Published:Updated:

தொற்றுநோய்களின் உலகம்! - 30

தொற்றுநோய்களின் உலகம்! - 30
பிரீமியம் ஸ்டோரி
தொற்றுநோய்களின் உலகம்! - 30

ஹெல்த்

தொற்றுநோய்களின் உலகம்! - 30

ஹெல்த்

Published:Updated:
தொற்றுநோய்களின் உலகம்! - 30
பிரீமியம் ஸ்டோரி
தொற்றுநோய்களின் உலகம்! - 30

டந்த இதழில் ‘ஆன்டி ஃப்ளூ’ மாத்திரை பற்றி எழுதியிருந்ததைக் குறிப்பிட்டு சில வாசகர்கள் பேசினார்கள். அவர்களுக்காக இந்தச் செய்தி..! ஆன்டி ஃப்ளூ மாத்திரை என்பது நிச்சயம் நம்பகமானது. பன்றிக்காய்ச்சலைத் தடுக்கும் ஆற்றல் அந்த மாத்திரைக்கு உண்டு. ஆனால், பன்றிக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு  ‘ஆன்டி ஃப்ளூ’ மாத்திரை பெரிய அளவில் பலன் தருவதில்லை என்று ஆய்வுகளில் நிரூபிக்கப்பட்டிருக்கிறது. அதேபோல தடுப்பூசி குறித்தும் சிலர் சந்தேகம் எழுப்பியிருந்தார்கள். மருத்துவ நிபுணர்கள் தீவிரமான ஆய்வின் மூலம் கண்டறிந்து, ‘இந்த ஆண்டு இந்த வகை ஃப்ளூ வைரஸின் தாக்கம் அதிகமிருக்கும்’ என்று சொல்வதன் பேரில் மருந்து நிறுவனங்கள் அந்த வைரஸைத் தடுக்கும் மருந்துகளைத் தயாரித்து, விற்கின்றன. சில நேரங்களில் அந்தக் கணிப்பு தவறாகிவிடும். அந்தத் தருணத்தில் தடுப்பூசி பயனளிக்காது. ஒட்டுமொத்தமாக தடுப்பூசியே பயனளிக்காது என்பதல்ல. சில நேரங்களில் அப்படி நடக்க வாய்ப்பிருக்கிறது.

தொற்றுநோய்களின் உலகம்! - 30

நாம் இந்தத் தொடரில் மருத்துவத்தின் நேர்மறைப் பக்கங்களை மட்டும் பார்க்காமல், அதன் இன்னொரு பக்கம் குறித்தும் தொடர்ச்சியாகப் பேசிவருகிறோம். மக்களுக்கு மருத்துவம் குறித்து நிறைய விழிப்புஉணர்வு தேவைப்படுகிறது. ஒரு நோய் எப்படி வருகிறது, அந்த நோய்க்கான சிகிச்சைகள் என்னென்ன, நோயை உறுதிசெய்வது எப்படி, மருந்துகள் சாப்பிடும்போது என்ன மாதிரியான பக்கவிளைவுகள் ஏற்படும் என்பதெல்லாம் மருத்துவத்தில் அடிப்படை விஷயங்கள். இவை அனைத்தையும் மக்கள் தெரிந்து வைத்திருக்க வேண்டும். அந்த நோக்கத்தில்தான் மருந்துகளின் பக்கவிளைவுகள் பற்றிச் சொல்லிவருகிறேன்.

தமிழகத்தைத் தொடர்ந்து அச்சுறுத்திவருகிறது பன்றிக்காய்ச்சல். தமிழகம் கடந்தும் இந்த நோயின் தாக்கம் அதிகரித்துவருகிறது. இந்தியா முழுவதும் கடந்த இரண்டு மாதங்களில் 14,803 பேர் பன்றிக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருப்பதாக அரசு புள்ளிவிவரங்கள் சொல்கின்றன. ‘இந்த வருடம் பாதிப்பு அதிகமாகலாம்’ என்று தேசிய நோய்த் தடுப்பு மையத்தின் ஆய்வுகள் சொல்கின்றன. இந்தியாவின் வடமேற்குப் பகுதிகளான ராஜஸ்தான், குஜராத், டெல்லி போன்ற பகுதிகளில் இப்போது பன்றிக்காய்ச்சல் தீவிரமாகப் பரவிவருகிறது. டெங்கு மாதிரிதான் பன்றிக்காய்ச்சலும். 99 சதவிகிதம் பெரிய அளவில் பாதிப்புகள் இருக்காது. குழந்தைகளுக்கும் முதியோருக்கும் வந்தால், கூடுதல் கவனம் எடுத்துக்கொள்வது நல்லது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தொற்றுநோய்களின் உலகம்! - 30

பன்றிக்காய்ச்சல் வராமல் தடுக்க, கொஞ்சம் எச்சரிக்கை உணர்வு போதும். குறிப்பிட்ட நேரத்துக்கு ஒரு முறை கைகளைக் கழுவ வேண்டும். கைகளைக் கழுவுவது என்றால் வெறுமனே தண்ணீரில் நீட்டிவிட்டு எடுப்பதல்ல. சோப்பு போட்டு விரல்களின் இடுக்குகளில் விரல்களைக் கோத்து நன்றாகத் தேய்த்துக் கழுவ வேண்டும். கைகளின் பின்பக்கங்களையும் தேய்த்துக் கழுவுவது நல்லது. சுவாசத்தின் மூலமாகவும், கைகள் மூலமாகவுமே கிருமிகள் அதிக அளவில் நம் உடலுக்குள் செல்கின்றன. கைகளைச் சுத்தமாகக் கழுவினால் பெரும்பாலான நோய்களைத் தடுத்துவிட முடியும்.

மூக்கு, வாய், கண்களை அடிக்கடித் தொடும் பழக்கம் இருந்தால் மாற்றிக்கொள்வது நல்லது. காய்ச்சல் இருப்பவர்களிடம் கைகுலுக்குவதைத் தவிர்க்க வேண்டும். சேர், பெஞ்ச், சோபா போன்ற, வீட்டிலிருக்கும் பொருள்களை தினமும் கிருமி நாசினி கொண்டு சுத்தமாகத் துடைத்து வைத்துக்கொள்வது நல்லது. நம் உடலுக்கு நாம்தான் அரண். நம்மையும் சுற்றுப்புறத்தையும் சுத்தமாகப் பராமரித்தால், நிச்சயம் நோயற்ற வாழ்வு சாத்தியம்தான்!

அடுத்த இதழில் இன்னொரு தொற்று நோயிலிருந்து தொடங்கலாம்!

- களைவோம்...

 - வி.ராமசுப்பிரமணியன், தொற்றுநோய் சிறப்பு மருத்துவர்
 

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism