`பார்வைக் குறைபாட்டைச் சரிசெய்ய, கண்ணாடி அணிய வேண்டும்’ என்று சொல்லப்படுவது வழக்கம். ஆனால், கண்ணாடி என்றதும் பலரும் தயங்குவார்கள். ஏன் கண்ணாடி அணியப் பரிந்துரைக்கப்படுகிறது என்று அவர்கள் தெரிந்துகொள்வது நல்லது.

சிறிய பந்துபோலக் காணப்படும் கண், சராசரியாக 24 மி.மீ நீளமுள்ளது. கருவிழியில் தொடங்கி, அதன் பின்னால் உள்ள `அக்யூவஸ் ஹியூமர்’ (Aqueous Humour) எனப்படும் திரவம், கருவிழிப்படலம் (Iris), லென்ஸ் மற்றும் அதற்குப் பின்னாலுள்ள `விட்ரெஸ் ஹியூமர்’ (Vitreous Humour) எனப்படும் ஜெல்லி போன்ற பொருள், விழித்திரை, நரம்பு, மூளைவரை செல்லும் நரம்பியல் பாதைகள், மூளையின் பின்பகுதியிலிருக்கும் பார்வைக்கான பகுதி (Visual Area of Occipital Cortex) அனைத்தும் சீராக இருந்தால்தான் பார்வை தெளிவாக இருக்கும்.

கண்ணில் ஒவ்வொரு லென்ஸுக்கும் ஃபோகல் பாயின்ட் என்ற ஒன்று உண்டு. ஒரு லென்ஸின்மீது விழும் ஒளிக்கற்றை அதன் ஃபோகல் பாயின்ட்டில் சென்று சந்திக்கும். ஒரு காட்சி அல்லது உருவம் கண்ணின் விழித்திரையில் சரியாகத் தெரிய வேண்டுமானால் அச்சு நீளம் சராசரியாக 24 மி.மீ இருக்க வேண்டும். அதுபோக, கண்ணின் மற்ற பகுதிகளும் சீராக இருக்க வேண்டும். கண் பந்தானது, ஒரு மி.மீ அதிகரித்து, 25 மி.மீ இருந்தால்கூட மைனஸ் 3 அளவுக்குக் குழி லென்ஸ் தேவைப்படும். ஒரு மி.மீ குறைந்து, 23 மில்லிமீட்டராக இருந்தால் +3.00Dsph அளவு குவி லென்ஸ் தேவைப்படும். அதாவது நேரடியாகக் கண்ணில் விழும் ஒளிக்கற்றை சற்று முன்னதாகவோ, பின்னதாகவோ சென்று சந்திக்கும்போது உருவம் தெளிவற்றதாக இருக்கும்.. அதையே கண்ணாடி மூலம் பார்க்கும்போது ஒளிக்கற்றையைக் கண்ணாடியில் விழச்செய்து, பிறகு கண்ணில் விழச்செய்து, கண் பந்தின் ஃபோகல் பாயின்ட்டான விழித்திரையில் உருவம் ஃபோகஸ் செய்யப்படும்.

கண் பந்தின் நீள, அகலம் குறைவாகவோ, அதிகமாகவோ இருப்பது இயற்கையானதே. எல்லோருக்கும் மூக்கு, காது ஒரே அளவில் இருப்பதில்லை. அதுபோலத்தான் கண்ணாடி. கண்ணின் அளவு, குழந்தையின் வளர்ச்சியைப் பொறுத்து மாறுபடும். 21 வயதை அடையும்வரை உடலின் வளர்ச்சி எப்படி இருக்கிறதோ அதுபோலக் கண்ணின் வளர்ச்சியும் இருக்கும். பெரும்பாலும் அதற்குப் பிறகு கண்ணாடியின் பவர் மாறாது. உதாரணமாக, ஒருவருக்கு எட்டு வயதில் 1.00Dsph உள்ள கண்ணாடி தேவைப்படுவதாக வைத்துக்கொள்வோம்.

12 வயதில் 2.00 Dsph-ம், 16 வயதில் 2.50 Dsph-ம், 18 வயதில் 3.00 Dsph-ம் தேவைப்படலாம். அதன் பிறகு கண்ணின் நிலை மாறாமல் அப்படியே இருக்க வாய்ப்புகள் அதிகம். மூன்று ஆண்டுகள் தொடர்ச்சியாக ஒரே மாதிரியாக இருந்து, 21 வயது நிரம்பியதும் லாசிக் (Lasik) சிகிச்சை செய்யலாம். லாசிக் சிகிச்சையில் நமக்குத் தேவையான வகையில் கருவிழியை மாற்றுவார்கள்.

கண்ணாடிக்கு இன்னொரு மாற்று, கான்டாக்ட் லென்ஸ். அதன் தன்மையைப் பொறுத்து ஹார்டு, சாஃப்ட், செமி சாஃப்ட் என வகைப்படுத்தலாம். அவை பயன்படும் கால அளவைக்கொண்டு இயர்லி டிஸ்போசபிள், மன்த்லி டிஸ்போசபிள், வீக்லி டிஸ்போசபிள் என்று பிரிப்பார்கள். சில நோய்களுக்கு கான்டாக்ட் லென்ஸ்தான் சிறந்த தேர்வு. கான்டாக்ட் லென்ஸ் பயன்படுத்துவதில் பல்வேறு இடர்பாடுகள் உண்டு. மெயின்டனன்ஸ் அதிகம் தேவைப்படும். கருவிழிக்கு நீர்ச்சத்து குறைவதுடன் தொற்றுகள், அலர்ஜி ஏற்படவும் வாய்ப்பு அதிகம். அழகியல் காரணங்களுக்காக மட்டுமே கான்டாக்ட் லென்ஸ் தேர்வு செய்பவர்கள் யோசிக்க வேண்டும். 40 வயதில் `வெள்ளெழுத்து’ (Presbyopia) எனப்படும் சின்ன எழுத்துகளை வாசிப்பதில் பிரச்னை ஏற்படும். 40 வயது நிரம்பினால் கிட்டப்பார்வைக்கு கண்ணாடி போட்டுத்தான் படிக்க முடியும். இது, லென்ஸின் நெகிழ்வுத் தன்மை குறைவதால் ஏற்படுவது. ‘எனக்கு வயது ஐம்பது, கண்ணாடி இல்லாமல் பேப்பர் படிக்கிறேன்’ என்பவரா நீங்கள்? அப்படியானால் உங்களுக்கு தூரப்பார்வை குறைபாடு ஏற்கெனவே இருந்திருக்கும்; அதை கவனிக்காமல் விட்டிருப்பீர்கள்.

40 வயதில் எல்லோரும் கண் அழுத்த நோய்க்கான பரிசோதனை மேற்கொள்ள வேண்டும். இதில் பல வகைகள் உள்ளன. `ஓபன் ஆங்கிள் கிளாக்கோமா’ (Open-Angle Glaucoma) என்னும் ஒரு வகை சைலன்ட் கில்லர் நோய் இருப்பது தெரியாமல் இருக்கும். விவரமானவர்கள் `சைடு பார்வை கம்மியா இருக்கு, பல்பைப் பார்க்கும்போது லைட்டைச் சுத்தி கலர் கலரா தெரியுது’ என்பார்கள். அறிகுறி தெரியாமல், முழுமையாகப் பார்வை இழப்பு ஏற்பட்ட பிறகு கண்டறிந்தவர்களும் உண்டு.

இன்னொரு வகை, `ஆங்கிள் குளோஷர் கிளாக்கோமா’ (Angle-Closure Glaucoma). கண்களின் உள்ளே சுரக்கும் நீர் வெளியேற, சிறு துகள்களுடன்கூடிய சைக்கிள் டயர் போன்ற அமைப்பு இருக்கிறது. இயற்கையாகவே சிலருக்கு இந்தப் பாதை சுருங்கியிருக்கலாம். இதனால் கண்களின் உள்ளேயிருக்கும் திரவம் கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்து, கண் நரம்பில் அழுத்தத்தை உண்டாக்கும். இதனால் பார்வை செல்கள் படிப்படியாக இறந்துபோகும். இதைச் சீக்கிரம் கண்டுபிடித்தால் சிறிய அளவிலான லேசர் சிகிச்சை அல்லது தொடர் சொட்டு மருந்துகள் மூலம் குணப்படுத்திவிடலாம்.

கண்புரை... இதுவும் லென்ஸின் பாதிப்பால் வரக்கூடியதே. பிறவியில் கண்ணாடிபோல இருக்கும் (சட்டை பட்டன் அளவில்) லென்ஸ், 40 வயதாகும்போது எப்படி நெகிழ்வுத் தன்மையை இழக்கிறதோ அதுபோலவே 60 வயதில் கண்ணாடித் தன்மையையும் இழக்கும். அதாவது, வெள்ளை நிறமாக மாற (சிலருக்கு பிரவுன் நிறம்) ஆரம்பிக்கும். அந்த வெள்ளை நிற லென்ஸ் வழியாக ஒளி ஊடுருவி உள்ளே செல்வது கடினம். ஒரு கட்டம்வரை கண்ணாடி போட்டால் சரியான பார்வை இருக்கும். போகப் போக அறுவை சிகிச்சை செய்யவேண்டியது அவசியமாகிவிடும். 20 ஆண்டுகளுக்கு முன்பெல்லாம், `புரை நன்றாகப் பழுத்த பிறகுதான் அறுவை சிகிச்சை செய்ய முடியும்’ என்றார்கள் மருத்துவர்கள். இப்போது நவீன வசதிகள் வந்துவிட்டதால் பத்தே நிமிடங்களில் அறுவை சிகிச்சை முடிந்துவிடுகிறது. அதன் பிறகு அடுத்த ஒரு வாரத்தில் இயல்பாக வேலைக்குச் செல்லலாம். சிலருக்கு அறுவை சிகிச்சைக்குப் பிறகும் கண்ணாடி தேவைப்படும். அதிலும் கிட்டப்பார்வைக்கு கண்ணாடி அவசியம் தேவைப்படும். சரியான லென்ஸை வைத்துவிடுவதால் தூரப்பார்வைக்கு கண்ணாடி தேவைப்படாது.

`ஆபரேஷன் பண்ணுன கண்ணு...’ என்று ஆயுசுக்கும் கவலைப்படத் தேவையில்லை. ‘ஆபரேஷன் பண்ணினேன், அதிலிருந்து கண் உறுத்துகிறது’ என்பார்கள் சிலர். மருத்துவர் பரிசோதனை செய்து அறுவை சிகிச்சையின்போது போடப்பட்ட தையல் இழை ஏதாவது இருந்தால் எடுத்துவிடுவார். ‘எந்தப் பிரச்னையும் இல்லை’ என்று மருத்துவர் கூறினால், ஆபரேஷன் செய்ததை மறந்துவிட்டு நிம்மதியாக இருங்கள். ஈரப்பதம் குறைவாக இருந்தால், தொடர்ந்து சொட்டு மருந்து போடச் சொல்வார்கள். அதை மட்டும் போட்டுக்கொள்ளுங்கள். அடுத்த மிக முக்கியமான பிரச்னை விழித்திரை பாதிப்பு. இதிலும் ஆரம்பத்தில் எந்த அறிகுறியும் தெரியாது. அறிகுறிகள் தோன்றும்போது ‘டூ லேட்’ ஆகியிருக்கும். காரணங்கள் பல இருந்தாலும் சர்க்கரைநோய் ஏற்படுத்தும் பாதிப்பு மிகவும் கொடுமையானது. நீண்ட நாள்கள் சர்க்கரைநோய் உள்ளவர்கள், சர்க்கரை அளவு கட்டுக்குள் இல்லாதவர்களுக்கு சிறு சிறு ரத்தக் குழாய்களில் அடைப்பு ஏற்படும். உச்சி முதல் பாதம்வரையுள்ள எல்லா ரத்தக்குழாய்களிலும் பாதிப்பு ஏற்படும்.

விழித்திரையை முதலில் எடுத்துக்கொள்வோம். ஒவ்வொரு செல்லும் பார்வைக்கு மிகவும் அவசியம். எனவே, எல்லா செல்களுக்கும் ரத்த ஓட்டம் செல்வதற்காக லட்சக்கணக்கில் சிறு சிறு ரத்தக்குழாய்கள் அமைந்துள்ளன. சர்க்கரைநோய் பாதித்தால், இவை அடைத்துக்கொள்ளும். இயல்பாக நடைபெறும் ரத்த ஓட்டம் தடைபடுவதால், தேவையான ரத்த ஓட்டத்தை வழங்குவதற்காக உடல் புதிதாக சிறிய வலுவில்லாத ரத்தக்குழாய்களை உற்பத்தி செய்யும். (Defence Mechanism). இவை எளிதில் உடைந்து, கண்ணுக்குள் ரத்தக்கசிவை ஏற்படுத்தும். அதிக ரத்தக்கசிவு நடைபெற, நடைபெற அவை உறைந்து தழும்புகளாகிவிடும். அந்தத் தழும்புகள் விழித்திரை மற்றும் மற்ற உறுப்புகளை இழுத்தும் சுருக்கியும் முழு கண்ணின் கட்டுமானத்தையும் பாதித்துவிடும்.

சர்க்கரைநோய் வராமல் தடுப்பது, வந்துவிட்டால் தொடக்கத்திலேயே கட்டுக்குள் வைத்துக்கொள்வது, கட்டுக்குள் இருந்தாலும், இல்லாவிட்டாலும் ஆண்டுக்கு ஒருமுறை பரிசோதனை செய்ய வேண்டும். வருடாந்திர கண் பரிசோதனையின்போது சிறு சிறு ரத்தக்கசிவுகள் தென்பட்டால், ஆறு மாதங்களுக்கு ஒருமுறை என்று பரிசோதனைக் காலத்தை மாற்றிக்கொள்ள வேண்டும். அத்துடன் சர்க்கரையைத் தீவிரமாகக் கட்டுப்படுத்த வேண்டும். ரத்தக்கசிவுகள் பரவலாகத் தென்பட ஆரம்பித்தால், மூன்று மாதங்களுக்கு ஒருமுறை பரிசோதனை செய்ய வேண்டும். இத்தகையச் சூழலில் எப்போது வேண்டுமானாலும் புதிய ரத்தக்குழாய்கள் தோன்ற ஆரம்பிக்கலாம். விழித்திரையின் நடுப்பகுதியில் வீக்கம் ஆரம்பிக்கலாம்.

புதிய ரத்தக்குழாய்கள் தேவையற்றவை என்பதுடன் பாதிப்பையும் உண்டுபண்ணுவதாக இருப்பதால், அவை தென்படும் முன்னாலேயே லேசர் மூலம் சிகிச்சை அளிக்க வேண்டும். இந்தச் சிகிச்சையில் ஆங்காங்கே புள்ளிகள் வைக்கப்படும். சீரான இடைவெளியில் வைக்கப்படும் லேசர் புள்ளிகள் புதிய ரத்தக்குழாய்கள் உருவாவதைத் தடுக்கும். தேவையான நேரத்தில் பரிசோதனையைத் தவிர்ப்பதும், தள்ளிப்போடுவதும், தேவையற்ற நேரத்தில் பயப்படுவதும் கண்களைப் பொறுத்தவரை ஆபத்தையே விளைவிக்கும்.