வீட்டுத் தோட்டங்களிலும், ஈரம் நிறைந்த நிலங்களிலும் தானாக வளரக்கூடியது சுண்டைக்காய்ச் செடி. `மூலிகைக் காவலன்’, `செரிமானச் சிகரம்’ என்றெல்லாம் அழைக்கப்படும் அதன் மருத்துவப் பலன்கள் பற்றிப் பார்ப்போம்.

* சுண்டைக்காயைப் பறித்ததும் பச்சையாகக் குழம்பில் சேர்த்துச் சாப்பிடலாம். மோர், உப்பு சேர்த்து ஊறவைத்து வற்றலாக்கியும் சாப்பிடலாம்.

* சுண்டைக்காய் குடல்பூச்சிகளைப் போக்கும்; ரத்தச்சோகையிலிருந்து மீட்கும்.

* கசப்புச் சுவையும் வெப்பத்தன்மையும் உடைய சுண்டைக்காய், சளி மற்றும் தொண்டைக் கோளாறுகளைச் சரிசெய்யும்; பசி உணர்வை ஏற்படுத்தும்.

* சுண்டைக்காய் வற்றலை வறுத்து மதியம், இரவு உணவுடன் சேர்த்துச் சாப்பிட்டால் செரிமானம் எளிதாகும். பித்தம் தொடர்பான நோய்களுக்கும் இது நல்ல மருந்து.

* இடைவிடாத வயிற்றுப்போக்கால் சிரமப்படுபவர்கள் சுண்டை வற்றலை வறுத்துச் சாப்பிடலாம்.

* சுண்டை வற்றலுடன் சம அளவு ஓமம், சிறிது மிளகு சேர்த்து வறுத்துப் பொடித்து உப்பு கலந்து உணவில் சேர்த்துக்கொள்ளலாம். இது மழைக்கால பாதிப்புகளிலிருந்து நிவாரணம் தரும்.

* சுண்டை வற்றலுடன் கைப்பிடி கறிவேப்பிலை, மிளகு, சீரகம், வெந்தயம் தலா 50 கிராம் சேர்த்து வறுத்துப் பொடித்துச் சாப்பிட்டால் வாய்வுக் கோளாறு, மூலக் கோளாறு விலகும்.

* சுண்டை வற்றலை நெய்யில் வறுத்துப் பொடியாக்கிச் சாப்பிட்டால், சர்க்கரைநோய் கட்டுக்குள் இருக்கும். சர்க்கரைநோயால் வரும் கைகால் நடுக்கம், மயக்கம், சோர்வு போன்றவையும் விலகும்.

* கறிவேப்பிலை, மாங்கொட்டைப் பருப்பு, ஓமம், நெல்லி வற்றல், மாதுளை ஓடு, வெந்தயத்துடன் சுண்டை வற்றல் சேர்த்து வறுத்துப் பொடித்து மோரில் கலந்து குடித்தால் வயிற்றுக்கோளாறுகள் சரியாகும்.

எட்வர்டு பெரியநாயகம், இயற்கை மருத்துவர்

- எம்.மரிய பெல்சின்