மதக் காரணங்களைக் கடந்து, ஆண் குழந்தைகளுக்கு சுன்னத் செய்வது பரவலாகிவிட்டது. `அப்படிச் செய்வது நல்லது’ எனத் தோழிகள் கூறுகிறார்கள். குழந்தைக்கு எந்த வயதில் சுன்னத் செய்யலாம்? இது தொடர்பான மருத்துவ விளக்கங்கள் தேவை.

- தீபிகா சந்தோஷ், ஈரோடு

ஆணுறுப்பில் `ஸ்மெக்மா’ (Smegma) என்ற வெள்ளை நிறத் திரவம் இயல்பாகவே சுரக்கும். தினமும் குளிக்கும்போது ஆணுறுப்பைச் சுத்தப்படுத்த வேண்டும். இல்லையெனில், `ஸ்மெக்மா' திரவம் ஆணுறுப்பில் படிந்து, தொற்று உருவாக வாய்ப்பிருக்கிறது. இந்தப் பிரச்னை நீடித்தால், பிற்காலத்தில் ஆணுறுப்பு விரைக்கும்போது வலி உண்டாகலாம். விரைப்புத் தன்மை உண்டாவதிலும் சிக்கல் ஏற்படலாம். சில குழந்தைகளுக்கு ஆணுறுப்பின் முன்தோல் பகுதி இறுக்கமாக இருக்கும். இதனால், அந்தத் தோல் பகுதியைப் பின்புறம் நகர்த்துவதும் (Phimosis), ஆணுறுப்பைச் சுத்தம் செய்வதும் கடினமாக இருக்கும். சிலருக்கு ஆணுறுப்பில் பின்னோக்கி நகர்த்திய தோல் பகுதியை மீண்டும் இயல்புநிலைக்குக் கொண்டுவருவதும் சிக்கலாக இருக்கும் (Paraphimosis). சிலருக்கு சிறுநீர்க்குழாயின் துளை இயல்புக்கு மாறாகக் குறுகியிருக்கும். இதனால் அந்தக் குழாயில் அடைப்பு, வலி, எரிச்சல், வீக்கம், தொற்று ஏற்படலாம்.

மேற்கண்ட உடல்நலக் காரணங்களுக்காக, குறிப்பிட்ட சில குழந்தைகளுக்கு `முன்தோல் நீக்க அறுவை சிகிச்சை' செய்ய மருத்துவர்கள் பரிந்துரைக்கிறார்கள். அதன்படி 2 - 5 வயதுக்குள், அதாவது ஆண் குழந்தைகளைப் பள்ளிக்கு அனுப்பும் காலத்துக்குள் இதைச் செய்யலாம். வளரிளம் பருவத்தில் அல்லது அதற்குப் பிந்தைய பருவத்தில் செய்யும்போது அவர்களுக்குக் கூச்சமும் வலியும் அதிகமாக இருக்கும். அறுவை சிகிச்சை செய்த பிறகு, ஆணுறுப்பைச் சுத்தப்படுத்துவது எளிதாக இருக்கும்; நோய்த் தொற்றுகள் ஏற்படுவதும் குறையும். `அறுவை சிகிச்சை செய்வதால், பிற்காலத்தில் ஆணுறுப்பில் ஏற்படும் சருமப் புற்றுநோய் வரும் வாய்ப்பு குறையலாம்; தாம்பத்ய உறவின்போது விரைப்புத் தன்மை ஏற்படுவதிலும், விந்து வெளியேறுவதிலும் சிக்கல் உருவாகலாம்’ என மருத்துவரீதியாக முழுமையாக நிரூபிக்கப்படாத மாறுபட்ட கூற்றுகளும் சொல்லப்படுகின்றன. எனவே, மருத்துவர்களின் ஆலோசனை பெறாமல் தன்னிச்சையாக இந்த அறுவை சிகிச்சையைச் செய்ய முடிவெடுக்கக் கூடாது. அத்தியாவசிய மருத்துவக் காரணங்களுக்காக மட்டும் செய்யலாம்.

என் குழந்தைக்கு இரண்டு வயதாகிறது. இந்த வயதிலிருந்து குழந்தைகளுக்கு நட்ஸ் கொடுக்கலாமா... அவற்றை அன்றாட உணவில் எப்படிச் சேர்க்க வேண்டும், என்ன அளவில் இருக்க வேண்டும்?

- சுகன்யா, தஞ்சை

குழந்தைகளுக்கு ஒரு வயதிலிருந்தே நட்ஸ் வகைகளைச் சாப்பிடப் பழக்கலாம். ஆரம்பத்தில் நட்ஸைப் பொடியாக்கி, ஒரு கிளாஸ் பாலுடன் ஒரு டீஸ்பூன் நட்ஸ் பொடி சேர்த்துக் கொடுக்க ஆரம்பியுங்கள். அது குழந்தைக்கு செரிமானப் பிரச்னை எதையும் ஏற்படுத்தவில்லையெனில், அளவை இரண்டு டீஸ்பூனாக அதிகரித்துக்கொள்ளலாம். குழந்தைக்குப் பல் முளைத்த பின்னர், நெய்யில் வறுத்த நட்ஸை அவர்களின் கையில் கொடுத்து, கடித்துச் சாப்பிடச் சொல்லலாம். நட்ஸை அன்றாடம் இவ்வளவுதான் எடுத்துக்கொள்ள வேண்டும் என்று எந்த அளவும் கிடையாது. எனினும், நட்ஸை அதிகம் சாப்பிட்டால் வேறு எந்த உணவையும் சாப்பிட மாட்டார்கள் என்பதால் பாதாம், பிஸ்தா போன்ற ஏதேனும் ஒரு வகையில் நான்கு என்ற எண்ணிக்கையில் தினமும் சாப்பிடக் கொடுக்கலாம். நட்ஸை காலையில்தான் சாப்பிட வேண்டும் என்ற வரையறையும் இல்லை. எனவே, உங்கள் குழந்தை ஸ்நாக்ஸ் கேட்டு அடம்பிடிக்கும் எந்த நேரத்திலும் நட்ஸைச் சாப்பிடக் கொடுக்கலாம்.

உங்கள் கேள்விகளை அனுப்பவேண்டிய முகவரி:

கன்சல்ட்டிங் ரூம், டாக்டர் விகடன், 757, அண்ணா சாலை, சென்னை- 600 002.