சீரக வகைகளில் அதிக மருத்துவ குணம்கொண்டது கருஞ்சீரகம். மாதவிடாய்க் கோளாறு முதல் ரத்த அழுத்தம்வரை அனைத்துக்கும் தீர்வு தரும் அருமருந்து.

* கருஞ்சீரகத்தில் ஆன்டி பாக்டீரியல் தன்மை அதிகமிருப்பதால் இரைப்பை, கல்லீரலில் ஏற்படும் கிருமித்தொற்றுகளை நீக்கும்.

* கருஞ்சீரகத்தைப் பொடியாக்கி, தேனும் வெந்நீரும் சேர்த்து தினமும் ஒருவேளை வீதம் மூன்று நாள்கள் சாப்பிட்டால், சிறுநீரகக் கற்கள் மெள்ளக் கரையும். பித்தப்பைக் கற்களை வெளியேற்ற உதவும் அருமையான மருந்து இது.

* ஒரு டீஸ்பூன் கருஞ்சீரகத்துடன் அரை டீஸ்பூன் பூண்டு விழுது சேர்த்து அரைத்து, தேன் கலந்து சாப்பிட்டால் ஆஸ்துமா, மூச்சுத்திணறல் ஆகியவற்றின் தீவிரம் குறையும்.

* கருஞ்சீரகப் பொடியை உடலில் தேய்த்துக் குளித்தால், சோரியாசிஸ் உள்ளிட்ட சரும நோய்கள் மட்டுப்படும்.

* மலச்சிக்கல் பிரச்னைகளிலிருந்து விடுபட தினமும் ஒரு டீஸ்பூன் கருஞ்சீரகம் சாப்பிடலாம். இது மனநலம் தொடர்பான பிரச்னைகளிலிருந்து விடுபடவும் உதவும்.

* தினம் ஒரு டீஸ்பூன் கருஞ்சீரகம் சாப்பிட்டால் உயர் ரத்த அழுத்தம், சர்க்கரைநோய் போன்றவை கட்டுக்குள் இருக்கும். கருஞ்சீரகத்துடன் ஓமம், சுக்கு, திப்பிலி, மாவிலங்கப்பட்டையை சம அளவு சேர்த்து இடித்து, நீர்விட்டுக் கொதிக்கவைத்து கஷாயமாக்கி, தினமும் 25 மி.லி வீதம் குடித்தால் மாதவிடாய்க் கோளாறு, பேறுகாலத்துக்குப் பிறகு ஏற்படும் கட்டிகள் நீங்கும். பொரியல், ரசம் என அன்றாடச் சமையலில் கருஞ்சீரகத்தைச் சேர்த்துவந்தால் உணவும் மருந்தாகும்.

எம்.மரிய பெல்சின்