Published:Updated:

ஃபிட்னெஸ்: எடை குறைப்பு A to Z - டயட்டீஷியன் ஷைனி சுரேந்திரன்

ஃபிட்னெஸ்: எடை குறைப்பு A to Z - டயட்டீஷியன் ஷைனி சுரேந்திரன்
பிரீமியம் ஸ்டோரி
ஃபிட்னெஸ்: எடை குறைப்பு A to Z - டயட்டீஷியன் ஷைனி சுரேந்திரன்

ஃபிட்னெஸ்: எடை குறைப்பு A to Z - டயட்டீஷியன் ஷைனி சுரேந்திரன்

ஃபிட்னெஸ்: எடை குறைப்பு A to Z - டயட்டீஷியன் ஷைனி சுரேந்திரன்

ஃபிட்னெஸ்: எடை குறைப்பு A to Z - டயட்டீஷியன் ஷைனி சுரேந்திரன்

Published:Updated:
ஃபிட்னெஸ்: எடை குறைப்பு A to Z - டயட்டீஷியன் ஷைனி சுரேந்திரன்
பிரீமியம் ஸ்டோரி
ஃபிட்னெஸ்: எடை குறைப்பு A to Z - டயட்டீஷியன் ஷைனி சுரேந்திரன்

`புத்தாண்டுக்குப் புதிதாக என்ன சபதம் எடுத்தீர்கள்?

`எல்லா வருஷத்தையும் போல வெயிட்டைக் குறைக்கிறதும், வொர்க் அவுட் பண்றதும், டயட் பண்றதும்தான்...' - இவையே பலரின் பதில்கள்.

'எல்லா வருஷத்தையும் போல....' என்கிற வார்த்தை களே சொல்லும் உங்கள் சபத வைராக்கியத்தை.

ஃபிட்னெஸ்: எடை குறைப்பு A to Z - டயட்டீஷியன் ஷைனி சுரேந்திரன்

ஜிம்மில் மெம்பர்ஷிப் கட்டணம் கட்டி ஒருநாளோ, இரண்டு நாள்களோ வொர்க் அவுட் செய்ததும் உடல்வலிக்குப் பயந்து பின்வாங்குகிறவர்கள்... வரகு, சாமை, தினை, ஆலிவ் ஆயில், பிரவுன் சுகர் என ஆரோக்கிய அயிட்டங்களாக வாங்கி அடுக்கி, எக்ஸ்பைரி ஆன பிறகு பாக்கெட்டைக்கூடப் பிரிக்காமல் குப்பையில் வீசுகிறவர்கள்... ட்ரெட்மில்லை வாங்கி வீட்டில் நிறுத்திவைத்து, அதில் துணிகளைக் காயவைக்கிறவர்கள்... இப்படி ஏகப்பட்ட உதாரண மனிதர்கள் நம்முன் இருப்பார்கள். இருப்பீர்கள்.

எடை குறைப்பு சபதம் மட்டும் ஏன் எப்போதும் தோல்வியிலேயே முடிகிறது? அதன் பின்னணியை அலசி சபதத்தில் உங்களை வெற்றிபெறச் செய்வதுதான் இந்தத் தொடரின் நோக்கம்.

எடை குறைப்பு பற்றிய ஏ டு இஸட் தகவல்களை உங்களுக்காக வழங்கவிருக்கிறார் டயட்டீஷியன் ஷைனி சுரேந்திரன். பிரபலங்களின் டயட்டீஷியனான இவர், இத்துறையில் 20 வருட அனுபவம் உள்ளவர். அவரின் ஆலோசனைகளைப் பின்பற்றி ஆரோக்கியத்துக்கான அஸ்திவாரத்தை இன்றே தொடங்குங்கள்.

எடையைக் குறைப்பதும் ஃபிட்டாக இருப்பதும் உங்கள் விருப்பமா? லட்சியமா? - இரண்டுக்கும் என்ன வித்தியாசம்?

ஒன்றை அடைய வேண்டும் என்கிற உங்கள் விருப்பம் நிறைவேறலாம், நிறைவேறாமல் போகலாம். 'எனக்கு வாய்க்கலை' எனச் சொல்லிக் கொண்டு அந்த ஆசையையே நீங்கள் கைவிடலாம். ஆனால், லட்சியம் என்பது அப்படியல்ல. அதை அடைய விடாமுயற்சிகள் செய்வோம். அதை அடைவதில் பிளான் ஏ தோற்றுப்போனால் பிளான் பி, பிளான் சி யைக் கையில் எடுக்க வேண்டும். லட்சியத்தை அடைவதில் எந்த எல்லைக்கும் போகத் தயாராக இருப்போம். லட்சியம் என்பது உங்களைத் தூங்கவிடாமல் செய்வது. எடை குறைப்பும் அப்படித்தான் லட்சியமாக இருக்க வேண்டும்.

எடையை எப்படிக் குறைப்பது என்பது எல்லோருக்கும் தெரிந்திருக்கிறது. ஆனாலும், கோட்டை விடுகிறோம். சிலர் எடையைக் குறைக்கிறார்கள். அதே வேகத்தில் மீண்டும் எடை கூடுகிறார்கள். வீட்டு விசேஷங்களில் விருந்தினர்களின் பார்வை இருவர்மீதே அதிகம் பதியும். அதீத குண்டாக இருப்பவர்கள் அல்லது எடையைக் குறைத்து `சிக்'கென இருப்பவர்கள். இரண்டாமவர் இடத்தில் எப்போது பெருமை யுடன் நிற்கப் போகிறோம் என்கிற பெருமூச்சு அங்கே அதிகமிருப்பதையும் பார்க்கலாம்.

எடையை ஏன் குறைக்க வேண்டும்?

அழகுக்காக, இளமைக்காக என்பார்கள் சிலர். வேறு சிலருக்கு அது ஆரோக்கியம் சம்பந்தப்பட்டது.

விளையாட்டுப் பயிற்சிகளில் ஈடுபடுகிற சிலருக்கும் எடை குறைப்பு அவசியமாகிறது. கூடுதல் எடையைச் சுமந்துகொண்டு விளையாடுகிற சிரமத்தை அவர்கள் விரும்புவதில்லை. மீடியா மற்றும் திரைத்துறையைச் சார்ந்தவர்களுக்கு அவர்களது தோற்றம் முக்கியம் என்பதால் சரியான எடையில் இருப்பது அவசியமாகிறது.

திருமணத்துக்கு முன்பு, வீட்டில் திருமணப் பேச்சு ஆரம்பிக்கும் முன்பே எடையைக் குறைக்க வேண்டும் என ஆலோசனைக்கு வரும் இளம் பெண்கள் மற்றும் ஆண்களின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதைப் பார்க்கிறோம். பேரக்குழந்தைகளோடு சரிக்குச் சரி விளையாட வேண்டும், அதற்கு எடை குறைப்பு அவசியம் என வருகிற தாத்தா, பாட்டிகளும் ஆச்சர்யம் தருகிறார்கள்.

எடையைக் குறைப்பது என்பது ஆரோக்கியத்தைக் கருத்தில்கொண்டு செய்யப்பட வேண்டும். பயணங்களின்போது உங்கள் லக்கேஜ்களைச் சுமந்துகொண்டு உங்களால் நிற்கவோ, நடக்கவோ முடிகிறதா? ஷாப்பிங் செய்கிறபோது நீண்ட நேரம் நிற்க முடிகிறதா? குழந்தையைச் சுமந்துகொண்டு நிற்க முடிகிறதா? இவை அனைத்தையும் உங்கள் முதுகையோ, கைகளையோ வருத்திக்கொள்ளாமல் செய்ய முடிகிறதா என்பது முக்கியம்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஃபிட்னெஸ்: எடை குறைப்பு A to Z - டயட்டீஷியன் ஷைனி சுரேந்திரன்

எடையை எப்படிக் குறைக்கலாம்?

கலோரி அதிகமான உணவுகளைச் சாப்பிட்டுவிட்டு, உடலுக்கு இயக்கமே இல்லாமல் உட்கார்ந்திருப்பதுதான் எடை எகிறக் காரணம் என்பது எல்லோரின் எண்ணமும். ஆனால், ஹார்மோன் சமநிலை யின்மை இருந்தால் மணிக்கணக்காக  உடற் பயிற்சி செய்தாலும் எடை குறையாது. ஹார்மோன்களைப் பற்றிய விழிப்பு உணர்வில்லாவிட்டால் உடற்பயிற்சியும் உணவுக்கட்டுப்பாடும் பலனில்லை என விரக்தியில் எல்லாவற்றையும் ஒருநாள் தூக்கிப் போடுவீர்கள்.

நிபுணர்களின் உதவிகளை நாடுங்கள்

எடையைக் குறைப்பதில் உங்களுக்கு இருக்கும் சிக்கல்களை மருத்துவரால் மட்டும்தான் சரியாகக் கணிக்க முடியும். உடல் பரிசோதனை மற்றும் ரத்தப் பரிசோதனைகளின் மூலம் உங்கள் உடல் உடற்பயிற்சிகளுக்குத் தயாராக இருக்கிறதா, வேறு ஏதேனும் உடல்நலக்கோளாறுகள் உள்ளனவா என்று கண்டுபிடிப்பார்கள்.

அடுத்து நீங்கள் நாடவேண்டியவர் ஊட்டச் சத்து நிபுணர். அவர் உங்களுடைய வாழ்க்கை முறை, பட்ஜெட், பிரச்னைக்குரிய பகுதிகள் என எல்லாவற்றையும் தெரிந்துகொண்டு உங்களுக்கான ஊட்டச்சத்து திட்டத்தை டிசைன் செய்து தருவார். தகுதிவாய்ந்த ஊட்டச்சத்து நிபுணர்  ஐந்து  வருடப் படிப்புக்குப் பிறகு மல்ட்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை ஒன்றில் ஆறு மாதப் பயிற்சி எடுத்திருப்பார். பதிவுபெற்ற ஊட்டச்சத்து நிபுணருக்கான தகுதித் தேர்வுகளையும் முடித்திருப்பார். நீங்கள் நாடும் நபரிடம் இவற்றைச் சரிபாருங்கள். இந்தத் தகுதியற்றவர்களது நோக்கம் குறிப்பிட்ட சில நிறுவனங்களின் தயாரிப்புகளை  ஏமாற்றி உங்கள் தலையில் கட்டுவதுதான். எச்சரிக்கை!

இந்தத் தொடர் உங்களை பயமுறுத்தாது. எடை குறைப்புக்கு முன்பான அவசிய ரத்தப் பரிசோதனைகள், அடிப்படை மதிப்பீடுகள், உங்கள் உடலுக்கும் மனதுக்குமான தொடர்பு,  எடை குறைப்புக்கான முறைகள், நீங்கள் உங்கள் லட்சியத்தை அடையும்வரை பின்வாங்காமல் இருக்கச் செய்கிற வழிகள், வாழ்க்கை முழுவதற்குமான டயட், அதிகம் பயணம் செய்கிறவர்களுக்கான உணவுத் திட்டம், பிரபலங்கள் பின்பற்றும் டயட் முறைகள், ஹார்மோன் சமநிலையின்மை, சினைப்பை நீர்க்கட்டி போன்ற பிரச்னைகள் உள்ளோருக்கான உணவுத்திட்டம் என அனைத்தையும் பேசப்போகிறது. எடை குறைப்பு பற்றி இதுவரை நீங்கள் அறிந்திருந்த அத்தனை தகவல்களையும் உங்கள் சிந்தனையிலிருந்து டெலீட் செய்யுங்கள். புதிது புதிதாக உருவெடுக்கும் நோய்களையும், ஆரோக்கிய சவால்களையும் எதிர்கொள்ள நாமும் நம்மை நாள்தோறும் அப்டேட் செய்து கொண்டே இருக்க வேண்டியிருக்கிறது. எடை குறைப்பிலும் அப்டேட் ஆவோம்... ஆரோக்கியம் பெறுவோம்!

நம்மால் முடியும்!

- ஆர்.வைதேகி 

படம் : க.பாலாஜி 

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism