உலக அளவில் தொற்றுநோய்களை வகைப்படுத்தினால், அதிகம் பேரை பாதிக்கும் நோயாக முன் நிற்பது டெங்கு. அதனால்தான் அது குறித்த விழிப்புஉணர்வு அதிகம் தேவைப்படுகிறது. டெங்கு பற்றிய மூடநம்பிக்கைகளில், டெங்கு வந்தாலே மரணம் நேர்ந்துவிடும் என்பது முக்கியமானது. அதற்கு வாய்ப்பில்லை. 99 சதவிகிதம், டெங்கு தானாகவே குணமாகிவிடும். ஆரோக்கியமான உணவுப் பழக்கம், உடற்பயிற்சி, போதிய உறக்கம், மனஅழுத்தமில்லாத வாழ்க்கைமுறை ஆகியவற்றை வழக்கமாக்கிக்கொண்டால் டெங்கு மட்டுமல்ல, வேறெந்த நோயுமே நம்மை அண்டாது.

நாம் தெரிந்துகொள்ளவேண்டிய இன்னொரு முக்கிய வைரஸ், ஃப்ளூ (Flu). இதை ‘இன்ஃப்ளூயென்ஸா’ (Influenza) என்று மருத்துவ மொழியில் சொல்வோம். இதில் மூன்று வகைகள் உள்ளன. ‘இன்ஃப்ளூயென்ஸா-ஏ’, ‘இன்ஃப்ளூயென்ஸா-பி’, ‘இன்ஃப்ளூயென்ஸா-சி.’ மூன்றுமே பறவைகளிடமிருந்து உருவானவைதான். குறிப்பாக, வலசை வரும் பறவைகள். விலங்குகளுக்கு வரும் நோய்கள் ஏதேனும் ஒரு சூழலில் மனிதர்களுக்கும் வர வாய்ப்பிருக்கிறது. ‘ஜூனோசிஸ்’ (Zoonosis) என்று அவற்றை வகைப்படுத்துவோம். உதாரணமாக, ‘லெப்டோஸ்பைரோசிஸ்’ (Leptospirosis)... எலி, ஆடு, மாடு, நாய்களுக்கு மட்டுமே வரக்கூடிய நோய். ஆனால், மனிதர்கள் இந்த விலங்குகளுடன் நெருங்கிப் பழகுவதால் அவர்களுக்கும் வருகிறது. இந்த வைரஸ், விலங்குகளைத் தாக்கும்போது பெரிய அளவில் அவற்றை பாதிக்காது. அதே வைரஸ், மனிதர்களை பாதிக்கும்போது தாக்கத்தின் வீரியம் அதிகமாக இருக்கும்.

எலி, ஆடு, மாடு, நாய்கள் போன்ற விலங்குகளின் சிறுநீரில் இந்தக் கிருமிகள் இருக்கும். மழைக்காலங்களில் தேங்கும் நீரில் இந்த விலங்குகள் சிறுநீர் கழிக்க வாய்ப்பிருக்கிறது. அந்த நீரில் நாம் நடக்கும்போது நம் காலில் காயங்கள் இருந்தால், அதன் வழியாகக் கிருமி உள்ளே போய்விடும். குடிநீர் வழியாகவும் உள்ளே போகலாம். சமீபத்தில் கேரளாவை பெரும் பதற்றத்துக்கு உள்ளாக்கிய `நிபா’ (Nipah) வைரஸ்கூட ‘ஜூனோசிஸ்’ வகையைச் சேர்ந்ததுதான். `பழந்தின்னி வௌவால்’ என்கிற பறவை மூலம் மனிதர்களுக்குப் பரவக்கூடியது. பனைமரத்திலிருக்கும் இந்த வௌவால்கள், கள்ளுக்காகக் கட்டப்பட்டிருக்கும் பானையில் வாய்வைத்தால் வைரஸ், கள்ளைக் குடிக்கும் மனிதர்களுக்குப் பரவிவிடும்; பழங்களைக் கடித்தால் அதைச் சாப்பிடுபவர்களின் உடலுக்குள் கிருமி சென்றுவிடும்.

குதிரைகளை பாதிக்கும் ஃப்ளூவுக்கு ‘ஈக்கொயின் ஃப்ளூ’ (Equine Flu) என்று பெயர். பன்றிகளைத் தாக்குவது, ‘ஸ்வைன் ஃப்ளூ’ (Swine Flu). பறவைகளைத் தாக்குவது ‘ஏவியன் ஃப்ளூ’ (Avian Flu). ஒவ்வொரு ஃப்ளூ வைரஸும் அந்தந்த விலங்குகளை மட்டுமே பாதிக்கும். சில நேரங்களில் அது மனிதர்களையும் தாக்கக்கூடும். ‘ஏவியன் ஃப்ளூ’-வை நாம், `பறவைக் காய்ச்சல்’ என்போம். இது தாக்கினால், கொத்துக் கொத்தாக பறவைகள் இறந்துபோகும். அவ்வளவு வலிமையான வைரஸ். ஒரு பறவைக்கு வந்தால், விறுவிறுவென அடுத்தடுத்த பறவைகளுக்கும் பரவிவிடும். அதனால் உயிரிழப்பு அதிகரித்துக்கொண்டே போகும். இந்த வைரஸ் மனிதர்களையும் தாக்கியிருக்கிறது. அதிர்ஷ்டவசமாக ஒரு மனிதரிடமிருந்து இன்னொரு மனிதருக்குப் பரவும் வல்லமை இந்த வைரஸுக்கு இல்லை. அதனால் மனித இனம் தப்பித்தது. பன்றிகளை மட்டுமே தாக்கிக்கொண்டிருந்த, ‘ஸ்வைன் ஃப்ளூ’ ஒரு கட்டத்தில் பன்றிகளுக்கு ஏற்படுத்தும் தாக்கத்தைவிடக் கூடுதல் தாக்கத்தோடு மனிதர்களுக்குப் பரவியது. பன்றியிடமிருந்து மனிதர்களுக்கு வந்ததால், இதற்குப் ‘பன்றிக் காய்ச்சல்’ என்று பெயர். பன்றிக்காய்ச்சல் பற்றிப் பார்ப்பதற்கு முன்னால் ‘இன்ஃப்ளூயென்ஸா’ பற்றிய அடிப்படை விஷயங்களைப் பார்த்துவிடுவோம். காத்திருங்கள்!

- களைவோம்...