Published:Updated:

மருந்து அட்டைகளில் `பார்கோடு'... மத்திய அரசின் முடிவு பயனளிக்குமா...?

மருந்து அட்டைகளில் `பார்கோடு'... மத்திய அரசின் முடிவு பயனளிக்குமா...?
News
மருந்து அட்டைகளில் `பார்கோடு'... மத்திய அரசின் முடிவு பயனளிக்குமா...?

 மருந்து அட்டைகளில் `பார்கோடு' (Barcode - தனித்துவ அடையாளக் குறியீடு) அச்சிட்டு, வழங்க வேண்டும்' என்று மருந்து உற்பத்தியாளர்களுக்கு மத்திய சுகாதாரத் துறை இருநாள்களுக்கு முன் ஓர் உத்தரவைப் பிறப்பித்துள்ளது.

Published:Updated:

மருந்து அட்டைகளில் `பார்கோடு'... மத்திய அரசின் முடிவு பயனளிக்குமா...?

 மருந்து அட்டைகளில் `பார்கோடு' (Barcode - தனித்துவ அடையாளக் குறியீடு) அச்சிட்டு, வழங்க வேண்டும்' என்று மருந்து உற்பத்தியாளர்களுக்கு மத்திய சுகாதாரத் துறை இருநாள்களுக்கு முன் ஓர் உத்தரவைப் பிறப்பித்துள்ளது.

மருந்து அட்டைகளில் `பார்கோடு'... மத்திய அரசின் முடிவு பயனளிக்குமா...?
News
மருந்து அட்டைகளில் `பார்கோடு'... மத்திய அரசின் முடிவு பயனளிக்குமா...?

த்திய அரசு ஆண்டுக்கு ரூ.20,000 கோடிக்கும், மாநில அரசு ரூ.650 கோடிக்கும் மருந்துகள் கொள்முதல் செய்து வருகிறது. உரிய உரிமம் உடைய நிறுவனங்களிடமிருந்து தரமான மருந்துகளைக் கொள்முதல் செய்து வந்தாலும், காலாவதியான மருந்துகளில் புதிய தேதியை அச்சிட்டு போலி மற்றும் தரமில்லாத மருந்துகள் பார்கோடு இல்லாமல் அரசு மருத்துவமனைகளுக்குள் ஊடுருவுவதற்கான வாய்ப்புகளும் இருந்து வந்தன. இதற்கு மத்திய அரசு கிடுக்குப்பிடி போட்டுள்ளது. மருந்துகள் கொள்முதல் செய்வதில் விதிமுறைகள் கடுமையாக்கப்பட்டுள்ளன.


குறிப்பாக, மருந்து அட்டைகளில் `பார்கோடு' (Barcode - தனித்துவ அடையாளக் குறியீடு) அச்சிட்டு, வழங்க வேண்டும்' என்று மருந்து உற்பத்தியாளர்களுக்கு மத்திய சுகாதாரத் துறை இரு நாள்களுக்கு முன் ஓர் உத்தரவைப் பிறப்பித்துள்ளது. ஏப்ரல் 1 ம் தேதி முதல் அதை நடைமுறைப்படுத்தவும் அறிவுறுத்தியுள்ளது. மத்திய அரசின் இந்த அறிவிப்பு மெள்ள மாநில அரசுகளுக்கும் நடைமுறைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

மருந்து அட்டைகளில் `பார்கோடு' அவசியமானதா... அது எந்த அளவுக்குப் பயனளிக்கும்? 

 தமிழ்நாடு மருத்துவ சேவைகள் கழகத்தின் மேலாண் இயக்குநர் டாக்டர் உமாநாத்திடம் கேட்டோம்.
``மத்திய அரசுக்கு மருந்து விநியோகம் செய்யும் நிறுவனங்களுக்கு மட்டும் தற்போது இந்த விதிமுறை கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் விற்பனை செய்யப்படும் மருந்துகளுக்கும் மாநில அரசு கொள்முதல் செய்யும் மருந்துகளுக்கும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென்றால், மருந்து மற்றும் வேதிப்பொருள்கள் சட்டத்தில் திருத்தங்கள் தேவைப்படும்.

அதாவது, மருந்துகளை `பேக்' செய்யும்போது என்னென்ன விதிமுறைகளைப் பின்பற்ற வேண்டும் (`பேக்கேஜிங் ஸ்டாண்டர்டு') என்ற அம்சத்தில் திருத்தங்கள் செய்ய வேண்டும். அதில் திருத்தம் கொண்டுவந்தால்தான் தனியார் மருத்துவமனை, அரசு மருத்துவமனை என அனைத்துக்கும் இதைக் கட்டாயமாக்க முடியும். தற்போது, சுகாதார மையங்களின் பயன்பாட்டுக்காக கொள்முதல் செய்யப்படும் மருந்துகளுக்கு பார்கோடு அச்சிடுவது குறித்த ஒரு வரைவை மத்திய அரசு கொண்டுவந்திருக்கிறது. அது இன்னும் மாநில அரசுக்குத் தரப்படவில்லை. அந்த வரைவு எங்களுக்கு வந்தவுடன் அதுகுறித்து முடிவெடுப்போம்.

ஆனால், பார்கோடு அச்சிடுவது குறித்து, தமிழக அரசுக்கு மருந்து விநியோகிப்பவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியிருக்கிறோம். 
பொதுவாக, மருந்துகளில் `பிரைமரி பேக்' (Primary pack),`செகண்டரி பேக்' (Secondary pack),`டெர்ஸரி பேக்' (Tertiary pack) என மூன்று வகையான பேக்கேஜிங் உண்டு. பத்து மாத்திரைகள் இருக்கும் ஓர் அட்டை `பிரைமரி பேக்'. பத்து அட்டை மாத்திரைகளைச் சேர்த்து ஒரு டப்பாவில் அடைத்திருப்பார்கள் அது `செகண்டரி பேக்'. ஐம்பது டப்பாக்கள் சேர்த்து ஒரு பெட்டியில் அடைப்பதை `டெர்ஸரி பேக்' என்போம்.

செகண்டரி பேக் மற்றும் டெர்ஸரி பேக்கில் பார்கோடு அச்சிடுவதற்கு அனைவரும் தயாராக உள்ளனர். ஆனால், பிரைமரி பேக்கில் பார்கோடு அச்சிட வேண்டுமென்றால், அதற்கென பிரத்யேகமான இயந்திரங்கள், பேக்கேஜிங் பொருள்கள் தேவைப்படும். இவற்றை மாற்ற மத்திய அரசுக்கு மருந்து விநியோகம் செய்யக்கூடிய பலர் தயாராக உள்ளனர். சிலர், கால அவகாசம் கேட்டுள்ளனர்.  


இந்தச் சூழலில், `மாநில அரசுக்கு மருந்து விநியோகம் செய்பவர்களுக்கும் பிரைமரி பேக்கில் பார்கோடு அவசியம்' என்று வலியுறுத்தினால், பெரும்பான்மையான மருந்து விநியோகிப்பாளர்கள் இதை நடைமுறைப்படுத்த முடியாது. அப்படியே செய்தாலும், போட்டியின் காரணமாக மருந்துகளின் விலை ஏற வாய்ப்புள்ளது. தமிழக மருத்துவ சேவைகள் கழகத்தின் சார்பில் உயிர்காக்கும் அத்தியாவசிய மருந்துகளை வாங்குகிறோம். இவற்றின் விலை குறைவு.

சிறிய நிறுவனங்கள்தான் பெரும்பாலும் அவற்றை விநியோகம் செய்து வருகின்றன. பார்கோடு அவசியமாகும்போது இந்த நிறுவனங்களால் அதிகச் செலவு செய்து அதை அச்சிட முடியாது என்பதால் பெரிய நிறுவனங்கள் சிறிய நிறுவனங்களின் இடத்தைப் பிடிக்கும். இதனால் மருந்துகளின் விலை ஏறிவிடும். அதனால்தான் மத்திய அரசு, பிரைமரி பேக்கில் பார்கோடு என்பதை நாடு முழுவதிலும் அனைத்து மருத்துவமனைகளுக்கும் அமல்படுத்தவில்லை. ராணுவம், ரயில்வே, இ.எஸ்.ஐ ஆகிய மூன்றுக்கும் மத்திய அரசு மருந்து கொள்முதல் செய்கிறது. ஆகவேதான், இந்த விதிமுறையை நடைமுறைப்படுத்தியிருக்கிறது. 


தமிழக அரசுக்கு 160 நிறுவனங்கள் மருந்து விநியோகம் செய்து வருகின்றன. இதில் சுமார் 120 நிறுவனங்கள் பார்கோடு அச்சிடுவதை அமல்படுத்தத் தயாராக இருந்தால், மீதியுள்ளவர்களையும் அமல்படுத்த அறிவுறுத்துவோம். எனவே, இதுகுறித்து விவாதித்து வருகிறோம். விரைவில் நல்ல முடிவு எடுப்போம்” என்றார்.
மருந்து அட்டை ஒவ்வொன்றிலும் பார்கோடு அச்சிடப்படுவதால் ஏற்படும் சாதக, பாதங்கள் குறித்து கேட்டோம்.
``மருந்து அட்டையில் பார்கோடு அச்சிடப்படுவதால், அந்த மாத்திரையை யார் உற்பத்தி செய்தது, உற்பத்தியாளர்கள் விவரங்கள், எந்த குடோனில் இருப்பு வைக்கப்பட்டிருந்தது என்பதை அறிந்துகொள்ள முடியும். ஆனால், மாநில அரசைப் பொறுத்தவரை ஒவ்வொரு மாத்திரை அட்டையில் இருக்கும் பார்கோடைப் படித்து, அந்த மருந்து அட்டை போலியானதா, தரமான மருந்தா என்று பார்த்துப் பார்த்து மருத்துவமனைகளில் விநியோகிப்பதில் நடைமுறைச் சிக்கல்கள் இருக்கின்றன.


மாத்திரை பேக் செய்யப்பட்டிருக்கும் டப்பாவில் உள்ள ஸ்ட்ரிப்பில் பேட்ச் எண் (Batch number) அச்சிடப்பட்டிருக்கும். மருந்தின் தரத்தைப் பரிசோதிக்க இதுவே போதுமானது. ஆனால், மத்திய அரசு பிரைமரி பேக்கிங்கில் பார்கோடு அவசியம் என்பதில் உறுதியாகவுள்ளது. தமிழகத்திடம் இதுகுறித்து கருத்து கேட்கும்போது இதையும் எடுத்துச் சொல்வோம். மருந்துஅட்டைகளில் பார்கோடு அச்சிடப்படுவதால் பாதகங்கள் எதுவும் இல்லை. ஆனால், கோடிக்கணக்கான மாத்திரைகளின் அட்டையில் பார்கோடு அச்சிடும்போது அதிகச் செலவு ஏற்படும்" என்றார் டாக்டர் உமாநாத்.