcoholic Fatty Liver Disease (NAFLD)’ எனப்படும் மதுப்பழக்கம் சாராத கொழுப்புக் கல்லீரல்நோய் வருகிற வாய்ப்பு குறைவதாகக் கண்டறியப்பட்டிருக்கிறது. சுமார் இருபத்தைந்து ஆண்டுகளுக்கு மேலாக நடைபெற்ற இந்த ஆய்வில் ஒரு மாதம் அல்லது அதைவிடக் குறைவாகத் தாய்ப்பால் தந்த பெண்களுடன் ஆறு மாதங்கள் அல்லது அதற்கு மேல் தாய்ப்பால் தந்திருக்கும் பெண்களை ஒப்பிட்டுப் பார்த்திருக்கிறார்கள். ஆறு மாதங்களுக்கு மேல் தாய்ப்பால் தந்திருக்கும் பெண்களுக்கு NAFLD பிரச்னை வருகிற வாய்ப்பு சரிபாதியாகக் குறைந்திருக்கிறதாம்.

ப்போதெல்லாம் எல்லா உணவுப் பொருள்களின் உறைகளிலும் அவற்றிலிருக்கும் ஊட்டச்சத்துகள், கலோரிகள் மற்றும் நலம் சார்ந்த பல தகவல்களை அச்சிடுகிறார்கள். உணவக மெனுக்களில்கூட இவை இடம்பெறுகின்றன. பலர் இவற்றைப் பார்த்து, தங்கள் உடல்நலத்துக்கேற்ற உணவுப் பொருள்களைத் தேர்ந்தெடுத்து வாங்குகிறார்கள்.

டாக்டர் நியூஸ்!

டுஃப்ட்ஸ் பல்கலைக்கழக (Tufts University) ஆய்வாளர்கள் இது குறித்து நிகழ்த்திய ஆய்வின்படி, உணவுப் பொருள்களின் உறைகளில் கலோரி கணக்கு குறிப்பிடப்பட்டிருந்தால், மக்கள் 6.6% கலோரிகள் குறைவாக உட்கொள்கிறார்களாம்;10.6% கொழுப்பு குறைகிறதாம்; காய்கறிகளைச் சாப்பிடும் சதவிகிதம் கிட்டத்தட்ட 14% அதிகரிக்கிறதாம். அதே நேரம் கார்போஹைட்ரேட், புரதம், முழு தானியங்கள், பழங்கள் போன்றவற்றை உட்கொள்ளும் அளவில் பெரிய மாற்றங்கள் தெரியவில்லையாம்.

இந்த விவரங்களை மக்கள் கவனிக்கிறார்கள், உடல்நலத்துக்குத் தீங்கு விளைவிக்கும் பொருள்களைத் தவிர்க்கிறார்கள் என்பதைப் புரிந்துகொண்டிருக்கும் நிறுவனங்களும் குறிப்பிடத்தக்க அளவு மாறியிருப்பதாகச் சொல்கிறது இந்த ஆய்வு. அதாவது, ஒவ்வோர் உணவுப் பொருளிலும் உண்மையில் என்ன இருக்கிறது என்பதை வெளிப்படையாகச் சொல்லவேண்டியிருப்பதால், இயன்றவரை ஆரோக்கியமான பொருள்களைக்கொண்டு தங்களுடைய உணவுப் பொருள்களைத் தயாரிக்கிறார்களாம்!

சூரிய ஒளியில் வைட்டமின் டி இருப்பது தெரியும். ஆனால், இத்தனை வெயிலடிக்கிற நம் நாட்டிலும் பெரும்பாலானோருக்கு வைட்டமின் டி குறைபாடு இருப்பதுதான் விநோதம். மருத்துவ ஊட்டச்சத்துக்கான ஓர் அமெரிக்கப் பத்திரிகையில் சமீபத்தில் வெளியாகியிருக்கும் ஒரு கட்டுரை, வைட்டமின் டி அளவைக் கட்டுப்படுத்த மக்னீசியம் துணைபுரிவதாகச் சொல்கிறது. அதாவது, வைட்டமின் டி குறைபாடு இருப்பவர்கள் அதை அதிகம் பெற மக்னீசியம் அதிகமுள்ள உணவுகளைச் சாப்பிட வேண்டுமாம்.

ஆனால், பெரும்பாலானோர் மக்னீசியத்தையும் ஒழுங்காகச் சாப்பிடுவதில்லையாம். வைட்டமின் டி பிரச்னைகளுக்கு இதுவும் ஒரு காரணமாக இருக்கலாம். அடர் பச்சைக் கீரைகள், பீன்ஸ், முழு தானியங்கள், டார்க் சாக்லேட், சாலமன் மீன் போன்றவற்றில் மக்னீசியம் அதிகமிருக்கிறது. இவற்றை அதிகம் உண்பதன் மூலம் மக்னீசியத்தையும் பெறலாம், வைட்டமின் டி-யையும் பெறலாம்.

டாக்டர் நியூஸ்!

ருத்துவர்கள் அணிகிற ஸ்டெதாஸ்கோப்பை நாம் ஆரோக்கியத்தின் சின்னமாகவே நினைக்கிறோம். இயல்பாகத் தெரியாத பல பிரச்னைகள் இதைக்கொண்டு சோதிக்கும்போது தெரியவருவதால், மருத்துவத் துறையிலும் இதன் முக்கியத்துவம் அதிகம். ஆனால், `ஸ்டெதாஸ்கோப்பில் ஏராளமான கிருமிகள் இருக்கின்றன’ என்று சொன்னால் நம்புவீர்களா? ‘நோய்த்தொற்றுக் கட்டுப்பாடு மற்றும் மருத்துவமனை நோயியல்’ என்ற பத்திரிகையில் வெளியாகியிருக்கும் ஆய்வுக் கட்டுரையில்தான் இந்த அதிர்ச்சியளிக்கும் செய்தி வெளியாகியிருக்கிறது.

பல மருத்துவர்கள் பயன்படுத்திவரும் ஸ்டெதாஸ்கோப்களை ஆராய்ந்து பார்த்து இதைக் கண்டறிந்திருக்கிறார்கள். ஸ்டபிலோகாக்கஸ்(Staphylococcus), சீடோமோனாஸ் (Pseudomonas), அசினெடோபாக்டர் (Acinetobacter) என்று ஸ்டெதாஸ்கோப்களில் தென்படும் கிருமிகளையும், அவற்றால் ஏற்படும் பாதிப்புகளையும் பட்டியலிட்டிருக்கிறார்கள். நாள் முழுக்க ஒரே ஸ்டெதாஸ்கோப்பை எல்லாருக்கும் பயன்படுத்தினால் பிரச்னைதான். இதைத் தவிர்ப்பது எளிது. ஸ்டெதாஸ்கோப்பை சரியான முறையில் தூய்மைப்படுத்தினால், பெரும்பாலான கிருமிகளை அழித்துவிடலாம்.

டாக்டர் நியூஸ்!

சிறிய காயங்களின் மீது பேண்ட் எய்டு போன்ற மருந்துப்பட்டையை ஒட்டிக்கொள்வது ஓர் எளிய, பலன் தரக்கூடிய சிகிச்சை. இதனால் காயம் குணமாகும்; அதன் மீது வெளிக்காற்று, அசுத்தங்கள் படாமல் தடுக்கலாம். ஆனால், மறு நாள் அந்தப் பட்டையைப் பிரித்தெடுக்கும்போது சருமத்தில் நன்றாக ஒட்டிக்கொண்டு மிகுந்த வலி ஏற்படும். இந்தப் பிரச்னைக்கு ஜியான் ஜியாடங் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் ஒரு புதிய தீர்வைக் கண்டுபிடித்திருக்கிறார்கள். இவர்கள் கண்டுபிடித்திருக்கும் மருந்துப்பட்டை ஈரமான பகுதிகளில்கூட நன்றாக ஒட்டிக்கொள்ளும். பின்னர் இதைப் பிரிக்கும்போது, பட்டையின் மீது புற ஊதா வெளிச்சத்தைக் காட்டினால் போதும், வலியில்லாமல் பட்டை பிரிந்து வந்துவிடும்.

இது எப்படிச் சாத்தியமாகிறது?

இந்த மருந்துப்பட்டையில் உள்ள பாலிமர் சங்கிலிகள் இரு பரப்புகளை நன்றாக இணைக்கின்றன. பின்னர் புற ஊதா வெளிச்சம் பட்டவுடன் அந்த இணைப்பு கரைந்துவிடுகிறது. ஆகவே, மருந்துப்பட்டையை வலியில்லாமல் எடுத்துவிடலாம்.

-என்.ராஜேஷ்வர்