சிலரைப் பார்க்கும்போது வயதுக்கும் தோற்றத்துக்கும் தொடர்பேயிருக்காது. வயதுக்கு மீறிய முதிர்ச்சி தோற்றத்தில் தெரியும். இதற்கு என்ன காரணம்... இளமைத் தோற்றத்தைப் பாதுகாக்கத் தவிர்க்கவேண்டிய விஷயங்கள் எவை? விளக்குகிறார் சரும மருத்துவர் ஷரதா.

சூரியனிடமிருந்து வெளிப்படும் புறஊதாக் கதிர்கள்தான் முதுமைத் தோற்ற பாதிப்புகளுக்குக் காரணமாகின்றன. சருமத்தைப் பாதுகாக்கப் பருத்தி ஆடைகளை அணியலாம். க்ளோஸ்டு நெக், முழுக்கை ஆடைகளை அணியலாம். சன்ஸ்கிரீன் பயன்படுத்தலாம்.

தொடர்ச்சியான மதுப்பழக்கத்தால் உடலுக்குப் போதுமான நீர்ச்சத்து கிடைக்காமல் போகும்; சருமத்தில் வறட்சி, சுருக்கம் ஏற்பட்டு முதுமைத் தோற்றம் உண்டாகும். எனவே, ஆல்கஹால் பழக்கத்தைத் தவிர்ப்பது, சருமத்தின் ஆரோக்கியம் மேம்பட உதவும்.

செல்களைப் புதுப்பித்தல் உட்பட நம் உடலின் சீரான இயக்கத்துக்குத் தேவையான பணிகள் தூக்கத்தின்போதுதான் நடக்கின்றன. எனவே, தினமும் ஏழு முதல் எட்டு மணி நேரத் தூக்கம் அவசியம். தூங்கினால்தான், உடலிலுள்ள ஹார்மோன் சுரப்பு சீராக இருக்கும். தூக்கம் இல்லாவிட்டால், ஆரோக்கியம் கெடும்; இளமை தொலைந்துவிடும்.

சரும ஆரோக்கியத்துக்கு `கொலாஜென்’ (Collagen) என்னும் புரதம் முக்கியம். இதன் உற்பத்தி குறைந்தால், சருமத்தில் சுருக்கம் ஏற்பட்டு முதுமைத் தோற்றம் ஏற்படும். ஒரு சிகரெட்டில் உடலுக்குத் தீங்குவிளைவிக்கும் 4,000 நச்சு ரசாயனங்கள் இருக்கின்றன. புகைபிடிப்பதால், `கொலாஜென்’ உற்பத்தி குறைந்துவிடும்; இளமையிலேயே வயதான தோற்றம் உருவாகிவிடும். எனவே, புகைபிடிக்கும் பழக்கத்தைத் தவிர்ப்பது நல்லது.

அதிகப்படியான மனஅழுத்தம் காரணமாகவும் முதுமைத்தோற்றம் ஏற்படும். மனஅழுத்தம், ‘ஸ்ட்ரெஸ் ஹார்மோன்’ எனப்படும் ‘கார்டிசால்’ (Cortisol) சுரப்பை அதிகரிக்கச் செய்யும். இதனால், ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரிக்கும்; `கொலாஜென்’ புரதத்தை பாதித்து, வயதான தோற்றம் வந்துவிடும். ஆரோக்கியமான சமச்சீரான உணவு முறை, உடற்பயிற்சி, நடைப்பயிற்சி ஆகியவை இளமைத் தோற்றத்தைக் காக்க உதவும்.

ஆன்டிஆக்ஸிடன்ட்கள் (Antioxidants) நிறைந்த சிவப்பு, வெள்ளை, மஞ்சள், பச்சை நிறக் காய்கறிகள் மற்றும் பழங்கள், மீன், ஆலிவ் எண்ணெய் போன்ற ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் (Omega 3 Fatty Acids) நிறைந்த உணவுகளை உணவில் அதிகம் சேர்த்துக்கொள்ள வேண்டும். இவை சரும ஆரோக்கியத்தைப் பாதுகாக்கும். அதே நேரத்தில் வெண்ணெய், சீஸ், சாக்லேட், கேக், இனிப்புகள் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகளைத் தவிர்க்கவேண்டியது அவசியம்.

ஜி.லட்சுமணன்