Published:Updated:

கண்ணுல பூச்சி பறக்குதா?

கண்ணுல பூச்சி பறக்குதா?
News
கண்ணுல பூச்சி பறக்குதா?

எஸ்.ப்ரீத்தி, கண் மருத்துவர்ஹெல்த்

பார்வையில் சிறு புழுக்கள் நெளிவதுபோலவும், பூச்சிகள் பறப்பதுபோலவும் உணர்ந்த அனுபவம் பலருக்கு நேர்ந்திருக்கும். ‘கண் மிதவைகள்’ எனப்படுகிற இவை பெரும்பாலும் பெரிய பாதிப்புகளை ஏற்படுத்துவதில்லை. ஆனால் அடிக்கடி மிதவைகள் கண்களில் தெரிந்தால், கண் மருத்துவரை உடனடியாக அணுக வேண்டும். கண் மிதவைகள் உருவாவதற்கான காரணங்கள் என்னென்ன... அவற்றைக் கண்டறிவது எப்படி?  கண் மருத்துவர் ப்ரீத்தி விளக்குகிறார். 

கண்ணுல பூச்சி பறக்குதா?

உட்புறக் கண்களின் 80 சதவிகித அமைப்பு ஜெல் போன்ற ‘விட்ரியஸ் ஹியூமர்’ (Vitreous Humor) என்ற பொருளால் ஆனது. அதிலிருக்கும் மூலக்கூறுகள் ஒன்றோடொன்று சேர்ந்திருக்கும். அவை எப்போதாவது உடையும்போது அந்த காலியிடத்தில் ஒளிபட்டு நிழலைப் பிரதிபலிக்கும். அந்த நிழல்தான் மிதவைகளாகத் தெரியும்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
கண்ணுல பூச்சி பறக்குதா?



எத்தனை பேருக்கு?


10-ல் ஏழு பேருக்கு இந்தப் பிரச்னை இருக்கலாம்.

எப்போது  தொடங்கும்?

வெள்ளைநிறத் தாள், வானம் போன்ற பிரகாசமான பொருள்களைப் பார்க்கும்போது கண்களில் மிதவைகள் தெரியும்.   

கண்ணுல பூச்சி பறக்குதா?

விட்ரியஸ் ஹியூமரின் வேலை என்ன?

கண்களின் வட்டமான வடிவத்தைப் பராமரிக்கிறது. வெளிச்சம், கண்களின் பின்புறத்தில் இருக்கும் விழித்திரையை அடைய இதன் வழியாகத்தான் ஊடுருவிச் செல்லும்.

விட்ரியஸ் ஹியூமர் எதனால் ஆனது?

பெரும்பாலான அளவு நீரால் நிறைந்திருக்கும். புரதம் உள்ளிட்ட பிற பொருள்களும் உள்ளன.

 கண் மிதவைகள் உருவாகக் காரணங்கள் என்ன?

விட்ரியஸ் ஹியூமரில் காணப்படும் புரதங்கள் ஒன்றோடொன்று ஒட்டிக்கொள்வதால்.

வயது மூப்படையும்போது விட்ரியஸ் ஹியூமர் பகுதி தானாகவே சுருங்குவதாலும்,  சிறிய மாசுகள் அந்தப் பகுதியில் நுழைவதாலும்.

கண்களில் உள்ள ரத்தக்குழாய்களில் ரத்தக்கசிவு இருந்தால், அந்த ரத்தத் துளிகள் உறைந்து விட்ரியஸ் ஹியூமர் பகுதியில் படிவதால். 

விழித்திரையில் சிறிய துளைகள் ஏற்பட்டால்.

எப்படிக் கண்டறிவது?


கண் மிதவைகள் கீழ்க்காணும் வடிவங்களில் தோன்றலாம்

* கறுப்பு அல்லது சாம்பல் நிறப்புள்ளிகள்

* நெளிவான கோடுகள்

* வளையங்கள்

* நூல் போன்ற இழைகள்

* சிலந்தி வலை

என்ன செய்ய வேண்டும்?

அனைத்து மிதவைகளையும் அலட்சியப்படுத்தக் கூடாது. எப்போதாவது தோன்றி மறையும் மிதவைகளால் பிரச்னை இல்லை. இவற்றால்  பார்வையில் பிரச்னைகள் ஏற்பட்டால், மருத்துவரை அணுகி காரணத்தைக் கண்டறிந்து சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டும். ஆண்டுக்கு ஒரு முறை கண் பரிசோதனையும் அவசியம்.

ஜெனி ஃப்ரீடா