Published:Updated:

குட் நைட்!

குட் நைட்!

குட் நைட்!
##~##

திருமணம் என்பதை ஒரு  'சமூக நிறுவனம்’ என்பார்கள். இந்த அமைப்பு, உறவைப் பலப்படுத்துவதற்காக ஏற்படுத்தப்படுவது. உறவுப் பாலம் என்றும் சொல்லலாம். உறவு மேம்படுவதால் சமுதாயத்தில் ஒர் ஓழுங்குநிலை ஏற்படுகிறது. இந்தப் பிரபஞ்சத்தில் வேறு எந்த உயிரினங்களிடமும் இல்லாத நிலை இது. 

மனித வாழ்க்கையில் முக்கியமான மூன்று அம்சங்கள் உள்ளன.  புரோக்ரியேஷன் (Procreation)  சந்ததிகளை விருத்தி செய்தல், ரெக்ரியேஷன் (Recreation) - களிப்பு, கடைசியாக ரிலேஷன் (Relation)உறவைப் பேணுதல் என்ற மூன்று உள் உணர்வுகளை உள்ளடக்கிய மனித வாழ்வுதான் முழுமையான, அர்த்தம் நிறைந்தது.

குட் நைட்!

இந்தப் பூமிப் பந்தில் எத்தனையோ மனிதர்கள் தோன்றி உள்ளனர்... மறைந்தும் உள்ளனர். ஆனால், பெரும் மக்கள் கூட்டம் தொடர்ந்து இருந்து கொண்டுதான் இருக்கிறது. இதற்கு அடிப்படை, இனப் பெருக்கம்தான். இந்த இனப்பெருக்க ( Procreation) உள் உணர்வுதான் மனித வாழ்வின் முதல் நோக்கம்.

அடுத்து, இளைப்பாறுதல். இதைக் களிப்பு நிலை (Recreation) என்றும் அர்த்தப்படுத்தலாம். மற்ற விலங்குகளுக்கும், மனிதனுக்கும் இந்த அம்சத்தில் உள்ள வேற்றுமை என்னவெனில், எந்த விலங்கும் செயற்கையாகத் தங்கள் சூழலை இனிமையாக்கிக்கொள்வது இல்லை. இயற்கையாக, இயல்பாகவே அவை சுதந்திரமாகத் திரிவதில், பறப்பதில், உணவு உட்கொள்வதில், உறங்குவதில், புணர்வதில் இளைப்பாறிக்கொள்கின்றன.

மனிதன் மட்டும் விலங்குகளிடம் இருந்து வேறுபட்டவன். ஆறு அறிவு கொண்டவன். எனவே விருப்பம், ஈடுபாடு, சூழ்நிலை, நேரம் இதனை எல்லாம் கருத்தில் கொண்டுதான் தனது பொழுதுபோக்கு அம்சங்களை அவன் உருவாக்குகிறான். அதனால்தான் மனிதனுக்கு மனிதன் பொழுதுபோக்குகள் வேறுபடுகின்றன. ஆனால், எல்லா மனிதர்களுக்கும் பொதுவான தன்மையாக இருப்பது - செக்ஸ். மனித வாழ்வின் மிக உன்னதமான இளைப்பாறல் செக்ஸ் மூலம்தான் கிடைக்கும். எனவே, மனித வாழ்வின் மிக முக்கிய நோக்கங்களில் ஒன்றான பொழுதுபோக்கு, இன்பம், இளைப்பாறல் எல்லாம் சுகமான இல்லறத்தின் மூலம்தான் கிட்டும். அதற்கான அங்கீகாரம்தான் திருமணம்.

உலக இலக்கியங்கள், இதிகாசங்கள், புராணங்கள் எல்லாமே மனித உறவுகளில் கணவன் - மனைவி என்கிற உறவை (Relation)  உன்னதமாகச் சித்திரிக்கின்றன. 'கணவன் - மனைவி இருவரும் சமமான தராசு தட்டுகளைப்போல இருக்க வேண்டும்; இரண்டு பேருக்கும் இடையில் காற்றுகூட புகாத அளவுக்கு உறவும் புரிதலும் இருக்க வேண்டும்’ என்கிறார்கள். இப்படியான உறவு நெருக்கம் தம்பதிக்குள் நிகழ்வதற்கு மிகப் பெரிய ரசாயனமாக இருப்பது செக்ஸ் வாழ்க்கைதான்.

இடை வேளை...