உலகில் ஒருவரை அதிகம் நேசிப்பவர் யார்?

அவருடைய கணவரோ, மனைவியோ, குழந்தைகளோ, பெற்றோரோ இல்லை. முதலில் அவரை அதிகம் நேசிப்பது அவரேதான்; அதன் பிறகுதான் மற்றவர்கள் அனைவரும். `இப்படித் தன்னைப் பற்றி மென்மையான, இதமான எண்ணங்களைக்கொண்டிருப்பதும், பிறர் மீது அதே போன்ற அன்பைச் செலுத்துவதும் நம் இதயத்துடிப்பை லேசாக்குகின்றன. அதன் மூலம் நோய் எதிர்ப்பு சக்தி மேம்படுகிறது’ என்று ஆக்ஸ்ஃபோர்டு, எக்ஸெட்டர் பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த நிபுணர்கள் கண்டறிந்திருக்கிறார்கள்.

இதற்கு என்ன காரணம்?

`தன் மீது அன்பு செலுத்துகிற ஒருவரிடம் புற அழுத்தங்களைப் பற்றிய அச்சம் குறைகிறது. அவருடைய உடல் பாதுகாப்பாக, இதமாக உணர்கிறது. இதனால் இவர்களிடம் இரக்க உணர்வு அதிகம் ஏற்படுகிறது. பிறருடன் நன்கு இணைந்து பழகுகிறார்கள். பிரச்னைகளை எதிர்கொண்டு சமாளிக்கிறார்கள். பாதிப்புகள் ஏற்பட்டாலும், விரைவில் அவற்றிலிருந்து வெளியில் வருகிறார்கள்’ என்றெல்லாம் நிபுணர்கள் ஊகிக்கிறார்கள். நம்மை நாமே நேசிப்பதில் இத்தனை நன்மைகளா?

பெரும்பாலான விளையாட்டு வீரர்கள் கச்சிதமான உடற்தகுதியுடனும் ஆரோக்கியத்துடனும் இருப்பார்கள். அவர்களுடைய ரசிகர்கள்?

அரங்கத்திலோ, தொலைக்காட்சிக்கு முன்பாகவோ அமர்ந்து தங்களுக்குப் பிடித்த அணிகளுக்கு ஆதரவளிப்பதன் மூலம் ரசிகர்களுடைய ஆரோக்கியம் மேம்பட்டுவிடுவதில்லை; சொல்லப்போனால் விளையாட்டுப் போட்டிகளைப் பார்க்கும்போது உண்ணும் குப்பை உணவுகளால் அவர்களுக்கு பாதிப்புகள் ஏற்படத்தான் வாய்ப்புகள் அதிகம். இந்தநிலையை மாற்றுவதற்குச் சில கால்பந்தாட்ட அணிகள் முயன்றிருக்கின்றன. தங்களுடைய போட்டிகளைத் தொடர்ந்து ஆர்வத்துடன் பார்க்கும் ரசிகர்களைத் தங்கள் மைதானங்களுக்கு அழைத்து, அவர்களுடைய ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கான வழிகளைச் சொல்லித் தந்திருக்கிறார்கள். ‘அவர்கள் சொல்லித் தந்தார்கள், சரி. இவர்கள் கேட்டார்களா?’ என்று கிண்டலாகக் கேட்க வேண்டாம். இந்த நிகழ்ச்சிகளில் பங்கேற்ற ஆயிரத்துக்கும் மேற்பட்ட ரசிகர்களை ஆராய்ந்து பார்த்ததில், அவர்களுடைய உணவுப் பழக்கம், உடல் எடை, நலன், சுயமதிப்பு, சுறுசுறுப்பு உள்ளிட்ட பல விஷயங்கள் முன்னேறியிருப்பது தெரியவந்திருக்கிறது.

இதன் பொருள், விளையாட்டின் கவர்ச்சியைவைத்து இது போன்ற நல்ல விஷயங்களையும் மக்களுக்குக் கற்றுத்தரலாம்; ஆரோக்கியமான வாழ்க்கைமுறையைப் பரப்பலாம். கிரிக்கெட் வெறியர்களைக்கொண்ட நம் ஊரிலும் கிரிக்கெட் அணிகள், நட்சத்திரங்கள் ரசிகர்களுடைய உடல்நலனில் அக்கறைவைத்து இது போன்ற முயற்சிகளில் ஈடுபட்டால் நன்றாக இருக்கும்!

தினமும் குறிப்பிட்ட தொலைவு நடப்பது, சைக்கிள் ஓட்டுவது, படிகளில் ஏறி இறங்குவது போன்ற ‘ஏரோபிக்’ உடற்பயிற்சிகளில் ஈடுபட்டால், உடல்நிலை நன்றாக இருக்கும். இது எல்லாருக்கும் தெரியும்.

இதே உடற்பயிற்சிகளால் ஒருவருடைய சிந்திக்கும் திறனும் மேம்படும், தெரியுமா?

குறிப்பாக, ‘எக்ஸிகியூட்டிவ் ஃபங்ஷன்ஸ்’ (Executive Functions) எனப்படும் செயல்கள் ஏரோபிக் உடற்பயிற்சியால் கணிசமாக மேம்படுகின்றனவாம். அதாவது, ஒருவர் தன் சொந்த நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்துவது, தன்னைச் சுற்றி நடப்பவற்றைக் கூர்ந்து கவனிப்பது, விஷயங்களை ஒழுங்குபடுத்திச் செய்வது, இலக்குகளை எட்டுவது போன்றவை உடற்பயிற்சியின் மூலம் மேம்படுகின்றன. வயதாவதால் சிந்தனைத்திறனில் ஏற்படும் தளர்ச்சியைக்கூட ஏரோபிக் உடற்பயிற்சிகள் நேர்செய்துவிடுவதாகச் சொல்கிறது இந்த ஆய்வு. அதே நேரம் உடற்பயிற்சியால் அனைத்து வயதினரின் மூளையும் கூர்மையாகும். அவர்களால் இன்னும் சிறப்பாகச் சிந்திக்க இயலும். வயதானவர்களின் அறிவாற்றலை, சிந்தனைத்திறனை, நினைவாற்றலை, பிரச்னைகளைத் தீர்க்கும் திறனையெல்லாம் பரிசோதித்துப் பார்த்தால், ஆண்களைவிடப் பெண்கள் சிறப்பாகச் செயலாற்றுகிறார்கள். ஏன்?

வாஷிங்டன் பல்கலைக்கழகத்தின் மருத்துவக் கல்விப் பிரிவு இதைப் பற்றி விரிவாக ஆய்வு செய்திருக்கிறது. இளைஞர்கள் தொடங்கி முதியவர்கள்வரை பல ஆண்களின் வயது, மூளையின் வளர்சிதை மாற்றம் போன்றவற்றை ஓர் இயந்திரக்கற்றல் செயல்முறையின் மூலம் அலசிப் பார்த்திருக்கிறார்கள். பின்னர் அவற்றைப் பெண்களுக்குப் பொருத்திப் பார்த்தபோது, அவர்களுக்குக் கிட்டத்தட்ட 3.8 வயது குறைவாக இருப்பதாகக் கணக்கிடப்பட்டது. இதன் பொருள், ஒரே வயதிலிருக்கும் ஆண், பெண்ணின் மூளைகளை ஒப்பிட்டுப் பார்க்கும்போது, பெண்களைவிட ஆண்களின் மூளைக்குக் கிட்டத்தட்ட மூன்று வயது அதிகமாகிவிட்டதுபோல் தோன்றுகிறது. அதாவது, ஆண்களைவிடப் பெண்கள் (மூளை விஷயத்தில்) இளமையாக இருக்கிறார்களாம். இந்த வேறுபாட்டை வயதானவர்கள் மத்தியில் மட்டுமல்ல, இளைஞர்கள் மத்தியிலும் காண முடிகிறதாம். இதன் மூலம், இளவயதிலிருந்தே பெண்களைவிட ஆண்களின் மூளைத்திறன் விரைவாகச் சரிந்துவருவது கண்டறியப்பட்டிருக்கிறது.

தொடரும்...

என்.ராஜேஷ்வர்

உளவியல் உண்மைகள்!

ஷாப்பிங் சென்று 2,000 ரூபாய்க்கு பொருள்கள் வாங்குவதாகத் திட்டம் வைத்திருக்கிறீர்கள். போன இடத்தில், 4,000 ரூபாய் பெறுமானமுள்ள ஓர் அழகான சேலை, தள்ளுபடியில் 2,500 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. சந்தோஷமாக வாங்கி வருவீர்கள். உங்களைப் பொறுத்தவரை இது லாபம். ஆனால், நீங்கள் 2,000 ரூபாய்க்குத்தான் வாங்கத் திட்டமிட்டீா்கள் என்பதை அது மறந்துவிடச் செய்துவிடும். இதை உளவியலில் `ஆங்கரிங் பயாஸ்’ (Anchoring Bias) என்போம். இது வணிகத்தில் ஓர் உத்தியாகவே பயன்படுத்தப்படுகிறது. உஷார்!

தொகுப்பு: சித்ரா அரவிந்த் உளவியல் ஆலோசகர்