Published:Updated:

தனியார் மருத்துவமனையில் ஆண் குழந்தை கடத்தல்: மர்ம பெண்ணுக்கு வலை

தனியார் மருத்துவமனையில் ஆண் குழந்தை கடத்தல்: மர்ம  பெண்ணுக்கு வலை
தனியார் மருத்துவமனையில் ஆண் குழந்தை கடத்தல்: மர்ம பெண்ணுக்கு வலை
தனியார் மருத்துவமனையில் ஆண் குழந்தை கடத்தல்: மர்ம  பெண்ணுக்கு வலை

அரியலூர்: அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் பிறந்து இரண்டு நாட்களே ஆன ஆண் குழந்தை ஒன்று மர்ம பெண் ஒருவரால் கடத்தப்பட்டுள்ள சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஜெயங்கொண்டம் மேற்கு வெள்ளாளர் தெருவை சேர்ந்த ராஜகுமாரிக்கு 2 நாட்களுக்கு முன் ஜெயங்கொண்டத்தில் உள்ள டாக்டர் உஷா செந்தில்குமார் நடத்திவரும், பிரசாத் சர்ஜிகல் கேர் என்கிற தனியார் மருத்துவமனையில் ஆண் குழந்தை பிறந்தது. நேற்றிரவு 7 மணி அளவில் மர்ம பெண் ஒருவர் ராஜகுமாரியிடம், தடுப்பூசி போட குழந்தையை தூக்கி வர டாக்டர் சொல்கிறார் என கூறியுள்ளார். இதை நம்பி ராஜகுமாரி குழந்தையை அந்த பெண்ணிடம் கொடுத்துள்ளார். அவருடன் உறவினர்கள் 2 பேரும் சென்றுள்ளனர்.

கொஞ்ச தூரம் போன அந்த பெண், மருந்து சீட்டை எடுத்து வருமாறு உறவினர்களிடம் கூறினார். இதனால் மருந்து சீட்டு எடுக்க உறவினர்கள் வந்துவிட்டனர். பிறகு சீட்டுடன் சென்று பார்த்தபோது குழந்தையை வைத்திருந்த அந்த பெண்ணை காணவில்லை. அதிர்ச்சி அடைந்த உறவினர்கள், குழந்தை கடத்தப்பட்டதை குறித்து ஜெயங்கொண்டம் போலீசில் புகார் கொடுத்தனர்.

இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து குழந்தையை கடத்தி சென்ற மர்ம பெண்ணை வலைவீசி தேடி
வருகின்றனர். இந்த நிலையில் அந்த மருத்துவமனையில் பணியாற்றிய நர்ஸ் ஒருவரும் தலைமறைவாகி உள்ளதால், அது குறித்தும் போலீசார் விசாரித்து வருகிறார்கள். நர்ஸ் பெயரை வெளியிட்டால் குற்றவாளிகள் அலர்ட் ஆகிவிடுவார்கள். கூடிய விரைவில் குழந்தையை மீட்போம் என்கிறார்கள் ஜெயங்கொண்டம் காவல்துறையினர்.

##~~##
ஆனால், நம்மிடம் பேசிய ஜெயங்கொண்டம் நகரவாசிகள், ஜெயங்கொண்டத்தை அடுத்துள்ள கல்லாத்தூர் கிராமத்தை சுற்றியுள்ள கிராமத்து பெண்கள் இது போன்ற குற்ற சம்பவங்களில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். இவர்கள் திருவிழாவுக்கு செல்வது போல் கும்பலாக செல்வார்கள். காரியத்தை முடிச்சிட்டு அமைதியாக தப்பிவிடுவது அவர்கள் ஸ்டைல். இது நகர போலீஸாருக்கும் தெரியும். இந்த கும்பல் இதற்கு முன் குழந்தைகள் கடத்தலிலும் ஈடுபட்டது உண்டு. அவர்களையும் விசாரிக்க வேண்டும். இது போன்ற சம்பவங்கள் நடக்காத வண்ணம் அந்த பகுதியை காவல்துறையினர் கண்காணிக்க வேண்டும் என்று கோரிக்கை
வைத்தனர்.
செய்யுமா காவல்துறை..?
சி.ஆனந்தகுமார்